திருக்குறள்
31/12/2013
அரசு அலுவலகங்களில் ஒப்புகைச் சீட்டு (ACKNOWLEDGE -MENT) பெறும் வழிமுறைகள்
ஒவ்வொரு அரசு அலுவலகங்களுக்கும் நாம் கடிதம், புகார் கடிதம், போன்ற எந்த வகையான கடிதங்கள் அனுப்பினாலும் அரசு அலுவலர்கள் அக்கடிதங்களை கையாலும் வழிமுறைகளை பார்ப்போம். அரசு ஆணை எண்: 114 அரசு அலுவலகங்களுக்கு வரும் கடிதங்களை கையாள வேண்டிய வழிமுறைகளை பற்றி 2.8.2006 தேதியிட்ட பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையினரின் அரசாணை எண்.114, 66, 89, பற்றி தெரிந்து கொள்வோம்.அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று கடிதம் கொடுக்கும் போது சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் உடனே வாங்கி கொண்டதற்கான ஏற்பு ரசீது (அக்னாலெட்ஜ்மெண்ட்) மனுதாரருக்கு கொடுக்க வேண்டும். அரசு அலுவலர் கொடுக்கும் ஏற்பு ரசீதில் மனுதாரரின் பெயர், முகவரி, யாருக்கு என்ன விசயமாக அனுப்பபட்டுள்ளது என்ற விவரமும், கடிதம் வாங்கும் அலுவலரின் கையெழுத்தும், அவர் வகிக்கும் பதவியின் பெயரும், அலுவலக முத்திரையும் தேதியுடன் இருக்க வேண்டும்.
தபால் மூலம் கடிதம் அனுப்பும் போதும் அதற்கான ஏற்பு ரசீது மனுதாரர்க்கு அதிக பட்சம் 3 நாட்களுக்குள் அனுப்பி வைக்கபட வேண்டும். அனுப்பும் புகாரின் மீது அதிகபட்சம் 60 தினங்களுக்குள் நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க 60 தினத்திற்கு மேல் ஆகும் என்றால் இடைக்கால பதிலும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையும், மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும் அதற்கான காரணத்தை எழுத்து மூலம் 60 தின்ங்களுக்குள் மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். மேற்கண்ட வழிமுறைகள்படி கடிதங்களை கையாள அரசு, ஆணை 114 வலியுறுத்துகிறது. [அரசு ஆணை 114 என்பது அரசு ஆணை 66(23.02.1983) அரசு ஆணை 89(13/05/1999) மற்றும் மத்திய அரசு ஆணை 13013/1/2006(5.5.2006) ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது] எனவே, இனி நீங்கள் அரசு அலுவலகங்களுக்கு கடிதம் கொடுத்தால் அரசாணை எண்கள்: 114, 66, 89-ன் படி ஏற்பு ரசீது கேட்டு வாங்குங்கள். இதுவே நமக்கு இறுதி நிவாரணம் கிடைக்க வழி வகுக்கும்.
தபால் மூலம் கடிதம் அனுப்பும் போதும் அதற்கான ஏற்பு ரசீது மனுதாரர்க்கு அதிக பட்சம் 3 நாட்களுக்குள் அனுப்பி வைக்கபட வேண்டும். அனுப்பும் புகாரின் மீது அதிகபட்சம் 60 தினங்களுக்குள் நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க 60 தினத்திற்கு மேல் ஆகும் என்றால் இடைக்கால பதிலும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையும், மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும் அதற்கான காரணத்தை எழுத்து மூலம் 60 தின்ங்களுக்குள் மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். மேற்கண்ட வழிமுறைகள்படி கடிதங்களை கையாள அரசு, ஆணை 114 வலியுறுத்துகிறது. [அரசு ஆணை 114 என்பது அரசு ஆணை 66(23.02.1983) அரசு ஆணை 89(13/05/1999) மற்றும் மத்திய அரசு ஆணை 13013/1/2006(5.5.2006) ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது] எனவே, இனி நீங்கள் அரசு அலுவலகங்களுக்கு கடிதம் கொடுத்தால் அரசாணை எண்கள்: 114, 66, 89-ன் படி ஏற்பு ரசீது கேட்டு வாங்குங்கள். இதுவே நமக்கு இறுதி நிவாரணம் கிடைக்க வழி வகுக்கும்.
தமிழ்நாடு கல்வித் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்களுக்குள் இலவசமாக பேசிக்கொள்ள ஏர்செல் நிறுவனத்தின் Teachers CUG திட்டம் அறிமுகம்
இத்திட்டத்தை வழங்குபவர்கள்: Kaveri Communications, Trichy.
இத்திட்டத்தில் இணைந்துள்ள ஆசிரியர்கள் தங்களுக்குள் 24 மணிநேரமும் இலவசமாக பேசிக்கொள்ளலாம். ஒரு ஆசிரியர் குடும்ப உறுப்பினர்களிடம் இலவசமாக பேசிக்கொள்ள (தேவைபட்டால்) 3 சிம் கார்டுகள் வரை கூடுதலாக தரப்படும்.
இந்த 3 சிம்கார்டுகளில் இருந்தும் இத்திட்டத்தில் இணைந்துள்ள தமிழ் நாட்டில் உள்ள எந்த ஆசிரியரிடமும் பேசினால் முற்றிலும் இலவசம்.
Scheme Details:
Monthly Rental Rs.149 + 12.31% Tax (Nearly Rs.167 per month)
CUG numbers Unlimited Talk Time Free
Other Numbers 400 Mints Free
More than 400 Mints, 30 paise per Mint
250 Aircel to Aircel SMS free
2G internet - 500 mb free
Deposit Rs. 250 only
ஆசிரியர்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களும் இருக்கின்றன
More Details Pls Contact:
Miss. Vijaya Lakshmi, Mobile 98424 01531
30/12/2013
எஸ்.எம்.எஸ்., தகவல்கள், இனி அரசு அலுவலகங்களில், அதிகாரப்பூர்வ ஆவணமாக ஆக்கப்பட உள்ளது.
எஸ்.எம்.எஸ்., தகவல்கள், இனி அரசு அலுவலகங்களில், அதிகாரப்பூர்வ ஆவணமாக ஆக்கப்பட உள்ளது. பணம் செலுத்துதல், பதிவு உட்பட, பல்வேறு திட்டங்களுக்கு. எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்தி தகவல்கள், முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
மத்திய அரசின், 100க்கும் மேற்பட்ட துறைகளில், மொபைல் மூலமான நிர்வாகத்தை அமலாக்கும், பரீட்சார்த்த திட்டம், நேற்று பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதன்படி, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், 241 அப்ளிகேஷன்ஸ் வசதி, நேற்று பரிசோதனை அடிப்படையில் சோதனை செய்யப்பட்டது. இதன்படி, தகவல் அறியும் உரிமை சட்டம், சுகாதாரம், ஆதார், கல்வி, டைரக்டரி சர்வீஸ் ஆகியவற்றில், இத்திட்டம் முதல் கட்டமாக அமல்படுத்தப்பட உள்ளது. "மொபைல் சேவா' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் குறித்து, மத்திய அரசின், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலர், சத்ய நாராயணா, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பின், டிக்கெட் உறுதியானதும், மொபைல் போனுக்கு வரும், எஸ்.எம்.எஸ்., தகவல், முழு ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இதை பின்பற்றி, அரசு துறைகளில், எஸ்.எம்.எஸ்., தகவல்கள், முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. மொபைல் போன் மூலமான, இ கவர்னன்ஸ் நடைமுறை, படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது. தற்போது, டிஜிட்டல் முறையில் கையெப்பமிடப்பட்ட சான்றிதழ்கள், ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதே பாணியில், மொபைல் போன் மூலம் அனுப்பப்படும், எஸ்.எம்.எஸ்., தகவல்களும், தகுந்த ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. அனைத்து அரசு துறைகளிலும், டிஜிட்டல் கையெழுத்துகள் ஒதுக்கீடு செய்வதற்கான பணிகளை, நாங்கள் துவக்கியுள்ளோம். இது நடைமுறைக்கு வந்ததும், பொதுமக்களுக்கு, இந்த சேவையின் மூலம், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பப்படும். விண்ணப்பம் பெறப்பட்டதற்கான தகவல், விண்ணப்பத்தின் மீதான நடவடிக்கை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கான தகவல் ஆகியவை, எஸ்.எம்.எஸ்., தகவலாக அனுப்பி வைக்கப்படும். இதன் பயனாக, அரசு அலுவலகங்களில், பேப்பர் பயன்பாட்டை குறைக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்
பிறப்பு இறப்பு சான்றிதழ் இனிமேல் ஆன்லைனில் பெறலாம்
Good News to get Birth / Death Certificates in ONLINE (PDF Copy) and CORRECTIONS also Possible without spending your time and money. NRI can benefit more by this service.
இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ். ஆம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்களிடம் இருக்கிறதா. சில பேரிடம் இறந்த சான்றிதழ் தொலைத்திருக்க வாய்ப்புன்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவலகத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை. இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம்.அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம்.
உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம்.அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம்.அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான்.அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும்.இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது சேவ் பன்ணி கொள்ளுங்கள். அது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது.ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு.
அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மனி.
உங்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெற -
உங்கள் பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள -http://www.chennaicorporation.gov.in/admin/birthCertificateList.do?method=editRecord&mode=enduser®itrationNumber=COC%2F2011%2F08%2F116%2F000510%2F0
உங்களுக்கு தேவையான இறப்பு சான்றிதழ் பெற -http://www.chennaicorporation.gov.in/online-civic-services/deathCertificateBasicSearch.jsp
உங்கள் இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள -http://www.chennaicorporation.gov.in/admin/deathCertificateList.do?method=editRecord&mode=enduser®istrationNumber=COC%2F2007%2F02%2F024%2F001095%2F0
இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சியில் வசிக்கும் ஆட்களுக்கு மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்........
கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Birth
கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Death -
மதுரை ஆட்களுக்கு -
http://203.101.40.168/newmducorp/birthfront.htm (NO DNS so use the same format)
திருச்சி ஆட்களுக்கு -
பான் கார்டு' பெறுவதற்கு இனி "ஆதார்' தகுந்த ஆவணமாகிறது
பான் கார்டு' பெறுவதற்கு, முகவரி மற்றும் அடையாளத்தை நிரூபிப்பதற்கு, ஆதார் கார்டு தகுந்த ஆவணமாக ஏற்கப்படும் என,வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல்செய்வதற்கு, "பான்' என்ற நிரந்தர கணக்கு எண், வருமான வரித்துறையால் அளிக்கப்படுகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களும், இதை வாங்கி வைத்துக்கொள்ள தடையில்லை.
பான் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிப்பவர், தன் அடையாளம் மற்றும் முகவரியை உறுதி செய்வதற்கு, தாக்கல் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் என்ன என்ன என்பதை, வருமான வரி"த்துறை பட்டியலிட்டுள்ளது. இதில், குடும்ப அட்டை,வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் உட்பட,ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், "ஆதார் அடையாள அட்டையும், இனிமேல், முகவரி மற்றும் அடையாளத்தை நிரூபிப்பதற்கான, ஆவணமாக ஏற்கப்படும்' என, மத்திய நேரடி வரிகள் வாரியம், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டையில், 12 இலக்க அடையாள எண் குறிப்பிடப்பட்டு இருக்கும். இதை மத்திய அரசின், "இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையமைப்பு'வழங்குகிறது. இதை பயன்படுத்தி, 10 இலக்க எண் உள்ள, பான் கார்டு பெற முடியும். சமீபத்தில், ரிசர்வ் பாங்க், வங்கி கணக்கு துவக்குவதற்கு, ஆதார் கார்டு தகுந்த ஆதாரமாக ஏற்கப்படும் என,அறிவித்து இருந்தது.
ஆதார் அட்டை குழப்பங்கள்: செய்ய வேண்டியது என்ன?- அதிகாரிகள் விளக்கம்
ஆதார் அட்டை கிடைப்பதில் பல குழப்பங்கள் உள்ளன. இது குறித்த செய்தியை ’தி இந்து’ வெளியிட்டிருந்தது. அதனால் ஆதார் அட்டை பெறுவதில் இருக்கும் குழப்பங்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தெளிவு படுத்தி இருக்கின்றனர்.
பதிவேட்டில் விடுபட்டவர்களுக்கு...
2010-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (என்.பி.ஆர்) பலர் விடுபட்டுள்ளனர். இதனால் வார்டு அலுவலகம், தாலுகா அலுவலகம் என பல இடங்களுக்கு முதியோர்கள் உட்படபலர் அலைக்கழிக்கப்படு கின்றனர். இதனை தவிர்த்து என்.பி.ஆர்-ல் தங்கள் பெயர்களை சேர்க்க வேண்டிய வழிமுறைகள் பற்றி அதிகாரிகள் கூறியதாவது:
என்.பி.ஆர்-ல் பெயர்கள் விடுபட்டவர்களுக்கு தற்போது நடக்கும் முகாம்களில் ஆதார் அட்டை பெற புகைப்படம் எடுக்க முடியாது. ஆனால் இரண்டாம் கட்ட முகாம்களில் புகைப்படம் எடுக்கலாம்.
அதற்கு புதிதாக என்.பி.ஆர்-ல் பதிவு செய்ய வேண்டும். அதற்கான விண்ணப்பங்களை நகரத்தில் இருப்பவர்கள் மண்டல அலுவலகங்களிலும் கிராமங்களில் இருப்பவர்கள் தாலுகா அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மண்டல அல்லது தாலுகா அலுவலகத்திலேயே சமர்ப்பித்து அதற்கான சான்றை பெற்றுக் கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்களின் தகவல்களை வீடுகளுக்கு வந்து அதிகாரிகள் சரி பார்ப்பார்கள். இந்த தகவல்களின் அடிப்படையில் அடுத்த வருடம் நடக்கும் இரண்டாம் கட்ட முகாம்களில் ஆதார் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
சென்னையில் விரிவாக்கப்பட்ட பகுதியில் இருப்பவர்கள் உட்பட அனைவரும் புதிய மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலேயே விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
பதிவுச் சீட்டை தொலைத்தவர்களுக்கு..
என்.பி.ஆர்-ல் பதிவு செய்திருந்தால் ஆதார் அட்டை கிடைக்கும் என்று 2010-ல் அறிவிக்காததால் பலர் கவனக் குறைவாக என்.பி.ஆர். சீட்டை தொலைத்திருக்கலாம். அது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
என்.பி.ஆர். சீட்டில் 33 இலக்கம் கொண்ட எண் இருக்கும். அது பதிவு செய்யப்பட்டவர்கள் வசிக்கும் மாநிலம், மாவட்டம், வார்டு ஆகிய தகவல்களை குறிக்கும். எனவே சீட்டை தொலைத்தவர்கள் தங்கள் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களின் சீட்டில் உள்ள எண்ணை குறித்து வைத்து மண்டல அலுவலகத்தில் விசாரித்தால் அவர்களது தகவல்களை மீட்க முடியும். அது மட்டுமல்லாமல் மண்டல அலுவலகங்களில் என்.பி.ஆர் சீட்டின் நகல் இருக்க வேண்டும். அதையும் விசாரித்து பெற்றுக் கொள்ளலாம்.
முகவரி மாறியவர்களுக்கு...
என்.பி.ஆர் பதிவு செய்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதால் பலர் இடம் பெயர்ந்திருக்கின்றனர். இதனால் என்.பி.ஆர். பதிவு செய்யும்போது ஒரு முகவரியிலும் தற்போது வேறு முகவரியிலும் வசிக்கின்றனர். இவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
என்.பி.ஆர். பதிவு செய்யும் போது எந்த முகவரியில் இருந்தார்களோ அந்த பகுதியில் நடக்கும் ஆதார் முகாமுக்கு செல்ல வேண்டும். அங்கு என்.பி.ஆர் பதிவேட்டில் தங்களது பெயர்கள் இருக்கின்றனவா என்று சரி பார்த்துக் கொண்ட பிறகு தங்களது புதிய முகவரிக்கான சான்றை அளிக்க வேண்டும். அதன் பிறகு புதிய முகவரியில் ஆதார் அட்டை வழங்கப்படும்.
தாங்கள் முன்பு வசித்த பகுதிக்கு செல்ல இயலாதவர்கள் மண்டல அலுவலகங்களில் புதிதாக பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். அப்படி செய்தால் அவர்களுக்கு முதல் கட்ட முகாம்களில் ஆதார் அட்டை பெற முடியாது.
ஆதார் அட்டை பெற்ற பிறகு அதில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி, தொலைபேசி எண், பாலினம் ஆகிய தகவல்களில் மாற்றம் ஏற்பட்டால் அதனை திருத்திக் கொள்ளலாம்.
திருத்துவதற்கான விண்ணப் பத்தை ஆன்லைன் மூலமாகவோ அஞ்சல் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனிலேயே தங்களது புதிய அடையாளச் சான்று, முகவரி சான்று, மற்றும் பிறந்த தேதிக்கான சான்றை சமர்ப்பிக்கலாம். அல்லது அஞ்சல் மூலம் பெங்களூருவில் இருக்கும் அலுவலகத்துக்கு
UIDAI Regional Office
Khanija Bhavan
No. 49, 3rd Floor,
South Wing Race Course Road,
Bangalore – 01.
என்ற முகவரியை எழுதி அனுப்பி வைக்கலாம். அதிகாரிகள் தகவல்களை சரி பார்த்த பிறகு ஆதார் அட்டையில் புது தகவல்கள் ஏற்றப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
பணி நிரவலுக்கு பிறகே ஆசிரியர் நியமனம்
உபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணி நிரவல் செய்த பிறகே, புதிய ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஆக.,17, 18 தேதிகளில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில், 27ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். "தேர்ச்சி பெற்றவர்கள், மதிப்பெண் அடிப்படையில், பள்ளிகளில் காலியாக உள்ள 15 ஆயிரம் பணியிடங்களில் நிரப்பப்படுவர்' என, தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி களில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் (ஆசிரியர் இல்லாத இடங்களில், உபரி ஆசிரியர்களை நியமித்தல்) செய்த பிறகு, புதிய ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
ஆக.,1 மாணவர்களின் வருகைப்பதிவேடு படி, ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கும் பணி நடந்து வருகிறது. விதிமுறைப்படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் 160 மாணவர்களுக்கு, ஐந்து ஆசிரியர்களும் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் குறைவான மாணவர்களே வருகின்றனர். இதையடுத்து, உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர்; பணிநிரவலுக்கு பிறகு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உள்ளது. இதனால், தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணியிடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அடையாள அட்டை அவசியம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு
மாவட்டங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் முதல் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு உயரதிகாரி வரை அனைவரும் பணியின்போது கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த உத்தரவு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தலைமைச் செயலகத்தில் உள்ள துறைகளின் செயலாளர்கள், மாவட்ட நீதிபதிகள், குற்றவியல் தலைமை நீதிபதிகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என அரசு ஊழியர்கள் பணியாற்றும் அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
. இதற்கான உத்தரவை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் அடையாள அட்டை அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையில் அரசு பணியாளரின் பெயர் மற்றும் பதவி ஆகியன ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு பதிலாக, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒன்றின் கீழ் ஒன்று இடம் பெறுமாறு மாற்றி அமைத்து உரிய அடையாள அட்டைகளை வழங்குமாறு அனைத்துத் துறைத் தலைவர்களும் மாவட்ட ஆட்சியர்களும் ஏற்கெனவே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அனைத்து அரசுப் பணியாளர்களும் அலுவலகத்தில் பணியாற்றும் நேரங்களில் அடையாள அட்டையை தவறாது அணிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அனைத்துத் துறைத் தலைவர்களும் மாவட்ட ஆட்சியர்களும் தங்களுக்குக் கீழேயுள்ள சார்நிலை அலுவலகங்களுக்கு இது தொடர்பாக உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று தனது உத்தரவில் டேவிதார் கேட்டுக் கொண்டுள்ளார். யாரும் அணிவதில்லை: தலைமைச் செயலகம், சட்டப் பேரவைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அனைத்திலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு தனித்தனியே புகைப்படத்துடன் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த அடையாள அட்டைகளை பெரும்பாலான பணியாளர்கள் அணிவதில்லை என்று புகார்கள் கூறப்பட்டு வந்தன. இந்தப் புகார்களைத் தொடர்ந்து அரசு பணியாளர்கள் அனைவரும் அடையாள அட்டையை அணிய வேண்டும் என்ற மாநிலம் தழுவிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
500 நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை
500 நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளது. ரூ.177 கோடி ஒதுக்கீடு பின்தங்கிய ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகளை தொடங்கும் மத்திய அரசின் திட்டப்படி, தமிழ்நாட்டில் 44 மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் 11 பள்ளிகளுக்கு கட்டிடம் கட்டும் பணி முடிந்துவிட்டது. 7 பள்ளிகளுக்கு கட்டிட பணி முடியும் நிலையில் உள்ளது. 2–வது கட்டமாக 26 பள்ளிகளுக்கும், விடுதிகளுக்கும் கட்டிடம் கட்டப்பட உள்ளது.
இதற்காக மத்திய அரசு கொடுத்த நிதியுடன், கட்டிட செலவு அதிகரித்துள்ளதால் மத்திய அரசு கொடுத்த நிதி போக, தேவைப்படும் எஞ்சிய நிதியையும் தமிழக அரசு ஏற்றுள்ளது. அதன்படி ரூ.177 கோடியே 44 லட்சத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கி உள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 500 பள்ளிகளை தரம் உயர்த்த இடைநிலை கல்வி திட்டத்தின்படி வருகிற கல்வி ஆண்டில் 500 நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளோம் என்றும் அவர் கூறினார்.
டிட்டோஜாக் தலைவர்கள் அதிகாரிகளுடன் சந்திப்பு, இன்றைய சந்திப்பின் போது தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் கலந்து கொண்டது
இன்று சென்னையில் டிட்டோஜாக்கில் உள்ள 7 சங்க தலைவர்களும் தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வி செயலர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் சந்தித்து மனு அளித்தனர். பின்பு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே முடிவின் படி அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து இன்றும், நாளையும் மனு கொடுக்க இருந்தனர்.
இதையடுத்து இன்று அதிகாரிகள் சந்திப்பு நடந்தது, நாளை மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய சந்திப்பின் போது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் உடன் இருந்தது.
1983 -- ஜேக்டி போராட்டமும் --ஆசிரியர்களின் பொது நிதியும்
1983 ம் ஆண்டு ஆசிரியர்களை அரசு உழியராக்க வேண்டி ஜேக்டி என்ற பெயரில் மாபெரும் கூட்டு போராட்டம் நடந்தது ,.அன்றய தலைவர்கள் உட்பட அனைவரும் பாதிப்பில் இருந்தவர்கள் ,அதனால் போராட்டம் மாபெரும் வெற்றிப்பெற்றது. அந்த போராட்டத்தில் அனைத்து சங்கங்கள் சார்பாக திரட்டிய நிதியில் போராட்ட செலவு போக 1983 ம் ஆண்டு ரூபாய் முன்று இலட்சம் ( 3,00,000 ) மீதம் இருந்தது. இத்தொகை ஜேக்டி பெயரில் வங்கியில் செலுத்தப்பட்டது .இத்தொகை எடுப்பார் எவரும் இன்றி உள்ளது ..இத்தொகை இன்றைய கணக்கு படி ரூபாய் தொண்ணுற்று எட்டு இலட்சம் ( 98,00,000 ) இருக்கும் ..இதை மீட்க பணி ஓய்வு பெற்ற பின்பும் சங்கத்தில் தலைமை வகிப்பவர்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன் ? .
மரபைப் பறைசாற்றுவோம்- வேஷ்டி அணிந்து மகிழ்வோம்: சகாயம் அறைகூவல்
அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் ஒருநாள் வேஷ்டி அணிந்து வேஷ்டி நாள் கொண்டாடுமாறு சகாயம் ஐஏஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து, கூட்டு நெசவு (கோ ஆப் டெக்ஸ்) பணியாட்சித் துறை அரசு அலுவலகங்களுக்கு அதன் இயக்குநர் சகாயம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் சகாயம் கூறியிருப்பதாவது... இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றின் வழித்தடத்தில் உரோமானியர்களுக்கு ஆடை அனுப்பி நாகரீகத்தின் நளினத்தை வெளிப்படுத்தியவர்கள் தமிழர்கள் தான். அத்தகைய ஆடைப் பரம்பரை கொண்ட தமிழர்களின் அடையாளமாய் நீண்ட காலமாக நின்று நிலைத்தது வேட்டி. வேட்டி அணிவது தமிழர்களின் ஆடை மரபின் அழகான வெளிப்பாடு. பரம்பரையின் பகட்டு, மனிதனின் மானம் காத்தது மட்டுமன்றி மண்ணின் மணத்தை மாண்புறச் செய்ததும் வேட்டி தான். இன்றைய புதுமை நாகரிகச் சூழலில் வேஷ்டி அணிவது குறைந்து விட்டது. இப்போது, வீறார்ந்த வேஷ்டியைக் காணமுடியவில்லை. வேஷ்டி என்பது வெறும் ஆடையின் அடையாளம் மட்டுமல்ல, எளிய நெசவாளர்களின் வியர்வையின் வெளிப்பாடு. உழைப்பின் உயர்சிறப்பு. வேஷ்டி என்கிற ஆடை மரபைப் போற்றவும்,வலுப்படுத்தவும் அதைத் தொய்வில்லாமல் நெசவு செய்யும் நெசவாளர்களுக்குத் தோள் கொடுக்கவும், "வேஷடி நாள்' கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது . வேஷ்டி அணிவது மரபை மதிக்க மட்டுமல்லாமல், அதன் மருத்துவச் சிறப்பபை உணர்த்தவும், தமிழர்களின் மரபு விழாவாம் பொங்கல் திருநாளுக்கு முன்பாக 2014 சனவரியில் ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்வு செய்து வேஷ்டி நாளாகக் கொண்டாடுங்கள். ஒவ்வொரு துறையிலும் பணி செய்யும் அனைத்துப் பணியாளர்களின் விருப்பத்துடன் வேஷ்டி அணிந்து மரபின் மாண்பை வெளிப்படுத்த வேண்டுகிறோம். இதன் மூலம் ஏழை நெசவாளர்களின் வாழ்வுக்கு வழி செய்யவும், கூட்டு நெசவு (கோஆப்டெக்ஸ்ன்) விற்பனைக்கு உதவக் கூடியது ஆகும். எனவே, இந்த திட்டத்துக்கு ஆதரவு தரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தச் சுற்றறிக்கை மாவட்ட ஆட்சியர்கள், அனைத்துத்துறைத் தலைவர்கள் என அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 'வேஷ்டி நாள்' கொண்டாடும் வகையில் ரூ. 130 முதல் ரூ. 500 வரையிலான அனைத்து வடிவங்கள், வண்ணங்களில் அனைத்து வகை நூலில் சிறிய, பெரிய கறையுடன் கூடிய வகைகளைக் கூட்டு நெசவு (கோஆப்டெக்ஸ்) உற்பத்தி செய்துள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் பட்டியல்!
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடத்தப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ''தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக 2013-14 ஆம் ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 2013 ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது. அதனையடுத்து மாவட்ட அளவில் முதலிடத்தைப் பெற்ற மாணவ / மாணவியர்களைக் கொண்டு மாநில அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் சென்னை மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (27ஆம் தேதி) அன்று நடத்தப்பெற்றது.
மாநிலப் போட்டிக்கான நிகழ்ச்சியில் சென்னை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் சு. தம்புசாமி வரவேற்புரையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் முன்னிலை உரையும், சென்னை பொதிகைத் தொலைக்காட்சி நிலைய இயக்குநர் முனைவர் பால ரமணி, கவிஞர் பிறைசூடன், கவிஞர் மணிகண்டன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தியும், தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்குப் பங்கேற்புச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்புரையும், தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் முனைவர் கோ.செழியன் நன்றியுரையும் ஆற்றினார்கள்.
மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம், அரசம்பள்ளி முத்தமிழ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவி ச.சரண்யா முதலிடத்தையும், சேலம் மாவட்டம், மேட்டூர் அணை புனித மரியண்ணை மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவி இரா.பூமணி இரண்டாமிடத்தையும், ஈரோடு மாவட்டம், கவுந்தம்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவன் சி.பூவரசன் மூன்றாமிடத்தையும், கட்டுரைப் போட்டியில் மதுரை ஜோதி மேல்நிலைப்பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி ச.பவித்ரா முதலிடத்தையும், தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி இர.வித்யா இரண்டாமிடத்தையும், கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி 11ஆம் வகுப்பு மாணவன் கெ.சச்சின் மூன்றாமிடத்தையும், பேச்சுப் போட்டியில் புதுக்கோட்டை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி மு.பு.லாவண்யா முதலிடத்தையும், பெரம்பலூர் மௌலானா மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவன் சி.அலிமுதீன் இரண்டாமிடத்தையும், ராமநாதபுரம் தர்ம வாவன விநாயகர் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவன் மு.லெனின்குமார் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற்ற கவிதைப் போட்டியில் நாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரி ஆண்டவர் செவிலியர் பயிற்சிப் பள்ளி முதலாமாண்டு மாணவி இரா.நீலாவதி முதலிடத்தையும், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் சாரதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி பூ.ரஞ்சிதா இரண்டாமிடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரி மாணவன் க.கலைவண்ணன் மூன்றாமிடத்தையும், கட்டுரைப் போட்டியில் திருவண்ணாமலை அரசுக் கலைக் கல்லூரி முதுகலை தமிழ் முதலாமாண்டு மாணவன் இரா.கண்ணன் முதலிடத்தையும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவனைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி பயன்பாட்டியல் மூன்றாமாண்டு மாணவி சுவாதி பிரியா இரண்டாமிடத்தையும், விழுப்புரம் மாவட்டம், கொல்லியங்குணம் பவுட்டா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளநிலை இயற்பியல் மூன்றாமாண்டு மாணவி கோ.சாந்தகுமாரி மூன்றாமிடத்தையும், பேச்சுப் போட்டியில் திருவண்ணாமலை கம்பன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவி க.அபிதா முதலிடத்தையும், கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளைம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவன் க.ஆதிலிங்கம் இரண்டாமிடத்தையும், திருவாரூர் சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவன் இரா.கார்த்திக் ராஜா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு முதல்பரிசு ரூ.15,000/-, இரண்டாம் பரிசு ரூ. 12,000/-, மூன்றாம் பரிசு ரூ. 10,000/- எனும் வகையில் வழங்கப்படும்'' எனக் கூறப்பட்டுள்ளது.
25/12/2013
முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் 30 மற்றும் 31–ந்தேதிகளில் நடைபெறுகிறது
முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள். சான்றிதல் சரிபார்ப்புக்குப்பின் புதிய ரேங்க் பட்டியலில் இடம்பெறப்போவது யார் ?
முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் 30 மற்றும் 31–ந்தேதிகளில் நடைபெறுகிறது. முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் எழுத்து தேர்வில் 150 க்கு
மதிப்பெண்களும்,வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு அதிகபட்சமாக 4 மதிப்பெண்களும்,பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக 3 மதிப்பெண்களும் வழங்கப்படும்.
வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு
1 to 3 வருடங்கள் வரை - 1 மதிப்பெண்
3 to 5 வருடங்கள் வரை - 2 மதிப்பெண்
5 to 10 வருடங்கள் வரை - 3 மதிப்பெண்
1 0 வருடங்களுக்கு மேல் - 4 மதிப்பெண்
பணி அனுபவத்துக்கு
1 to 2 வருடங்கள் வரை - 1 மதிப்பெண்
2to 5 வருடங்கள் வரை - 2 மதிப்பெண்
5 வருடங்களுக்கு மேல் - 3 மதிப்பெண்
மேல்னிலை வகுப்புகளில் (+1,+2) பாடம் எடுத்த அனுபவமே இதற்கு கணக்கில் எடுதுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்து தேர்வில் 150 க்கு தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களுடன்,வேலைவாய்ப்பக பதிவு ,பணி அனுபவத்துக்கானா மதிப்பெண்களும் சேர்க்கப்பட்டு புதியதாக மெரிட்பட்டியல் தயாரிக்கப்படும்
எழுத்து தேர்வில் 150 க்கு தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களுடன்,வேலைவாய்ப்பக பதிவு ,பணி அனுபவத்துக்கானா மதிப்பெண்களும் சேர்க்கப்பட்டு புதியதாக மெரிட்பட்டியல் தயாரிக்கப்படும்.பின்னர் இனஒதுக்கீடு உள்ளிட்ட விதிகளை பின்பற்றி புதிய இறுதிப்பட்டியல் தயாராகும்.
தற்போது 605 பணியிடங்களுக்கு 694 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதால் 89 பேருக்கு பணி நியமன வாய்ப்பு கிடைக்காமல் போகக்கூடும். பொதுப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 188 பேர்களுல் 7 பேர் மட்டுமே oc பிரிவைச்சேர்ந்தவர்கள்.
விவரம் வருமாறு
GT. -188
BC. -184 ( 9 visual impaired)
BCM. -27
MBC. -152 (3 visual impaired)
SC. -110 (1 visual impaired)
SCA. -24
ST. -9
என 694 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட விபரம்: வாக்காளர் வீட்டிற்கு வருது தபால் தகவல்
புதிய வாக்காளராக சேர மனுசெய்தவர்களுக்கு, அவர்களது பெயர், பட்டியலில் இடம்பெற்றது குறித்த தகவல், அவரவர் வீட்டிற்கே, தபால் மூலம் அனுப்ப, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. 2014 ஜன.,1 ஐ, தகுதி நாளாகக்கொண்டு, 18 வயது நிரம்பியவரின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட, வாக்காளர் சுருக்கத்திருத்தப்பட்டியல் பணிகள், அக்.,1 முதல் 31 வரை நடந்தன. ஏராளமானோர் மனு செய்தனர். அவர்களின் விபரங்களை சரிபார்க்கும்பணி, இறுதிக்கட்டத்தில் உள்ளது.
ஜன.,6 ல், வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் சார்பில், நேற்று, சென்னையில் இருந்து, வீடியோகான்பரன்சிங் மூலம், ஆலோசனை நடந்தது. அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலக , தேர்தல் பிரிவு புரோகிராமர்கள், உதவி புரோகிராமர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு, தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், புதிய வாக்காளராக சேர மனுசெய்தவர்களுக்கு, அவர்களது பெயர், பட்டியலில் இடம்பெற்றது குறித்து, வீட்டிற்கே, தபால் மூலம் தகவல் அனுப்ப, முடிவு செய்யப்பட்டது. தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "" சம்பந்தப்பட்டவரது பெயர், வாக்காளர் பட்டியலில் எந்த சட்டசபை தொகுதி , பாகம் எண், வரிசை எண்ணில் இடம் பெற்றுள்ளது எவ்பதை குறிப்பிட்டு, வீட்டு முகவரிக்கு, ஜன.,6க்குப்பின், தபால் அனுப்பப்படும். இப்பணியை, மாவட்ட, தாலுகா தேர்தல் பிரிவு அதிகாரிகள் மேற்பார்வை செய்வர். தேர்தலில் ஓட்டளிப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் ஒருபகுதியாக, இம்முறை கையாளப்படுகிறது,''என்றார்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு புதிய கட்டிடம்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்!
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 4.17 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டிடத்திற்கு முதல்வர் ஜெயலலைதா அடிக்கல் நாட்டினார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக உலகெங்கிலும் உள்ள தமிழ் அறிஞர்கள் தமிழ் மொழியை ஆய்வு செய்வதற்கும், வெளிநாட்டவர் தமிழ் மொழியை கற்பதற்கும் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் உள்ள கட்டடம் 40 ஆண்டு கால பழமையான கட்டடம் என்பதால், அதற்கு மாற்றாக 4 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நிருவாகக் அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
இந்தப் புதிய நிர்வாக அலுவலகக் கட்டடத்தில் ஆய்வரங்கம், மொழிபயிற்சிக் கூடம், ஆய்வு நூலகம், நவீன வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஒருங்கே அமைக்கப்படும்.
உலகப் பொதுமறையாம் திருக்குறள் மனித வாழ்வின் மாட்சி, ஆளுமைப் பண்பு, மேலாண்மை நுட்பம், அறநெறிக் கருத்து, வாழ்வி யல் முறை ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. இச்சிறப்புமிக்க பொது மறையில் பொதிந்துள்ள தனிமனித ஒழுக்கம், குடும்ப அமைப்புகள், சமுதாயம், நாடு, உலகம் சார்ந்த சிந்தனைகள் போன்றவற்றை இன்றைய மக்கள் குறிப்பாக இளைஞர்கள் கண்டு, கேட்டு, உணர்வதற்கு ஏதுவாக சென்னை தரமணியிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஓவியக் காட்சிக் கூடம் அமைத்திட முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார்.
அதன்படி, சென்னை தரமணியிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடத்தை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இக்கூடத்தில், திருக்குறளை ஓவியங்களாக விளக்கும் வகையில், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஒரு ஓவியம் வீதம் மொத்தம் 133 ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதுடன், திருக்குறள் தொடர்பான ஓலைச் சுவடிகள், அரிய நூல்கள், படக்காட்சிகள், சிலைகள், நிழற்படங்கள், திருக்குறள் சார்ந்த 1,500க்கும் மேற்பட்ட உரைநடை நூல்கள் ஆகியவை சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
உலகமெலாம் பரவி வாழ்ந்து கொண்டிருக்கின்ற புலம் பெயர்ந்த தமிழர்கள் தாய்த் தமிழகத்தின் பண்பாட்டு வேர்களைக் கண்டும், கேட்டும் அறியவும், இலக்கியம் சார்ந்த பண்பாட்டுப் பயணம் மேற்கொள்ளவும், தமிழ், தமிழர்கள் குறித்த தகவல்களை ஒருங்கே பெற்றிடவும், சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையம் ஏற்படுத்திட முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார்.
அதன்படி, சென்னை தரமணியிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையத்தை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
NMMS விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் ஒத்திவைப்பு
அரையாண்டு தேர்வு விடுமுறையால் NMMS விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 02.01.2014 முதல் 04.01.2013 வரை www.tndge.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர் சம்பளம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, மத்திய அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையாக மாற்றியமைக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மனு மீதான விசாரணை, இரண்டு வாரங்களுக்கு, தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் அதிருப்தி- நீதித்துறை ஊழியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு-அரசு இடைநிலை ஆசிரியர்களை வஞ்சித்து வருக்கின்றது''
அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய, கிருஷ்ணன் தலைமையில் ஊதிய குறைதீர்க்கும் குழுவை அரசு அமைத்தது. இந்த குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அரசாணையில் 89 அறிவிப்புகளை வெளியிட்டது. இதற்கு பின்பும் அரசு ஊழியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்யப்படவில்லை என ஆசிரியர்கள், பட்டு வளர்ச்சி ஆய்வாளர்கள், ஊர்புற நூலகர்கள், சாலை ஆய்வாளர்கள், புள்ளியல் துறை அலுவலர்கள் முறையிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நீதித்துறையில் சிராஸ்தார், ஏஏஓ, மேலாளர்களுக்கான கிரேடு ஊதியம் ரூ4,900 லிருந்து ரூ5,100, நகல் எடுப்போர், பரிசோதகர்களுக்கு ரூ.2,000லிருந்து ரூ2,400, உதவியாளர், பெஞ்ச் கிளார்க் அலுவலர்களுக்கு ரூ2,400லிருந்து ரூ2,800, ரெக்கார்டு கிளார்க், அசிஸ்டென்ட் ரூ2,000லிருந்து ரூ2,400 என உயர்த்தி நிதித்துறை ஒப்புதலுடன் துறை ரீதியான அரசாணை நவ. 8ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு தொடர்பான அரசாணைகள் எப்போதும் நிதித்துறை சார்பில் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், தற்போது நிதித்துறை சார்பில் துறை ரீதியான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ''இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் நீதித்துறைக்கு தற்போது ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அரசு இடைநிலை ஆசிரியர்களை வஞ்சித்து வருக்கின்றது'' .அரசு ஊழியர் சங்க மாநில நிர்வாகிகள் கூறுகையில், '' நீதித்துறை நெருக்குதலின் பேரில் அந்தத் துறைக்கு மட்டும் ஊதிய உயர்வுக்கான அரசாணை துறை ரீதியாக வெளியிட்டுள்ளனர். அனைத்து தரப்பில் உள்ள குறைகளை களைய வேண்டும்'' என்றனர்.
எழுத, படிக்க திணறும் மாணவர்களை மேம்படுத்தும் திட்டம் - SCERT முடிவு
ஆங்கிலம் மற்றும் தமிழ்வழியிலான பாட புத்தகங்களை, சரளமாக படித்தல், எழுதுதல் ஆகியவற்றில், மிகவும் பின் தங்கியுள்ள மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களை மேம்படுத்த, வரும் கல்வி ஆண்டில், புதிய திட்டத்தை செயல்படுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, வரும் மே மாதத்திற்குள், அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பயிற்சி அளிக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.தமிழகத்தில், 56,573 பள்ளிகள் உள்ளன. இவற்றில், 1.35 கோடி, மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மட்டும், 89 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மீதமுள்ள, 46 லட்சம் மாணவர்கள், தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.
தனியார் பள்ளி மாணவர், ஆங்கிலவழியிலான பாடங்களை எழுதுதல், வாசித்தல் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றில், ஓரளவிற்கு நல்ல நிலையில் உள்ளனர்.
தமிழில் தடுமாற்றம்,ஆனால், மொழிப்பாடங்களை, குறிப்பாக, தமிழ் பாடத்தை படிப்பதிலும், எழுதுவதிலும், தடுமாறும் நிலை உள்ளது.அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் மற்றும் ஆங்கிலவழி பாடங்களை படிப்பதற்கும், எழுதுவதற்கும், ஏராளமான மாணவர்கள் தடுமாறுவதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புரிந்துகொள்ளும்
ஆற்றலும் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், அடிப்படையில் தமிழ், ஆங்கிலவழி (மீடியம்) புத்தகங்களையும், சரளமாக வாசித்தல், எழுதுதல் போன்றவற்றில் திணறும் மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களை மேம்படுத்த, வரும் கல்வி ஆண்டில், புதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், கண்ணப்பன் தலைமையிலான, ஒன்பது பேர் கொண்ட குழு, புதிய திட்டத்தை செயல்படுத்த, 62 பக்க அறிக்கையை தயாரித்துள்ளது.
வகுப்பு வாரியாக, திறன் குறைபாடுள்ள மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களுக்கு, ஆறு மாதங்களுக்குள், சரளமாக எழுதவும், படிக்கவும் கூடிய திறனை
ஏற்படுத்த, தலைமை ஆசிரியர் என்னென்ன செய்ய வேண்டும் என, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக பயிற்சி:மாவட்ட வாரியாக, தலைமை ஆசிரியர்களுக்கு, இதற்கான பயிற்சி அளிக்கப்படும். மே மாதத்திற்குள், இந்த பயிற்சியை அளிக்க, இயக்குனர், கண்ணப்பன் திட்டமிட்டு உள்ளார்.இதுகுறித்து, அவர் கூறுகையில், ''விரைவில், இதற்கான ஆய்வு
குறித்து, டிசம்பரில் ஆய்வு செய்வோம். இந்த பயிற்சியில், தனியார் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்கலாம்,'' என, தெரிவித்தார்.
DA Rates from 01/01/2006 ( for Information) From - 2006
01-01-2006 -- NIL
01-07-2006 -- 2%
01-01-2007 -- 6%
01-07-2007 -- 9%
01-01-2008 -- 12%
01-07-2008 -- 16%
01-01-2009 -- 22%
01-07-2009 -- 27%
01-01-2010 -- 35%
01-07-2010 -- 45%
01-01-2011 -- 51%
01-07-2011 -- 58%
01-01-2012 -- 65%
01-07-2012 -- 72%
01-01-2013 -- 80%
01-07-2013 -- 90%
01-01-2014 -- 100% எதிர்பார்ப்பு
01-07-2006 -- 2%
01-01-2007 -- 6%
01-07-2007 -- 9%
01-01-2008 -- 12%
01-07-2008 -- 16%
01-01-2009 -- 22%
01-07-2009 -- 27%
01-01-2010 -- 35%
01-07-2010 -- 45%
01-01-2011 -- 51%
01-07-2011 -- 58%
01-01-2012 -- 65%
01-07-2012 -- 72%
01-01-2013 -- 80%
01-07-2013 -- 90%
01-01-2014 -- 100% எதிர்பார்ப்பு
ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தில் எவ்வித குறைவும் ஏற்படாமல் அதை அப்படியே அனுமதித்து அரசு உத்தரவு
அரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்பட்ட சம்பளக் குறைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் காரணமாக ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தில் எவ்வித குறைவும் ஏற்படாமல் அதை அப்படியே அனுமதித்து டிசம்பர் 2013 மாத சம்பளம் வழங்க அரசு உத்தரவு
ஆசியாவிலேயே முதன்மையானவை சில தமிழகத்தில் உண்டு, தெரிந்து கொள்ளுங்கள்.
1. தமிழக அரசு முத்திரை கோபுரம் –ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம்
(மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் –
கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம்
(மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் –
கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)
பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட விபரம்: வாக்காளர் வீட்டிற்கு வருது தபால் தகவல்
புதிய வாக்காளராக சேர மனுசெய்தவர்களுக்கு, அவர்களது பெயர், பட்டியலில் இடம்பெற்றது குறித்த தகவல், அவரவர் வீட்டிற்கே, தபால் மூலம் அனுப்ப, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. 2014 ஜன.,1 ஐ, தகுதி நாளாகக்கொண்டு, 18 வயது நிரம்பியவரின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட, வாக்காளர் சுருக்கத்திருத்தப்பட்டியல் பணிகள், அக்.,1 முதல் 31 வரை நடந்தன. ஏராளமானோர் மனு செய்தனர். அவர்களின் விபரங்களை சரிபார்க்கும்பணி, இறுதிக்கட்டத்தில் உள்ளது.
ஜன.,6 ல், வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் சார்பில், நேற்று, சென்னையில் இருந்து, வீடியோகான்பரன்சிங் மூலம், ஆலோசனை நடந்தது. அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலக , தேர்தல் பிரிவு புரோகிராமர்கள், உதவி புரோகிராமர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு, தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், புதிய வாக்காளராக சேர மனுசெய்தவர்களுக்கு, அவர்களது பெயர், பட்டியலில் இடம்பெற்றது குறித்து, வீட்டிற்கே, தபால் மூலம் தகவல் அனுப்ப, முடிவு செய்யப்பட்டது. தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "" சம்பந்தப்பட்டவரது பெயர், வாக்காளர் பட்டியலில் எந்த சட்டசபை தொகுதி , பாகம் எண், வரிசை எண்ணில் இடம் பெற்றுள்ளது எவ்பதை குறிப்பிட்டு, வீட்டு முகவரிக்கு, ஜன.,6க்குப்பின், தபால் அனுப்பப்படும். இப்பணியை, மாவட்ட, தாலுகா தேர்தல் பிரிவு அதிகாரிகள் மேற்பார்வை செய்வர். தேர்தலில் ஓட்டளிப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் ஒருபகுதியாக, இம்முறை கையாளப்படுகிறது,''என்றார்.
இணையதள பாதுகாப்பு கொள்கை விரைவில் வெளியீடு
இணையதளம் மூலம் அரசு துறைகள் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் போது, அந்தத் தகவல்கள், பிறரால், "ஹாக்" செய்யப்படுகிறது. அதை தவிர்க்க, விரைவில், "இ - மெயில்" பாதுகாப்பு கொள்கை பின்பற்றப்பட உள்ளது.அந்த கொள்கையை, மத்திய அரசு வரைந்து வருவதாகவும், விரைவில் அது அறிவிக்கப்படும் என்றும் மத்திய தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் மிலிந்த் தியோரா தெரிவித்துள்ளார்.
வரும் கல்வி ஆண்டு முதல் பத்தாம் வகுப்புக்கும் முப்பருவ கல்விமுறை?
தமிழகத்தில் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.வரும் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பிலும் முப்பருவ கல்வி முறை அமலாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொதுத்தேர்வு ரத்தாகும் வாய்ப்பு இருப்பதால், பல்வேறு தரப்பினரும் பத்தாம் வகுப்பில் இக்கல்வி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.வரும் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பில் முப்பருவ கல்வி முறை கொண்டு வரப்படுவதற்கு, தேவையான புதிய பாடத்திட்டங்கள் தயார் செய்யும் பணி நடந்து வந்தது. தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட அனைத்து பாடங்களுக்கும், ஒவ்வொரு பாடத்துக்கும் ஆசிரியர் குழு நியமிக்கப்பட்டு, பாடத்திட்ட தயாரிப்பு பணி தற்போது நிறைவடைந்துள்ளது.கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், ''வரும் கல்வி ஆண்டில் 10ம் வகுப்புக்கும் முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்ததால், உடனடியாக புத்தகங்கள் அச்சிடும் வகையில் பாடத்திட்டங்கள் தயார் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு ரத்தாகும் என்பதால் இந்த கல்வி முறைக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தற்போது உள்ள கல்வி திட்டமோ அல்லது புதிய திட்டமோ அனைத்துக்கும் தயார் நிலையில் கல்வித்துறை உள்ளது'' என்றனர்.
குறுஞ்செய்தியை அதிகாரப்பூர்வ செய்தியாக ஏற்றுக்கொள்ள மத்திய அரசு முடிவு
பணப்பரிமாற்றம், பதிவு செய்வது உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பொதுமக்கள் அனுப்பும் குறுஞ்செய்தியை ஆதாரமாக ஏற்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
பொதுமக்கள் கொடுத்த 241 மனுக்களை, 100 துறைகளுக்கு அனுப்பி தங்களின் குறுஞ்செய்தி சோதனையை இன்று அதிகாரிகள் மேற்கொண்டனர். பொதுமக்கள் தங்கள் மனுக்களில் தகவல் அறியும் உரிமை சட்டம், சுகாதாரம், ஆதார், கல்வி பற்றிய விவரங்களை கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த "மொபைல் சேவா" திட்டத்தை அறிமுகப்படுத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சத்யநாராயணா கூறுகையில், 90 ஆயிரம் மொபைல் சந்தாதாரர்கள் உள்ள நிலையில் ரெயில்வே நிர்வாகத்தை போன்று பரிமாற்றம் தொடர்பான விவரங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதை அதிகாரப்பூர்வ ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
ஆறு மாதங்களுக்குள் அரசின் அனைத்து துறைகளிலும் எச்.டி.எம்.எல் 5 என்ற பயன்பாடு நிலைநிறுத்தப்படும். அப்போது அனைத்து மொபைல் சந்தாதாரர்களுக்கும் எளிதாக தகவல் பரிமாற்றம் செய்ய வழி ஏற்படும் என தொலைத்தொடர்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 9வது மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு திறந்த புத்தகத் தேர்வு முறை
மாணவர்களின் கல்வி ஆற்றலை தூண்டும் வகையில், மனப்பாடம் செய்யும் கல்வி முறைக்கு மாற்றாக, திறந்த புத்தகத் தேர்வு முறையை சிபிஎஸ்இ இந்த ஆண்டு அறிமுகம் செய்கிறது.முதற்கட்டமாக 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு இது அறிமுகம் செய்யப்படுகிறது. 9ம் வகுப்பில் அனைத்துப் பாடங்களிலும், பிளஸ் 1 வகுப்பில் புவியியல், பொருளாதாரம், உயிரியல் ஆகிய பாடங்களிலும் இந்த முறை அறிமுகம் செய்யப்படுகிறது.இந்த திறந்த புத்தகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வின்போது இந்த பிரிவுக்கான பல பதில்கள் மாணவர்களிடம் வழங்கப்பட்டு விடும். கேள்விக்கு தகுந்தபடி சரியான பதில்களை அவர்கள் எழுத வேண்டும். கேள்விகள், மாணவர்களின் சிந்தனையை தூண்டும் வகையில் இருக்கும். சென்னை மண்டலத்தில் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் திறந்த புத்தகத் தேர்வு முறையை 4 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ''பிளஸ் 1 வகுப்பில் திறந்த புத்தகத் தேர்வு முறை அறிமுகம் செய்யப்படும் பாடங்களுக்கான தேர்வுகள் வழக்கமான முறையிலேயே நடக்கும்.இந்த பாடங்களில் திறந்த புத்தகத் தேர்வு முறை மட்டும் கூடுதலாக இடம்பெறும். அந்த பிரிவுக்கு தலா 10 மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்பதால், அதற்கு ஏற்றபடி வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். இப்பகுதிக்கு உரிய விடைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வினாக்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய தேர்வு முறைக்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் அதன் செயல்பாட்டை பொறுத்து பிற வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு உத்தரவு பள்ளி வளாகங்களில் புகைபிடிக்க தடை
பள்ளி மாணவ மாணவியர் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் அருகே பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனைபோன்று பள்ளிகள், கல்லூரிகள் அருகே டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால், பல்வேறு அரசு பள்ளிகள் போதிய காம்பவுண்ட் சுவர் ஏதுமின்றி திறந்த வெளிகளாக உள்ளன. இங்கு எந்த நேரமும் வெளியாட்கள் நடமாட்டம் உள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் உள்ள பொருட்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக கூறி பள்ளி வளாகங்களில் வெளியாட்களை நடமாடுவதை தடை செய்ய வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அரசு முதன்மை செயலாளர் சபிதா உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்தநிலையில் தற்போது பள்ளி வளாகத்தில் புகைபிடிப்பதை தடை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பான உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் சார்ந்த இடங்களில் புகையிலை பொருட்கள் பயன்பாட்டினை தடை செய்து உத்தரவிடப்படுகிறது. அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் 'இது புகைபிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி', இங்கு புகைபிடித்தல் தண்டனைக்குரிய குற்றம்' என்று அறிவிப்பு பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக விண்ணப்பம் பெறக்கூடாது நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்ய குழு
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்டம் தோறும் தேர்வுக்குழு அமைத்து வரும் 31ம் தேதிக்குள் தேர்வு செய்த ஆசிரியர் விபரங்களை அனுப்பி வைக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 2013ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் தேர்வு குழு அமைக்கப்படுகிறது. தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தலைவராகவும், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், முதுகலை உதவி தொடக்க கல்வி அலுவலர் ஆகியோர் உறுப்பினராகவும் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இதனை போன்று உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், மேல்நிலை பள்ளி முதுநிலை தலைமை ஆசிரியர் ஆகியோரை உறுப்பினராக கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு அமைப்பது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தரவில், 'மாவட்ட தேர்வு குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள் தூய்மையான கல்வி பணியாற்றுபவர்களாகவும், எந்தவித புகாருக்கும் ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராக வும் இருத்தல் வேண்டும். விருதுக்கு தகுதியானவர் பணிபுரியும் பள்ளிகளை பார்வையிட்டு அதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கி தேசிய விருதுக்கு பரிந்துரை செய்யவேண்டும். ஒரு கல்வி மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தேர்வு செய்து டிசம்பர் 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை அலுவலர்கள் தாங்களே இனங்கண்டு உரிய கருத்துருக்களை தயார் செய்து பரிந்துரைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் இருந்து கருத்துருவை பெற்று பரிந்துரை செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 2011-12ம் கல்வியாண்டில் அல்லது அதற்கு முன்பு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே 2013ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுடையவர்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.
