திருக்குறள்
30/09/2013
தமிழ்நாடு அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கானஅகவிலைப் படி உயர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
தமிழ்நாடு அரசு மாநில அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப் படிக்கான அதிகாரப்பூர்வஅறிவிப்பு வெளியிடும் என்று நம்பத் தகுந்த வட்டாரம் தெரிவித்தனர்.
மத்தியப் பிரதேசம், அசாம், ராஜஸ்தான் மாநில அரசுகள், மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை 80% சதவீதத்திலிருந்து 90%சதவீதமாக உயர்த்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் "சர்வே'
பெற்றோர்களின் மெட்ரிக் பள்ளிகள் மீதான ஆங்கில வழிக்கல்வி மோகத்தால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆண்டு தோறும் ஆரம்ப கல்வியில், மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. இதனால், கடந்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை துவக்க அரசு உத்தரவிட்டது. ஆனால், அதற்கான எந்த உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்யவில்லை.
இந்நிலையில், ஆங்கில வழிக்கல்வியை துவக்கியதால், தாய் மொழி கல்விக்கு "நெருக்கடி' ஏற்பட்டுள்ளதாக, ஆசிரியர் வட்டாரங்கள் கூறியுள்ளன. இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழகம் முழுவதும் பள்ளிகளில் சர்வே எடுத்து வருகிறது. இப்பணிக்கு மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சுந்தர் கூறுகையில்,""ஆங்கில வழிக்கல்வியால், தாய்மொழி கல்விக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது பற்றி, தமிழகம் முழுவதும் சர்வே செய்து, சில பரிந்துரைகளை பள்ளிக் கல்வித்துறைக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பார்வையற்றவர்களை கொண்டு விரைவில் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இதனை அறிந்தவுடன், அரசு உயர் அதிகாரிகளையும், சமூக நலத் துறை அமைச்சரையும் அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் உத்தரவிட்டார். அவர்களும் இது குறித்து மூன்று கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினார்கள். இந்தச் சூழ்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் ஒரு விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. விரிவான கலந்துரையாடலுக்குப் பின்னர், மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் (Backlog Vacancies) மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு, மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வாயிலாக சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பார்வையற்றவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும். முதுகலைப் பட்டம் பெற்ற 200 பார்வையற்றவர்கள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களில் அவர்தம் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில் தெரிவு செய்யப்படின் பணியமர்த்தப்படுவர். தேசிய தகுதி தேர்வு மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 100 முதுகலைப் பட்டம் பெற்ற பார்வையற்றவர்களை தற்போது கல்லூரிகளிலுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் வரும் காலிப் பணியிடங்களில் உதவிப் பேராசிரியர்களாக பணியமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்கும்.
இந்த நடவடிக்கைகள் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியையும், தன்னம்பிக்கையையும் உருவாக்க வழி வகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடத்திய போராட்டத்தின் விளைவாக துறையின் சார்பாக ஒரு குழு ஏற்படுத்தி 7 அம்ச கோரிக்கை குறித்து அரசுக்கு அறிக்கை அளிப்பதாக இயக்குநர் உறுதி
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடத்திய 4 நாட்கள்தொடர் போராட்டத்தின் விளைவாக இறுதியில் தொடக்கக் கல்வி துறையின்சார்பாக ஒரு குழு ஏற்படுத்தி அதில் 7 அம்ச கோரிக்கை குறித்து ஆராய்ந்து அரசுக்குஅறிக்கை அனுப்பி வைப்பதாக தொடக்கக் கல்விஇயக்குநர் உறுதியளித்துள்ளதாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலபொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் கடந்த 4 நாட்களில் 20 ஆயிரத்திற்கும்மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு தங்களின் நியாயமான கோரிக்கைகளைஜனநாயக அடிப்படையில் தெரிவித்தனர்.
ஆனால் இதுகுறித்து தமிழக அரசிடமிருந்து எவ்வித பதிலும் வராததால்,தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்களிடையே கடும் அதிருப்திஏற்படுத்தியுள்ளது. தொடக்கக் கல்வி இயக்குநர் அளித்த உறுதிமொழியிலும்தங்களுக்கு திருப்தி இல்லையென்றும், இந்த 4 நாட்கள் தொடர் போராட்டத்தின்விளைவாக தொடக்கக் கல்வி துறையிலுள்ள பல்வேறு சங்கங்கள்தங்களை அணுகியுள்ளதாகவும், அடுத்த கட்ட தீவிர போராட்டம் குறித்த முடிவு,அடுத்த நடைபெறவுள்ள மாநில செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றுஎதிர்ப்பார்ப்பதாக தெரிவித்தார்.
போராட்ட வீடியோ காட்சி
போராட்ட வீடியோ காட்சி
29/09/2013
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் மறியல் போராட்டம்
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தொடர் மறியல் போராட்டம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் மறியல் போராட்டம்
மாநில தலைவர் சோ.காமராஜ் தலைமையில் நடந்த போராட்டத்தை உலக கல்வி அமைப்பின் துணைத் தலைவர் ஈசுவரன் தொடங்கி வைத்தார். அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க தலைவர் கே.கணேசன் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் போன்று அதே தகுதி உள்ள தமிழ்நாட்டில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பெறுகின்ற சம்பளம் மிக குறைவு.மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தாங்கள் பெறவேண்டிய சம்பளத்தைவிட மாதம் ஒன்றுக்கு ரூபாய் 9000 குறைவாக பெறுகின்றனர். ஒரே பணி அனால் சம்பளம் மட்டும் குறைவு. இதனை மாற்றி இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 9300 நிர்ணயம் செய்யப்பட வேண்டும். CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும் பழைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது போன்ற 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் அலை கடலென எராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். சாலையில் அமர்ந்து தொடர்ந்து கோஷமிட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் அனைவரும் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
25.09.2013 முதல்நாள் 5000 பேர் கைது,26.09.2013- 2ஆம் நாள் 2000மகளிர் உட்பட 5000பேர் கைது, 27.09.2013-3ஆம் நாள் 5000பேர் கைது,28.09.2013-4ஆம் நாள் 5000பேர் கைது என மறியல் போர் தொடர்ந்து நடந்தாலும் ஆளும் அரசு அதைப்பற்றி கண்டுகொண்டதாகவே தெரியவில்லை..
"ஆசிரியரை மதிக்காத சமூகம் உருப்பட்டதில்லை" என்பதற்கேற்ப ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ளும் அரசுக்கு, காலம் தாழ்த்தத் தாழ்த்த அந்த காலமே தகுந்த பதில் சொல்லும்...
காலம் சொன்ன பதிலைக் கேட்கும் இடத்தில் காலம் தாழ்த்திய அரசுகள் இருந்ததில்லை //என்பதே இயக்க வரலாறு.
பணிவது பயந்தல்ல...,பாய்வதற்கே என உணர்த்தும் நாள் தொலைவில் இல்லை...
ஹைடெக்' ஆகிறது அரசு நடுநிலைப் பள்ளிகள்!
மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வகையில் முதற்கட்டமாக மாவட்டந்தோறும் நான்கு அரசு நடுநிலைப் பள்ளி வீதம் மாநிலம் முழுவதும் 128 பள்ளிகளைத் தேர்வு செய்து, அவற்றை இணையதளம் மூலம் இணைக்கும் திட்டத்தை தொடக்க கல்வித் துறை செயல்படுத்த உள்ளது.
தமிழகம் முழுவதும் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளி மற்றும் 9 ஆயிரத்துக்கும் அதிகமான நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் புது முயற்சியாக அரசுப் பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தி, அனைத்து வகுப்புகளையும் அதில் ஒருங்கிணைத்து பயிலும் திட்டம் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, மாவட்டந் தோறும் நான்கு அரசு நடுநிலைப் பள்ளி வீதம் மொத்தம் 128 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு இணையதளம் மூலம் இணைக்கப்பட உள்ளது. அவ்வாறு இணைக்கப்படும் பள்ளிகளைத் தேர்வு செய்ய மாவட்டந்தோறும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக் குழுவில் அனைவருக்கும் கல்வி இயக்க (எஸ்.எஸ்.ஏ.,) மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ., மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், தலா இரு உதவி தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மற்றும் ஆர்வமுடைய பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் இடம்பெறுவர்.
குழுவில் இடம்பெறும் ஆசிரியர்களுக்கு கணினி, விடியோ கான்பரன்சிங் மேற்கொள்வது போன்ற தொழில்நுட்பம் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இணையதள வசதி இருக்க வேண்டும். போதிய இட வசதி, மின் இணைப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவை அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு மாநில தொடக்க கல்வி இயக்குநர் பிறப்பித்துள்ளார்.
தவிர, அந்தந்த மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பள்ளியின் பெயர், முகவரி, கைப்பேசி விவரம் குறித்து வரும் அக்டோபர் 5-ம் தேதிக்குள் மாநில தொடக்கக் கல்வி இணை இயக்குநருக்கு (நிர்வாகம்) மின்னஞ்சல் (இ-மெயில்) செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ (‘ஜாய் ஆப் கிவ்விங் வீக்’ ) கொண்டாட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் வகையில், அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும், ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ (‘ஜாய் ஆப் கிவ்விங் வீக்’ ) கொண்டாட பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மாணவர்களுக்கு இடையே ஈகைத்தன்மையை வளர்க்கவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒருவருக்கொருவர் பரிசுகள் வழங்கி கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்காகவும் ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ திட்டம் (Joy of Giving Week) கொண்டு வரப்பட்டுள்ளது.
ஒருவருக்கொருவர் தங்களிடம் உள்ள பொருள்களை தேவைப்படுபவர்களுக்கு அன்போடும், ஆர்வத்தோடும் கொடுப்பதற்கு முன் வர வேண்டும். இப்படி பிறருக்கு கொடுத்து உதவுபவர்களே மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கின்றனர். முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, அதியமானுக்கு நெல்லிக்கனி கொடுத்த ஒளவையார் என்று பலரை உதாரணமாக சொல்லலாம்.
எனவே, அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ஏழை எளியவர்களுக்கு உதவும் வகையில், ஈகைப்பணிகளை செய்வதற்கு பள்ளி தலைமையாசிரியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். அதாவது மாணவர்கள் சிறந்த ஆசிரியர்களை பற்றி கட்டுரை எழுதலாம், பள்ளிக்கு அருகில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு பரிசுகள் வழங்கலாம்.
முதியவர்களுக்கு பத்திரிகைகள் வாசித்து காட்டலாம், எழுத படிக்க தெரியாத முதியவர்களுக்கு கல்வி கற்றுத்தரலாம், போக்குவரத்து நெரிசலை சீர் செய்யலாம். போக்குவரத்து போலீசாருக்கு சிறு பூ கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தலாம். பஸ்சில் இடம் கிடைக்காமல் நிற்பவர்களுக்கு சீட் கொடுத்து உதவலாம். 10 பொன்மொழிகளை எழுதி பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர்கள் செய்ய வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62ஆக உயர்த்தும் திட்டம் இல்லை - மத்திய அமைச்சர் நாராயணசாமி
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62ஆக உயர்த்தும் திட்டம் இல்லை என மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது கடந்த 1998ம் ஆண்டு 58லிருந்து 60ஆக உயர்த்தப்பட்டது. தற்போது நிலவும் நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க, பணியார்களின் ஓய்வு வயதை 62ஆக உயர்த்த மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளி யாகின. மேலும் அடுத்து நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டும் இந்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்பட்டது. இது குறித்து மத்திய பணியாளர் மற்றும் நலத்துறை இணையமைச்சர் நாராயணசாமி டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ''மத்திய அரசு ஊழியரின் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை'' என்றார்.
எளிய அறிவியல் பரிசோதனைகள்: 80 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எளிமையான பரிசோதனைகள் மூலமாக அறிவியலைக் கற்பிப்பதற்காக 80 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.இந்தப் பயிற்சியில் தங்களது சுற்றுப்புறங்களில் கிடைக்கும் எளிய பொருள்களைக் கொண்டு எவ்வாறு அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வது என ஆசிரியர்கள் அறிந்துகொள்வார்கள் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறினார்.அனைவருக்கும் கல்வித் திட்டத்துடன் இணைந்து வரும் அக்டோபர் முதல் வாரத்தில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும் என அவர் மேலும் கூறினார்.குழந்தைகளிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக மாநில அளவில் 240 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது.சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் நிறுவனத்தில இந்தப் பயிற்சி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.வேதியியல், இயற்பியல், உயிரியல் பாடங்களில் பல்வேறு எளிய பரிசோதனைகள் ஆசிரியர்களுக்கு இதில் கற்றுத்தரப்படுகின்றன. எளிய மின்காந்தத்தை உருவாக்குதல்,முழு அக எதிரொளிப்பு, வேதியியல் நாள் காட்டி, நிறப் பரிசோதனைகள், மூட்டுகளின் இயக்கம், ரப்பர் எலும்பு, நொதித்தல் சோதனை போன்றவை தொடர்பாக ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சியை வழங்குவார்கள். வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் பட்டம் பெற்றவர்கள் மட்டும்தான் பத்தாம் வகுப்பு வரை அறிவியலைக் கற்றுத் தருவார்கள். மீதி இரு பாடங்களையும் அவற்றிலுள்ள சோதனைகளையும் அவர்கள் புரிந்துகொள்ள இந்தப் பயிற்சி உதவும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் எஸ்.உமா தெரிவித்தார். முதல் முறையாக, மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு அறிவியலைக் கற்பிப்பதற்காக சிறப்புப் பயிற்சியும் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமில் ஆசிரியர்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகள் குறித்து விளக்கமளிக்கும் பயிற்றுநர். (வலது) அறிவியல் பயிற்சிக்கு வந்திருந்த ஆசிரியர்கள்
அனைவருக்கும் மேல்நிலை கல்வித் திட்டம்: நிதி செலவினங்களுக்கான குழு ஒப்புதல்
அனைவருக்கும் மேல்நிலைக் கல்வித் திட்டத்துக்கு மத்திய நிதி மற்றும் செலவினங்களுக்கான குழு ஒப்புதல் அளித்துள்ளது. கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியம் (சிஏபிஇ) நியமித்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், மாநில உயர் கல்வித் திட்டத்தில் மறுசீரமைப்பு செய்யும் வகையில் அனைவருக்கும் மேல்நிலைக் கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டு, அதற்கு கடந்த 2012 நவம்பரில் சிஏபிஇ ஒப்புதலும் அளித்தது.இந்த புதியத் திட்டத்துக்கு, கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மும்பை, போபால், தில்லி, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் ஒப்புதலும் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இத் திட்டத்துக்கு மத்திய நிதி செலவினங்களுக்கான குழு ஒப்புதல் அளித்துள்ளது. இப்போது பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உயர் கல்வியை மேம்படுத்தும் வகையிலும், உயர் கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும் அறிமுகம் செய்யப்பட உள்ள இத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள 316 மாநில பல்கலைக்கழகங்களும்,13,024 கல்லூரிகளும் பயன்பெற உள்ளன. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் வளர்ச்சி நிதி மற்றும் பல்வேறு உதவிகள் அளிக்கப்பட உள்ளன.
அரசு ஊழியர்கள் மனம் மாறினால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும்: லோக் ஆயுக்த நீதிபதி பாஸ்கர்ராவ்
அரசு ஊழியர்கள் மனம்மாறினால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என்று லோக் ஆயுக்த நீதிபதி பாஸ்கர் ராவ் தெரிவித்தார்.கர்நாடக மாநில அரசு ஊழியர் சங்கம் பெங்களூரு, விதானசௌதாவில் சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த ஊழலுக்கு எதிரான கருத்தரங்கை தொடக்கிவைத்துஅவர் பேசியது: ஊழலை ஒழிப்பதில் அரசு ஊழியர்களின் பங்களிப்புமுக்கியத்துவம் வாய்ந்ததாகும். தன்னை அணுகும் பொதுமக்களை சகோதர சகோதரிகளை போல கருதி, எவ்வித கைமாறும் எதிர்பாராமல் உதவிசெய்வது அவசியம். அரசு ஊழியர்கள் மனம்மாறினால் மட்டுமே ஊழலை முற்றிலுமாக ஒழிக்க முடியும். அரசு நிர்வாகத்தில் புற்றுநோயை போல ஊழல் படர்ந்துள்ளதால், ஆட்சி நிர்வாகம் சரிவர நடைபெறுவதில்லை. ஊழலற்ற நிர்வாகத்தை அமைக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதுஅவசியம். ஊழலை ஒழிப்பதில் அனைத்துதரப்பினரின் ஒத்துழைப்பு, பங்களிப்பு மிகமிக அத்தியாவசியம். அரசு ஊழியர்களும், பொதுமக்களும் ஒன்றுசேர்ந்து முயற்சித்தால் ஊழல் தானாக காணாமல் போகும். அரசு செயல்படுத்தும் திட்டப்பணிகளில் ஊழல், முறைகேடுகள் அதிகரித்துவந்துள்ளன. ஏழைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்ற எளியோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்திலும் ஊழல், முறைகேடு நடப்பது வேதனை அளிக்கிறது. ஓய்வூதியத்தை பெற ஏழைகள் லஞ்சம் அளிக்கவேண்டுமென்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்நாடக அரசு செயல்படுத்திவரும் அன்னபாக்கியா, அந்த்யோதயா திட்டங்களிலும் ஊழல் நடந்துவருகிறது. பிபிஎல் குடும்ப அட்டைகள் பெறவும் லஞ்சம் தர வேண்டியுள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஊழலை ஒழிக்க அரசு செயல்படுத்திவரும் சட்டங்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதோடு, அரசின் செயல்பாடுகளில் ஒளிவுமறைவின்மை மற்றும் பாரபட்சமற்ற அணுகுமுறையை கையாள்வது அவசியம். ஊழலை ஒழிக்க வலிமையான புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்றார் அவர்.
அடிப்படை அறிவியல் குறித்து, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சியை அளிக்க, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஏற்பாடு செய்துள்ளது.
மாணவர்களிடையே, அறிவியல் பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த, இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, கடந்த வாரம், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, தேர்வு செய்யப் பட்ட, 150 ஆசிரியர்களுக்கு, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து, அனுபவம் வாய்ந்த ஆசிரியரை அழைத்து, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், இந்த பயிற்சியை அளித்தது.
பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாவட்டங்களுக்குச் சென்று, பிற ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிப்பர் என்றும், பின், செயல் விளக்கத்துடன், அடிப்படை அறிவியல் குறித்து, மாணவர்களுக்கு, ஆசிரியர் விளக்குவர் என்றும் கூறப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்பட்ட, 150 ஆசிரியர்களுக்கு, நேற்று, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், "அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் மற்றும் மத்திய இடைநிலை கல்வி திட்ட இயக்ககத்தின் மூலம், அனைத்துப் பள்ளிகளுக்கும், தேவையான அளவிற்கு, அறிவியல் உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, செயல் விளக்கத்துடன், மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதில், ஆசிரியர்களுக்கு, எவ்வித சிக்கலும் ஏற்படாது" என்றார்.
44 மாதிரி பள்ளிகளில் "நேர்மை கடைகள்": காந்தி பிறந்த நாளில்ஆரம்பம்
மாணவர்களிடையே, நேர்மையை வளர்க்கும் நோக்கத்தில், காந்தி பிறந்த நாளான, அக்., 2ம் தேதி, 44 மாதிரிப் பள்ளிகளில், "நேர்மை கடைகள்" துவக்கப்படுகின்றன.கல்வி தரத்தை மேம்படுத்தவும்,மாணவர்களிடையே, நல்ல குணங்களை ஏற்படுத்தவும், கல்வித்துறை, முடிந்த அளவிற்கு, பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.
இந்த வரிசையில், மாணவர்களிடையே, நேர்மை, நாணயம் ஆகிய உயர்ந்த பண்புகளை வளர்க்கும் நோக்கத்தில், 44 மாதிரிப் பள்ளிகளில், "நேர்மை கடை"களை திறப்பதற்கு, இடைநிலைக் கல்வி திட்ட மாநில இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது.இதுகுறித்து, திட்ட இயக்குனர், சங்கர், வெளியிட்டுள்ள அறிவிப்பு:பள்ளி சூழலில், மாணவர்களை, சிறந்த குடிமகன்களாக உருவாக்க முடியும். கல்வி மட்டுமில்லாமல், பல்வேறு திறன்களையும், நற்குணங்களையும் வளர்ப்பதற்கு, கல்வித்துறை, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்த வரிசையில், நேர்மை மற்றும் நாணயம் ஆகிய உயர்ந்த பண்புகளை வளர்க்கும் நோக்கில், "நேர்மை அங்காடி" என்ற கடைகள், காந்தி பிறந்த நாளான, அக்., 2ல், 44 மாதிரிப் பள்ளிகளிலும் துவங்கப்படும். இந்த கடைகள், யார் மேற்பார்வையும் இல்லாமல், பள்ளி வளாகத்தில் இயங்கும். இந்த கடையில், மாணவர்களுக்கு தேவையான எழுது பொருட்கள் இருக்கும். அதற்கான விலை தாங்கிய அறிவிப்பும், அங்கே இருக்கும்.மாணவர்கள், நேரடியாக, கடைகளுக்குச் சென்று, தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு, அதற்கான தொகையை, அங்குள்ள பண பெட்டியில் செலுத்த வேண்டும். ஆரம்ப கட்ட முதலாக, 500 ரூபாயுடன், கடையை துவக்க வேண்டும். பள்ளி மேலாண்மை நிதியில் இருந்து, இந்த தொகையை, தலைமை ஆசிரியர் செலவழிக்கலாம்.பேப்பர், பேனா, பென்சில், ரப்பர் உள்ளிட்ட பொருட்களை, "நேர்மை கடை"யில் விற்பனை செய்ய வேண்டும். பொருட்களின் விலையை, எந்த காரணம் கொண்டும், லாப நோக்கில் நிர்ணயம் செய்யக் கூடாது. வாங்கிய விலையிலேயே, பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். இதை, தலைமை ஆசிரியர், கண்காணிக்க வேண்டும்.இது குறித்த அறிக்கையை, அக்., 4ம் தேதிக்குள், இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு அக்டோபர் 7ந் தேதிக்கு ஒத்திவைப்பு, இறுதி தீர்ப்பு வரும் வரை பணி மாறுதல் நிறுத்தி வைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வின் முன் இன்று பிற்பகல் 3.45மணிக்கு விசாரணைக்கு வந்தது. போதிய நேரமின்மை காரணமாக இரு தரப்பும் செய்துகொண்ட சமரசத்தை அடுத்து நீதிபதிகள் வருகிற அக்டோபர் மாதம் 7ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
மேலும் அன்றைய தினமே வழக்கை முடித்து கொள்ள அனைத்து தரப்பும் ஒத்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுவரை பணி மாறுதல்கள் மேற்கொள்ள கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை பல்கலை. அரசு பல்கலை.யாக மாறியது: அரசிதழில் உத்தரவு வெளியீடு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசு பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. இதற்கான சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து, அது தமிழக அரசிதழில் செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளது.
இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராக இனி உயர் கல்வித் துறை அமைச்சர் செயல்படுவார். இதுவரை இணைவேந்தராக அந்தப் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் எம்.ஏ.எம்.ராமசாமி செயல்பட்டு வந்தார். புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரையில் தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவதாஸ் மீனா நிர்வாகியாகச் செயல்படுவார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், சம்பளத்தை குறைக்கவும் முடிவு செய்திருப்பதாக வெளியான தகவலையடுத்து, கடந்த 2012-ஆம் ஆண்டு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டது.
நிர்வாக குளறுபடி மற்றும் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதும் கண்டறியப்பட்டதால் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டன. இதை பரிசீலனை செய்த தமிழக அரசு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்துவதற்கான சட்ட மசோதாவை தயாரித்தது. அந்த மசோதா கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, மே 16-ஆம் தேதி சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இப்போது ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 2,400-க்கும் அதிகமான பள்ளிகளில் நிதி மேலாண்மை குறித்து பயிற்சி
தமிழகத்தில் 2,400-க்கும் அதிகமான பள்ளிகளில் நிதி மேலாண்மை குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது.
பள்ளிக் கல்வி இயக்குநரகம் மற்றும் தேசிய பங்குச் சந்தை செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி 8,9,11,12 ஆம் வகுப்பு தமிழ், ஆங்கில வழி பயிலும் மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதன் மூலம் மாணவர்கள் நிதி மேலாண்மை, சேமிப்பு, புத்திசாலித்தனமாகச் செலவு செய்தல் உள்ளிட்ட அத்தியாவசியமான விஷயங்களைக் கற்று வருகின்றனர்.
இந்தப் பயிற்சி மூலம் நடப்பாண்டில் (2013-14) 7 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் நிதி மேலாண்மை குறித்து அறிந்து வருவதாக தேசிய பங்குச் சந்தையின் முதன்மை வணிக வளர்ச்சி அதிகாரி ரவி வாரணாசி கூறினார்.
இந்த மாணவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் 25 வகுப்புகளோடு பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூடுதலாக 6 வகுப்புகள் நடைமுறைப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு, 01.01.2016 முதல் அமுலுக்கு வருகிறது
மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான உத்தரவை பிரதமர் மன்மோகன்சிங் பிறப்பித்துள்ளார். இந்த சம்பள கமிஷன் 2016-ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 7வது ஊதியக் குழுவில் இடம் பெற உள்ள வல்லுனர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த ஊதியக் குழு தனது பரிந்துரைகளை 2 வருடத்திற்குள் மத்திய அளிக்கும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமர் மன்மோகன் சிங் அளித்துள்ளார்
சமபளக்குழு (PAY COMMISSION)-குழு தலைவர் & வருடம்
சுமார் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பளக்கமிஷன் அமைக்கப்படுகிறது. குழு தலைவர் & வருடம்
1வது எஸ். வரதாச்சாரி 1946
2வது ஜகனாத் தாஸ் 1957
3வது ரகுபீர் தயாள் 1970
4வது பி.என். சிங்கள் 1983
5வது எஸ். ரத்தினவேல் பாண்டியன் 1994
6வது பி.என்.ஸ்ரீ கிருஷ்ணா 2006
7வது -- 2013
(மேலும், 2016ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம்தேதி முதல் புதியஊதியக்குழு பரிந்துரை அமலுக்கு வரும்என தெரிகிறது.)
மத்திய அரசு ஊழியர்களுக்குகான 10% அகவிலைப்படிக்கான மைய அரசு ஆணை வெளியீட்டு உத்தரவு
24/09/2013
22/09/2013
அவசர உதவி அலைபேசி எண்கள்
அவசர உதவி அனைத்திற்கும்—— —–911
வங்கித் திருட்டு உதவிக்கு ——————9840814100
மனிதஉரிமைகள் ஆணையம் ————–044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–09383337639
காவல் துறை உதவிக்கான குருஞ்செய்தி :- ——9500099100
காவல் துறை அதிகாரிகள் மீது ஊழல் புகாருக்கு - 9840983832
போக்குவரத்து விதிமீறல் : ————-98400 00103
காவல் உதவி அழைப்பு எண் : ——————————–100
தீயணைப்புத்துறை:—————————-101
போக்குவரத்து விதிமீறல்——————–103
விபத்து :——————————————–100, 103
அவசர சிகிச்சைக்கான அவசர ஊர்தி எண் : —102, 108
பெண்களுக்கான அவசர உதவி : ———–1091
குழந்தைகளுக்கானஅவசர உதவி :——–1098
அவசர காலம் மற்றும் விபத்து : ————1099
முதியோர்களுக்கான அவசர உதவி:——1253
தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
கடலோர பகுதி அவசர உதவி : ————-1093
ரத்த வங்கி அவசர உதவி : ——————-1910
கண் வங்கி அவசர உதவி : ——————-1919
விலங்குகள் பாதுகாப்பு ————————044 -22354959/22300666
நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்..
நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும்.
அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி: ஜெ. உத்தரவு
வண்ணமயமான நீதிக்கதைகளைச் சொல்வதற்கான ஏற்பாடுகளுடன், அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியை போதிப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'அங்கன்வாடி மையங்களில் பயன்பெறும் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லும் வகையில் மனதளவில் தயார் செய்வதற்காக, முன்பருவக் கல்வி போதனை நல்ல தரமுள்ள வகையில் அளிக்கப்படவேண்டும்.
இதனைக் கருத்தில் கொண்டு பல வண்ணங்களில் எட்டு நீதிக்கதைகளை அச்சிட்டு, அவற்றை ஒவ்வொரு அங்கன்வாடி மையங்களில் உள்ள சுவர்களில் நெகிழ்நுரை அட்டைகளில் (Foam Board) பொருத்தி அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியை போதிப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்பணி முதற்கட்டமாக 10,000 அங்கன்வாடி மையங்களில் 1 கோடியே 20 லட்சம் ரூபாயில் செயல்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுவர். அங்கன்வாடி மையங்கள் மூலம் 6 முதல் 60 மாதம் வரை வயதுள்ள குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இணை உணவு, எடை / வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் சுகாதார சேவைகள் வழங்கப்படுகின்றன.
மகப்பேறு காலத்தில் கரு வளர்ச்சியை மதிப்பீடு செய்யும் பொருட்டு கர்ப்பிணி தாய்மார்களின் உடல் எடை அதிகரிப்பை கண்காணிப்பது மிகவும் அவசியம். மேலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதம் தோறும் எடை எடுத்த பின் தாய் சேய் நல அட்டை /வளர்ச்சி கண்காணிப்பு பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் எடைகளை கண்காணிக்கும் வகையில், பச்சிளம் குழந்தைகளுக்காக 54,439 எடை பார்க்கும் கருவிகளும், குழந்தைகளுக்காக 11,333 எடை பார்க்கும் கருவிகளும், தாய்மார்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்காக 16,988 எடை பார்க்கும் கருவிகளும் வாங்கி வழங்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார
25 பேர் உள்ள சத்துணவு மையங்கள் இணைப்பு : காலிப்பணியிடம் நிரப்பிய பின் நடவடிக்கை.
அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில், 25 குழந்தைகளுக்கு கீழ் உள்ள சத்துணவு மையத்தை, அருகில் உள்ள மையத்துடன் இணைக்கப்பட உள்ளது. இம்மையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பிய பின், இணைக்கும் பணி மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.
25 குழந்தைகளுக்கு குறைவான மையங்களிலும், இந்த மூன்று பேர் பணியாற்றுவதால், பணியிடம் காலியாக உள்ள மையத்தில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஆனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களில், சமையலர் அல்லது அமைப்பாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள், சத்துணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் பொருட்டு, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள மையங்களை, அருகில் உள்ள மையத்துடன் இணைத்து விட்டால், ஆள் பற்றாக்குறை சமன் செய்வதுடன், குறிப்பிட்ட நேரத்துக்கு குழந்தைகளுக்கு, சத்துணவு வழங்க முடியும், என அரசு கருதுகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த தேர்தல் கமிஷன் புதிய வசதி
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த தமிழக தேர்தல் கமிஷன் புதிய வசதியை
ஏற்படுத்தியுள்ளது. இதற்காக, ஆன்லைன் வசதியை பெற இனி இன்டர்நெட் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவிலேயே இந்த வசதி முதன் முறையாக தமிழகத்தில் அமல் செய்யப்படுகிறது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் முதல் முறையாக கம்ப்யூட்டர் மையங்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்யும் வசதி தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 994 இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் மையங்களோடு தேர்தல் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னையில் மட்டும் 86 மையங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த மையங்கள் செயல்பட துவங்கும். தங்களது வீட்டில் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் வசதி இல்லாதவர்கள் இந்த மையங்களுக்கு சென்று, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஆன்லைன் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் அரசு அதிகாரிகள் நேரடியாக வீட்டுக்கு வந்து சோதனை செய்து 40 நாளில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடை யாள அட்டை வழங்குவார்கள். கம்ப்யூட்டர் மையங்களில் வாக்காளர் பெயர் சேர்க்கும் விண்ணப்பத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பி வைக்க ரூ.10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும். வாக்காளர் பெயர் பட்டியலை பிரிண்ட் அவுட் எடுத்து கொடுக்க ரூ.3 மட்டுமே பணம் வசூலிக்கப்படும். வாக்காளர்கள் பெயரை சேர்ப்பது குறித்து விண்ணப்பம் கொடுத்தவர்கள், அதுகுறித்த சந்தேகங்களை 1950 என்ற எண்ணில் தொலைபேசி எண்ணில் பேசி தெரிந்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக சிறப்பு முகாம் வரும் 1ம் தேதி முதல் நடைபெறும். இங்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை பொதுமக்கள் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். ஏற்காடு எப்போது?: ‘ஏற்காடு தொகுதி எம்எல்ஏ பெருமாள் மரணம் அடைந்ததையொட்டி, ஜனவரி 16ம் தேதிக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையம்தான் தேர்தல் தேதி முடிவு செய்து அறிவிக்க வேண்டும்’ என்றார்.
ஆன்லைன் இனி சுலபம்
ஏற்கனவே ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி உள்ளது. சொந்தமாக இன்டர்நெட் வசதி உள்ளவர்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர். கம்ப்யூட்டர் வசதி இல்லாதவர்களுக்கு இன்டர்நெட் மையங்கள் மூலம் இனி பலன் கிடைக்கும். வாக்காளர் பெயர் சேர்க்க, திருத்த ஆன்லைன் வசதியை பெற வெப்சைட் முகவரி: www.elections.tn.gov.in
21/09/2013
தமிழ்நாட்டில் 50 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு - தமிழக அரசு ஆணை வெளியிடு
சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்ததற்கேற்ப தமிழ்நாட்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிக் கூடங்களாக தரம் உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு
பிறப்பித்துள்ள ஆணை வருமாறு:-தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சரால் 15-5-2013 அன்று, உயர்நிலைப் பள்ளிகளை பொறுத்தவரையில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் ஓர் உயர்நிலைப் பள்ளி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், மத்திய அரசால் நிதியுதவி அளிக்கப்படாத நிலையிலும், மாணவர்களின் நலன் கருதி, மாநில நிதியில் இருந்து 2013-2014-ம் கல்வி ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 300 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார்.
இரட்டைப்பட்ட வழக்கு, மீண்டும் வருகிற வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது
தொடரும் இரட்டைப்பட்ட வழக்கு இன்று நீதியரசர்கள் ராஜேஷ் அகர்வால் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதலாவது அமர்வில் விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்ட வழக்கு, இரட்டைப்பட்ட வழக்கின் சார்பாக மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் அவர்கள் வாதிட்டார். அவரது வாதம் காலை 11.55க்கு தொடங்கி பிற்பகல் 1.15வரை தொடர்ந்தது.
அதன்பின் நீதியரசர்கள் இவ்வழக்கை 26.9.2013 அன்று ஒத்தி வைத்து தீர்ப்பளித்தனர். எனவே இவ்வழக்கு வருகிற 26.9.2013, வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது
50 சதவீத அகவிலைப் படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப் படும் வாய்ப்பு இல்லை.
5 ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி அகவிலைப் படி 50 சதவீதத்தை தாண்டும் போது, 50 சதவீத அகவிலைப் படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப் பட வேண்டும் என பரிந்துரைத்தது. ஆனால் 6 ஆவது ஊதியக் குழுவில் அகவிலைப் படி 100 சதவீதத்தை தாண்டும் போது 25 சதவீதப் படிகள் உயர்த்தப் பட வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது.
ஆகவே 50 சதவீத அகவிலைப் படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப் படும் வாய்ப்பு இல்லை.
No need to merge the dearness allowance with basic Pay at any stage - 6CPC Recommendation
As per the 6CPC recommendation accepted by the government, the Dearness Allowance supposed to be enhanced from 1st January of every year has to be paid with salary of month of March.
The 6 CPC was very much clear about two things;
first one is the formula for calculating the quantum of DA to be paid to central government employees and its frequency.
Second one is on Merger of 50% Dearness allowance with Basic pay by converting it as dearness Pay
It has been clearly told in 6 CPC recommendations under the Heading of Dearness Allowance, Chapter no 4.1…
4.1.18 ……This conversion, however, is not necessary in the revised structure being recommended where increments are payable as a percentage of the pay in the pay band and grade pay thereon and provision has been made for all allowances/benefits to be revised periodically linked to the increase in the price index. The Commission is, therefore, not recommending merger of dearness allowance with basic pay at any stage.
4.1.19 No real justification exists for revising DA once in 3 months. Accordingly, DA may continue to be sanctioned twice a year as on 1st January and 1st July payable with the salary of March and September respectively for administrative convenience with inflation neutralization being maintained at 100% at all levels.
20/09/2013
"எம்.பி.,க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, பள்ளிக்கூடங்களுக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் வாங்கவும், கூட்டுறவு சங்கங்களுக்கு கட்டுமான வசதியை ஏற்படுத்தவும் ஒதுக்கீடு செய்யலாம்' என, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது..
பார்லிமென்ட் உறுப்பினர்கள், தங்கள் தொகுதியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள, ஒவ்வொரு எம்.பி.,க்கும், ஆண்டுதோறும், 5 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு எம்.பி.,யும், தன் தொகுதியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். லோக்சபா எம்.பி.,க்களுக்கு, அவர்கள் சார்ந்துள்ள தொகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு மட்டுமே பரிந்துரை செய்ய முடியும்.
