திருக்குறள்

28/02/2014

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் அனுமதி

இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 100 சதவிகிதம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.இம்முடிவால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள். மேலும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதனால் பலன் பெறுவார்கள்.

மேலும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதிய வரம்பை ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் உடனடியாக 28 லட்சம் சந்தாதாரர்கள் பலன் அடைவார்கள்.இபிஎஸ் - 95 திட்டத்தின் கீழ் வரும் சந்தாதாரர்களுக்கு இப்பலன் கிடைக்கும்.இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு வரும் நிதி ஆண்டில் மட்டும் 1,217 கோடி ரூபாய் கூடுதலாக தேவைப்படும்.

6வது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள குறைகளை நீக்க மீண்டும் ஒரு குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதில் பல துறைகளில் ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டது. இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை நீக்க அரசு நியமித்த குழுக்களினால் பலன் ஏற்படவில்லை. இதனால் ஊழியர்கள் சங்கங்கள் குறைப்படுகளை நீக்க உத்தரவிடக் கோரி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இவ்வழக்கு விசாரித்த நீதிமன்றம் 2 முதன்மை செயலாளர் அடங்கிய ஒரு புதிய குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

BRTEs வாசிப்புத்திறன்,எழுதுதல் திறன்,கணித செயல்பாடுகள் கணக்கீடு முறை -வழிகாட்டுக்குறிப்புகள்

BRTEs வாசிப்புத்திறன்,எழுதுதல் திறன்,கணித செயல்பாடுகள் கணக்கீடு முறை -வழிகாட்டுக்குறிப்புகள்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகம் -உண்மை தன்மை அறிய ரூ 500 செலுத்தவேண்டும் - தேர்வு கட்டுபாட்டு அலுவரின் கடிதம்

பிளாஸ்டிக் இல்லா கிராமங்களுக்கு விருது: தமிழக அரசு அறிவிப்பு


பிளாஸ்டிக் இல்லாத கிராமங்களுக்கு விருது வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் இல்லாத சூழ்நிலையை உருவாக்க தமிழக அரசு முயன்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, பிளாஸ்டிக் இல்லாத கிராமங்கள், பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பிளாஸ்டிக் இல்லாத வளாகத்தைக் கொண்டுள்ள பள்ளிகள் ஆகியவற்றிற்கு விருதுகள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு பிரிவிலும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முறையே ரூ. 5 லட்சம், 3 லட்சம் மற்றும் 2 லட்சம் வழங்கும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் தயார்: பிரவீன்குமார் தகவல்


தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி முடிவு, வேட்பாளார்களை அறிவித்தல், தேர்தல் அறிக்கையை தயாரித்தல் மற்றும் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் என இந்திய அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் ஆணையமும் லோக்சபா தேர்தலை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. மிக விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில், தமிழகம் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார். இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்களிடம் அவர் கூறியதாவது: 70 ஆயிரம் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்கள்: தமிழ்நாட்டில் 60 ஆயிரத்து 418 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் சுமார் 70 ஆயிரம் எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரங்கள் வைக்க திட்டமிட்டுள்ளோம். அனைத்து ஓட்டு எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. தேர்தலை முழு வீச்சில் நடத்துவதற்கு தயார் நிலையில் இருக்கிறோம். பயிற்சி: தற்போது தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சிகளை அளித்து வருகிறோம். ஒரு மாவட்டத்துக்கு 14 தேர்தல் பணி ஒருங்கிணைப்பு அலுவலர்கள் வீதம், அனைத்து மாவட்டத்துக்கும் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு ஆகியோருக்கான பயிற்சி நிறைவடைந்துவிட்டது. 30 ஆயிரம் ஓட்டுச்சாவடி அலுவலர்கள்: ஒரு மாவட்டத்தில் இருந்தும் ஓட்டுச்சாவடி அலுவலரை தேர்வு செய்து, மொத்தம் 130 பேருக்கு மாஸ்டர் பயிற்சி அளிக்க இருக்கிறோம். இந்தப் பயிற்சி பெற்றவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். ஒட்டுமொத்த பயிற்சி இல்லை: ஒட்டுமொத்தமாக பயிற்சி அளிக்கக்கூடாது என்றும் ஒவ்வொரு பயிற்சியிலும், பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கை 50-ஐ தாண்டக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளோம். இந்தப் பயிற்சிகள் 25-ந் தேதி முதல் 28-ந் தேதிவரை நடக்கிறது. ஆறு குழுக்கள்: அதுபோல் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் மாஜிஸ்திரேட்டு அதிகாரம் கொண்ட அதிகாரி ஒருவரின் தலைமையில் ஒரு வீடியோகிராபர், 3 போலீசாரைக் கொண்ட ஆறு குழுக்கள் அமைக்கப்படும். பறக்கும் படை: பறக்கும்படையாக இந்த குழுக்கள் செயல்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் தமிழகம் முழுவதும் சுமார் 1,400 குழுக்கள் உருவாக்கப்படும். இவர்களுக்கு 27 மற்றும் 28-ந் தேதிகளில் பயிற்சி அளிக்கப்படும். கலெக்டர்கள் ஆலோசனைக்கூட்டம்: இதுதவிர தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கலெக்டர்களையும் 28-ந் தேதி சென்னைக்கு அழைத்துள்ளேன். இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் இடம் இன்னும் முடிவாகவில்லை. அதுமட்டுமல்லாமல் அவர்களுடன் தினமும் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை வழங்கி வருகிறேன். பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகள்: எனது அலுவலகத்திலும் 11 தேர்தல் பணி ஒருங்கிணைப்பு அலுவலர்களை நியமித்துள்ளேன். அவர்களுக்கு பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. போலீசார் தவிர தமிழகம் முழுவதும் மூன்றரை லட்சம் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஈடுபடுவார்கள். மத்திய அரசு ஊழியர்கள் பெரும்பாலும், பிரச்சினைக்குரிய பகுதிகளில் நுண்ணிய கண்காணிப்பாளராக செயல்படுவார்கள். பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகள் பற்றி கணக்கெடுத்து வருகிறோம். விண்ணப்பம்: எம்.பி. தேர்தலில் போட்டியிடுவோர் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு டெபாசிட் தொகை ரூ.12 ஆயிரத்து 500 ஆகும். தமிழகத்தில் 9 லட்சம் புதிய வாக்காளர்கள் உட்பட 5 கோடியே 37 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் மாற்றம் கொண்டு வர விரும்புவோர், வேட்புமனு தாக்கல் தேதிக்கு (இன்னும் அறிவிக்கப்படவில்லை) 10 நாட்கள் முன்புவரை விண்ணப்பிக்கலாம். 20 ஆயிரம் வெப் ரோ: கடந்த தேர்தலில் 10 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப் ரோ வைத்திருந்தோம். இந்த முறை 20 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் அந்த வசதியைப் பொருத்த திட்டமிட்டுள்ளோம் ", இவ்வாறு பிரவீன்குமார் தெரிவித்தார்.

இந்திய கண்டுபிடிப்புக்கு ரூ. 6 கோடி பரிசு- மஹிந்த்ரா நிறுவனம் அறிவிப்பு

அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய சிறந்த கண்டுபிடிப்புக்கு ரூ.6 கோடி பரிசு வழங்கப்படும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பரவலாகக் காணப்படும் போக்குவரத்து, மன அழுத்தம் மற்றும் மின்சாரப் பற்றாக்குறை போன்றவை இன்னமும் தீர்க்க முடியாத பிரச்சினைகளாக இருக்கின்றன. இவற்றுக்கான தீர்வினைக் கண்டுபிடிக்கும் இந்தியர்களுக்காக ஒரு மில்லியன் டாலர் பரிசுத்தொகையை மஹிந்திரா நிறுவன அதிபர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார். இவர் ஆட்டோமொபைல் துறையிலிருந்து விண்வெளித் தயாரிப்புகள் வரை முத்திரை பதித்துள்ள மஹிந்திரா தொழில்நிறுவனத்தின் தலைவர் ஆவார். நெருக்கடி மிகுந்த இந்திய போக்குவரத்து அமைப்பிற்கேற்ப இயங்கக்கூடிய தானியங்கிக் கார் ஒன்றினைக் கண்டுபிடிப்பவர்களுக்கு 7,00,000 அமெரிக்க டாலர்களும், வீட்டு உபயோக ஆற்றல் தேவைகளை சமாளிக்கக்கூடிய சூரிய சக்தி சாதனம் ஒன்றைக் கண்டுபிடிப்பவர்களுக்கு 3,00,000 அமெரிக்க டாலர்களும் அளிக்கப்படும் என்று மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. பரிசு அடிப்படையில் தனியார் நிறுவனம் அளிக்கும் மிகப்பெரிய பரிசுத்தொகை இதுவாகும். இந்திய மதிப்பில் 6.2 கோடி மதிப்பு பெறும் இந்தப் பரிசுத்தொகையானது தினசரி இந்திய வாழ்க்கைமுறையை மாற்றக்கூடிய சாத்தியங்களை ஊக்குவிப்பதாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது. இந்த இரண்டு சவால்களும் சமூகம், ஆற்றல் சம்பந்தப்பட்ட அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வெளியேயும் அங்கீகாரம் பெறும் வகையிலும், நமது தினசரி வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உணரும்வகையிலும், புதிய வர்த்தக முன்னேற்றத்தைத் தூண்டும்வகையிலும் இந்தக் கண்டுபிடிப்புகள் இருக்கவேண்டும் என்று ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார். கூகுள் இணையதளம் தானியங்கிக் கார்கள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாகத் திகழ்வது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் நகரத்தில் பணியாற்றும் இக்குழுவின் தலைமைப் பொறியாளரான செபாஸ்டியன் தர்ன் அணியினர் தங்களது இந்தத் தானியங்கி கார் கண்டுபிடிப்பிற்காக அமெரிக்கப் பாதுகாப்புத்துறையிடமிருந்து 2 மில்லியன் டாலர் பரிசுத் தொகையாகப் பெற்றுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் சிறுவர்களுக்கு புகையிலை பழக்கம் அதிகம்: ஆய்வில் தகவல்

சமீபத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமும், தேசிய மருந்து சார்பு சிகிச்சை மையமும் இணைந்து தேசிய அளவில் போதைப் பொருள்களுக்கு சிறுவர்கள் அடிமையாவது குறித்த பன்முக ஆய்வை மேற்கொண்டது. 

இந்தியா முழுவதும் 4024 சிறுவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், கேரள அளவில் 5-18 வயதுக்குட்பட்ட 119 சிறுவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் வேலை செய்து வரும் சிறுவர்கள் மட்டுமில்லாமல், தெருவில் வசித்து வரும் சிறுவர்கள் மற்றும் வீட்டில் தாய் தந்தையரின் பாதுகாப்புடன் படித்து வரும் சிறுவர்களிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 

இந்த ஆய்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில், இந்தியாவிலேயே அதிக அளவில் கேரளாவில் உள்ள சிறுவர்கள் 74 சதவீதம் அளவிற்கு புகையிலை, மது, மற்றும் சிகரெட்டு போன்ற போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த வகையான போதை பொருட்கள் அவர்களுக்கு எளிதில் கிடைப்பதே இதற்கு முக்கிய காரணம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள மாநில அரசு கல்வித்துறையின் செயலாளர் ஷாஜகான் கூறுகையில், “கேரளாவிலுள்ள அனைத்து கல்வி நிலையங்களும் இந்த ஆய்வின் முடிவை கவனமாக எடுத்துக்கொண்டு இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். மேலும் மாணவர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாவதை தடுக்க பள்ளிகளுக்கு அருகில் புகையிலை போன்றவற்றை விற்க தடை விதிக்க வேண்டும்” என்றார்.

பிப்ரவரி 28: தேசிய அறிவியல் தினம் (சர்.சி.வி. ராமன் விளைவு வெளியிட்ட நாள்) சிறப்பு பகிர்வு

உனக்குள்ளே ஒரு விஞ்ஞானி !


திருவானைக்காவலில் பிறந்து, உலக அறிவியல் அறிஞர்கள் பட்டியலில் இடம்பிடித்த அற்புதத் தமிழர், சர் சி.வி.ராமன். படிப்பில் படு சுட்டி. ஆங்கிலத்திலும் இயற்பியலிலும் தங்கப் பதக்கம் பெற்றவர். மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்ல நினைத்தார். ஆனால், இவருடைய உடல்நிலை அதற்கு ஏற்றதாக இல்லை. வெளிநாடு செல்ல மருத்துவர்கள் இவருக்கு 'உடல்நிலை தகுதிச் சான்று’ அளிக்கவில்லை.எனவே இந்தியாவில் இருந்தபடியே அறிவியலில் பல்வேறு சாதனைகள் செய்து, நோபல் பரிசை வென்றார் ராமன்.

அவரிடம் நாம் கற்கவேண்டிய அற்புத விஷயங்கள்...

வாசிப்பை நேசி!

அப்பாவின் அலமாரியில் இருந்து எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை எடுத்து, ஓயாமல் வாசிப்பார். மூன்று நூல்கள் அவரை மிகவும் ஈர்த்தன. எட்வின் அர்னால்டின் ஆசிய ஜோதி, யூக்லிட் எழுதிய ‘The elements’மற்றும் ஹெர்மான் ஹெல்ம்ஹோல்ட்ஸ் எழுதிய ‘The Sensations of Tone’ஆகிய நூல்களே அவை. வெவ்வேறு துறைகளில் ஆர்வம் இருந்ததால், அறிவியலில் அவரின் ஆய்வுகளும் பல்வேறு துறைகள் சார்ந்து இருந்தன.

பிடித்ததில் பிணைந்திடு!

இந்தியாவில் அறிவியல் வேலைவாய்ப்புகள் குறைவாகவே இருந்த காலத்தில், கொல்கத்தா சென்று நிதித் துறையில் வேலை பார்த்தார். கிடைத்த சொற்ப வருமானத்தில், பெரும்பாலான பணத்தை, ஆய்வுகள் செய்யவே பயன்படுத்திக்கொண்டார். ஒருநாள், 'பவ்பஜார்’ எனும் பகுதியின் வழியாகச் சென்றபோது, 'இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்’ என்ற பெயர் பலகையைப் பார்த்தார். அன்று முதல், மாலை நேரங்களில் அங்கே ஆய்வுகள் செய்தார். பிறகு, நிதித் துறை வேலையை முழுவதும் துறந்துவிட்டு, முழு நேர ஆய்வுகளில் ஈடுபட்டார்.

சிக்கனம் செய்!

அப்போதெல்லாம் அறிவியல் ஆய்வகத்துக்கான முக்கியக் கருவிகளை வெளிநாட்டில் இருந்துதான் வாங்குவார்கள். ஆனால், ராமன் அதிலும் சிக்கனமானவர். ஹெளராவில் இருக்கும் மார்க்கெட்டில் இருந்து பொருட்களை வாங்கி, ஆய்வுக்கான கருவிகளைத் தானே தயாரிப்பார். ராமன் விளைவுக்கான பெரும்பாலான ஆய்வுகளை 300 ரூபாயில் முடித்து விட்டார் ராமன். இறுதியில், ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி தேவைப்பட்டபோது, 'இதை மட்டும் வாங்கித் தாருங்கள்’ என்று பிர்லாவுக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கருவியைக் கொண்டு முழுமையாக ஆய்வுகளை முடித்தார்.

உலகை உற்றுக் கவனி!

மெடிட்டரேனியன் கடல் (Mediterranean Sea) என்று சொல்லப்படும் நடுநிலக் கடல் வழியாகப் பயணம் சென்றபோது, 'கடல் மற்றும் வானம் நீல நிறமாக இருப்பது ஏன்?’ என்று யோசித்ததின் விளைவாக எழுந்ததே, ராமன் விளைவு. கப்பல் பயணத்திலும் சுற்றி இருப்பனவற்றைக் கவனித்துக்கொண்டு இருந்தார் ராமன்.

நம்பிக்கையோடு முன்னேறு!

இயற்பியலாளர் ஆர்தர் காம்ப்டன், எக்ஸ் கதிர்கள் சிதறலைப் பற்றி ஆய்வுசெய்து, நோபல் பரிசு பெற்றதாக இவரின் மாணவர் சொன்னார். 'அது, கண்களுக்குப் புலப்படும் ஒளியிலும் இருப்பதற்கு சாத்தியம் உண்டல்லவா?’ என யோசித்தார். அந்தப் பாதையில் நம்பிக்கையோடு ஆய்வுகள் செய்து சாதித்தார்.

கற்றல் முடிவில்லாதது!

ராமன், ஏதேனும் ஆய்வுகளைத் தன்னுடைய மாணவர்களோடு இணைந்து வெளியிட்டாலும் அதில் அவர்களின் பெயரையே முன்னிலைப்படுத்தி வெளியிடுவார். ''அறிவியலைக் கற்பது என்பது, சூத்திரங்களையும் தரவுகளையும் கற்பது அல்ல, படிப்படியாகக் கேள்விகள் கேட்டு அறிந்துகொள்வதே'' என்பார். அப்படியே பாடம் நடத்தி, மாணவர்களுக்கும் வழிகாட்டினார்.

பகுத்து அறி!

''கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று ஒருமுறை கேட்டபோது, அந்தக் கேள்வியை அவர் தவிர்த்தார். மீண்டும் கேட்கவே, ''கடவுள் இருக்கிறார் என்றால், டெலஸ்கோப்பை வைத்துக்கொண்டு பிரபஞ்சம் முழுக்கத் தேடு. வெறும் யூகங்களை வைத்துக்கொண்டு நேரத்தை வீணாக்காதே'' என்றார் ராமன்.

துணிவு கொள்!

ஆங்கிலேய அரசு, அவரை நோபல் பரிசு வாங்கவிடாமல் தடுக்க நினைத்தது. அவருக்கு வர வேண்டிய தந்தியை மூன்று முறை தடுக்கவும் செய்தது. பிறகு தடைகளை மீறி அது, அவர் கைக்குப் போய்ச் சேர்ந்தது. 'ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது’ என்று எச்சரித்தே நோபல் பரிசு வாங்க அவரை அனுப்பினார்கள். அங்கே சென்றவர், ''ஆங்கிலேயரின் அடிமைப்படுத்தலைத் தொடர்ந்து எதிர்க்கும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு, இந்த விருது சமர்ப்பணம்' என்று கம்பீரமாக ஆரம்பித்தே தன்னுடைய உரையை வழங்கினார் ராமன்.

