திருக்குறள்

18/08/2013

டிவி ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள்

கிராமங்கள் தொடங்கி பெரிய நகரங்கள் வரை டிவி இல்லாத வீடுகளே இல்லை என கூறினால் அது மிகையாகாது.

டிவி சேனல்களில் ஒளிபரப்பப்படும் நெடுந்தொடர்கள் வீட்டு பெண்களை வசியப்படுத்தி வைக்கின்றன. இளைஞர்களிடம் டிவி பார்க்கும் பழக்கம் அதிக அளவில் உள்ளது.

ஆனால் அளவுக்கு அதிகமாக டிவியை பார்க்கும் குழந்தைகளிடம் இது பயங்கரமான எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. நியூசிலாந்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. 

ஓடாகோ பல்கலையில் 5 முதல் 15 வயது வரையிலான 1000 குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொண்டு வந்தது. அவர்கள் அனைவரும் 26 வயதுடையவரைப் போன்று செயல்படுவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பருவத்தில் டிவி-க்கு அடிமையானவர்களுக்கும், சமூக குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தொலைக்காட்சியை பார்க்கும் குழந்தைகளின் மனத்தில் ஆழமாக பதிவதால், தானும் அவ்வித செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கிறது.

அளவுக்கு அதிகமாக டிவியை பார்பவர்களின் மனநிலை, நடவடிக்கைகள் வித்தியசமாக இருக்கின்றன. குறிப்பாக புத்திகூர்மை, சமூக பார்வை மற்றும் பெற்றோருக்கு கட்டுப்படுதல் உள்ளிட்டவைகள் எதிர்மறையாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

அதிகபடியாக டிவி பார்க்கும் பழக்கமே, சமூக குற்றங்களை அதிகரிக்கவும், இளம் குற்றவாளிகளை உருவாவதற்கும் காரணமாக அமைகிறது. எனவே டிவி பார்க்கும் பழக்கத்தை குறைத்தாலே சமூக குற்றங்கள் பாதி குறையும் என ஆய்வு தெரிவிக்கிறது.

குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒன்று முதல் 2 மணி நேரம் டிவி பார்ப்பதே உகந்தது என அமெரிக்க கழகத்திற்கு குழந்தைநல மருத்துவர்கள் பரிந்துரைந்துள்ளனர்.

அதிக உணர்ச்சி வசப்பட வைப்பது, காழ்ப்பு உணர்ச்சி போன்ற பழக்கங்கள் டிவி மூலமாகவே குழந்தைகள் கற்றுக்கொள்வதாக ஆய்வு தெரிவித்துள்ளது. இதுபோன்ற செயல்களால் கீழ்படிதல் இல்லாமை, கல்வி தரம் குறைவது, சமூக ஒழுக்கம் பாதிப்பு உள்ளிட்ட விளைவுகள் உருவாக அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment