திருக்குறள்

30/01/2014

பள்ளிக்கல்வி - ஆசிரியர் தகுதித் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனம் குறித்த தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவு

பள்ளிக்கல்வி - 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் வழங்குவது குறித்த தமிழக அரசின் ஆணை

ஆசிரியர் தேர்வு வாரியம் - பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வி துறையில் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க புதிய வழிமுறைகளை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு.

பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க புதிய வழிமுறை : தமிழக அரசு :
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறையை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு நேர்முகத் தேர்வு அல்லது மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய முறையாக "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது.
ஆசிரியர் தகுதி மறுதேர்வு வரும் 14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, இளநிலைப் பட்டம், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல், இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, ஆசிரியர் பட்டயப் படிப்பு, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும்.
இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரை உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில அளவிலான பதிவு மூப்பு முறை பின்பற்றப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 18,922 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.
அதனடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலும், ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனமும் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்தத் தேர்வு வெறும் தகுதித் தேர்வு மட்டுமே. ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க புதிய நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதுதொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி தலைமையிலான இந்தக் குழுவில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி, பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்படும் ஆசிரியர் தேர்வு நடைமுறையை ஆராய்ந்த பிறகு இந்தக் குழு அரசுக்குப் பரிந்துரை அனுப்பியது.
அந்தப் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன் விவரம்:
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 100 மதிப்பெண் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.
பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் பட்டயத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு இவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் (உச்ச நீதிமன்ற வழக்கு முடியும்வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்).
பட்டதாரி ஆசிரியர்களுக்கு...ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 10 மதிப்பெண்ணும், இளநிலைப் பட்டம், பி.எட். பட்டங்களில் பெற்ற மதிப்பெண்ணுக்கு தலா 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை 12-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 6.60 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 
இந்தத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கவும், 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கவும் அக்டோபர் 14-ம் தேதி ஆசிரியர் தகுதி மறுதேர்வு நடத்தப்படுகிறது. 
இந்தத் தேர்வில் மொத்தம் 6.70 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

வெயிட்டேஜ் மதிப்பெண் பகிர்வு எப்படி?
இடைநிலை ஆசிரியர்களுக்கான
"வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):
பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (15):
90 சதவீதத்துக்கு மேல் ..................- 15 மதிப்பெண்
80 முதல் 90 சதவீதம் வரை.............-12
70 முதல் 80 சதவீதம் வரை.............- 9
60 முதல் 70 சதவீதம் வரை.............- 6
50 முதல் 60 சதவீதம் வரை.............- 3
ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (25)
70 சதவீதத்துக்கு மேல்..................- 25 மதிப்பெண்
50 முதல் 70 சதவீதம் வரை............- 20
ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
80 முதல் 90 சதவீதம் வரை............- 54
70 முதல் 80 சதவீதம் வரை............- 48
60 முதல் 70 சதவீதம் வரை............- 42
பட்டதாரி ஆசிரியர்களுக்கான
"வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):
பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (10)
90 சதவீதத்துக்கு மேல்..................- 10 மதிப்பெண்
80 முதல் 90 சதவீதம் வரை............- 8
70 முதல் 80 சதவீதம் வரை............- 6
60 முதல் 70 சதவீதம் வரை............- 4
50 முதல் 60 சதவீதம் வரை............- 2
இளநிலைப் பட்டப் படிப்பு (15)
70 சதவீதத்துக்கும் மேல்................- 15
50 முதல் 70 சதவீதம் வரை............- 12
50 சதவீதத்துக்கும் கீழே................- 10
பி.எட். படிப்பு (15)
70 சதவீதத்துக்கும் மேல்................- 15
50 முதல் 70 சதவீதம் வரை............- 12
ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
80 முதல் 90 சதவீதம் வரை............- 54
70 முதல் 80 சதவீதம் வரை............- 48
60 முதல் 70 சதவீதம் வரை............- 42

ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் ஆன்லைனில் பதிவேற்றம்

தொடக்கக் கல்வித் துறையில் கல்வி மேலாண்மைத் தகவல் முறையின் (EMIS) ஓர் அங்கமான ஆசிரியர் தன்விவரங்களை (Teachers Profile) ஆன்லைனில் பதிவேற்றுவதற்காக மாவட்டக் கருத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நேற்று (28.01.14) சென்னையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்திற்கு இருவர் வீதம் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே ஆஃப்லைனில் பதிவு செய்த விவரங்களும் பள்ளிகளுக்கான DISE விவரங்களும் அரசு இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர்களின் தற்போதைய அடிப்படை விவரங்கள் அனைத்தும் அந்தந்த ஒன்றியங்களில் ஆன்லைனில் பதிவிட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, பணிப்பதிவேட்டிலுள்ள அனைத்துப் பதிவுகளும் பதிவிடப்படவுள்ளன. முதற்கட்டமாக அடிப்படை விவரங்களையும் புகைப்படத்தையும் தரவேற்றும் பணி பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.

ஏற்கனவே பள்ளிகள் குறித்த DISE விவரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. அதில் e-ServiceRegister என்னும் பக்கத்தில் ஆசிரியர்களின் அடிப்படை விவரங்களான பெயர் பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, மொழி, இனம், பதவி உயர்வு, சம்பளம், வீட்டு முகவரி, இரத்த வகை, அங்க மச்ச அடையாளங்கள், புகைப்படம், மெயில் முகவரி, செல்பேசி எண், இருசக்கர நாற்சக்கர ஓட்டுநர் உரிம எண், PAN கார்டு எண், போன்றவை தற்போது பதியப்படுகின்றன.

பணிப்பதிவேட்டில் பதியும் அனைத்து விவரங்களும் விடுப்பு, சரண்டர் போன்ற விவரங்களும் TPF, CPS, SPF, HF, பணிக்கொடை போன்றவற்றுக்கான வாரிசு நியமனம், ஆதார் எண் போன்றவையும் அடுத்த கட்டப் பணியின் போது பதிவேற்றப்பட உள்ளன.

சம்பளக் கமிஷன் ஊதிய நிர்ணயம், ஓய்வுக் காலப் பயன்கள், மாநிலக் கணக்காயருக்குக் கருத்துரு அனுப்புதல், ஓய்வூதிய நிர்ணயம், பதவி உயர்வு, மாவட்ட மாறுதல், முன்னுரிமைப் பட்டியல், வாரிசு நியமனம் போன்ற அனைத்தையும் எளிதில் தெளிவாக முடிக்க e-ServiceRegister உதவிகரமாக இருக்கும் என்பதால் இம்முறையை மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம். மேலும் அலுவலகத்தில் பணிப்பதிவேடு சிதிலமடைந்தாலோ, வெள்ளம், தீ, இடிபாடு போன்றவற்றால் பாழடைந்தாலோ காணாமல் போய்விட்டாலோ இனி கவலைப்படத் தேவையில்லை.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாக்கீது!இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கிட உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) மிகச் சரியான வழிகாட்டுதலை அளித்துள்ளது.






சமூக நீதிக்கு எதிரான அணுகுமுறையால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர், சிறுபான்மையினர், பெண்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிக்கான இடங்கள் நிரப்பப்படாத ஒரு கொடுமை நிகழ்த்தப்பட்டுள்ளது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் (National Commission of Scheduled castes) தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஆசிரியர் தேர்வு ஆணையத்திற்கு அனுப்பியுள்ள 23.1.2014 நாளிட்ட கடிதத்தில் 
இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் மதிப்பெண் தளர்வு வழங்க வாய்ப்பு அளிக்கத் தவறியதைச் சுட்டிக் காட்டி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கிட உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தேர் வாணையத்தின் செயல்பாடு தன்னிச்சையானது - அநீதியானது - சட்ட விரோதமானது - இடஒதுக் கீடுக்கு எதிரானது (Arbitrary, Unjust, Unlawful and Against the Reservation Policy) 
என்று கடினமான பதங்களையும் பயன்படுத்தியுள்ளது. அத்தோடு தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையம் நிறுத்திக் கொள்ளவில்லை; இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கத் தவறிய அதிகாரிகள்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு எண் 4இன் கீழ் நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தியுள்ளது.

இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குத் தகுதி மதிப்பெண்களில் தளர்வு காட்டப்பட வேண்டும்.

ஆந்திரா, கேரளம், ஒரிசா, அஸ்லாம், பீகார் மாநிலங்களில் அத்தகு முறை பின்பற்றப்பட்டுள்ளது. குறிப்பாக ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முன்னேறிய ஜாதியினருக்கு 60 மதிப்பெண்கள், பிற்படுத்தப்பட் டோருக்கு 50 மதிப்பெண்கள், தாழ்த்தப்பட்டோருக்கு 40 மதிப்பெண்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலும் பிடிவாதமும் காட்டாமல், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக் குரிய தளர்வு மதிப்பெண் அடிப்படையில் ஏற்கெனவே தேர்வு எழுதியவர்களைத் தேர்வு செய்யுமாறு வலியுறுத் துகிறோம்.

ஆசிரியர் தேர்வு ஆணையம் இனி நடத்தவிருக்கும் தேர்வுகளை இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தளர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

அனைவருக்குமே வாய்ப்பு அளிக்க வாய்ப்பு உண்டே!