உனக்குள்ளே ஒரு விஞ்ஞானி!

''ஐந்து வயதில் இருந்தே பிள்ளைகளை விஞ்ஞானிகளாக நடத்த வேண்டும். அவர்களின் கேள்விகளை மதித்து, பதில் சொல்ல வேண்டும். அவர்கள் கற்றல் அனுபவம், புத்தகங்களோடு தேங்காமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அறிவியலில் நாம் ஒளிர முடியும்'' என்றார் ராமன். அவர், ராமன் விளைவைக் கண்டுபிடித்த நாளே, நம் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

26/02/2014

இடை நிலை ஆசிரியரின் சிந்தனைக்கு

தமிழ்நாட்டில் இடை நிலை ஆசிரியரியருக்கு 

வழங்கப்படும் ஊதியம் 5200+2800+750+7875= 16625


பழைய ஊதியம் 4500-125-7000 தற்போது 

நடைமுறைக்கு இருந்தால் 1.1.14ல் 4500+2250+12353 =19103


மத்திய அரசு ஆசிரியர்கள் மற்றும் டிப்ளமா 

பட்டம் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் 

வழங்கப்படும் ஊதியம் 9300+4200+12150 =25650 

இடை நிலை ஆசிரியரியருக்கு மாதம் ரூ 9025 இழப்பு

26.2.2014 இன்று தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்

மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் புதன்கிழமை (பிப்.26) ஒருநாள் மட்டும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.ஆறாவது ஊதியக் குழுவில் மத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகு, இப்போது வேலைநிறுத்தப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட போராட்டத்தை எங்களது செயற்குழுவில் கூடி முடிவு செய்வோம் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ந.ரங்கராஜன் கூறினார்.

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 2 நாள் போராட்டம் சார்பான பத்திரிக்கை செய்திகள்








தொடக்கக் கல்வி - 25.2.2014 மற்றும் 26.2.2014 ஆகிய நாட்களில் போராட்டம், வேலை நிறுத்தப் போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் இயக்குனர் உத்தரவு

தேர்தல் பணியில் பெண் ஊழியர்களுக்கு சலுகை


அங்கீகரிகப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை என்பதற்காக அரசு ஊழியர் மருத்துவ நல சிகிச்சை தொகையை மறுக்க கூடாது-ஐகோர்ட் உத்தரவு


23/02/2014

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழி உச்சரிப்புக் கையேடு: முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது ஆங்கில திறனை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசுப் பள்ளிகளில் 6,917 ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. அந்தப் பிரிவுகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் கேட்டல், பேசுதல், படித்தல் மற்றும் எழுதுதல் திறன்களை வளர்க்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர்களுக்காக ஆங்கில மொழி உச்சரிப்பு வழிகாட்டிக் கையேடு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும், மாணவர்களும் இதைப் படிக்கும்போதே அதற்குரிய உச்சரிப்பு ஒலியையும், உச்சரிப்பில் அழுத்தம், இடைநிறுத்தம் போன்றவற்றை குறுந்தகட்டின் மூலம் கேட்டு ஆங்கில மொழி அறிவை வளர்த்துக்கொள்ளும் முறையில் வழிகாட்டி கையேடு உருவாக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 1,600 பள்ளிகளில் ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் இந்தக் கையேடு அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த வழிகாட்டி கையேட்டை முதல்வர் ஜெயலலிதா வெளியிட, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி பெற்றுக்கொண்டார். தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்காக ரூ.1.80 கோடி: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தந்தை, தாய் இறக்க நேரிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அந்த மாணவர்களின் எதிர்கால கல்வி பாதிக்கப்படாமலிருக்க, அந்தக் குடும்பத்தில் உள்ள அனைத்து பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவு, பராமரிப்புச் செலவுக்காக ரூ.50 ஆயிரம் உதவித் தொகையில் நிரந்தர வைப்புத் தொகை நிதியாக வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கினார்.

2011-12, 2012-13 ஆம் கல்வியாண்டுகளில் 720 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் ரூ.3 கோடியே 60 லட்சம் வழங்கப்பட்டது. 2013-14 ஆம் ஆண்டில் 360 மாணவ, மாணவியருக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.50 ஆயிரம் உதவித் தொகைக்கான பத்திரத்தை வழங்கினார்.

செஸ் விளையாட்டு: மாணவ, மாணவியரின் சிந்திக்கும் திறமையையும், ஆற்றலையும் வளப்படுத்துவதற்காக 7 முதல் 17 வயது வரை உள்ள மாணவர்களுக்கான செஸ் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 11 லட்சத்து 25 ஆயிரத்து 628 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்களில் பல்வேறு பிரிவுகளில் 24 மாணவர்கள் வெற்றி பெற்றனர்.முதல் பரிசு பெற்றவர்களுக்கு தலா ரூ.1,200-ம், இரண்டாம் பரிசு பெற்றவர்களுக்கு தலா ரூ.800-ம், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.400-ம் என மொத்தம் ரூ.19 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இதன் அடையாளமாக ஒரு மாணவிக்கு ரூ.1,200 பரிசுத் தொகையை முதல்வர் வழங்கினார்.

தொடக்கக் கல்வி - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 7அம்சக் கோரிக்கையை நடைபெறும் போராட்டத்தால் எந்த பள்ளியும் மூடப்படக்கூடாது எனவும், அனைத்து பள்ளிகளுக்கும் மாற்றுப்பணி மூலம் ஏற்பாடுகள் இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி / தமிழ் ஆசிரியர் பதவி உயர்விற்கு 01.01.2013 நிலவரப்படி தகுதியுடைய தேர்ந்தோர்ப் பட்டியல் தயாரித்து வெளியிட இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - 2013-14 - பகுதி - II திட்டத்தின் கீழ் நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வுக் கூடங்களை நிறுவது சார்பான உத்தரவு

தொடக்கக் கல்வி - 2011-12ம் கல்வியாண்டில் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு 22.02.2014 நேற்று காலை 10மணிக்கு நடைபெற்றது

உள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

இதுகுறித்து மாநில தலைவர் திரு.காமராஜ், பொதுச் செயலாளர் திரு.ரெங்கராஜன் மற்றும் பொருளாளர் திரு.ஜோசப் சேவியர் ஆகியோர் அளித்த அறிக்கையில் இன்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டப்படி உள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என மாநில பொறுப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை முடிவு



தலைவர்கள் இன்று காலை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. அனைத்து கோரிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு கோரிக்கைக்கும் தனித்தனியாக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. ஆயினும் நிதிச் சார்ந்த கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க முடியாது எனவும் அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 
பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பிரச்சனைகள் எனில் உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதாகவும், நிதிச்சார்ந்த தீர்வுகள் உடனடியாக தீர்க்க இயலாது எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பள்ளிக்கல்வி - சுற்றுச்சுழல் பாதுகாப்பு மற்றும் எரிச்சக்தி திட்டம் - பிளாஸ்டிக் பயன்பாடுகள் தவிர்ப்பு பசுமை பள்ளிகளுக்கான விருதுக்கான விண்ணபங்கள் அறிவிப்பு

ஆசிரியர்களின் பி.எட்., கல்வித் தகுதியை பறிக்க முடிவு


20/02/2014

IGNOU Early Declaration Term End Exam Results - December 2013

நிதித்துறை - படிகள் - மலை பகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு படியை (HILL & WINTER ALLOWANCES) அடிப்படை ஊதியத்தில் 10% வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பிப்.25, 26-இல் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வருகிற 25, 26-ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி தெரிவித்துள்ளது.

மத்திய அரசுக்கு இணையாக தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும்; பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும்; அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் தமிழாசிரியர், வரலாறு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; பகுதிநேர சிறப்பாசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக நிலை உயர்த்த வேண்டும்; கல்வித் துறை அலுவலக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில அளவில் வருகிற 25-ஆம் தேதி கருப்புப் பட்டை, கோரிக்கை அட்டை அணிந்து பள்ளி உள்ளிருப்பு போராட்டமும், 26-ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்திலும் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது.

இதேபோல, பதவி உயர்வுக்காக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்; ஆசிரியர் பயிற்சித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்துக்காக காத்திருப்போருக்கு உடனடியாக ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன் மார்ச் 2-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொறுப்பாளர்களுடன் பள்ளிக்கல்வி செயலர் நாளை காலை 10மணிக்கு சந்திப்பு

இன்று காலை முதற்கட்டமாக தொடக்கக் கல்வி இயக்குனருடன் நடைபெற்ற கோரிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தையின் இறுதியில் பள்ளிக்கல்வி செயலாளருடன் சந்திக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்து இருந்தார். இதையடுத்து நாளை காலை 10மணியளவில் தலைமை செயலகத்தில் மதிப்புமிகு பள்ளிக்கல்வி செயலாலருடன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சார்ந்த மாநில தலைவர் திரு.காமராஜ், பொதுச் செயலாளர் திரு.ரெங்கராஜன் மற்றும் பொருளாளர் திரு.ஜோசப் சேவியர் ஆகியோர் சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இதுகுறித்து மாநில தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் கூறுகையில் 7அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.

18/02/2014

அனைத்து மாவட்ட CEO / ADDL CEO / DEO / DEEO / IMS ஆய்வுக் கூட்டம் மதிப்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் / செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது

பொது பணிகள் - மாற்றுத்திறனாளிகள் நலம் - 3% இடஒதுக்கீடு அரசு நியமனங்களில் கடைபிடித்தல் - மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பதிவேடு பராமரிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் ஒய்வு பெற்ற மற்றும் இறந்த பணியாளர்களுக்கு EXGRATIA வழங்குவது சார்பான அரசாணைகள் வெளியீடு

ஏன் இந்த வேலை நிறுத்தப் போராட்டம்? தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

பொது பணிகள் - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக நிழற்பட அடையாள அட்டை (ID CARD) அணிய உத்தரவு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு அழைப்பு வரும் 20.02.2014 அன்று காலை 10 மணியளவில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் 7 கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்

17/02/2014

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்ககங்கள் சார்பில் நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது பள்ளிகள் சுமுகமாக நடைபெற ஆசிரியர் பயிற்றுநர்களை பயன்படுத்தி கொள்ள உத்தரவு

மத்திய இடைக்கால பட்ஜெட்- 2014-15 தனிநபருக்கான வருமான வரியில் மாற்றமில்லை

மத்திய இடைக்கால பட்ஜெட்- 2014-15 தனிநபருக்கான வருமான வரியில் மாற்றமில்லை

*10 ஆண்டுகளுக்கு முன்பு கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ10,145 கோடி 

*10 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது கல்விக்கான நிதி ஒதுக்கீடு ரூ79,251 
கோடி 

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சார்பான வழக்கு மார்ச் 3ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சார்பான வழக்கு இன்று பிற்பகல் 3.30மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 21ம் எண் நீதிமன்றத்தில் நீதியர்சர் இரவிசந்திரபாபு அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசுத் தரப்பு வழக்கறிஞ்சர் சார்பில் அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து மார்ச் 3ம் தேதிக்கு மீண்டும் விசாரணை ஒத்திவைத்து நீதியர்சர் உத்தரவு பிறப்பித்தார். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சார்பான வழக்கில் அரசு இதுவரை பதிலளிக்க 5முறை அவகாசம் கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

14/02/2014

பள்ளி மாணவர்களுக்கான ஏழு இலவச பொருட்கள் : வரும் ஆண்டில் வழங்க ரூ.256 கோடிக்கு "டெண்டர்"

பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச, "கிரையான்ஸ்' பென்சில், புத்தக பை உள்ளிட்ட, ஏழு பொருட்களை வழங்க, 256 கோடி ரூபாய்க்கு, பாடநூல் கழகம், "டெண்டர்' அறிவித்து உள்ளது. தமிழக அரசு, மேற்கண்ட பொருட்கள் உட்பட, 14 வகையான இலவச திட்டங்களை, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி, மாணவ, மாணவியருக்கு வழங்கி வருகிறது.இதற்காக, ஆண்டுதோறும், 4,000 கோடி ரூபாயை செலவழிக்கிறது. கடந்த ஆண்டுகளில், பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை சேர்ந்து, இலவச திட்டங்களை வினியோகித்தன. கல்வி பணியுடன், இலவச பொருட்கள் வழங்கும் பணியையும் சேர்த்து செய்வது, நடைமுறை ரீதியாக, பல சிக்கல்கள் இருப்பது குறித்தும், நிர்வாகப் பணிகள் பாதிப்பது குறித்தும், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, இலவச திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு, பாடநூல் கழகத்திடம் ஒப்படைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, வரும் கல்வி ஆண்டில், முதல் முறையாக, 14 வகையான இலவச பொருட்களை, பாடநூல் கழகம், மாணவர்களுக்கு வழங்க உள்ளது. இதில், "கிரையான்ஸ்' பென்சில், கம்பளிச் சட்டை, புத்தக பை, "ஜியாமெட்ரிக் பாக்ஸ், அட்லஸ்' மற்றும் காலணி ஆகிய, ஏழு பொருட்களை, 256.85 கோடி ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்ய, பாடநூல் கழகம், "டெண்டர்' அறிவித்து உள்ளது. "கிரையான்ஸ்' பென்சில், 2.25 கோடி; பென்சில், 4.3 கோடி; புத்தக பை மற்றும் காலணி ஆகியவை, தலா, 120 கோடி ரூபாய் மதிப்பில், கொள்முதல் செய்யப்படும் என, பாடநூல் கழகம் தெரிவித்து உள்ளது. தகுதி வாய்ந்த நிறுவனங்கள், 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது குறித்த விவரங்களை,தமிழக அரசு இணையதளத்தில் பார்க்கலாம்

அகஇ - 2013-14ஆம் ஆண்டிற்கு 40% தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி, குழந்தை உரிமைகளும் பாதுகாப்பும் என்ற தலைப்பில் 22.02.2014 அன்று நடைபெற உள்ளது.

வங்கி கணக்கு இல்லாதவர்களும் பிறர் அனுப்பும் பணத்தை ஏ.டி.எம். மூலம் பெறலாம்: ரிசர்வ் வங்கி

வங்கிகளில் கணக்கு இல்லாதவர்களும் பிறர் அனுப்பும் பணத்தை ஏ.டி.எம். மூலம் பெறும் புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். 
தற்போது வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே ஏ.டி.எம். பரிவர்த்தனை வாயிலாக பணத்தை ரொக்கமாக பெறமுடியும்.வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து, வங்கி கணக்கு இல்லாதவாடிக்கையாளர்களுக்கு தொகையை ஏ.டி.எம். வாயிலாக அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.இது குறித்து ரகுராம் ராஜன் கூறியதாவது:-ஒருவரால் அனுப்பப்படும் பணத்தை பெறும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு வங்கி கணக்கு இல்லை. எனவே, இவர்களுக்கு பணத்தை ரொக்கமாக பெறும் வசதியை ஏற்படுத்தி தரவேண்டியது அவசியம்.பணத்தை அனுப்புபவரின் வங்கி கணக்கிலிருந்து, அனுப்பப்பட்ட தொகை ஏ.டி.எம். பரிவர்த்தனை வாயிலாக பெறப்படுகிறது. பணத்தை பெறுபவருக்கு அவரது செல்போனுக்கு ஒரு ரகசிய குறியீட்டு எண் அனுப்பப்படும். இதனை வைத்து அவர் அருகிலுள்ள ஏ.டி.எம்.மிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த திட்டம் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் நடைமுறைப்படுத்தப்படும். வாடிக்கையாளர்களுக்கு தங்குதடையற்ற மற்றும் பாதுகாப்பான முறையில் சேவையைவழங்குவதற்கு வங்கிகளுக்கும், செல்போன் சேவை நிறுவனங்களுக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.இன்னும் சில மாதங்களில் இந்த நடவடிக்கை முடுக்கி விடப்படும். இதற்காக தொழில்நுட்ப வசதியும் உரிய முறையில் மேம்படுத்தப்படும்.நம் நாட்டில் 90 கோடி செல்போன் இணைப்புகள் உள்ளன. எனவே, மொபைல் பேங்கிங் வசதியை எளிதில் அறிமுகப்படுத்தலாம்.

பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளருக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் கட்டண விவரம்.

பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம், மாதாந்திர கட்டணம், "பிராட்பேண்ட்' சேவை பயன்பாட்டு அளவு குறித்த தகவல் அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.


இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., வெளியிட்டுள்ள அறிக்கை: வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவையை, முழுமையாக மேற்கொள்ள, பி.எஸ்.என்.எல்., தரை வழி தொலைபேசி வாடிக்கையாளர்களின், மொபைல் போன் எண் மற்றும் இ மெயில் முகவரியை, 53334 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்க வேண்டும். இதன்மூலம், ஒவ்வொரு முறையும், வாடிக்கையாளர்களின் விவரங்களை அறிய வேண்டிய நிலை தவிர்க்கப்படும். தரை வழி தொலைபேசி எண்கள் பழுதடைந்தால், அவற்றை சரிசெய்ய, லைன்மேனை அனுப்புவது, அவரின் பெயர் ஆகிய தகவல், எஸ்.எம்.எஸ்., மூலம், வாடிக்கையாளருக்குத் தெரிவிக்க,மொபைல் போன் எண் மற்றும் இ மெயில் முகவரி உதவியாக இருக்கும். 
மேலும், மாதாந்திரகட்டணத்தையும், கட்டண ரசீதையும், வாடிக்கையாளருக்கு, தபால் மூலம் அனுப்புவதற்குமுன், எஸ்.எம்.எஸ்., மற்றும் இ மெயில் முகவரியிலும் தெரிவிக்க முடியும்."பிராட்பேண்ட்' சேவை பெறும் வாடிக்கையாளருக்கு, "பிராட்பேண்ட்' சேவை உபயோக எவ்வளவு, எந்தத் தேதியில் ரீ சார்ஜ் செய்ய வேண்டும் என்ற, விவரங்களையும், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்க முடியும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி மேலாண்மை குழு(SMC) உறுப்பினர்களுக்கான மூன்று நாட்கள் பயற்சி.

