திருக்குறள்

25/08/2013

அரசின் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் அல்



அரசின் திட்டங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் அல்ல என்று நாடாளுமனற விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
மக்களின் அத்தியாவசிய தேவைகளான பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, வங்கி கணக்கு, பாஸ்போர்ட், கியாஸ் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயம் வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்பதாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புகார்கள் குவிகின்றன.
ஆதார் அட்டை வழங்கப்படுவதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நிகழ்வதால், பெரும்பாலான மக்களால் இதைப் பெற முடியவில்லை. அப்படியிருக்க, ஆதார் அட்டையைக் கேட்டால் என்ன செய்ய முடியும்?
நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா, ''வங்கி கணக்கு தொடங்குவது, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பாஸ்போர்ட் உள்ளிட்ட அரசின் மானிய திட்டங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமல்ல. மக்களை கட்டாயப்படுத்துவதாக தெரியவந்தால்.சம்பந்தபட்ட நிறுவனங்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்'' என்று எச்சரிக்கை விடுத்தார்!

No comments:

Post a Comment