பேராசிரியர் முத்துக்குமரன் தலைமையிலான கல்விக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற ரீதியில் செயல்பட்டால் ஆசிரியர் பயிற்சி பெற்று வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் அத்தனை ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் எளிதாகக் கிடைத்து விடுமே! இவற்றைப் பற்றி எல்லாம் தமிழ்நாடு அரசு சிந்திக்க வேண்டும்.

வேலையில்லாதாருக்கு வேலை வாய்ப்பு அளிப்பது என்பதும் ஓர் அரசின் அடிப்படை கடமை என்பதையும் நினைவூட்டுகிறோம். தமிழ்நாடு அரசு செயல்படுமாக!

பள்ளிகளில் சுற்றுசூழல் மன்றம்; அரசு ஒதுக்கியது ரூ. 80 லட்சம்

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றம் நடத்த, மாவட்டத்திற்கு தலா 2.50 லட்சம் ரூபாய் வீதம், 80 லட்சம் ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், சுற்றுச்சூழல் மன்றம் நடத்த, தலா 100 பள்ளிகள் (உயர்நிலை மேல்நிலை) ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பள்ளியிலும், தலா 50 மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு, பசுமை தினம் கொண்டாடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, புகையிலை இல்லாத பள்ளி வளாகத்தை உருவாக்குதல், மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி போட்டிகள் நடத்தி, ஒருங்கிணைப்பாளர்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வருகின்றனர். இதற்கான செலவுகளுக்கு தலா ஒரு பள்ளிக்கு 2,500 ரூபாய் என, ஒவ்வொரு மாவட்டத்துக்கும், தலா 2.50 லட்சம் ரூபாய் வீதம், 32 மாவட்டத்திற்கு 80 லட்சம் ரூபாய் காசோலையை , பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனுப்பி உள்ளார்.

சான்றிதழ்களின் உண்மை தன்மையை சரிபார்க்க 14 சிறப்பு குழுக்கள்: தேர்வு துறை ஏற்பாடு

அரசு பணிகளில், ஒருவர் சேர்ந்ததும், அவரின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படும். சம்பந்தப்பட்ட துறைகள், 'சான்றிதழ்கள் உண்மையானது தான்' என, அத்தாட்சி கொடுத்த பின் தான், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர், பணி நிரந்தரம் செய்யப்படுவார். அந்த வகையில், அரசு பணியில் சேரும் அனைத்து வகை ஊழியர்களின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, ஆசிரியர் கல்வி டிப்ளமோ ஆகிய சான்றிதழ்கள், தேர்வுத் துறைக்கு அனுப்பப்படும். 
இவற்றை சரிபார்த்து, உடனுக்குடன், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புவதில், தேக்கநிலை இருந்து வருகிறது. இதனால், பல ஆயிரக்கணக்கான ஊழியர், ஆசிரியர், பணி நிரந்தரம் செய்யப்படுவது, தள்ளிப் போகிறது. இந்த பிரச்னையைத் தீர்க்க, 14 சிறப்பு குழுக்களை, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், நியமித்து உள்ளார். பிளஸ் 2 தனித் தேர்வுப் பணிகளை, தேர்வுத் துறை இயக்குனரக ஊழியர்கள் பார்த்து வந்தனர். பல பணிகள், கம்ப்யூட்டர் மூலம் மேற்கொள்வதால், பணி பளு, சற்று குறைந்துள்ளது. இதனால், பிளஸ் 2 பணியை, சென்னை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்திடம் ஒப்படைத்துவிட்டு, இயக்குனரக ஊழியர்களைக் கொண்டு, சிறப்பு குழுக்களை, இயக்குனர் அமைத்துள்ளார்.

ஒவ்வொரு பிரிவிலும், மூன்று பேர் இருப்பர். தேங்கியுள்ள சான்றிதழ்கள், உடனுக்குடன் சரிபார்க்கப்பட்டு, ஓரிரு மாதங்களில், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு, அனுப்பி வைக்கப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனவரி 30: காந்தி நினைவு நாள் - சிறப்பு பகிர்வு