Certificate of medical authority for purpose of IT deduction under section 80U( physically disabled employee self )& 80DD (disabled dependent).National I.D Card for disabled is must

Certificate of medical authority for purpose of IT deduction under section 80U


TET தேர்வில் 90 (82-89) க்கும் குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு 36 மதிப்பெண்கள் - அரசாணை வெளியீடு

அரசு பள்ளிகள் தவிர மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் அனைத்தும் அதே பெயரில்தான் உள்ளன. இந்த நிலையை மாற்ற தமிழக அரசு முடிவு

மாற்றம் குறித்த அறிவிப்பு விரைவில்

தமிழ்நாட்டில் மாநில கல்வி வாரியம், மெட்ரிகுலேஷன் கல்வி, ஆங்கிலோ இந்தியன் உள்பட 4 வகை கல்வி முறை இருந்தன. இந்த முறைகள் அனைத்தும் ஒன்று சேர்த்து சமச்சீர் 
கல்விமுறை அமல்படுத்தப்பட்டது.

ஆனால், அரசு பள்ளிகள் தவிர மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் அனைத்தும் அதே பெயரில்தான் உள்ளன. இந்த நிலையை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இனிமேல் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பெயர் மாற்றப்படும். உதாரணமாக தற்போது செயிண்ட்மேரீஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, என்று அழைக்கப்படும் பள்ளி, இனிமேல் செயிண்ட்மேரீஸ் மேல்நிலைப்பள்ளி என்று அழைக்கப்படும்.

மேலும் தொடக்க கல்வித்துறையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் தவிர மற்ற சுயநிதி தொடக்க பள்ளிகள், சுயநிதி நடுநிலைப்பள்ளிகள் அனைத்தும் சுயநிதி பள்ளிகள் இயக்குனரகம் என்ற புதிய இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

அதுபோல மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகத்தில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அனைத்தும் சுயநிதி பள்ளிகள் இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் என்பது சுயநிதி பள்ளிகள் இயக்குனரகமாக மாறும் என்று கூறப்படுகிறது.

இதனால் ஏழை, பணக்கார மாணவர்கள் என்ற நிலை தவிர்க்கப்பட்டு அனைத்து மாணவர்களும் சமம் என்ற நிலை ஏற்படும். நாங்கள் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கிறோம் என்று யாரும் தற்பெருமையாக கூற இயலாத வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இதை கல்வியாளர்கள் பலர் வரவேற்றுள்ளனர். இந்த மாற்றம் குறித்த அறிவிப்பு விரைவில்

FEB -14 மாதம் TAX பிடித்தம் செய்யப்படும்போது SURCHARGE உட்பட பிடித்தம் செய்யப்படவேண்டிய தொகை கணக்கிடுவது எவ்வாறு

விழித்திடுங்கள் நண்பர்களே விழித்திடுங்கள்

அனேக நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பதிவு


முறை-1

FEB -14 மாதம் TAX பிடித்தம் செய்யப்படும்போது SURCHARGE உட்பட பிடித்தம் செய்யப்படவேண்டிய தொகை ரூ.16317 எனில், FEB -14 மாதம் சம்பளபட்டியலில் இத்தொகை பிடித்தம் செய்யப்படும் போது, மீண்டும் ஒருமுறை இத்தொகைக்கு SOFTWARE PROGRAM-படி 3% பிடித்தம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறான தவறு நடக்காமல் இருக்க, பிடித்தம் செய்யப்படவேண்டிய மொத்த TAX-யை 0.97086 எனும் பெருக்கு விகிதத்தால் பெருக்கி வரும் தொகையை பில்லில் பிடித்தம் செய்யும்போது, SURCHARGE மீண்டும் கணக்கிடபட்டாலும் தொகை அதிகரிக்க வாய்ப்பிருக்காது.

உதாரணம்: 
கட்டப்படவேண்டிய தொகை = ரூ.16317
சம்பளபட்டியலில் பிடித்தம் செய்யப்பட
வேண்டியத் தொகை 16317*0.97086 = ரூ.15842
3% SURCHARGE பிடிக்கப்பட்டால் = ரூ. 475
மொத்தம் = ரூ.16317

முறை-2

(Tax Amount * 100)/103 இதுவும் ஒரு வழி நண்பர்களே!

2016-ல் ஏழாவது ஊதியக் குழு

தமிழகத்தில் வரும் 2016-17-ஆம் நிதியாண்டில் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வியாழக்கிழமை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2014-15-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் ஊதியம் குறித்த ஒதுக்கீடு ரூ. 35,720.86 கோடி மற்றும் ஓய்வூதியம் குறித்த செலவினத்துக்கான ஒதுக்கீடு ரூ. 16,020.63 கோடியாகும். அகவிலைப்படி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் காலிப் பணியிடங்களை நிரப்புவதால் ஏற்படும் கூடுதல் செலவு ஆகியவற்றின் காரணமாக, 2015-16, 2016-17-ஆம் ஆண்டுகளில் இந்த வளர்ச்சி விகிதம் முறையே 14.62 மற்றும் 20 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2016-17-ஆம் ஆண்டு முதல் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என கருதப்பட்டுள்ளது. முந்தைய ஊதியக் குழுக்கள் போலன்றி, இந்த குழுவின் பரிந்துரைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பிந்தைய ஆண்டுகளில் தவணைகளில் நிலுவைத் தொகை வழங்க வேண்டிய நிலை எழாது எனவும் கருதப்பட்டுள்ளது.

ஆர்.எம்.எஸ்.ஏ., நிதியில் அதிகாரிகள் தலையீடு: அதிருப்தியில் தலைமையாசிரியர்கள்

தமிழகத்தில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில் வழங்கப்பட்ட மத்திய அரசு நிதியை செலவிடுவதில், அதிகாரிகள் தலையிடுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இத்திட்டம் மூலம் அரசு பள்ளிகள் வளர்ச்சிக்காக மத்திய அரசு, ஆண்டுதோறும் 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதில், 25 ஆயிரம் ரூபாய்க்கு, பள்ளி ஆய்வகத்திற்குத் தேவையான அறிவியல் உபகரணங்கள், 10 ஆயிரம் ரூபாய்க்கு, நாளிதழ்கள் மற்றும் நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள் வாங்குவது, ரூ.15 ஆயிரம் ரூபாயை, கணினி பராமரிப்பு, தொலைபேசி மற்றும் மின் கட்டணம் உட்பட இதர செலவினங்களுக்கு பயன்படுத்தலாம். இந்தாண்டுக்கான ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட நிதி தற்போது அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, தலைமையாசிரியர்களுக்கு, கல்வி அதிகாரிகள் ஓர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதன்படி, 'ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட விலைப் புள்ளிப்பட்டியலை (கொட்டேஷன்) அனுப்பி வைத்து, அறிவியல் உபகரணங்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குவதற்கான தொகையை, 'டிடி' எடுத்து தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது: பள்ளிகளுக்கு என்ன வகையான உபகரணங்கள் தேவை என்பது தலைமையாசிரியர்களுக்கு தான் தெரியும். ஆனால், அதிகாரிகள் விரும்பும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து மட்டும் உபகரணங்கள் வாங்க வற்புறுத்துகின்றனர். அதேபோல், நூலகத்திற்கும், கேள்விப்படாத, மாணவர்களுக்கு பயன்படாத புத்தகங்களை வாங்க உத்தரவிடுகின்றனர். இதனால், ஏதோ ஒருசில தனியார் நிறுவனங்கள் பயனடைகின்றன. இது முறைகேட்டிற்கு வழிவகுக்கும். முதல்வர் இப்பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும், என்றனர். எஸ்.எஸ்.ஏ., நிதியை மீட்ட 'தினமலர்': கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், இதுபோன்ற சர்ச்சை எழுந்தது. மைசூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு, கற்றல் கற்பித்தல் 'மெட்டீரியல்ஸ்' வாங்க, ரூ.2 ஆயிரம் 'டிடி' எடுத்து அனுப்ப, தலைமையாசிரியர்களுக்கு அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டனர். என்ன 'மெட்டீரியல்ஸ்' என தெரியாமலே பல பள்ளிகள், அந்த நிறுவனத்திற்கு "டிடி' அனுப்பின. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதன் விளைவாக, அந்த நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட 'டிடி'க்கள், மீண்டும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கே திரும்ப அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்திற்கும் அதே சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக, தலைமையாசிரியர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

NMMS அனுமதிச் சீட்டுகளை (Admission Card) இணையதளம் மூலம் 13.02.2014 முதல் 20.02.2014 வரை பதிவிறக்கம் செய்யலாம்

13/02/2014

NHIS சந்தா தொகை வருமான வரி பிரிவு 80D-ன் கீழ் சலுகை பெற 8மாவட்ட கருவூலங்கள் ஒப்புதல்

தமிழ்நாடு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்த (ஆண்டு சந்தா) ரூ.1800/-ஐ (ரூ.150/- * 12 = ரூ.1800/-) வருமான வரி பிரிவு 80Dன் கீழ் முழுமையான சலுகை பெற பல மாவட்ட கருவூலங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. அரியலூர் , பெரம்பலூர் ,விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர்,விழுப்புரம்,கடலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த மாவட்ட கருவூலங்கள் சார்ந்த சார்நிலை கருவூலங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஞ்சிய மாவட்டங்கள் சார்ந்த ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட கருவூலங்கள் அல்லது சார்நிலை கருவூலங்கள் தொடர்பு கொண்டு விவரங்கள் அறிய கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.17,731.71 கோடி நிதி ஒதுக்கீடு .2014-2015ஆம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை முழு விவரம்.