20/12/2013
7-வது சம்பள கமிஷன் அமைக்கும் திட்டம் விரைவில் அமைச்சரவையில் தாக்கல்
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை திருத்தம் செய்வதற்காக 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தார். எனினும் 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு முறைப்படி திட்டம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்படவில்லை.
இந்நிலையில், 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கான திட்டம் இன்னும் ஓரிரு வாரங்களில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. இதற்காக மத்திய நிதியமைச்சகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அமைச்சரவையின் ஒப்புதலையடுத்து சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஒருவர் தலைமையில் வல்லுநர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் கொண்ட சம்பளக் கமிஷன் அமைக்கப்படும். இந்த கமிஷன் 2 ஆண்டுகளுக்குள் ஊதிய திருத்தம் தொடர்பான தனது பரிந்துரையை வழங்க வேண்டும். இந்த பரிந்துரை 2016-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும். இதன்மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் பயன் அடைவார்கள்.
அதேசமயம் தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மாத ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் 1000 ரூபாயாக வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இப்பணிகளை ஆரம்பிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி முதுகலை பட்டப் படிப்பு ஹால் டிக்கெட்டை தொலைதூரக் கல்வி நிறுவன இணைய தளத்தில் (www.ideunom.ac.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி முதுகலை பட்டப் படிப்புகள் மற்றும் தொழில் படிப்புகளுக்கான (எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி. (ஐ.டி., பி.எல்.ஐ.எஸ்., எம்.எல்.ஐ.எஸ்.) தேர்வுகள் டிசம்பர்
28-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 22-ம் தேதி வரை நடைபெற உள்ளன. வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) தேர்வு நடத்தப்படும். மாணவர்கள் ஹால் டிக்கெட்டை தொலைதூரக் கல்வி நிறுவன இணைய தளத்தில் (www.ideunom.ac.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வுஅட்டவணை, தேர்வு மையம், மாதிரி கேள்வித்தாள் ஆகிய விவரங்களையும் இந்த இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
நேரடியாக விண்ணப்பம் பெறக்கூடாது நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்ய குழு
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்டம் தோறும் தேர்வுக்குழு அமைத்து வரும் 31ம் தேதிக்குள் தேர்வு செய்த ஆசிரியர் விபரங்களை அனுப்பி வைக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 2013ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் தேர்வு குழு அமைக்கப்படுகிறது. தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தலைவராகவும், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், முதுகலை உதவி தொடக்க கல்வி அலுவலர் ஆகியோர் உறுப்பினராகவும் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
இதனை போன்று உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், மேல்நிலை பள்ளி முதுநிலை தலைமை ஆசிரியர் ஆகியோரை உறுப்பினராக கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு அமைப்பது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தரவில், ‘மாவட்ட தேர்வு குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள் தூய்மையான கல்வி பணியாற்றுபவர்களாகவும், எந்தவித புகாருக்கும் ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராக வும் இருத்தல் வேண்டும். விருதுக்கு தகுதியானவர் பணிபுரியும் பள்ளிகளை பார்வையிட்டு அதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கி தேசிய விருதுக்கு பரிந்துரை செய்யவேண்டும்.
ஒரு கல்வி மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தேர்வு செய்து டிசம்பர் 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை அலுவலர்கள் தாங்களே இனங்கண்டு உரிய கருத்துருக்களை தயார் செய்து பரிந்துரைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் இருந்து கருத்துருவை பெற்று பரிந்துரை செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 2011-12ம் கல்வியாண்டில் அல்லது அதற்கு முன்பு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே 2013ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுடையவர்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அரசாணை வெளியீடு
மாற்றுத்திறனாளிக்காக சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) வெளியிட்டுள்ளது.
இந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதும் பார்வையற்றவர்களுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் பயிற்சி வழங்குவதற்காக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சென்னையில் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில், அவர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெற்றது.
அதன்பிறகு, மாற்றுத்திறனாளிக்காக சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.
அதன் தொடர்ச்சியாக பள்ளிக் கல்வித் துறை செயலாளர் டி.சபிதா வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:
பி.எட். படித்து வேலையில்லாமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைப்பதற்காக தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உத்தரவிடப்படுகிறது.
இந்தத் தேர்வில் தகுதி பெறும் பி.எட். பட்டதாரிகள் இப்போதுள்ள பின்னடைவு காலிப்பணியிடங்களிலும் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப்பணியிடங்களிலும் பணியமர்த்த அனுமதி வழங்கப்படுகிறது. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வாயிலாக சிறப்புப் பயிற்சி வழங்கப்படும். பார்வையற்றவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கும் (Scribes) சிறப்புப் பயிற்சி வழங்கப்படும்.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறும் 200 பார்வையற்றோர், இப்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக்கூடிய காலிப் பணியிடங்களில் விதிகளுக்குட்பட்டு பணியமர்த்தப்படுவர். நெட் மற்றும் ùஸட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, முதுநிலைப் பட்டம் பெற்ற 100 பார்வையற்றோரை உதவிப் பேராசிரியர்களாக நியமிப்பதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கும், அவர்களின் உதவியாளர்களுக்கும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் 32 மாவட்டங்களில் 50 மையங்களில் பயிற்சி அளிக்க மையம் ஒன்றுக்கு ரூ.4 லட்சம் வீதம் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவேற்பு: இந்த அரசாணையை தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் வரவேற்றுள்ளது. இந்த அரசாணையின்படி, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் எஸ்.நம்புராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொழில் வரி பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உயர்வு
தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில், அக்டோபர் 2013 முதல் தொழில் வரியை 35 சதவீதமாக உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.
வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சீராய்வு செய்து, வரி நிர்ணயம் செய்யப்படும். இதற்குமுன் 1.10.2008ல் தொழில் வரி சீராய்வு செய்யப்பட்டது. தற்போது 25 சதவீதம் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வரி சீராய்வு அடிப்படையில், 1.10.2013 முதல் 25 சதவீதமாக இருந்த தொழில் வரி, 35 சதவீதமாக உயர்த்தப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி இயக்குனர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். வரி உயர்வு தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றவும் உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது
Professional Tax 2013-2014
Professional Tax 2013-2014
19/12/2013
''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' 7667100100. சகாயம் தொடங்கி வைத்தார்
லஞ்சம், ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்து எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறது 'சட்டப் பஞ்சாயத்து’ என்ற இயக்கம்.இந்த அமைப்புக்கான 7667100100 தொலைபேசி சேவை தொடக்க விழா சென்னை, தி.நகரில் நடந்தது. சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின்
தலைவர் சிவ இளங்கோ விழாவில் பேசும்போது, ''ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம்,கேஸ் இணைப்பு, மின் இணைப்பு, பட்டா மாற்றம், கல்விக் கடன் போன்ற அரசு சேவைகளை எப்படி லஞ்சம் தராமல் பெறுவது என்ற வழிகாட்டுதலை எங்கள் சேவை மையம் வழங்கும்!'' என்றார்.அமைப்பின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், ''தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தும்முறை, தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களின் முகவரி மற்றும் தேவைப்படும் தொலைபேசி எண் போன்ற தகவல்களையும் இங்கே தருவோம். அனைத்து மக்களும் நல்லது தரும், நீதி தரும் நல்லாட்சி நாட்டில் மலர்ந்திட தொடங்கப்பட்டதுதான் இந்த இயக்கம்.
1947.. 2014.. அதே காலண்டர்.. இந்தியாவில் மாற்றம் ஏற்படும்?
இந்த புத்தாண்டு ஒரு சிறப்புடன் பிறக்க போகிறது. 67 ஆண்டுகள் கழித்து 1947ம் ஆண்டு போலவே, 2014ம் ஆண்டும் ஒரே மாதிரியான தேதிகளையும்,கிழமைகளையும் கொண்டுள்ளது. இதனால் இந்தியாவில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்று ஜோதிடர்கள் ஆரூடம் கூறி பீதியை கிளப்பி உள்ளனர். புத்தாண்டு பிறக்க போகிறது என்றாலே கணிப்புகளும் கச்சை கட்டி கொண்டு கலகலப்பாக கிளம்பி விடும். அந்த வகையில் 2014ம் ஆண்டு எப்படி இருக்கும் என்று இப்போதே பலரும் கணிக்க ஆரம்பித்து விட்டனர். இப்படி நடக்கும், அப்படி நடக்கும், எப்படியும் ஏதாவது நடக்கும் என்ற ரேஞ்சுக்கு கணிப்புகள் வெளிவரும். இந்த ஆண்டு இந்த வாகனத்தில் புத்தாண்டு பிறந்துள்ளதால், ஆண்களுக்கு ஆகாது என்ற கூறி வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்டனர். சகோதரிகளுக்கு ஆகாது என ஒரு முறை கூறியதால் சகோதரர்கள், சகோதரிகளுக்கு பச்சை புடவையை வாங்கி கொடுத்து பரிகாரம் செய்தனர். இதுபோல் பல விஷயங்கள் ஒவ்வொரு புத்தாண்டின் போதும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால், பிறக்க போகும் 2014ம் ஆண்டு, 1947ம் ஆண்டு போலவே இருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் பரபரப்பு. கடந்த 1947ம் ஆண்டை போலவே 2014ம் ஆண்டும் புதன்கிழமைதான் பிறக்கிறது. மற்ற தேதிகளும், கிழமைகளும் கூட ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. அதே 1947ம் ஆண்டு காலண்டரை எடுத்து பார்த்தால், அப்படியே 2014ம் ஆண்டு காலண்டர் போலவே இருக்கும். இது போதாதா... 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டு என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதுபோன்ற மாற்றத்தை 2014ம் ஆண்டு இந்தியா மீண்டும் சந்திக்கும் என்று பலர் கணித்துள்ளனர். இப்போது 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தல் வருவதால், இந்த ஆண்டில் இந்தியா பெரும் மாற்றத்தை காணும் என்றும் சில ஜோதிடயர்கள் பீதி கிளப்புகின்றனர். என்ன மாற்றம் வருகிறதோ, என்னவோ.. முதலில் புத்தாண்டு நல்லபடியாக பிறக்கட்டும்
மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் 2016க்குள் டெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் - இயக்குனர்
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்: மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல். அனைத்து ஆசிரியர்களும், 2016க்குள்,தகுதித்தேர்வில்தேர்ச்சி பெற்றிக்க வேண்டுமென,மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவு
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் ,பள்ளிகளில்10ம் வகுப்பு வரை, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும், 2010ஆக., 23க்கு பிறகு,நியமனம் பெற்ற ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை,ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தியதால்,அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில், 2016க்குள் மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்களும்,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென, இயக்குனரகமும் உத்தரவிட்டது. இதனால்,பல தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஏற்கனவே,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சில ஆசிரியர்கள், அரசு பள்ளிக்கு சென்று விட்டனர். வருங்காலங்களிலும்,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் அரசு பணிக்கு தான் செல்வர்,தனியார் பள்ளியை விரும்ப மாட்டார்கள். இதனால்,தனியார் பள்ளிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படும்" என்றார்.