இன்றைக்கு காந்தியின் நினைவு நாள். அவரைக்கொன்ற கோட்சே இங்கே பலருக்கு நாயகன் ! ஜெர்மனியில் ஹிட்லர் பற்றி பேசினால் ஒரு அருவருப்பான பார்வை கண்டிப்பாக கிடைக்கும். நம்மூரில்தான் கோட்சே ஒரு ஈடில்லாத நாயகன் போல கொண்டாடப்படுகிறான்.
காந்தி மதத்தின் அடிப்படையில் தன்னுடைய அரசியலை கட்டமைத்தார் என்பது பொதுவாக சொல்லப்படுகிற கருத்து, அதே சமயம் ஒரு கேள்வியை பலபேர் எழுப்பிக்கொள்வதே இல்லை. காந்தியை ஏன் அப்புறம் மூன்று முறை மதவாத சக்திகள் கொல்ல முயற்சி செய்தார்கள் ? காந்தியை இந்து மத துரோகி என்றும் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள் ? கோயில் நுழைவு போராட்டங்களை ஏன் சங்கராச்சாரியார் முதலியோரின் எதிர்ப்புகளை மீறி அவரும், அவரின் தொண்டர்களும் முன்னெடுத்தார்கள் ?
‘என் ராமன் அயோத்தி ராமனில்லை ‘ என்று உறுதியாக காந்தியால் சொல்ல முடிந்தது. கோயில்கள் விபச்சார விடுதிகளாக இருக்கின்றன என்று வன்மையாக கண்டிக்கிற பண்பு அவரிடம் இருந்தது. கோயில்களுக்கு போவதை பெரும்பாலும் தவிர்த்தே இருந்திருக்கிறார் அவர் ; மத ஆச்சாரியர்களை ஒதுக்கியே வைத்திருந்தார் அவர். மதத்துக்குள் இருந்து வெறுப்பரசியலை எதிர்கொள்ள வேண்டும் என்பது அவரின் நிலைப்பாடு
எல்லா மதத்தின் நல்ல பண்புகளை இணைத்துக்கொண்டு நகரவேண்டும் என்ற காந்தி அகில பாரத சாஹித்ய பரிஷத் கூட்டத்தில் விடுதலைக்கு பதினாறு ஆண்டுகள் முன்னர் பேசியதை குறிப்பிடலாம். "நான் இந்த நாட்டின் சர்வாதிகாரி ஆனால் வெறுப்பை விதைக்கிற வகுப்புவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டுகிற எல்லா வகையான எழுத்துகள் மற்றும் பேச்சுகளை தடைசெய்வேன் !" என்று காந்தி பேசினார். பெரும்பான்மையினரின் தீவிரவாதம் அவர்களுக்கு அதிகாரத்தையும்,போதையையும் தருகிறது என்று குறித்து அதை தொடர்ந்து எதிர்ப்பேன் என்று செயலாற்றினார் அவர்.
அதேசமயம் சிறுபான்மையினரின் மதவாதத்தை பற்றிய புரிதலும் அவருக்கு இருக்கவே செய்தது. "இந்துக்கள் மற்ற மதத்தவரை கொல்வதை செய்வார்கள் என்றால் அவர்கள் இந்து தர்மத்தை  கொன்றவர்கள் ; அதே போல மற்ற மதத்தவர் மீது வன்முறையை கைக்கொள்ளும் இஸ்லாமியர்களும் இஸ்லாமுக்கு எதிரானவர்களே !" என்று காந்தி பதிவு செய்தார். ஜின்னாவின் மதவெறி அரசியல் இஸ்லாமியமற்றது என்றும் சாடினார் அவர்.
இந்தியாவும், பாகிஸ்தானும் பிரியக்கூடாது என்று அழுத்தி சொன்ன காந்தியே வெள்ளையர்களின் பிரித்தாளும் கொள்கை, ஜின்னாவின் மதவாத அரசியல், காங்கிரஸ் மதவாதத்தை எதிர்கொள்வதில் காட்டிய அசட்டை,கட்சிக்குள்ளேயே இருந்த வலதுசாரிகள்,பதவி கிடைத்தால் போதும் என நகர்ந்த தலைவர்கள் என்று எல்லாமும் சேர்ந்து நிற்க நாட்டை பிரிக்க ஒத்துக்கொண்டார். வன்முறைகள் பெருமளவில் வெடிக்கும் ஒரே தாயின் கருவுக்குள் பிள்ளைகள் வெட்டிக்கொண்டு
சாவதை போல இங்கே மரணங்கள் நிகழும் என்று எச்சரித்தார்.
காந்தியின் வித்தியாசமான ஆளுமையையோ ; அவரின் அடிப்படை நேர்மையையோ, எளிய மக்களுக்காக குரல் கொடுக்கும் தன்மையையோ சந்தேகிக்க முடியாது. காந்தி ஒரு பழமைவாதியுமல்ல, முற்போக்குவாதியுமல்ல. தன்னளவில் பல முரண்களைக் கொண்டவர் என்றாலும், விடாப்பிடியாகப் பழமையைப் பேணவோ, புதுமையைக் காக்கவோ முனையும் அளவுக்கு அரை குறையானவரோ, தன்னிலிருந்து அந்நியப்பட்ட மனிதரோ அல்ல என்று நந்தி சொல்கிற அளவுக்கு வெறுப்பை உண்டு செய்யும் போக்கை காந்தி தயவு தாட்சண்யம் இல்லாமல் நிராகரித்தார். ‘காந்தி இருக்கும் வரை ஹிந்து தேசம்
சாத்தியமில்லை, இருப்பதும் இஸ்லாமியர்களுக்கு போய் விடும் என்று நம்பியது ஆர்.எஸ்.எஸ். முதலிய ஹிந்து மதவாத அமைப்புகள்.
இஸ்லாமியர்களையும் மதித்து நடக்க வேண்டும் ,அவர்களை கொல்லாதீர்கள் என்று ஹிந்துக்களை நோக்கி காந்தி சொன்னார். "ஏன் இதையே முஸ்லீம்களை நோக்கி சொல்லக்கூடாது?" என்று கேட்டார்கள் ஹிந்து மதவாதிகள். காந்தி வேறு மாதிரி நினைத்தார் ."சிறுபான்மையினரின் பயம் தாங்கள் சார்ந்திருக்கும் நாட்டில் சிறுபான்மை என்று உணர வைக்கப்படுகிற பொழுது எழுகிறது ; அவர்கள் அவ்வாறு உணர்கிற பொழுது இது தாங்கள் கனவு கண்ட தேசமில்லை என்று எண்ணுவார்கள் !" என்று அவர்களின் வலியை உணர்ந்தவராக பேசினார்.
”வெறுப்புக்கு வெறுப்பு தீர்வு கிடையாது. எல்லாரும் கண்ணுக்கு கண் என்று நகர்ந்தால் எல்லாரும் குருடாகத்தான் வேண்டும். ” சிறுபான்மையினர் இப்படி இயங்குவதன் பின்னர் இருக்கும் வெறுப்பை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது; பெரும்பான்மையினரை மிருகமாக்கும் இதை தேசியம் என்று சொல்லும் குழுவை நோக்கி வேகமாக எதிர்த்து இயங்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.
வங்கம்,பீகார்,டெல்லி என்று எங்கெல்லாம் வன்முறைகள் வெடித்தனவோ அங்கெல்லாம் வெறுங்காலோடு ஒரே ஒரு ஜீவன் அமைதிக்காக நடந்தது. மதவாதத்தை எதிர்த்து பிரார்த்தனை செய்யுங்கள், அமைதி காத்திருங்கள் என்று மட்டும் சொல்லி ஒரு மனிதனால் அமைதியை மீட்க முடிந்தது என்பது இன்றைக்கு ஆச்சரியம் தரலாம். ஐம்பத்தைந்து ஆயிரம் ராணுவத்தால் கொண்டுவர முடியாத அமைதியை காந்தி கொண்டு வந்தார் என்று சிலாகித்தார்கள் ஆங்கிலேயர்கள் !
“டெல்லி மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் நடைபெற்ற எண்ணற்ற கொலைகளின் பின்னணியாக ஆர்.எஸ்.எஸ் இருந்தது எல்லோரும் அறிந்த உண்மை.. ” என்று காந்தி சொன்ன பொழுது இடைமறித்து ஒருவர் சொன்னார்:  ‘ (ஆனால்) ‘வா’வில் உள்ள அகதி முகாமில் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் செய்த சேவை குறிப்பிடத்தக்கது. ஒழுங்கு, தைரியம், கடும் பணி செய்யும் திறன் ஆகியவற்றை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.’ இதற்குக் காந்தி, ‘ஆனால் ஒன்றை மறந்துவிடாதீர்கள். ஹிட்லரின் நாசிகளும், முசோலினியின் பாசிஸ்டுகளும் கூடத்தான் இந்தப் பண்புகளைக் கொண்டிருந்தார்கள்’ என்று பதிலளித்தார். ‘எதேச்சதிகாரப் பார்வை கொண்ட வகுப்புவாத அமைப்பு’ என ஆர். எஸ். எஸ்சை அவர் வரையறுத்தார்.”
பாகிஸ்தானுக்கு ஐம்பத்தி ஐந்து கோடி தரவேண்டும் என்றும், கலவரங்கள் டெல்லியில் ஓய வேண்டும் என்றும் காந்தி இறுதி உண்ணாவிரதம் இருந்தது ,”காந்தி செத்து மடியட்டும் !” என்று கோஷம் எழுப்புகிற அளவுக்கு வெறுப்பாக மாறி இருந்தது. காந்தியின் நெஞ்சுக்கு நேராக துப்பாக்கி நிற்கிறது என்று காந்திக்கு தெரியும் ; இப்படி பேசுவதற்காக, இந்தியா என்கிற கருத்தாக்கத்தை நம்பி இந்தியா வந்திருக்கும் எண்ணற்ற இஸ்லாமியர்களை காக்க தான் கொடுக்கும் குரல் தன் மூச்சை நிறுத்திவிடும் என்று அவருக்கு தெரிந்தே இருந்தது. “போய்விட்டு போகிறது ! நான் நம்பும் இறைவன் என் பணி முடிந்தது என்று எண்ணிக்கொண்டால் என்னை அழைத்துக்கொள்வான்” என்று அம்புஜம் அம்மாளுக்கு கடிதம் எழுதினார்.
பலபேர் ஏவப்பட்டு இறுதியில் கோட்சே கையால் அது நிகழ்ந்தது. கையில் இஸ்லாமியரின் பெயரை பச்சை குத்தி வன்முறையை தூண்டி நாட்டை ரத்த பூமியாக்க எண்ணிய அந்த மிருகத்தைதான் இங்கே நாயகனாக கொண்டாடுகிறார்கள் பலபேர். அப்பொழுது “காந்தியை கொன்றது ஒரு ஹிந்து !” என்று அழுத்தி சொன்னது ஊடகங்கள். இருந்தாலும் கோட்சேவை அப்படியே நாராயண் ஆப்தேவோடு தூக்கில் போடவில்லை அரசு. ஒழுங்காக வழக்கு விசாரணைகள் நடந்து, அவர்களுக்கு என்று வக்கீல் அமர்த்தப்பட்டு, ஜனாதிபதி வரை கருணை மனு போய் பின்னரே அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
காந்தி இறந்ததும் பட்டாசு வெடித்து, இனிப்புகள் கொடுத்து கொண்டாடிக்கொண்டார்கள் சங் பரிவார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலேயே இருந்த கோட்சே அப்பொழுது தான் அதில் உறுப்பினரில்லை என்றுசொன்னது உடனிருந்தவர்களை காப்பாற்றவே. காந்தியை கொல்ல திட்டம் தீட்டிக்கொடுத்த சவார்க்கரின் படத்தை பி ஜே பி அரசு நாடாளுமன்றத்தில் வைத்தது ; இந்த கண் கொள்ளா கட்சி வேறு எந்த நாட்டிலும் நிகழாது.
உங்களுக்கு காந்தியோடு ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம், ஆனால், மதவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்து தன்னுயிரை பற்றி கவலைப்படாமல் வெறுப்பரசியலை தணிக்க அயராது செயலாற்றிய அவரை அந்த ஒரு புள்ளியில் நீங்கள் எல்லாரும் ஏற்றுக்கொள்ள முடியும். பெரியார் அதனால் தான் காந்திஸ்தான் என்று இந்தியாவுக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று எழுதினார்.
பாகிஸ்தானில் ஹிந்துக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டதன் வலியோடு இங்கே சிக்கல்களை அணுகிய படேல் மற்றும் இஸ்லாமியர்களை இந்தியர்கள் என்று பார்க்க வேண்டும் என்ற நேரு ஆகிய இருவரையும் காந்தியின் மரணம்
உலுக்கியது. எவ்வளவு ஆபத்தானவர்கள் இந்து மதவாதிகள் என்று உணர்ந்தார்கள். இந்தியா இந்து தேசமாகாமல் தப்பியது !
நேரு காந்தியின் அந்த பன்முகத்தன்மையை முன்னோக்கி எடுத்து சென்றார். தேசம் எல்லா மக்களுக்குமான தேசமாக மாறியது. காந்தியார் சாந்தியடைய மதவாதத்தை புறக்கணிக்க வேண்டியது அவசியம் ; வெறுப்பை தாண்டி மனிதத்தை நோக்கி நம்மை செலுத்த வேண்டியது முக்கியம். அடையாள அரசியல்களை தாண்டி நம்மின் பன்முகத்தன்மையை காக்க ஒன்றிணைந்து நகரவேண்டும். ஆர்.எஸ்.எஸ் மாதிரியான அமைப்புகள், இந்தியாவை ஜனநாயகத்தின் மூலமே மீண்டும் வெறுப்பை தூண்டச் செய்யலாம் என்று வேகமாக செயலாற்றிக்கொண்டு இருக்கும் இக்காலத்தில், காந்தி இன்றைய சூழலில் அதிகம் அவசியமாக இருக்கிறார்.

மோசமான கல்வித்தரம் உலகக் கல்வி குறித்து யுனெஸ்கோ எச்சரிக்கை


பல நாடுகளில் மோசமான கல்வித்தரம் காரணமாக சிறார்கள் பாதிப்பு என்கிறது ஐ.நா அமைப்பின் அறிக்கை

பள்ளி மாணவர்களுக்கு புத்தகத்துக்கு பதில் டேப்லட் கல்வி முறை


பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான 'டேப்லட் கல்விமுறையை' அறிமுகப்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் டிசிசி நிறுவனம் (தி கரிக்குலம் கம்பெனி) இணைந்து பள்ளி மாணவர்களுக்கு, புத்தகத்திற்கு பதில் 'டேப்லட்டில் கல்வி கற்கும் முறையை' அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கும் நிகழ்ச்சி சென்னை பிரிட்டிஷ் கவுன்சிலில் நேற்று நடைபெற்றது. இதில், பிரிட்டிஷ் கவுன்சில் தென்னிந்திய இயக்குனர் பால் செல்லர்ஸ், இணை இயக்குனர் நிருபா பெர்னான்டஸ், டிசிசி நிறுவன நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உஜ்வல் சிங், இணை நிறுவனர் ஜனகா புஷ்பானந்தம், ஸ்ரீ பாலவித்யாலயா பள்ளி தாளாளர் சந்தானலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பிரிட்டிஷ் கவுன்சில் தென்னிந்திய இயக்குனர் பால் செல்லர்ஸ் பேசுகையில், " ஆங்கில கல்வி வளர்ச்சியில் பிரிட்டிஷ் கவுன்சில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், டிடிசி நிறுவனத்துடன் இணைந்து பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவை வளர்க்கவும், புத்தக சுமையை குறைக்கவும் இந்த டேப்லட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில்,ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல், கணக்கு போன்ற பாடங்களை படிக்க முடியும். சென்னையில் முதல் முறையாக பெரம்பூரில் உள்ள ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளியில் இந்த டேப்லட் கல்வி முறை தொடங்கப்பட்டுள்ளது" என்றார். டிசிசி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உஜ்வல் சிங் பேசுகையில், " மாணவர்களின் சுமையை குறைப்பதற்கும், கல்வியை எளிதாக்கவும் இந்த டேப்லட் கல்விமுறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த டேப்லட்டின் விலை ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை. பள்ளியில் மாணவர்களுக்கு டேப்லட்டும், ஆசிரியருக்கு மடிக்கணிணியும் வழங்கப்படும். மடிக்கணிணி மூலம் ஆசிரியர் மாணவர்களின் டேப்லட்டை கட்டுப்படுத்தலாம். பள்ளியில் இணைய இணைப்பு வழங்கப்படும். அதில் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் அனுமதிக்கும் இணைய தளங்களையே பார்க்க முடியும். அதே வேளையில் வீட்டிலும் ஆப்-லைன் மூலமாக பாடங்களை படிக்கலாம். சென்னையை சேர்ந்த 50 பள்ளிகள் அடுத்த ஆண்டு முதல் தங்கள் பள்ளிகளில் இந்த டேப்லட் கல்விமுறையை அமல்படுத்த எங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்" என்றார். நிகழ்ச்சியின் இறுதியில், டேப்லட்டை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியை ப்ரீத்தி ஆகியோர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

29/01/2014

2013-2014 MODIFIED Income Tax - IT FORMS XlsxSheet FORMATE மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட பயன்படுத்துவதற்கு எளிதான முறையில்(user friendly income tax excel file)

நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் MPHIL க்கான ஊக்க ஊதியம் உண்டு!

MPHIL INCENTIVE ORDER COPY DEE .....
பட்டதாரி ஆசிரியருக்கு MPHIL க்கான ஊக்க ஊதியம்
பாலக்கோடு கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் செயல் முறை கடிதம்

30.01.2014 நாளை இரண்டு நிமிட மௌனமும் தீண்டாமைக்கு எதிரான உறுதி மொழியும் எடுக்க தொடக்கக்கல்வித் துறை உத்தரவு

30.01.2014 நாளை காலை 11.00 மணிமுதல் 11.02 வரை அரசு அலுவலகங்கள் / நிறுவனங்களில் மௌனமும் அதைத்தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழியும் எடுக்க அரசு உத்தரவ


நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 30.01.2014 அன்று காலை 11.00 மணிமுதல் 11.02 வரை அரசு அலுவலகங்கள் / நிறுவனங்களில் மௌனமும் அதைத்தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழியும் எடுக்க அரசு உத்தரவு.

புது பான் கார்ட் பெற இனி 105 ருபாய் கட்டணம்



சுற்றுச்சூழல் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு பெற கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.இது தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாகப் பணியாற்றிவரும் கல்வி நிறுவனங்கள்,தனி நபர், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் விருது வழங்கிக் கவுரவிக்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது. இந்த விருதைப் பெற தகுதியுள்ள கல்வி நிறுவனங்கள், தனி நபர் உள்ளிட்டோர் விண்ணப்பத்தை இயக்குநர், சுற்றுச்சூழல் அலுவலகம், தரைதளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை என்ற முகவரியில் பெற்று, பிப்,28-க்குள் அனுப்ப வேண்டும்

27/01/2014

"18 வயது நிரம்பாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்யும் பெற்றோர்கள் குற்றவாளிகள்"

"18 வயது நிரம்பாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் குற்றவாளிகள்" என நீதிபதி சந்திரன் பேசினார்.

தேசிய பெண்குழந்தைகள் தின விழா ஆண்டு தோறும் ஜன., 24 ல் கொண்டாடப்பட்டு வருகிறது. 

பெண் குழந்தைகள் பாதுகாப்பு, அவர்களுக்கு எதிரான செயல்கள் தடுப்பது குறித்து உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி சந்திரன் பேசுகையில் "வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் மூலம் பெண்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். 18 வயது நிரம்பாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் குற்றவாளிகள். 18 வயது நிரம்பிய பின்னர் அவர்களது மனசும், வயதும், பக்குவம் அடைந்த பின்னரே பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க வேண்டும்" என அவர் பேசினார்.

சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்காக நாடு முழுவதும் 3000 ஏடிஎம் தொடங்குகிறது அஞ்சல் துறை

அஞ்சலகத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், தனது வருவாயை அதிகரிக்க அஞ்சல் துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியால், வங்கி சேவையின் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், தனியார் துறையில் புதிய வங்கி உரிமம் வழங்க உள்ளதாக மத்திய அரசு முன்பு அறிவித்திருந்தது. அப்போது, அஞ்சல் துறையும் வங்கி சேவையில் ஈடுபட விருப்பம் தெரிவித்திருந்தது. நாடு முழுவதும் 1.55 லட்சம் அஞ்சல் அலுவலகங்களில் வங்கி கிளை துவக்க முடிவு செய்தது. ஆனால், அஞ்சல் துறையின் இந்த முயற்சிக்கு மத்திய நிதி அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது.

கடந்த 2012 - 13ம் ஆண்டு நிலவரப்படி, இந்திய அஞ்சலக சேமிப்பு கணக்கில் ரூ.6 லட்சம் கோடி டெபாசிட் உள்ளது. இது பொதுத்துறையை சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கியிடம் உள்ள டெபாசிட் டில் 50 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கியில் உள்ள டெபாசிட்டை விட இரண்டு மடங்கு அதிகம். மேலும், வங்கி சார்ந்த சேவைகளான தொலைபேசி, மின்சார கட்டணம் வசூலிப்பதிலும் அஞ்சல்துறை ஈடுபட்டுள்ளது. எனவே, வங்கி வர்த்தகத்தில் இந்திய அஞ்சல் துறை களம் இறங்குவதால், குக்கிராமங்களில் உள்ள மக்களுக்கும் வங்கி சேவை எளிதாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. வர்த்தக ரீதியாக வங்கிகளை துவக்குவதற்கு அஞ்சல் துறை விண்ணப்பத்துக்கு இன்னும் அனுமதி கிடைக்காத நிலையில், தன்னிடம் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் வசதியை ஏற்படுத்த அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது.

வங்கி கிளைகள் இல்லாத கிராமங்களிலும் அஞ்சலக கிளைகள் உள்ளன. இதனால், வங்கி துறையில் ஈடுபடுவது அஞ்சல் துறை க்கு சாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைப்பு வசதி வங்கி கிளைகளில், மின்னணு தொழில் நுட்ப ஒருங்கிணைப்பு வசதிகள் உள்ளது போன்று அஞ்சலகத்திலும் இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதுகுறித்து அஞ்சல் துறை செயலாளர் பத்மினி கோபிநாத் கூறியதாவது:அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் வசதிக்காக, நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 2015ம் ஆண்டுக்குள் 3000 ஏடிஎம்கள் மற்றும் 1.35 லட்சம் மைக்ரோ ஏடிஎம்கள் நிறுவ அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது. இதில் இந்த ஆண்டில் மட்டும் 1000 ஏடிஎம்கள் துவக்கப்படும். 

அடுத்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 3000 ஏடிஎம்களாக உயர்த்தப்படும். அஞ்சலகங்களில் 26 கோடி பேர் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இவர்கள் இந்த ஏடிஎம்களை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், ஏடிஎம் வசதி ஏற்படுத்திய பிறகு ஆறு மாதங்களில், இந்தியா முழுவதும் எந்த ஏடிஎம்மிலும் பயன்படுத்துவதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கியிடம் பெறமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது. முதல் கட்டமாக பிப்ரவரி 5ம் தேதிக்குள் புதுடெல்லி, சென்னை மற்றும் பெங்களூரில் ஏடிஎம் நிறுவப்படும். 
இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த திட்டம் இன்று சோதனை அடிப்படையில் துவக்கப்படும் என்றும் மார்ச் இறுதியில் அதிகார பூர்வமாக துவக்கப் படும் எனவும் தெரிகிறது.

மதிப்பெண் சான்றிதழ் தன்மை : தலைமை ஆசிரியருக்கு எச்சரிக்கை

மதிப்பெண் பட்டியலில், உண்மை தன்மை அறிவதில், விதி மீறி செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வித் துறை பணியாளர்களை, அரசு தேர்வுத் துறை எச்சரித்துள்ளது. போலி மதிப்பெண் சான்றிதழ்களை காட்டி, சிலர், உயர்கல்வி மற்றும் அரசு பணியில் சேர்ந்து விடுகின்றனர். இதை தவிர்க்க, அவர்களின் பிளஸ் 2, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் அரசு தேர்வுகள் துறைக்கு அனுப்பப்பட்டு, உண்மைத் தன்மை சான்று பெறப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ்களை, அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பும்போது, வகுப்புக்கு தகுந்தாற்போல், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் மூலம், அனுப்ப வேண்டும். ஆனால், சில பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வித் துறை பணியாளர்கள், நேரடியாக, அரசு தேர்வுத் துறைக்கு சான்றிதழ்களை அனுப்பிவைத்து, உண்மைத் தன்மை சான்றை பெற்று வருகின்றனர். இதனால், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, விதிமுறையை மீறி, மதிப்பெண் சான்றிதழ்களை நேரடியாக அனுப்பி வைக்க கூடாது என, தலைமை ஆசிரியர்கள், கல்வித் துறை பணியாளர்களை, அரசு தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் எச்சரித்துள்ளார்.

எம்பில் படித்த ஆசிரியருக்கு 3வது ஊக்க தொகை வழங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.நாகை மாவட்டம் வேதராண்யம் தாலுக்காவை சேர்ந்த ஆசிரியர் மதியழகன் சார்பாக வக்கீல் காசிநாதபாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் 

செய்தார். அதில் ஆசிரியர் மதியழகன் கூறியிருப்பதாவது:நான் நாகை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் ஆசிரியர். எம்.ஏ. படித்த பிறகு எனக்கு ஒரு ஊக்க தொகையை அரசு வழங்கியது.இதன்பிறகு நான் பிஎட் படித்தேன். அதற்கு 2வது ஊக்க தொகை அரசு கொடுத்தது. இதை தொடர்ந்து நான் எம்பில் படித்து முடித்தேன். இதற்கு 3வது ஊக்க தொகை கேட்டு விண்ணப்பித்தேன். இதை அரசு தரவில்லை. 3வது ஊக்க தொகை கேட்டு பல முறை மனு கொடுத்தும் எந்த பலனும் ஏற்படவில்லை. 

இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம்தேதி மீண்டும் மனு கொடுத்தேன்.இந்த மனுவை பரிசீலனை செய்து,எனக்கு 3வது ஊக்க தொகை தர அரசுக்கு உத்தரவிட வேண்டும். அரசாணையின்படி எனக்கு 3வது ஊக்க தொகை தர வேண்டும். இதற்கு உயர்நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார்.இந்த வழக்கை நீதிபதி சுப்பையா விசாரித்து மனுதாரரின் மனுவை தமிழக அரசின் தொடக்க கல்வித்துறை இயக்குனர் பரிசீலனை செய்து 8வாரத்திற்குள் மனுதாரருக்கு 3வது ஊக்க தொகை தருவது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தமிழகத்தில் தள்ளாடும் கூட்டுறவு சங்கங்கள்


தமிழகத்தில் கூட்டுறவு கடன் சங்கங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. இனியும் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் அவற்றுக்கு மூடுவிழா நடத்துவதை தவிர வேறு வழியில்லை என கூட்டுறவாளர்கள் குமுறுகின்றனர். ஒரு கிராமத்தின் முன்னேற்றத்துக்கு ஒரு பள்ளிக்கூடம், ஒரு கூட்டுறவு வங்கி, ஒரு ஊராட்சி மன்றம் போதும் என்றார் நேரு. தமிழகம் முழுவதும் 4,526 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 23 மத்திய கூட்டுறவு வங்கிகள் உள்ளன. 1904ம் ஆண்டு இயற்றப்பட்ட கூட்டுறவு சட்டப்படி இந்தியாவின் முதல் கூட்டுறவு சங்கம் தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திரூரில் தான் தொடங்கப்பட்டது. 1934ம் ஆண்டு சட்டப்படி இது மாநில அரசின் பட்டியலுக்கு வந்தது. தொடர்ந்து 1961, 83ம்ஆண்டுகளில் சட்டங்கள் இயற்றப்பட்டன. சர்வதேச கூட்டுறவு மன்றத்தின் 7 தத்துவங்களை உலக நாடுகள் அங்கீகரித்து பின்பற்றுகின்றன. அவற்றின் முக்கிய அம்சமே சுயாட்சி மற்றும் சுதந்திரம். அது அரசாலும், அதிகாரிகளாலும் பறிக்கப்பட்டதாலேயே அவலநிலை ஏற்பட்டது என கூட்டுறவாளர்கள் அங்கலாய்க்கின்றனர். சுயமாக இயங்கிய கூட்டுறவு சங்கங்கள் ஒருகட்டத்தில் பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது கிராமக்கடன் அளவீட்டு குழு அமைக்கப்பட்டது. சங்கங்களின் கடன்பெறும் தகுதியை அதிகரிக்க அரசு பங்குகளை முதலீடு செய்ய வேண்டும் என அக்குழு பரிந்துரைத்தது. இது தான் அரசு அதிகாரம் கூட்டுறவில் மூக்கை நுழைக்க முதல் காரணம். அரசு முதலீடும், அதிகாரிகளின் குறுக்கீடும் வந்ததும் 1976ல் மக்களாட்சி நிர்வாகம் அதிரடியாக கலைக்கப்பட்டது. நீண்ட வனவாசத்துக்கு பின் 1996ல் தான் தேர்தல் நடந்தது. பின்னர் 2001ல் கலைப்பு, 2007, 2013ல் மீண்டும் தேர்தல் என மாறிமாறி நடந்தது. தற்போது சுமார் 100 சங்கங்கள் செயல்பட சிரமப்படும் நிலையில் உள்ளன. நலிவடைந்த கூட்டுறவு சங்கங்களை புனரமைக்க மத்திய அரசின் நிதித்துறை சார்பில் பேராசிரியர் வைத்தியநாதன் தலைமையில் 7 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அது 4.2.2005ல் அளித்த அறிக்கையில், 'அரசியல் குறுக்கீடு கூடாது. சுதந்திரமான தேர்தல் நடத்தி நிர்வாக குழுவை தேர்ந்தெடுக்கவேண்டும்' என்பன போன்ற பரிந்துரைகள் அடங்கியிருந்தன. மேலும், சங்கங்களின் நஷ்டம் குறித்து சிறப்பு தணிக்கை செய்து விவசாய கடன் தள்ளுபடி போன்றவற்றால் ஏற்பட்ட நஷ்டத்தை மத்திய அரசும், பொதுவிநியோகம் போன்ற திட்டங்களால் ஏற்பட்ட நஷ்டத்தை தமிழக அரசும், ஊழல் நடவடிக்கையால் ஏற்பட்ட நஷ்டத்தை அந்தந்த சங்கங்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கி, நபார்டு, மாநில அரசு ஆகியவை 3.1.2008ல் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டன. சிறப்பு தணிக்கை மூலம் கணக்கிடப்பட்ட 'புனர்வாழ்வு' நிதி ரூ.1600 கோடியில் 75 சதவீதத்தை முன்னதாகவும், 25 சதவீதத்தை நிர்வாகிகள் தேர்தலுக்கு பின்னும் சங்கங்களுக்கு வழங்குவதாக ஏற்பாடானது. ஆனாலும் பல வங்கிகளுக்கு இன்னமும் 75 சதவீத நிதி வந்து சேரவில்லை. இதேபோல் அரசால் தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.6800 கோடி விவசாய கடனை 5 தவணைகளில் 8 சதவீத வட்டியுடன் திருப்பி தருவதாக கூறியும் இன்னமும் பல சங்கங்களுக்கு வழங்கவில்லை. அடிக்கடி நிர்வாகத்தை கலைத்து அதிகாரிகளின் சர்வாதிகாரத்தின் கீழ் சங்கங்களை கொண்டுவந்தது, தள்ளுபடி மூலம் கடனை திருப்பிச்செலுத்தும் மனநிலையை சீரழித்தது, சட்டப்படியான கடன் வசூலுக்கு தடைவிதித்தது போன்றவற்றை கூட்டுறவு சங்கங்களின் வீழ்ச்சிக்கு காரணமாக பலரும் பட்டியலிடுகின்றனர். சங்கத்துக்கு கொடுக்கும் கடனுக்கு மத்திய வங்கி மாதந்தோறும் வட்டி வசூலிக்கிறது. சங்கமோ ஆண்டுக்காண்டு மட்டும் வட்டியை கணிக்கிறது. இதனால் அதிக நஷ்டத்தை சங்கம் சந்திக்கிறது. பொதுவிநியோக திட்டம் அரசுக்கு நற்பெயர், ஆனால் கூட்டுறவுக்கு நஷ்டக்கணக்கு என்கின்றனர் கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர். ''இதற்காக அரசு வழங்கும் கமிஷன் தொகை 14 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. 1 கிலோ அரிசிக்கு 45 பைசா, துவரம்பருப்புக்கு 50 பைசா, 1 லிட்டர் மண்ணெண்ணெய்க்கு 18 பைசா தான் இதுவரை கொடுக்கப்படுகிறது. சீனி விற்றால் சாக்கு தான் மிச்சம். அதையும் சங்கத்தின் நிர்வாகம் மூலம் விற்பனை செய்யாமல் தனிக்குழு அமைத்து விற்பதால் லாபமில்லை. ரூ.17க்கு விற்ற அரிசி சாக்கு தற்போது ரூ.8.80க்கும், ரூ.54க்கு விற்ற சீனி சாக்கு ரூ.48.05க்கும் விலை போகிறது. பொதுவிநியோக திட்டத்துக்கான செலவுத்தொகையை மானியமாக அரசு திருப்பி வழங்குவதாக ஏற்பாடு. ஆனால், கடுமையான தணிக்கை செய்து கணக்கு அனுப்பினாலும் 51 அல்லது 52 சதவீத தொகையையே மானியமாக அரசு வழங்குகிறது. வாடகை, ஊழியர் ஊதியம், கூலி என பலவித செலவுகள் 14 ஆண்டுகளில் ஏகமாக எகிறிவிட சங்கங்கள் சுலபமாக நஷ்டத்தை சந்திக்கின்றன'', என்கிறார் திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் தமிழ்செல்வன். கடந்த 2009ம் ஆண்டு நிலவரப்படி 1100 வீட்டு வசதி கடன் சங்கங்களில் உறுப்பினர் கடன் நிலுவை ரூ.2,500 கோடி. 500 நகர வங்கிகள் திவாலாகும் நிலை. இவற்றுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு. 17 பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களும் (ஆவின்) அதிக இழப்பை சந்திக்க அரசு மாதாமாதம் ரூ.17 கோடி அளித்து சரிவை தடுத்து நிறுத்தியது. மகாராஷ்டிரா, குஜராத், கேரளாவில் வணிக வங்கிக்கு நிகராக கூட்டுறவு சங்கங்கள் வளர்ந்துள்ளன. குஜராத் ஆனந்த் பால் உற்பத்தியாளர் சங்கமான அமுல் உலக மார்க்கெட்டில் உச்ச நிலையில் நின்று உபரி லாபத்தை ஈட்டிக்கொடுக்கிறது. கேரளாவில் கூட்டுறவு சங்கங்கள் இரும்பு கடை, சலூன், கல்லூரிகள் நடத்துகின்றன. திரைப்படங்களும் தயாரிக்கின்றன. இதற்கு உறுப்பினர் பங்களிப்பு அதிகம், அரசு தலையீடு கிடையாது என்பவையே காரணம். வைத்தியநாதன் குழு பரிந்துரையால் 60 சதவீத கூட்டுறவு சங்கங்கள் தப்பி பிழைத்தன. அரசும் தன் பங்குக்கு ஆதரித்தால் மீதியுள்ள சங்கங்கள் அழிவின் விளிம்பிலிருந்து மீளும் என கூட்டுறவாளர்கள் கருதுகின்றனர். எண்ணமும் வண்ணமும் ஏழு கூட்டுறவு சங்க கொடி வானவில்லின் 7 வண்ணங்களை கொண்டது. அதன் அடிப்படை தத்துவங்கள்: 1. தானாக முன்வந்து அனைவரும் உறுப்பினராகலாம். 2. உறுப்பினர்கள் கட்டுப்பாட்டில் மக்களாட்சி. 3. உறுப்பினர்களின் பொருளாதார பங்கு. 4. சுயாட்சி மற்றும் சுதந்திரம். 5. கூட்டுறவு கல்வி, பயிற்சி, தகவல்கள். 6. கூட்டுறவு நிறுவனங்களிடையே கூட்டுறவு. 7. சமுதாய நலனில் ஈடுபாடு. இந்த 7 தத்துவங்களும் சர்வதேச கூட்டுறவு மன்றத்தின் சார்பில் மான்செஸ்டரில் 1966 மற்றும் 1995ல் பிரகடனப்படுத்தப்பட்டு அனைத்து நாட்டு கூட்டுறவு இயக்கங்களாலும் அங்கீகரித்து பின்பற்றப்படுகிறது. இதற்கு உட்பட்டே கூட்டுறவு சட்டங்கள் இயற்றப்படவேண்டும்.

26/01/2014

Pay EB bill via ATM

வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள், ஏடிஎம் மையம் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள், ஏடிஎம் மையம் மூலம் மின்கட்டணம்செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்அறிவித்துள்ளது.

மின் நுகர்வோர்கள் காலவிரயம், அலைச்சல்ஆகியவைகளை குறைத்து சுலபமான முறையில் மின் கட்டணம் செலுத்ததமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கீழ்கண்முறைகளை அறிவித்துள்ளது. இணையதளம் மூலம் மின்கட்டணம்செலுத்தலாம், எந்த நேரமும் பணம் பெறும் ஏடிஎம் மையம் மூலம் செலுத்தலாம்,அஞ்சல் அலுவலகங்கள் மூலம் செலுத்தலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.கூடுதல் கட்டணம் இல்லாமல் (பாரத மாநில வங்கிகள் தவிர) மின்கட்டணம்செலுத்த தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், வங்கிகளிடம் ஒப்பந்தம்செய்துள்ளது. 

வங்கிகள் பெயர் விபரம்: 

ஆக்ஸிஸ்வங்கி, ஐசிஐசிஐ வங்கி,இந்தியன்வங்கி, சிட்டியூனியன்வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி,கனராவங்கி, கரூர் வைஸ்யா வங்கி, ஐடிபிஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா,ஹெச்டிஎஃப்சி வங்கி, பஞ்சாய் நேஷனல் வங்கி, ஸ்டேர் பாங்க் ஆஃப் இந்தியா,லெட்சுமி விலாஸ் வங்கி. தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி,தமிழ்நாடு மாநில கோ-ஆப்பரேட்டவ் வங்கி, ஃபெடரல்வங்கி, சென்ட்ரல் பாங்க்ஆஃப் இந்தியா மற்றும் அஞ்சலகம்

ஆவணங்கள் தொலைந்தால்… எப்படி திரும்பப் பெறுவது?

எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன்கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி எனஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும்தவிப்பதை நாம் பார்க்கலாம்.
அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்துஅழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதைஇங்கேதெரிந்துகொள்ளலாம்.
இன்ஷூரன்ஸ் பாலிசி! 

யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை. என்னென்ன ஆவணங்கள் தரவேண்டும்? முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில்நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம்செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.
எவ்வளவு கட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும்.
இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ்தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.
நடைமுறை:
நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டுஆவணங்கள் தருவார்கள்.
அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ளவேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போனவிவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்;
அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களைஇணைத்து தர வேண்டும். 

‪மதிப்பெண்பட்டியல்!

யாரை அணுகுவது..?
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம்செலுத்திய ரசீது.
எவ்வளவு கட்டணம்?
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு (+2) பட்டியல் ரூ.505.
கால வரையறை:
விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.
நடைமுறை:
காவல் துறையில் புகார் அளித்து ‘கண்டுபிடிக்க முடியவில்லை’ எனசான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம்விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம்வாங்க வேண்டும்.
அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்துமாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.
இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர்பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.
தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்குஅனுப்ப வேண்டும்.
பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்டபல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

ரேஷன் கார்டு!

யாரை அணுகுவது..?
கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்;
நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவிஆணையர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒருஅடையாள அட்டை
எவ்வளவு கட்டணம்?
புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.
கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.
நடைமுறை:
சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக்குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து தர வேண்டும்.
அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பிவைக்கப்படும்
‎டிரைவிங்லைசென்ஸ்!
யாரை அணுகுவது?
மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).
கால வரையறை:
விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.
நடைமுறை:
காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ்வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.

‎பான் கார்டு!

யாரை அணுகுவது?
பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லதுவருமான வரித்துறை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பாஸ்போர்ட் சைஸ் ‪‎புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும்முகவரிச் சான்று நகல்கள்.
எவ்வளவு கட்டணம்?
அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.
கால வரையறை:
விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.
நடைமுறை:
பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
பங்குச் சந்தை ஆவணம்!
யாரை அணுகுவது?
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர ‪‎வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோஎண்.
எவ்வளவு கட்டணம்?
தனியாக ‪#‎கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தைமதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை:
விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.
நடைமுறை:
முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும்.
இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்கவேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்குமுத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும்.
சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிடவலியுறுத்தும்.

‎கிரயப் பத்திரம்!

யாரை அணுகுவது..?
பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம்,யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரிபப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொருபக்கத்திற்கும் 20 ரூபாய்.
கால வரையறை:
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை:
கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார்அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும்.
தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்யவேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

‎டெபிட் கார்டு!

யாரை அணுகுவது..?
சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100.
கால வரையறை:
வங்கியைப் பொறுத்து ஓரிரு ‪‎நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.
நடைமுறை:
டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவைமையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியானபரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும்.
அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்திபுது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

‎மனைப்பட்டா!

யாரை அணுகுவது..?
வட்டாட்சியர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.20.
கால வரையறை:
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை:
முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும்.
அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய்ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல்பட்டா கிடைத்துவிடும்.

‎பாஸ்போர்ட்!

யாரை அணுகுவது..?
மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய்முத்திரைத்தாளில் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.4,000.
கால வரையறை:
இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்;
வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.
நடைமுறை:
பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார்அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும்.
20 ‪‎ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவுசெய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின்கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில்விண்ணப்பிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல்பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

கிரெடிட்கார்டு!

யாரை அணுகுவது?
நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).
கால வரையறை:
15 வேலை நாட்கள்.
நடைமுறை :
கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவைமையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.
தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால்பதினைந்து ‪‎வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பிவைத்துவிடுவார்கள்.
அடையாளச்‪‎சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

இணையதளத்தில் வருங்கால வைப்பு நிதியின் ஆண்டு கணக்கு விவரம்

வருங்கால வைப்பு நிதியின் ஆண்டு கணக்கு விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதனை நிறுவனங்கள் பதிவிறக்கம் செய்துதொழிலாளர்களுக்கு வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொழிலாளர் வைப்பு நிதி நிறுவன மண்டல அலுவலர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்டுள்ளசெய்திக் குறிப்பு:தொழிலாளர்களின் வைப்பு நிதி குறித்த ஆண்டு கணக்கு விவரங்கள் இதுவரைநிறுவனங்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்பட்டு வந்தன. அதை நிறுவனங்கள் தொழிலாளர்களுக்குவழங்கி வந்தன.தற்போது வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2012-2013 ஆம் ஆண்டு முதல்"எம்ப்ளாயர்இ-சேவா' என்ற இணையதளத்தில் ஆண்டு கணக்கு விவரங்களை பதிவேற்றம் செய்து வருகிறது.இதனை நிறுவனங்கள் பதிவிறக்கம் செய்து, தொழிலாளர்களுக்கு விநியோகிக்கலாம் என அந்தசெய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக ஹஜ் கமிட்டியிடம் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் -பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள்

தொடக்கக் கல்வி குறித்த New Indian Express கட்டுரை



"பான் கார்டு' வழங்கும் நடைமுறையில் மாற்றம்

குடியரசு தின வாழ்த்துகள்



நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வு நிச்சயமாக இரண்டு தினங்களின் போது இருக்கும். ஒன்று சுதந்திர தினம்; மற்றொன்று குடியரசு தினம். இந்த தினத்துக்கு என்ன வித்தியாசம்; எப்படி வந்தது; ஏன் கொண்டாடுகிறோம் என்பதை தெரிந்து கொள்வது நமது கடமை.

சுதந்திரம் என்று சொல்லும் போது, யாரிடம் இருந்தோ விடுதலை பெற்றிருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. பல ஆண்டுகளாக நாட்டை அடிமைப்படுத்தி, மக்களின் உரிமைகளை ஒடுக்கி, இயற்கை வளங்களை கொள்ளையடித்து ஒற்றுமையாக இருந்த மக்களையும் பிரித்து விட்டு, 1947 ஆக., 15ம் தேதி நள்ளிரவில் ஆங்கிலேயர் நமக்குவழங்கியது தான் சுதந்திரம். சுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தையில் ஓராயிரக்கணக்கான மக்களின் ஓய்வில்லா போராட்டம் ஒளிந்திருக்கிறது. பல தலைவர்கள், இன்னுயிரை வருத்தி பல ஆண்டுகளாக ஆங்கிலேயரின் பீரங்கிகளை எதிர்த்து நின்று போராடி, அடிமை தேசத்தை, சுதந்திர நாடாக உருவாக்கினார்கள். இதனை நினைவு படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஆக., 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.நமக்கு அப்போது கிடைத்த சுதந்தரம் முழுமையானது அல்ல. ஏனெனில் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு, இந்தியாவுக்கு டொமினியன்அந்தஸ்து தான் வழங்கியது. அதன்படி, பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார். இதன்பின், இந்திய அரசியலமைப்பு 1949 நவ., 26ல்,இந்திய அரசியல் நிர்ணய சபையால்ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950, ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது.அன்று முதல் இந்தியாவில் மக்களாட்சி மலரத் தொடங்கியது. பிரிட்டிஷார் நியமித்த கவர்னர் ஜெனரல் பதவி நீக்கப்பட்டு, புதிதாக ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டது.குடியரசு என்பதன் நேரடி பொருள் மக்களாட்சி. மன்னராட்சி இல்லாமல், தேர்தல் மூலம் மக்களே ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறைக்கு குடியரசு என பெயர். இவ்வாறு மக்களாட்சி நடைபெறும் நாடு, குடியரசு நாடு என அழைக்கப்படுகிறது.குடியரசு நாட்டின் தலைவர், குடியரசு தலைவர் அல்லது ஜனாதிபதி என அழைக்கப்படுகிறார். சில நாடுகளில் குடியரசு தலைவர் நேரடியாகவே தேர்ந்தெடுக்கப்படுகிறார். சில நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மூலம், குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இம்முறை தான் இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.


அடேங்கப்பா! அரசியல் சாசனம்:@@அரசியல் சாசனம் என்பது, ஒரு நாட்டின் சட்ட திட்டங்கள்மற்றும் நெறிமுறைகளைவிளக்கிப் பட்டியலிடும் ஆவணம். இந்திய சுதந்திரத்திற்குப் பின், குடியரசு நாடாக இந்தியாவை பிரகடனப்படுத்த, அரசியலமைப்பை உருவாக்கும் பணியை, ராஜேந்திர பிரசாத் தலைமையிலான, அரசியல்நிர்ணய சபை மேற்கொண்டது.இதன்படி, 1947, ஆக., 29ல், சட்ட வரைவுக்குழு உருவாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அம்பேத்கர் தலைமையிலான7 பேர் கொண்ட குழு,2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் அயராத உழைப்பில், இந்திய அரசியல் சாசனத்தை எழுதி முடித்தனர். பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பின், 1949, நவ., 26ல் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950, ஜன., 26ல் நடைமுறைக்குவந்தது. இந்த நாள் தான்குடியரசு தினம். இந்தியஅரசியல் சாசனத்தில் மொத்தம் 22பகுதிகள், 448ஷரத்துகள், 12 அட்டவணைகள்,98 திருத்தங்கள், 1 லட்சத்து17 ஆயிரத்து 369 சொற்கள்உள்ளன.

அந்த மூன்று வார்த்தைகள்:@@இந்திய அரசியல் சாசனத்திற்கு முகவுரை வழங்கியவர், ஜவஹர்லால் நேரு. இதுஅரசியல் சாசனத்தின் நோக்கங்களை,தெளிவாக விளக்குகிறது. முகவுரை இந்தியஅரசியலமைப்பின் திறவுகோல் மற்றும் அரசியலமைப்பின் இதயம் எனபோற்றப்படுகிறது. முகவுரை இதுவரை ஒரே ஒருமுறை மட்டுமேதிருத்தப்பட்டது. 1976ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 42வது சட்டத் திருத்தத்தின்படி, சமதர்மம்,மதச்சார்பின்மை, ஒருமைப்பாடு என்ற மூன்று வார்த்தைகள் முகவுரையில் சேர்க்கப்பட்டன.

தேசிய கீதம் - சில சுவாரஸ்யங்கள்:@@121 கோடி இந்திய மக்களின் தேசிய கீதம், ஜன கன மன பாடல். ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய இந்தப் பாடல், முதன்முதலில் 1911 டிச.27 அன்று கோல்கட்டா காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது.தற்போது நூற்றாண்டுகளை கடந்து அனைவரதுஉணர்விலும் கலந்துள்ளது.இப்பாடல் 1950 ஜன.24ல் தேசிய கீதமாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதை 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும். தேசிய கீதம், வங்க மொழியில் பாரத விதாதா, ஆங்கிலத்தில் தி மார்னிங் சாங் ஆஃப் இந்தியா என அழைக்கப்படுகிறது.இந்தியத் தாயைவாழ்த்துவது போல இப்பாடல் அமைந்திருக்கும்.
ரவீந்திரநாத் தாகூர், இலக்கியத்துக்கான நோபல் பரிசுபெற்றவர். இவரே இதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர், வங்கதேசத்துக்கான தேசிய கீதத்தையும் இயற்றினார்.இருநாட்டுக்கு தேசிய கீதம் எழுதிய பெருமை, தாகூரைமட்டுமே சேரும். தேசியகீதம் இசைக்கப்படும் போது, அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். பெற்ற தாய்க்கு
கொடுக்கப்படும் மரியாதை,தேசிய கீதத்தை பாடும் போது இந்தியத் தாய்க்கு கொடுக்கப்படுகிறது.