உயர்கல்வித் துறைக்கு ரூ3,627.93 கோடி ஒதுக்கீடு
பள்ளி கல்வி துறைக்கு ரூ17,731.77 கோடி ஒதுகீடு

* 2014-2015ஆம் கல்வியாண்டில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்ப்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
* அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு மாநில அரசின் பங்காக ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தேசிய இடைநிலைக் கல்வி திட்டத்திற்கு மாநில அரசின் பங்காக ரூ.384.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பள்ளிக் குழந்தைகளின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்ய ரூ.1631.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*முதல் தலைமுறை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் திருப்பி வழங்கப்படுகிறது .கல்வி கட்டணம் திருப்பி வழங்கும் திட்டத்துக்கு ரூ585.17 கோடி ஒதுக்கீடு

Budget for the year 2014-2015 - Tamil Version Click Here...

TNPSC- DEO தேர்வு அறிவிப்பு


1
4/2014 14.02.2014
DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE
14.02.2014
12.03.2014
06.06.2014
Apply Online

தமிழ்நாட்டிலுள்ள உயர்நிலை/மேல்நிலை /நகராட்சி /மாநகராட்சி/நலத்துறை பள்ளிகளுக்கு சிறுபராமத்து பணிக்கு 4402 பள்ளிகளுக்கு தலா 25000 ரூபாய் ஒதுக்கி உத்தரவு

தமிழக பள்ளிக் கல்வியின் நிலை என்ன?- ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல்



அண்மையில் ப்ரதம் என்ற அரசு சாரா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தமிழக பள்ளிக் கல்வியின் நிலை அதிர்ச்சி அளிக்கும்படியாக இருந்தது. கிராமங்களில் உள்ள 5-ம் வகுப்பு மாணவர்களில் 31.9 சதவீதம் பேர் மட்டுமே 2-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் உரைநடைப் பகுதியை வாசிக்க முடிந்ததாகவும், 14 சதவீதம் பேர் மட்டும் 3 இலக்க எண்ணை ஓர் இலக்க எண்ணால் வகுக்க முடிந்தது என்றும் அதில் தகவல் இடம்பெற்றிருந்தது. இந்த இரு கற்றல் விகிதங்களும் தேசிய அளவில் பார்க்கும்போது ஒவ்வொன்றும் 47 சதவீதமாக உள்ளன. (பார்க்க படம் 1, 2)

ப்ரதமின் இந்த ஆய்வறிக்கை ஒரு மாதிரி கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு கடந்த 2005-ம் ஆண்டு முதல் இதுபோன்ற ஆய்வறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இதில் தொடர்ந்து தமிழக கிராமப் பள்ளி மாணவர்களின் கற்றல்திறன் குறைவாக இருந்து வருவதாக கல்வியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.



அதேநேரத்தில் தமிழக பள்ளிக் கல்வி பற்றி வேறு இரண்டு அறிக்கைகளும் கிடைத்துள்ளன. ஒன்று என்.சி.இ.ஆர்.டி. (National Council of Educational Research and Training) என்ற மத்திய அரசு நிறுவனத்தின் பள்ளிக்கல்வி பாடத்திட்டம் அமல்படுத்தப்படுவதை ஆராயும் அறிக்கை. மற்றொன்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி தொடர்பான புள்ளிவிவர அறிக்கை.

என்.சி.இ.ஆர்.டி. ஆராய்ச்சியின் படி, 2011-ல் 5-ம் வகுப்பில் ஒவ்வொரு வாரமும் எத்தனை வகுப்புகள் (Periods) எடுக்கப் பட்டன. அவற்றில் ஒவ்வொரு பாடத்துக்கும் எத்தனை வகுப்புகள் ஒதுக்கப்பட்டன என்பதை படம் 3-ல் காணலாம்.

இதில் எல்லா பாடங்களுக்கும் எல்லா மாநிலங்களும் சற்றேறக்குறைய ஒரே மாதிரியான முக்கியத்துவம் அளிப்பது தெரிகிறது. ஒன்றில் தமிழகம் தனித்துவமாக உள்ளது. 5 பாடங்களைத் தவிர மற்ற பாடங்களான கலை, விளையாட்டு, கைவினை போன்றவற்றில் அதிக நேரம் செலவிடப்படுவதில்லை என்று தெரிகிறது. இதனால், மற்ற பாடங்களிலும் மாணவர்களின் செயல்திறன் குறையலாம்.


மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி நிறுவனம் தேசிய கல்வி திட்டம் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகம் இந்த நிறுவனம் மாவட்டக் கல்வி தகவல் முறை திட்டம் என்ற ஒரு திட்டத்தை தயாரித்து அதன் மூலம் எல்லா மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளின் வசதிகள், மாணவர் சேர்க்கை, ஆசிரியர் எண்ணிக்கை உள்பட பல புள்ளிவிவரங்களை சேகரித்து கல்வி மேம்பாட்டு குறியீடு ஒன்றை தயாரிக்கிறது.

இந்த குறியீட்டின்படி, ஆரம்பக் கல்வியில் இந்திய மாநிலங்களில் முதல்நிலையில் உள்ள தமிழகம், நடுநிலைக் கல்வியில் 7-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது குறித்து ஆராயப்பட வேண்டும். ஒன்று முதல் எட்டு வகுப்புக்கான மொத்த குறியீட்டின்படி தமிழகம், மாநிலங்கள் இடையே மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.

இதுபோன்ற செய்திகள் தொடர்ந்து வரும்போது நம் பள்ளிக்கல்வித்திறன் பற்றிய சந்தேகங்கள் உறுதியாகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகம், பிளஸ்-2 தேர்வில் கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், பொறியியல் முதல் ஆண்டு கணித பாடத்தில் தேர்ச்சி அடையவில்லை என்பதால் அந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டியுள்ளது என்று கூறியது.

இன்றும் எல்லா பல்கலைக் கழகங்களிலும் முதுகலை படிப்பு வரை மென்திறன் என்ற பெயரில் ஆங்கிலத்திலும், தமிழிலும் கடிதங்கள், விண்ணப்பங்கள், பயோ-டேட்டா எழுதுவதையும் அன்றாட அலுவலக சூழலில் பேசுவதையும் கற்றுக்கொடுக்கிறோம், இவை எல்லாம் பள்ளியில் கற்பிக்கப்பட வேண்டியவை என்பதை நாம் உணர்வதே இல்லை. பல தனியார் நிறுவனங்கள் இவற்றை கற்பித்து ஏராளமாக சம்பாதிக்கின்றன.
ஆகமொத்தத்தில், தமிழகத்தில் பள்ளிகள் இருக்கின்றன. ஆசிரியர்கள் உள்ளனர். கற்றலும் கற்பித்தலும் நடக்கின்றன. ஆனால், கற்றலின் வெளிப்பாடு குறைவாக உள்ளது. இதுபற்றி நடுநிலையான ஆய்வு தேவை.

கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்:

நமது ஆரம்பக் கல்வி பாடத்திட்டம், குழந்தைகளின் வயது, அவர்களின் ஆர்வம், திறமை அனைத்துக்கும் அப்பாற்பட்டு அமைந்துள்ளது. உலகத்தில் வேறு எங்கும் இதுபோல சுமையான பாடத்திட்டம் இல்லை. மொழிதான் அனைத்துக்கும் அடிப்படை. மொழி அறிவு சரியில்லை என்றால் மற்ற அனைத்தும் மோசமாகும்.குழந்தைகளுக்கு ஜீரோவில் இருந்து 9 வரை சொல்லிக் கொடுக்க 30 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று உளவியலாளர்கள் கூறுகிறார் கள். ஆனால், நாம் ஒரே நாளில் அவற்றை சொல்லிக் கொடுக்கிறோம். உண்மையில் குழந்தைகள் எண்களை தெரிந்துகொள்கிறார்கள். புரிந்துகொள்வதில்லை. எண்கள் விஷயத்தில் மனக்கணக்கு முறை அடியோடு போய்விட்டது.

பி.பி. பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர்:

பொதுவாக அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தங்கள் வயதுக்கேற்ற கற்றல்திறனை பெற்றுள்ளனர். குழந்தைகளின் குடும்ப, பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களுக்கு கற்றல் குறைபாடு இருக்கலாம். இரண்டு மூன்று வகுப்புகளை சேர்த்து ஆசிரியர்கள் பாடம் நடத்துவதால் குழந்தைகளின் குறைபாட்டை கவனிக்காமல் போயிருக்கலாம்.

’ஏசர்’ அறிக்கையில் கற்றல்திறன் தொடர்பான குறைபாடுகள் சொல்லப்பட்டுள்ளனவே ஒழிய அவற்றுக்கான காரணங்களோ, தீர்வுகளோ தெரிவிக்கப்படவில்லை. அரசுப் பள்ளிக ளில் ஆசிரியர் பற்றாக்குறையா? ஆசிரியர்கள் தகுதியில்லாமல் இருக் கிறார்களா? பாடம் நடத்த நேரம் போதவில்லையா? என எதுகுறித்தும் அந்த அறிக்கையில் கூறப்படவில்லை.