ராஜ்ய சபா எம்.பி.,யாக இருந்தால், ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரிந்துரைக்கலாம். இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் பணிகளில், எந்தெந்த பணிகளுக்கு, பரிந்துரை செய்யலாம் என்பது ஏற்கனவே வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், புதிதாக, பள்ளிக்கூடங்களுக்கு தேவையான மேஜை, நாற்காலி போன்ற மரச்சாமான்களை வாங்க பரிந்துரை செய்யலாம். ஆரம்பப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளி வரை, மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில், மேஜை, நாற்காலிகள் வாங்க பரிந்துரை செய்யலாம். இந்த வகையில், ஆண்டொன்றுக்கு, 50 லட்சம் ரூபாய் அனுமதிக்கலாம். அதிலும் ஒரு பள்ளிக்கு, ஆயுட்கால அதிகபட்ச அளவு, 10 லட்சம் ரூபாய் வரை மட்டுமே அனுமதிக்க முடியும். அதே போல், கூட்டுறவு சங்கங்களுக்கு கட்டடம் போன்ற கட்டுமான வசதிகளை ஏற்படுத்த பரிந்துரை செய்யலாம். ஆனால், எம்.பி.,யோ, அவரது குடும்ப உறுப்பினர்களோ, அந்த சங்கத்தில் உறுப்பினர்களாகவோ, நிர்வாகிகளாகவோ இருக்கக் கூடாது என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு கடலை மிட்டாய், கேழ்வரகு-உளுந்து பர்பி-முதல்வர் அறிவிப்பு
பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில், சத்துணவு சாப்பிட்டும் எடை குறைவாக உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு கடலை மிட்டாய், கேழ்வரகு பர்பி, உளுந்து பர்பி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். குழந்தைகளுக்கு சத்துணவு தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 67 லட்சத்திற்கும் மேலான குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. இவர்களுக்கு தினமும் சூடாக சமைத்த அரிசி சாதத்துடன், சாம்பார் மற்றும் வேகவைத்த முட்டையுடன் சத்துணவு கொடுக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமைகளில், வேகவைத்த கறுப்பு கொண்டைக் கடலை, பச்சை பயறும், வெள்ளிக்கிழமைகளில் வேகவைத்த உருளைக்கிழங்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. வாரத்தில் 5 வேலை நாட்களிலும், முட்டை, முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுக்கப்படுகிறது. கலவை சாதங்கள்கடந்த 30 ஆண்டுகளாக ஒரே வகையான உணவு வழங்கப்படுவதால், குழந்தைகள் சலிப்படைந்துள்ளனர். எனவே, அவர்களுக்கு புதிய வகையிலான, விதவிதமான கலவை சாதம், மசாலா முட்டை தினமும் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பரீட்சார்த்தமாக, அனைத்து மாவட்டங்களிலும், ஒரு வட்டாரத்தில் உள்ள சில பள்ளிக்கூடங்களில் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பரிசீலனை செய்து வருகிறார். குழந்தைகள் எடை குறைவுஏற்கனவே, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் எடையை அவ்வப்போது சரி பார்க்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவின் பேரில், சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். அதன்படி, தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் உள்ள குழந்தைகள் எடை பார்க்கப்பட்டனர். அப்போது, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி பள்ளிகளில் படிக்கும் 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள், எடை குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. கடலை மிட்டாய்முதல்-அமைச்சர் ஜெயலலிதா, இதுபோன்ற எடை குறைவான குழந்தைகளுக்கு புரதச்சத்து அதிகம் உள்ள உணவு வழங்க வேண்டும் என்றும், குறைந்த பட்சம் 250 கலோரி அளவு சத்து நிறைந்ததாக அது இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதன்பாடி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு கடலை மிட்டாய், கேழ்வரகு பர்பி, உளுந்து பர்பி ஆகியவை ஒவ்வொரு நாளும் வழங்கப்பட இருக்கிறது. இந்த திட்டம் அடுத்த சில நாட்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அங்கன்வாடி மையங்களில் இந்த பர்பி வழங்கப்படும். இதுகுறித்து அங்கன்வாடி அமைப்பாளர் ஒருவர் கூறியதாவது:- முதல்-அமைச்சருக்கு பாராட்டுமுதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், அமைச்சர் பா.வளர்மதி, அதிகாரிகளுடன் அங்கன்வாடி மையங்களுக்கு வந்து அடிக்கடி ஆய்வு நடத்துகிறார். அதை முதல்-அமைச்சரின் கவனத்திற்கும் எடுத்து செல்கிறார். அந்த வகையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சிந்தையில் உதித்த திட்டம்தான் குழந்தைகளுக்கு கடலை மிட்டாய், கேழ்வரகு பர்பி, உளுந்து பர்பி வழங்கும் திட்டமாகும். இது குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாகும். இவ்வாறு அவர் கூறினார்
போலீஸ் கண்காணிப்பில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் போலீஸ் கண்காணிப்பையும் மீறி,செப்., 25ல், சென்னையில் மறியலில் பங்கேற்போம்
அனைத்து மாவட்டங்களிலும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை, போலீசார் கண்காணிக்கின்றனர். மத்திய அரசு இடைநிலை ஆசிரியர் களுக்கு இணையாக மாநில இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து மாவட்ட அளவில் பல போராட்டங்களை நடத்தினர்.
இதன்தொடர்ச்சியாக செப்., 25ல், சென்னையில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க, பலமாவட்டங்களில் இருந்து வாகனங்களில், சென்னை செல்ல ஆசிரியர்கள் முடிவு செய்திருந்தனர். அதே நேரம், மறியலில் பங்கேற்க தயாராகும் ஆசிரியர்களை, சென்னைக்குள் நுழைய விடாமல், அந்தந்த மாவட்டங்களில் முதல்நாள் தடுத்து நிறுத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், சங்க நிர்வாகிகளை கண்காணிக்கும் பணியில் தற்போது போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சென்னையில் செப்.,25 மறியல் போராட்டத்திற்கு செல்ல பஸ்களில் மொத்தமாக "டிக்கெட்'கள் முன்பதிவு செய்திருந்தோம். ஏதோ காரணத்திற்காக அனைத்து முன்பதிவையும் பஸ் கம்பெனிகள் திடீரென ரத்து செய்து விட்டன. போலீஸ் கண்காணிப்பையும் மீறி, மறியலில் பங்கேற்போம், என்றார்.
தொடரும் இரட்டைப்பட்ட வழக்கு- மீண்டும் வருகிற 26.9.2013, வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது
தொடரும் இரட்டைப்பட்ட வழக்கு இன்று(20.9.2013) முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த வழக்கு இரட்டைப்பட்டம் சார்பாக மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் அவர்கள்வாதிட்டார். அவரது வாதம் காலை 11.55க்கு தொடங்கி பிற்பகல் 1.15வரை தொடர்ந்தது. அதன்பின்நீதியரசர்கள் இவ்வழக்கை 26.9.2013 அன்று ஒத்தி வைத்து தீர்ப்பளித்தனர். எனவே இவ்வழக்கு வருகிற 26.9.2013, வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது
லஞ்சம் வாங்கினால் மட்டுமல்ல… கொடுத்தாலும் தண்டனை உறுதி மத்திய அரசு பரிசீலனை
லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல லஞ்சம் கொடுப்பது கூட சட்ட விரோதமானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய சட்டத்திருத்தத்தின் படி லஞ்சம் வாங்குபவர்கள் மட்டுமின்றி லஞ்சம் கொடுப்பவர்களையும் தண்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது சட்ட விரோதமானது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. லஞ்சம் வாங்குபவர்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதம் அதிகபட்சம் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. லஞ்சத்தை ஒழிக்க மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை அன்னா ஹசாரே தலைமையிலான சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினார்கள். இதையடுத்து லஞ்ச தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்தார். அதன்படி அந்த சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த சட்ட திருத்தம் கடந்த மாதம் பாராளுமன்ற மேல் சபையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சட்டத்திருத்தத்தின் படி லஞ்சம் வாங்குபவர்கள் மட்டுமின்றி லஞ்சம் கொடுப்பவர்களையும் தண்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. லஞ்சம் கொடுக்க முன் வருபவர்கள் தங்கள் சுய நலத்துக்காகவே பணம் கொடுக்கிறார்கள் என்பதால் அவர்களுக்கும் ஜெயில் தண்டனை கொடுக்க வேண்டும் என்று சட்டத்திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. சட்ட திருத்தம் மேலும் லஞ்சம் கொடுப்பவர்களும், வாங்குபவர்களுக்கான குறைந்த பட்ச தண்டனையை 6 மாதத்தில் இருந்து 3 ஆண்டுகளாக உயர்த்த பரிந்து ரைக்கப்பட்டுள்ளது. அது போல அதிகபட்ச தண்டனை காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகள் வரையிலான ஜெயில் தண்டனையாக மாற்ற திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்துக்கு நாடாளுமன்றமும், மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் கொடுத்துவிட்டால், இனி லஞ்சம் வாங்குபவர்கள் மட்டுமல்ல கொடுப்பவர்களும் சிறை கம்பியை எண்ண வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளிகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