நிரந்தர மையங்களைத் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஆதார் எண்கள் வழங்கும் பணியை இம்மாதத்துடன் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனினும், வேலை மற்றும் கல்விக்காக வெளியிடங்களுக்கு சென்றவர்கள் உள்பட நிறைய பேர் இன்னும் ஆதார் எண் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் உள்ளனர். இப்படிப்பட்டவர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்காக ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு நிரந்தர மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆதார் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி?
ஆதார் கார்டு வழங்கும் பணிகள் தமிழகத்தில் இம்மாதத்துடன் முடிகின்றன. இதில் விடுபட்டவர்களுக்காக தாலுகாதோறும் நிரந்தர மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுத் திட்டத்தின் கீழ் ஆதார் அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. மாநகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு, இந்தப் பணிகளை மேற்கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும் 6.74 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டும். கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து நடந்து வரும் இப்பணி, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதே நேரத்தில் ஆதார் அட்டை வழங்குவதில் பல குளறுபடிகள் நிலவுவதாக பொதுமக்கள் சரமாரியாக புகார் கூறி வருகின்றனர். இம்மாதத்துடன் பணிகள் நிறைவடைகின்றன. 70 சதவீதப் பணிகள் முடிந்துவிட்டதாக கூறப்பட்டாலும், பல இடங்களில் இன்னும் அட்டை வழங்கப்படவில்லை. ஒரு சில இடங்களில் புகைப்படம் எடுக்கும் பணியே தொடங்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, தமிழகத்தில் ஆதார் எண்கள் வழங்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்வதற்காக,நிரந்தர மையங்களைத் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஆதார் எண்கள் வழங்கும் பணியை இம்மாதத்துடன் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனினும், வேலை மற்றும் கல்விக்காக வெளியிடங்களுக்கு சென்றவர்கள் உள்பட நிறைய பேர் இன்னும் ஆதார் எண் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் உள்ளனர். இப்படிப்பட்டவர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்காக ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு நிரந்தர மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எம்.பில், பி.எச்டி., படிப்புக்கு இக்னோ அழைப்பு | IGNOU invites for M.Phil and Phd
இந்திராகாந்தி தேசிய நிறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2014ம் கல்வியாண்டில் ஜூலை மாதத்தில் சேர்க்கை பெற அழைப்பு விடுத்துள்ளது.
எம்.பில், (எஜூகேஷன், எகனாமிக்ஸ, சோசியலாஜி, அரசியல் அறிவியல்)பி.எச்டி., (மெக்கானிக்கல், வராலாறு, பொருளாதாரம், சோசியாலஜி, நூலக மற்றும் தொழில்நுட்ப அறிவியல், அந்திரோபாலஜி, அரசியல் அறிவியல், பைன் ஆர்ட்ஸ்) உள்ளிட்ட பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன.
பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பிப்.,23ம் தேதி நாடு முழுவதும் உள்ள மையங்களில் தேர்வுகள் நடத்தப்படும். விண்ணப்பிக்கத் தேவையான தகுதி, தேர்வு முறை குறித்த விவரங்களுக்கு கையேட்டில் தெரிந்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு The Director, Research Unit, Block-6, Room -18, IGNOU, Maidan Garhi, New Delhi - 110068. என்ற முகவரியின் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
17/12/2013
பெண்களின் அவசர உதவிக்காக உருவாக்கப்பட்டுள்ள “ரெஸ்க்யூ மீ” ('RESCUE ME') மொபைல் அப்ளிகேஷன்.
பெண்கள் மற்றும் முதியோர் ஆபத்து காலத்தில் காவல் துறை, மருத்துவர், உறவினர்கள் ஆகியோரை உதவிக்கு அழைக்க மொபைல் அப்ளிகேஷன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. “ரெஸ்க்யூ மீ”
(RESCUE ME) என்ற இந்த அப்ளிகேஷனை சென்னையை சேர்ந்த சஞ்சீவி என்ற பொறியியல் மாணவர் உருவாக்கியுள்ளார்.
ஆண்டிராய்டு வசதி கொண்ட செல்ஃபோனில் இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து வால்யூம் மற்றும் பவர் பொத்தான்களை அழுத்துவதன் மூலம் பிறரை தொடர்பு கொள்ள முடியும். இலவசமாக கிடைக்கும் இவ்வசதி மூலம், தான் இருக்கும் இடத்தை மற்றவர்களுக்கு தெரிவிப்பது உள்ளிட்ட வேறு பல வசதிகளும் கிடைக்கின்றன. இந்த அப்ளிகேஷனை எப்படி பயன்படுத்துவது என்ற விவரங்கள் அதற்குள்ளேயே இடம் பெற்றுள்ளன.
பள்ளிகளில் ஆதார் அட்டை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது: திருச்சி கலெக்டர் அதிரடி உத்தரவு
மத்தியில் ஆளும் ஐ.மு.கூ.,வின் காங்கிரஸ் தலைமையிலான அரசு,
ஆதார் அடையாள அட்டை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. "மக்கள்
பணம் மக்களுக்கே' என்ற "முழக்கத்துடன்' அரசு வழங்கும் மானியத்தொகை மக்களின் நேரடி வங்கிக்கணக்கில் செலுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்கு ஆதார் அட்டை அவசியம்.எனவே, அனைவரும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆதார் அட்டையால் ஏராளமான குழப்பங்கள் வருவதாகவும், முழுவீச்சில் ஆதார் அட்டைக்கு போட்டோ எடுக்கும் பணிகள் முடியாத நிலையில், "ஆதார் இருந்தால் தான் சிலிண்டர் வழங்குவோம், இணைப்பு வழங்குவோம்' என, காஸ் ஏஜன்ஸி நிறுவனங்கள் தெரிவித்து வருகிறது. "ஆதார் அட்டை
அவசியமில்லை' என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவிர, ஆதார்
அட்டைக் கேட்டு மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது' என, மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி கூறியுள்ளார். ஆனால், மத்திய பெட்ரோலிய அமைச்சகம், ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே இணைப்பு வழங்க வேண்டும்' என, காஸ் ஏஜன்ஸிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. திருச்சியை சேர்ந்த மனித உரிமைப் பாதுகாப்பு மைய மாவட்ட செயலாளர் வக்கீல் ஆதிநாராயணமூர்த்தி தலைமையில், சிலர் திருச்சி கலெக்டர் அலுவலகதத்துக்கு நேற்று வந்தனர். கலெக்டர் ஜெயஸ்ரீயிடம் மனு அளித்த அவர்கள், ""ஆதார் அட்டை அவசியமில்லை என உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி காஸ் ஏஜன்ஸிகள், பள்ளிகளில் ஆதார் அட்டை கேட்டு கட்டாயப்படுத்துகின்றனர்,'' என்றனர். கலெக்டர் ஜெயஸ்ரீ, ""பெட்ரோலிய அமைச்சகம் காஸ் நிறுவனங்களுக்கு
அறிக்கை அனுப்பி உள்ளது. அதில் நான் தலையிட முடியாது. பள்ளிகளில் வேண்டுமானால், கட்டாயப்படுத்தக்கூடாது என கூறுகிறேன்,'' என்றார். குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க வந்த மாவட்ட முதன் மை கல்வி அலுவலக அதிகாரியை அழைத்த கலெக்டர் ஜெயஸ்ரீ, ""பள்ளிகளில் பெற்றோரிடம், மாணவர்களிடம் "ஆதார்' அடையாள அட்டை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என சர்க்குலர் அனுப்புங்கள்,'' என உத்தரவிட்டார்.ஆதார் விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகளே என்ன செய்வது எனத்தெரியாமல் விழிக்கும் நிலையில், திருச்சி கலெக்டர் பிறப்பித்த இந்த அதிரடி உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Posts (Atom)