அரசு தொடக்கப் பள்ளிகளில் மொழி ஆசிரியர், கணிதம், அறிவியல் பாடங்களுக்கும் தனியாக ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் அலுவலக பணிகளிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்.

25ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ளிருப்பு போராட்டம் - ஆசிரியர் கூட்டணி முடிவு


ஒன்றுபட்ட போராட்டம் நடந்திட வாய்ப்பு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரான திருமிகு ஈஸ்வரன் அவர்களிடமும், பொதுச்செயலருமான.திருமிகு.ரங்கராஜன் அவர்களுடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலருமான திருமிகு.செ.முத்துசாமி அவ்ர்கள்

ஒன்றுபட்ட போராட்டம் நடந்திட வாய்ப்பு அனைத்து சங்கங்கள் இணைந்து (தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் சேர்த்து) ஒருமித்த உணர்வோடு வேலை நிறுத்தப்போராட்டத்தை ஒன்று பட்டு நடத்திட இரண்டு நாட்களாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரான திருமிகு ஈஸ்வரன் அவர்களிடமும், பொதுச்செயலருமான. திருமிகு.ரங்கராஜன் அவர்களுடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலருமான திருமிகு. செ.முத்துசாமி அவ்ர்கள்.

12/02/2014

வருமான வரி பிடித்தம் குறித்த திருவண்ணாமலை சார்கருவூல அலுவலரின் வழிகாட்டு சுற்றறிக்கை


இடைநிலை ஆசிரியருக்கு ஆங்கில பயிற்சி 19.02.2014 முதல் 20.03.2014வரையில் 30 நாட்கள்.


டி.இ.டி., புதிய மதிப்பெண்: டி.ஆர்.பி., இணையத்தில் விவரம்

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப்பின், புதிய மதிப்பெண் விவரம், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

கடந்த 3ம் தேதி, டி.இ.டி., தேர்வில், 5 சதவீத மதிப்பெண் சலுகை அளித்து, முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்வர் பெற்ற மதிப்பெண் விவரங்களை, மீண்டும், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. முதல்வர் அறிவிப்பின்படி, 55 சதவீத மதிப்பெண் (150க்கு 82) எடுத்து, தேர்ச்சி பெற்றதை, இணையதளத்தில் பார்த்து, உறுதி செய்து கொள்ளலாம். மேலும், பல தேர்வர்கள், தங்கள் தேர்வு பதிவு எண்ணை தவறவிட்டு விட்டதாகவும், இதனால், மதிப்பெண் விவரத்தை அறிய முடியவில்லை என்றும், டி.ஆர்.பி.,யிடம் தெரிவித்தனர். இப்படிப்பட்ட தேர்வர்கள், தங்கள் விண்ணப்ப எண்களை பதிவு செய்தால், தேர்வு பதிவு எண்களையும், மதிப்பெண் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். முதல்வர் அளித்த சலுகையினால், தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை, 40 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரம், தெரிவித்தது. இவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்துவது குறித்து, அதிகாரிகள், தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013




11/02/2014

பள்ளிகளில் பாலியல் விழிப்புணர்வு கையேடு : புதிய சட்டப்படி தண்டனை விவரம் வெளியீடு

தமிழக பள்ளி, கல்லூரிகளில், பாலியல் தொடர்பான விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய சட்டப்படி, குற்றங்களுக்கான தண்டனை விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிராக நடக்கும், வன்முறை சம்பவங்களை தடுக்க, குடும்ப வன்முறை பாதுகாப்பு, வரதட்சணை தடுப்பு, பலாத்காரம் தடுப்பு, வாரிசு உரிமை, விதவை மறுமணம், ஈவ் டீசிங், வன்கொடுமை, சொத்து உரிமை, ஜீவனாம்சம் பெறும் உரிமை என, சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான பாதுகாப்பு சட்டம் இருந்தாலும், குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கான பாதுகாப்பு சட்டங்களில், கடுமையான தண்டனை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், 2012ம் ஆண்டு, டில்லியில், மருத்துவக் கல்லூரி மாணவி, ஒரு கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்டதை அடுத்து, மத்திய, மாநில அரசு, பாலியல் தொடர்பான சட்டங்களில், சில திருத்தங்களை கொண்டு வந்தன. அதன்படி, நான்கு விதமான பாலியல் தாக்குதல் வகைகள், அந்த பாலியல் தாக்குதல், யாரால் எல்லாம் ஏற்படுகிறது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்கள், புதிய சட்டவிதிமுறைகள் மற்றும் தண்டனைகள் ஆகியவை வரையறுக்கப்பட்டன.

கடுமையான பாலியல் தாக்குதல் பிரிவில், போலீசார், ராணுவ வீரர், அரசு ஊழியர், சிறைச்சாலை ஊழியர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஊழியர், கல்வி நிறுவன ஊழியர் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, ஆறு மாதம் முதல், ஆயுள் தண்டனை வரை, சிறை தண்டனை கிடைக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாலியல் தொடர்பான புகாரை, போலீஸ், சிறப்பு சிறார் போலீஸ் யூனிட், பஞ்சாயத்து தலைவர், வி.ஏ.ஓ., குழந்தைகள் நலக்குழு, குழந்தைகள் பாதுகாப்புக் குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றில் புகார் தெரிவிக்கலாம். அதற்காக, "சைடு லைன் தொலைபேசி எண்: 1098' என்பதை தொடர்பு கொள்ளலாம். இந்நிலையில், பாலியல் தொடர்பான விழிப்புணர்வை பெற, பள்ளி மற்றும் கல்லூரிகளில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டம், 2012 மற்றும் குழந்தை திருமணத்தை தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு கையேடு, தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் வழங்கப்பட்டு வருகிறது. 

குழந்தைகள் பாதுகாப்பு குழு நிர்வாகி கூறியதாவது: பள்ளிகள் அளவில், எட்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலும், கல்லூரி அளவில், பட்டபடிப்பு மாணவ, மாணவியருக்கும், விழிப்புணர்வு கையேடு, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மூலம் வழங்கப்படும். அதில், பாலியல் தாக்குதலுக்கான தண்டனை, கடுமையான பாலியல் தாக்குதலுக்கான தண்டனை, ஆபாச படம் எடுத்தல் தண்டனை, ஒரு முறைக்கு மேல், அதே குற்றத்தை செய்தல், குற்றத்துக்கு உடந்தையாக இருத்தல், குற்றங்களை மறைத்தல் உள்ளிட்ட முறைகளில், ஆறு மாதம், ஐந்தாண்டு, ஏழாண்டு, பத்தாண்டு, ஆயுள் தண்டனைகள் வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

தொடக்கக் கல்வி துறையின் கீழுள்ள அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 10.01.2014 அன்றைய நிலவரப்படி காலிப் பணியிட விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

தொடக்கக்கல்விதுறையின் கீழுள்ள அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 10.01.2014 அன்றைய நிலவரப்படி இடைநிலை, உடற்கல்வி ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடத்தின் விவரத்தை (பாடவாரியாக) அனுப்ப அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறபித்துள்ளார்.

த.அ.உ.ச 2005 - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழ் நாடு அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பிரதி மாதம் பிடித்தம் செய்யப்படும் ரூ.150/-ஐ வருமான வரி 80D பிரிவின் கீழ் முழுமையான வரிச் சலுகை உண்டு என தகவல்



பிப்.25ல் உள்ளிருப்பு போராட்டம், பிப்.26ல் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த முடிவு

இன்று நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டத்தில் வருகிற பிப்ரவரி 25ஆம் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடத்தவும், மறுநாள் பிப்ரவரி 26ஆம் தேதி ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தவும் முடிவு.

10/02/2014

வங்கி ஊழியர்கள் இன்று,நாளை 2 நாள் ஸ்டிரைக்

நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கங்கள் 10.02.2014 முதல் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

ஊதிய விகிதத் திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முதல் அனைத்து பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்களும் இந்த 2 நாள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே பணம் எடுப்பது, போடுவது ஆகிய பணிகள் ஸ்தம்பிக்கும் என்று தெரிகிறது.



இருப்பினும் ஐசிஐசிஐ வங்கி, எச்டிபிஎப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்டவை வழக்கம் போல இயங்கும்.

நாடு முழுவதும் 27 பொதுத்துறை வங்கிகளின் ஆயிரக்கணக்கான கிளைகளில் 8 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். நாடு முழுவதும் 50,000க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

07/02/2014

பள்ளிக்கல்வி- பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் பணி வழங்குதல் - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பயிற்சி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தொடக்கக் கல்வி - அரசாணை (நிலை) எண்.179, 216 மற்றும் 234ன் படி வழக்கு தொடர்ந்து தீர்ப்பாணை பெற்றவர்களால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்ற தீர்ப்பாணை பெற்றவர்களுக்கு பணப்பயன் பெற்று வழங்கப்பட்டு விவரம் அளிக்க உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் பெற்றால் போதுமானது அரசாணை வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு அண்மையில் 5% மதிப்பெண் தளர்த்தி முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அந்த கணக்கீடின்படி 82.5 மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி என்ற நிலை இருந்தது. இதையடுத்து 82 மதிப்பெண் பெற்றால் போதுமானது என்று இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மதிப்பெண் தளர்வு SC/ST/MBC/BC/BCM ஆகிய பிரிவினருக்கு பொருந்தும். மேலும் 2013ல் தேர்வு எழுதியவர்களுக்கு இந்த மதிப்பெண் தளர்வு பொருந்தும் என்றும் உத்தர்விடப்பட்டுள்ளது.

