திருக்குறள்

15/08/2013

சுத‌ந்‌திர ‌தின திருநாளில் அறிவோம் அதன் வரலாறு






தேசிய கொடி வரலாறு அறிவோம்


 கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

67வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டை மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இந்தாண்டு முதல் முறையாக முதல்வர் ஜெயலலிதா, போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், அங்கிருந்து கோட்டைக்கு சென்றார். அப்போது வழி நெடுகிலும் இருபுறமும் கூடி நின்ற மாணவ-மாணவிகள், பொதுமக்கள், முதல்வர் ஜெயலலிதாவை நோக்கி கை அசைத்தனர். தேசிய கொடிகளையும் கையில் பிடித்து குதூகலித்தனர். 

கோட்டை நுழைவு வாயில் அருகே வந்த முதல்வர் ஜெயலலிதாவை, தலைமை செயலாளர் ஷிலா பாலகிருஷ்ணன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் முப்படை தளபதிகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்க மேடைக்கு சென்று காவல் துறையினரின் சிறப்பு அணி வகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார். அங்கிருந்து திறந்த ஜீப்பில் சென்று அணிவகுப்பை பார்வையிட்டதோடு, கோட்டை நுழைவாயிலில் வந்து இறங்கிய முதல்வர், கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது காவல்துறையினரின் கூட்டுகுழல் இசைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.


விழாவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஸ்குமார் அகர்வால், முப்படை தளபதிகள், தூதரக அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி, கோட்டை வளாகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.



No comments:

Post a Comment