பள்ளிக்கல்வித் துறையின் ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை முதன்னை செயலர் சபீதா, அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்ணி, தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குனர் டாக்டர் மகேஸ்வரன், பள்ளி கல்வி இயக்குனர் உள்ளிட்ட அனைத்து இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
2013&2014ம் ஆண்டில் பள்ளிக் கல்வித்துறை மான்ய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாகவும், தரமான கல்வி வழங்குவது குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அனைத்து பள்ளிகளுக்கும் தரமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும், பள்ளிகளை அடிக்கடி ஆய்வு நடத்த இந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
அரியலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.34லட்சம் ஊக்கத்தொகை கலெக்டர் தகவல்
அரியலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.33.85 லட்சம் மதிப்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக அரியலூர் கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்தார். அரியலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியல் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. அரியலூர் எம்எல்ஏ துரை.மணிவேல் முன்னிலை வகித்தார். கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமை வகித்து பேசியதாவது: அரியலூர் மாவட்டத்தில் 2012-13 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முப்பருவத்திற்கும் நோட்டுப்புத்தகம் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 32 பேருக்கும், 1 முதல் 12 வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச புத்தகப்பை இதுவரை 84 ஆயிரத்து 637 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8 வரை படிக்கும் ஏழை எளிய சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு 4 செட் சீருடைகள் வழங்கப்பட்டது. மேலும் 1 லட்சத்து 28 ஆயிரத்து 887 பேருக்கு இலவச காலணிகள் வழங்கப்பட்டுள்ளது. இலவச பஸ்பாஸ் கேட்டு விண்ணப்பித்த1 முதல் 12 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 14 ஆயிரத்து 719 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 6 ஆயி ரத்து 488 பேருக்கு தேவை பட்டியலின்படி இலவச சைக்கிள் பெறப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. 58 ஆயிரத்து 414 பேருக்கு இலவச உபகரணப்பெட்டியும், சாதி, வருமான, இருப்பிட சான்று பெறுவதற்கு படிக்கிற பள்ளிகளிலேயே விண்ணப்பித்த 10 ஆயிரத்து 492 மாணவர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை பெற தகுதியான 5 ஆயிரத்து 97 பேருக்கு கல்வி ஊக்கத்தொகையாக ரூ.33.85 லட்சத்தில் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு கலெக் டர் பேசினார். டிஆர்ஓ கருப்பசாமி, ஆர்டிஓ கண பதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதி வாணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வைத்தியநாதன், மாவட்ட கல்வி அலுவலர் அருள்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளான அக்டோபர் 3-ந்தேதி மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடபுத்தகம் வழங்க இயக்குநர் உத்தரவு
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் அக்டோபர் மாதம் 3ந் தேதி திறக்கப்படுகின்றன. அன்று மாணவர்கள் அனைவருக்கும் 2ம் பருவத்திற்கான பாட புத்தகங்கள், நோட்டுகள் அனைத்தும் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.
காலாண்டு தேர்வுகள்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் அனைத்திலும் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகம் வழங்கப்பட்டு வருகின்றன. அதுபோல விலை இல்லா நோட்டு புத்தகங்களும் கொடுக்கப்படுகின்றன.
தற்போது அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் காலாண்டுதேர்வு நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொது வினாத்தாள் வழங்கப்பட்டு வருகிறது. தேர்வுகள் அனைத்தும் வருகிற 21-ந்தேதிக்குள் முடிக்கப்பட்டு விடுமுறை விடப்படுகிறது.
அக்டோபர் 2-ந்தேதி
விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் அனைத்தும் அக்டோபர் மாதம் 3-ந்தேதி திறக்கப்படுகின்றன.
தற்போது மாணவர்களின் புத்தகச்சுமையை குறைக்க பாடப்புத்தகங்கள் காலாண்டுவரை ஒரு பருவமாகவும், அரையாண்டுவரை 2-வது பருவமாகவும் முழு ஆண்டுக்கு 3-வது பருவமாகவும் வழங்கப்படுகிறது. இது 9-ம் வகுப்புவரை இந்த பருவமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி முதல் பருவம் முடிந்து அக்டோபர் 3-ந்தேதி 2-வது பருவம் தொடங்குகிறது. அன்று அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் விலை இல்லா பாடப்புத்தகம், நோட்டு புத்தகம் வழங்கப்பட உள்ளது. அதற்காக ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு விட்டன.
எனவே தலைமை ஆசிரியர் கண்காணிப்பில் அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உரிய பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்களை வழங்குவார்கள்.
இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். இளங்கோவன் தொடக்க கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் கூறுகையில் அனைத்து தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளிலும் விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது. பள்ளிக்கூடம் திறந்த அன்று எல்லா மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்றார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்விற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்,தமிழக அரசும் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலையில் அறிவிக்கப்படும். இந்நிலையில் தற்போது 80 சதவீதமாக வழங்கப்படும் அகவிலைப்படி இனி 90 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியம் பெறும் 30 லட்சம் பேரும் பலனடைவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் ஆண்டுதோறும் கூடுதலாக 10 ஆயிரத்து 879 கோடி ரூபாய் அரசுக்கு செலவாகும். இதையடுத்து அடுத்த வாரத்தில் தமிழக அரசும் அகவிலைப்படி உயர்விற்கான அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
19/09/2013
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க ஆசிரியர்களுக்கு. பயிற்சி
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் பள்ளிகளிலும், பள்ளிகளுக்கு வெளியிலும் அதிகரித்து வருகின்றன.இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த குழந்தைகள் மீதான உரிமை மீறல் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த விழிப்புணர்வுப் பயிற்சி, குழந்தைகளும் ஆசிரியர்களும் அதிக விழிப்போடு இருக்க உதவும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.முதற்கட்டமாக, தமிழகம் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது.இதில் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 60 பேருக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.17) பயிற்சி தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பயிற்றுநர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் இதில் பங்கேற்றனர்.இவர்கள் கருத்தாளர்களாக இருந்து அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த பிற ஆசிரியர்களுக்குப் பயிற்சியை வழங்குவார்கள். ஆசிரியர்களுக்கான பயிற்சி அக்டோபர் மாதம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.துளிர் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தப் பயிற்சியை வழங்குகின்றனர்.