அகஇ - 2013-14ஆம் ஆண்டிற்கு 40% தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி, குழந்தை உரிமைகளும் பாதுகாப்பும் என்ற தலைப்பில் 22.02.2014 அன்று நடைபெற உள்ளது

த.அ.உ.சட்டம்-அரசாணை எண்.240-ன்படி மறு ஊதிய நிர்ணயம் ஏற்கனவே நிர்ணயம் செய்த ஊதியத்தை விட குறைவான ஊதியத்திற்கு மறு நிர்ணயம் செய்ய அனுமதி இல்லை என தகவல்



06/02/2014

தொடக்கக் கல்வி - 2014-15ஆம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் புதிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் துவக்க கருத்துருக்கள் அனுப்ப உத்தரவு

தொடக்கக் கல்வி - EMIS - தனி நபர் தகவல் தொகுப்பு முறை (PERSONNEL INFORMTION SYSTEM - PIS) - தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்களை கொண்டு விவரங்களை உள்ளீடு கோரவேண்டாம் என இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 07.02.2014 அன்று சென்னையில் நடைபெற உள்ளது

05/02/2014

பி.எட்., எம்.எட். தேர்வு முடிவுகள் வெளியீடு.TNTEU

2013-14ம் நிதியாண்டுக்கான வருமான வரி பிடித்தம் செய்வதற்கான மத்திய நிதித்துறையின் கையேடு


NOTE : REBATE OF RS.2000 FOR INDIVIDUALS HAVING TOTAL INCOME UP TO 5LAKHS (SECTION 87A) REFER PAGE NO.39




குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள்: 40 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறினார்.

மாநிலம் முழுவதும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பயிற்சி தரப்படுகிறது.குழந்தைகளைப் பாதிக்கும் முக்கியப் பிரச்னைகள், அவர்களை எப்படிக் கையாள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
யுனிசெஃப் மற்றும் துளிர் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து இந்தப் பயிற்சியின் போது ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கான கையேடும் தயாரிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பாலியல் கொடுமைக்குள்ளானது குறித்து தெரியவந்தால் அவற்றை எவ்வாறு அணுக வேண்டும், புகார் அளிப்பதற்கான வழிமுறைகள், குழந்தைகளின் மன நிலையைப் புரிந்துகொள்ளுதல், அவர்களுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொள்ளுதல், எது பாலியல் கொடுமை என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
பிப்ரவரி 6,7-ல் பயிற்சி: மாநில அளவிலான கருத்தாளர்களுக்கு வியாழன் (பிப்.6), வெள்ளிக்கிழமைகளில் (பிப்.7) சென்னையில் பயிற்சி வழங்கப்படுகிறது.

அதன்பிறகு, மாவட்ட மற்றும் வட்டார அளவில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும். இந்த மாதத்துக்குள் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும் என கண்ணப்பன் தெரிவித்தார்

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு தள்ளுபடியை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல முடிவு.

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதியரசர் திரு.ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் திரு.சத்தியநாரயணன் அடங்கிய முதன்மை அமர்வில் முதல் வழக்காக வந்த இரட்டைப்பட்டம் வழக்கு நீதியரசர்களின் தீர்ப்பால் முடிவுக்கு வந்தது. இந்த வழக்கின் ரிட் அப்பீல் தள்ளுபடி செய்யப்படுகிறது என்ற தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த ஒருங்கிணைப்பாளர்கள், அரசின் எதிர் மனு தாக்கலால் இந்த முடிவு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என சமாதானம் அடைந்தனர்.எனினும் வழக்கில் வெற்றியடைவதே நோக்கம் என்ற குறிக்கோளுடன் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வரும் வாரத்தில் சிறப்பு விடுப்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரட்டைப்பட்ட வழக்கு இறுதி தீர்ப்பு: இரட்டைப்பட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவு

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று காலை சற்று முன் வெளியாகியுள்ளது. இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் மாண்புமிகு தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் இரட்டைப்பட்டம் செல்லாது எனவும், பணி நியமனம் மற்றும் பதவி உயர்விற்கு இனி மூன்று வருட பட்டப்படிப்பு மட்டுமே தகுதியானது எனவும் இதை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதியரசர்கள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.ஒரு வருட பட்டம் சார்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது. தீர்ப்பு நகல் நாளை மறுநாள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்தீர்ப்பு சார்பான முழு விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

04/02/2014

ஒரு நாள் வேலை நிறுத்தம், டிட்டோஜாக் கூட்டத்தில் முடிவு

இன்று (4.2.2014) சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் கூட்டத்தில் வருகிற 6.3.2014 -வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது என முடிவாற்றப்பட்டுள்ளது. 2.2.2013 மாவட்ட பேரணி முடிந்துள்ள நிலையில் அரசு எவ்வித முடிவும் எட்டாத நிலையில் டிட்டோஜாக் இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.தமிழக அரசு மேலும் மௌனம் சாதித்தால் போராட்ட நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என தெரிகிறது. எனவே அனைத்து ஆசிரியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என டிட்டோஜாக் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடக்கக்கல்வித் துறையில் உள்ள இயக்கங்கள் உள்ளடக்கிய டிட்டோஜாக் சென்னையில் இன்று கூடி இம்முடிவை அறிவித்துள்ளது.

வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்யப்படமாட்டாது நிதி மந்திரி ப.சிதம்பரம்

வருமான வரி சட்டத்திலோ அல்லது சுங்கவரி சட்டத்திலோ அல்லது கலால் வரி சட்டத்திலோ திருத்தம் செய்யும் யோசனை எதுவும் இல்லை என்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

ஏழாவது ஊதியக்குழுவுக்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் மாத்தூர் தலைவராக இருப்பார்

ஏழாவது ஊதிய குழு உறுப்பினர்கள் நியமனத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்தந்துள்ளார். 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 30லட்சம் ஓய்வூதியத்தாரர்களின் ஊதிய உயர்வு குறித்து முடிவெடுக்க உள்ள இந்தக் குழுவுக்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் மாத்தூர் தலைவராக இருப்பார்.பெட்ரோலியத் துறைச் செயலாளர் விவேக் ரே இதன் முழு நேர உறுப்பினராக இருப்பார்.ரத்தின் ராய், மீனா அகர்வால் ஆகிய இருவரும் இக்குழுவின் பகுதி நேர உறுப்பினர்களாக இருப்பர்.முன்னதாக 7-வது ஊதிய குழு அமைப்பதற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் ஒப்புதல் தந்திருந்தார். ஊதிய உயர்வு குறித்த பரிந்துரைகளை தர இக்குழுவுக்கு 2ஆண்டு அவகாசம் தரப்பட்டுள்ளது.இது தரும் பரிந்துரைகள் 2016ம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும். 6-வது ஊதிய குழுவின் பரிந்துரைகள் 2006-ம் ஆண்டு அமலுக்கு வந்தது

மா.க.ஆ.ப.நி - 6 முதல் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புவியியல் வரைப்பட திறன் சார்பான நிலவரைப்பட நூல் (ATLAS) பயன்பாடு குறித்து CEO / DEO / DEEO / AEEO பள்ளிக்கு சென்று பார்வையிட்டு மாதந்தோறும் அறிக்கை அனுப்ப இயக்குனர் உத்தரவு

அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வின்றி நியமனம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படாதவர்கள் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 23.08.2010க்கு முன்பு ஆசிரியர் தகுதித் தேர்வின்றி நியமனம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படாதவர்களின் விவரம் உடனடியாக அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேற்காணும் விவரம் கோரி அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் மாதிரி படிவம் அனுப்பப்பட்டுள்ளது. இப்படிவத்தில் ஆசிரியர் பணிபுரியும் ஒன்றியம் மற்றும் பள்ளியின் பெயர், ஆசிரியர் பெயர் மற்றும் பதவி, அரசு உதவிப் பெறும் பள்ளி வகை (சிறுப்பான்மை / சிறுப்பான்மை அல்லாதது) , பணியிடம் காலி ஏற்பட்ட நாள், நியமன நாள் மற்றும் ஒப்புதல் அளிக்கப்படாததற்கான காரணம் ஆகிய விவரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

03/02/2014

ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை: முதல்வர் அறிவிப்பு



சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து பேசினார். அப்போது, ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று அறிவித்தார். 

இதன்மூலம், எஸ்.சி.,எஸ்.டி, பி.சி., எம்.பி.சி. மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். 2013 ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுதியவர்களுக்கும் இந்த சலுகை உண்டு என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்

02/02/2014

ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் (Teachers Profile) ஆன்லைனில் பதிவேற்றம்

தொடக்கக் கல்வித் துறையில் கல்வி மேலாண்மைத் தகவல் முறையின் (EMIS) ஓர் அங்கமான ஆசிரியர் தன்விவரங்களை (Teachers Profile) ஆன்லைனில் பதிவேற்று ஆசிரியர் விபரப் படிவம்


Pls Click Here

EMIS - Personnel Information Teaching and Non-Teaching Staff - Form