என்ன பயிற்சி?எது பாலியல் வன்கொடுமை, பாலியல் கொடுமைக்கான அறிகுறிகள், சாதாரணமாக தொடுவதற்கும், தவறான நோக்கத்தில் தொடுவதற்கும் உள்ள வேறுபாடு, பாதிக்கப்படும் குழந்தைகளின் அச்சத்தைப் போக்குதல், தவறிழைத்தவர்களுக்கு தண்டனைப் பெற்றுத் தருதல் போன்றவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.குறிப்பாக பள்ளிகளிலோ, வெளியிலோ தனியான இடத்துக்கு யாரேனும் அழைத்தால் போகக் கூடாது உள்ளிட்ட பொதுவான ஆலோசனைகளும் ஆசிரியர்களின் மூலம் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை மண்டலத்துக்கான பயிற்சியில் பெண் குழந்தைகளுக்கு நிகராக ஆண் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது என பயிற்சியாளர் கூறியது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஆசிரியர்களுக்கே இது குறித்து பேசுவதில் தயக்கம் இருக்கிறது. இந்தத் தயக்கத்தைப் போக்கி அவர்களை குழு விவாதத்துக்கு தயார் செய்யவே ஒருநாள் தேவைப்படுகிறது.இந்தப் பயிற்சியின் முடிவில் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமை குறித்த விழிப்புணர்வு பெற்றுச் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
SSA,' நிதி, 1,500 கோடி ரூபாயாக குறைப்பு: நிதி நெருக்கடியால், மத்திய அரசு நடவடிக்கை
நாடு முழுவதும், 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் அனைவரும், கட்டாயம், எட்டாம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு, அனைவருக்கும் கல்வி திட்டத்தை கொண்டு வந்தது. பின், இத்திட்டத்தின் கீழ், எட்டாம் வகுப்பு வரை படிப்பவர்கள், தொடர்ந்து, 10ம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என்பதற்காக, மத்திய இடைநிலைக் கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) கொண்டு வரப்பட்டது. இரு திட்டங்களுக்கும், தனித்தனியே, மத்திய அரசு, நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதில், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியில், 70 சதவீதம், தொடக்க கல்வித்துறை கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, சம்பளமாக வழங்கப்படுகிறது
. 30 சதவீத நிதி, ஆரம்ப கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், திட்ட அறிக்கைகளை தயாரித்து, அதற்கு தேவைப்படும் நிதியை அளிக்கக் கோரி, தமிழக அரசு, மத்திய அரசுக்கு, அறிக்கை அளிக்கும். அதை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வு செய்து, நிதியை ஒதுக்கீடு செய்யும். ஒவ்வொரு ஆண்டும், 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, நிதி ஒதுக்கீடு செய்துவந்த மத்திய அரசு, நடப்பு ஆண்டிற்கு அதை, 1,500 கோடி ரூபாயாக குறைத்து விட்டது என, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது: கடந்த ஆண்டு (2012 - 13), 2,000 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த ஆண்டு (2013 - 14), 3,000 கோடி ரூபாய்க்கு, திட்ட அறிக்கையை சமர்ப்பித்தோம். ஆனால், இதில், 50 சதவீத நிதி மட்டுமே கிடைத்துள்ளது. தமிழகத்திற்கு மட்டுமில்லாமல், அனைத்து மாநிலங்களுக்கும், அவர்கள் கேட்ட நிதியில், 50 சதவீத நிதியைத் தான், மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கடும் நிதி நெருக்கடி காரணமாக, நிதி குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார். ஆனால், ஆர்.எம்.எஸ்.ஏ., நிதி, சிறிது கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, 460 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில், இந்த ஆண்டு, 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கலாம் என, தெரிகிறது. மத்திய அரசு நிதியில், புதிய பள்ளி கட்டடங்கள், ஏற்கனவே இயங்கி வரும் பள்ளிகளில், கூடுதல் வகுப்பறைகள், குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. தற்போது, இந்த நிதியை குறைத்திருப்பதால், பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில், தேக்க நிலை ஏற்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவதாக டெல்லிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 1ந் தேதி தேதியிட்டு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இதற்கான அறிவிப்பை வரும் வெள்ளி அன்று வெளியிடும் எனத் தெரிகிறது.
நடப்பு நிதியாண்டில் 2வது முறையாக அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்துகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 80%ஆக உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தற்போது 90%ஆக உயர்கிறது. கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரட்டை இலக்கத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பிறகு தற்போதும் 10% உயர்த்தப்படுகிறது.
இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்கள் 30 லட்சம் ஒய்வு ஊதியத் தாரர்கள் பலன் பெறுவார்கள் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் அகவிலைப்படியிலிருந்து குறிபிட்ட தொகை அடிப்படை ஊதியத்தில் இணைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் "வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பேசும் திட்டம் துவக்கம்
பள்ளிக்கல்வி இயக்குனர், "வீடியோ கான்பரன்ஸ்' முறையில், முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பேசுவதற்கான திட்டம், நேற்று முன்தினம் துவங்கியது. துறை செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து மாதத்திற்கு ஓரிரு முறை, முதன்மைக் கல்வி அலுவலர்களை சென்னைக்கு அழைத்து கூட்டம் நடத்துவது வழக்கம்.
இதற்காக அவ்வப்போது, முதன்மைக் கல்வி அலுவலர்கள், சென்னைக்கு வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு, "வீடியோ கான்பரன்ஸ்' மூலம், முதன்மைக் கல்வி அலுவலர்களுடன், நேரடியாக இயக்குனர் பேசும் வகையிலான திட்டம் நேற்று முன்தினம் துவங்கியது. அரியலூர், விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி, விழுப்புரம் உள்ளிட்ட, 13 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன், இயக்குனர் ராமேஸ்வர முருகன், திட்ட செயல்பாடு குறித்து பேசினார். இது போன்று, வாரத்திற்கு ஒரு முறை, வாரத்திற்கு, ஐந்து மாவட்டம் என்ற முறையில், திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், இயக்குனர் தெரிவித்தார்.
ஆன்-லைன் கலந்தாய்வு : பள்ளி கல்வித் துறையில், இருக்கை கண்காணிப்பாளர்களாக உள்ள, 50 பேருக்கு கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, ஆன்-லைன் வழியாக நேற்று நடந்தது. பணி மூப்பு தகுதி வாய்ந்த, 50 பேர் பதவி உயர்வு பெற்றனர். இதுபோன்று, 112 உதவியாளர்கள், இருக்கை கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வும், ஆன்-லைன் வழியாக நேற்று நடந்தது
பள்ளிக்கல்வி - எம்.பில்., உயர்கல்வித் தகுதி பெற்றமைக்கு மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் குறித்த அரசாணை மற்றும் உயர்நீதிமன்ற ஆணை நகல்
மூன்றாவது ஊக்க ஊதிய (3rd Incentive) உயர்வுக்கான மதுரை உயர் நீதி மன்ற ஆணை மற்றும் மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான அரசாணை எண் -15.
GO.15 SCHOOL EDUCATION (J) DEPT DATED.28.03.2013 & HIGH COURT JUDGEMENT ORDER CLICK HERE TO DOWNLOAD...M.Phil stay Order available
தொடக்க கல்வித் துறையில் 2004-ம் ஆண்டு முதல் பணி நியமனம் செய்யப்பட்டு பதவி உயர்வின்றி தவிக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்
தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித் துறையில் பணி நியமனம் பெற்றுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
தொடக்க கல்வித் துறையில் பதவி உயர்வின்றி தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்
தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித் துறையில் பணி நியமனம் பெற்றுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித் துறையில் பணி நியமனம் பெற்றுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை உயரத்தும் வகையில், பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2004-ம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த 2006, ஜூன் மாதம் முதல் காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது.
சம கல்வித் தகுதி, பணி, ஊதியம் மற்றும் தேர்வு முறை இருந்த போதும் ஆசிரியர் தேர்வு வாரிய தர எண்ணை கருத்தில் கொள்ளாமல், பள்ளிக் கல்வித் துறையில் வழங்குவது போல, தொடக்க கல்வித் துறையில் பணி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. தொடக்கக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஓரே பதவி உயர்வான நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வும், தற்போது ஒவ்வொரு ஆண்டும் 100-க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதால் பதவி உயர்வு என்பது கனவாகி விட்டதாக பட்டதாரி ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தரம் உயர்த்தப்படுóம் உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித் துறையில் இளையவராக கருதப்படுவதால் பதவி உயர்வு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் செயலர் கூறும் போது, கடந்த 1981-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை எண் 720-ல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறலாம் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அப்போது 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 2004-ம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித் துறை மூலம் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் அரசாணையில் திருத்தம் செய்யப்படவில்லை.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் கடந்த 2003-ம் ஆண்டு முதல் ஆசிரியர் பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டனர். ஆசிரியர் பயிற்றுநர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு சிறப்பு அரசாணை வெளியிடப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிரியர் போட்டித் தேர்வில் 2-ஆம் பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட 2,500-க்கும் மேற்பட்டோர் ஆசிரியர் பயிற்றுநராக நியமிக்கப்பட்டு பதவி உயர்வுக்கான வாய்ப்பை பெற்றுள்ளனர். இதே தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதல் பட்டியலில் தேர்வான பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்கக் கல்வித் துறையில் பணி நியமனம் செய்யப்பட்டதால் பதவி உயர்வுக்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.
தொடக்க கல்வித் துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களின் நலன் கருதி அரசாணை 720-ல் திருத்தம் செய்யவும், தொடக்க கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறை என்ற வேறுபாடின்றி, ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Subscribe to:
Posts (Atom)