முதல் குடியரசு தினம் எப்படி கொண்டாடப்பட்டது:@@ராஷ்டிரபதி பவனில் உள்ள டர்பர் ஹாலில்,1950 ஜன.,26ம் தேதி காலை 10:18 மணிக்குஇந்தியா, குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. அடுத்த 6நிமிடங்களுக்குப்பின், நாட்டின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் ராஜேந்திர பிரசாத், பதவியேற்றார். இவ்விழாவின் போது, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும், நாட்டின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி, குடியரசு மற்றும் அரசியலமைப்பு பற்றிய அறிக்கையை வாசித்தார்.பின் 10:30 மணிக்கு 21 குண்டுகள் முழங்க, நாடு குடியரசு அடைந்ததை, ஜனாதிபதி நாட்டு மக்களுக்குஅறிவித்தார்; தேசியக்கொடியையும் பறக்கவிட்டார். பின் ஜனாதிபதி குடியரசு தின உரை நிகழ்த்தினார். முதலில் இந்தியிலும், பின் ஆங்கிலத்திலும் பேசினார்.பின் மதியம் 2:30 மணியளவில் ராஷ்டிரபதி பவனில் இருந்து திறந்த வாகனத்தில் (தற்போதுபோன்று எவ்வித பாதுகாப்பும் இன்றி) இர்வின் மைதானத்துக்கு சென்றார். வழி நெடுக தேசியக்கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. மக்கள் ஜெய் என கோஷமிட்டனர். பின் இர்வின் மைதானத்தில் நடந்த அணிவகுப்பில்முப்படையினர் மற்றும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். இவ்விழாவில் 3,000 அதிகாரிகள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். வெளிநாட்டு விருந்தினராக இந்தோனேசிய ஜனாதிபதி சுகர்ணோ அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சிகள் மாலை 3:45 மணிக்கு முடிந்தன.முதல் 4 குடியரசு தின (ராணுவ அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள்) நிகழ்ச்சிகள் வவெ?வேறு இடங்களில் (1950ல் இர்வின் மைதானம், 1951ல் கிங்ஸ்வாய், 1952ல் செங்கோட்டை, 1953ல் ராம்லீலா மைதானம்) நடந்தது. இதன் பின் 1955ம் ஆண்டில் இருந்து, தற்போது கொண்டாடப்படும் ராஜ்பாத்தில் அணிவகுப்பு நடக்கிறது.

யார் அதிகம் :@@அதிக முறை, குடியரசு தின விழாவில்பங்கேற்ற ஜனாதிபதி என்ற பெருமையை ராஜேந்திர பிரசாத் பெறுகிறார். இவர் 13 குடியரசு தின விழாக்களுக்கு தலைமை வகித்துள்ளார்.

யார் குறைவு:@@நாட்டின், 3வது ஜனாதிபதியாக இருந்த ஜாகிர் உசேன், குறைந்த பட்சமாக 2 குடியரசு தின விழாக்களுக்கு மட்டுமே தலைமை வகித்தார். காரணம் பதவியில் இருக்கும் போதே மறைந்தார்.

ஜன.,26 ஏன்?@@1930, ஜன., 26ல், லாகூரில் நடைபெற்றஇந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில்,
இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றே தீர்வது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதன் நினைவாகவே, ஜன., 26ம் தேதியை, இந்திய குடியரசு தினமாக, அரசியல் நிர்ணய சபை முடிவு செய்தது.


சட்ட வரைவுக் குழுவில் இடம் பெற்றவர்கள்
*அம்பேத்கர்
*கோபால்சாமி ஐயங்கார்
*அல்லாடி கிருஷ்ணமூர்த்தி
*கே.எம்.முன்ஷி
*சையது முகமது சாதுல்லா
*மாதவராவ்
* டி.பி.கைதான்

25/01/2014

வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்!

வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள், ஏடிஎம் மையம் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.மின் நுகர்வோர்கள் காலவிரயம், அலைச்சல் ஆகியவைகளை குறைத்து சுலபமான முறையில் மின் கட்டணம் செலுத்த தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கீழ்கண் முறைகளை அறிவித்துள்ளது. இணையதளம் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம், எந்த நேரமும் பணம் பெறும் ஏடிஎம் மையம் மூலம் செலுத்தலாம், அஞ்சல் அலுவலகங்கள் மூலம் செலுத்தலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.கூடுதல் கட்டணம் இல்லாமல் (பாரத மாநில வங்கிகள் தவிர) மின்கட்டணம் செலுத்த தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், வங்கிகளிடம் ஒப்பந்தம் செய்துள்ளது. வங்கிகள் பெயர் விபரம்: ஆக்ஸிஸ்வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இந்தியன்வங்கி, சிட்டியூனியன்வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, கனராவங்கி, கரூர் வைஸ்யா வங்கி, ஐடிபிஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, ஹெச்டிஎஃப்சி வங்கி, பஞ்சாய் நேஷனல் வங்கி, ஸ்டேர் பாங்க் ஆஃப் இந்தியா, லெட்சுமி விலாஸ் வங்கி. தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, தமிழ்நாடு மாநில கோ-ஆப்பரேட்டவ் வங்கி, ஃபெடரல்வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் அஞ்சலகம்.

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி



டெண்டர் நிராகரிக்கப்பட்டதால் வண்ண அடையாள அட்டை இப்போதைக்கு இல்லை


தமிழகத்தில் 76 லட்சம் வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை தயாரித்து வழங்கும் டெண்டர் நிராகரிக்கப்பட்டது. அண்மையில் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட 10 லட்சம் வாக்காளர்களுக்கு பல வண்ண அடையாள அட்டை தர முடிவு செய்யப்பட்டது. தேசிய வாக்காளர் தினமான நாளை இந்த புதிய அடையாள அட்டை தரப்படும் என்று கூறப்பட்டது. இதற்கான டெண்டர் எல்காட் மூலமாக வெளியானது. ஆனால், திட்ட மதிப்பீடு தொகை குறைவு காரணமாக டெண்டர் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், 'கலர் அடையாள அட்டை தயாரிக்கும் டெண்டர் மணுக்கல் தேர்தல் கமிஷன் நிபந்தனைக்கு ஏற்ப இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. மீண்டும் டெண்டர் விட்டு புதிதாக அடையாள அட்டை தயாரிப்பதில் காலதாமதம் ஏற்படும்.எனவே கடந்த 6ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு புதிதாக கருப்பு வெள்ளையில் அடையாள அட்டை தயாரித்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பல வண்ண அடையாள அட்டை பயன்பாட்டிற்கு வர வாய்ப்பில்லை'' என்றனர். எக்ஸ்ட்ரா தகவல் தமிழகத்தில் 5 கோடியே 37 லட்சத்து 52 ஆயிரத்து 682வாக்காளர்கள் உள்ளனர். மாநிலம் முழுவதும் அளவில் 60,418 ஓட்டு சாவடிகள் உள்ளன.

24/01/2014

26.01.2014 காலை 10 மணிக்கு குடியரசு தின விழா கொண்டா தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

ஓட்டுரிமை - நமது நாட்டுரிமை நாளை தேசிய வாக்காளர் தினம்

தேசிய வாக்காளர் தினம் என்பது இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்களர்களை ஊக்கபடுதுவதற்காக இந்த தினம் அனுசரிக்கபடுகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி "தேசிய வாக்காளர் தினம்" . ஒட்டு அளிப்பதை மக்கள் தங்கள் கடமை யாக கருத வேண்டும் .18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் அனைவரும் ஒட்டு அளிக்க தகுதி வாய்ந்தவர் .தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது .சதி,மதம் , இனம், என்ற வேறுபாடுகளை களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் ஓட்டளிக்க தகுதி உள்ளவர்கள் .வாக்காளர் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கபடுகிறது.

நாளை தேசிய வாக்காளர் தினம்

தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி (ஜனவரி 25) சென்னையில் ஆளுநர் மாளிகை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சனிக்கிழமையன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில், 18 வயது நிறைவடைந்து வாக்காளர் பட்டியலில் பெயர் களைச் சேர்த்த சிலருக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை ஆளுநர் கே.ரோசய்யா வழங்குகிறார். மேலும், பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தவர்களுக்கு வாக்குச் சாவடி மையங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் வாக்காளர் அடையாள அட்டைகளை அதிகாரிகள் வழங்குகின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.




உலகின் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இதற்கு முதுகெலும்பாக விளங்கும் இந்திய தேர்தல் ஆணையம், ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. இது 1950 ஜன., 25ல் உருவாக்கப்பட்டு, 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை சிறப்பிக்கும் வகையில் 2011 முதல், ஜன., 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகப்படுத்தி, ஓட்டளிப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்துவது இதன் நோக்கம். தேர்தல் ஆணையம் நவீன வளர்ச்சிக்குப் ஏற்ப, ஓட்டளிக்க மின்னணு எந்திரம், அனைவருக்கும் புகைப்பட அடையாள அட்டை, விரைவாக தேர்தல் முடிவுகள், ஆண்டுதோறும் வாக்காளர் பெயர் சேர்ப்பு என புதுமைகளை புகுத்தி வருகிறது.

ஓட்டளிப்பது அவசியமா

இந்தியாவில் உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் முதல் பிரதமர் வரை, ஓட்டளிப்பதன் மூலமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஓட்டளிப்பது, 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியரின் கடமை. இதை தவறாமல் நிறைவேற்ற வேண்டும். அப்போது தான், மக்கள் விரும்பும் உண்மையான மாற்றம் ஏற்படும். ஓட்டளிப்பது எவ்வளவு அவசியமோ, அதே போல 18 வயது நிரம்பிய அனைவரும் பெயரை வாக்காளராக இணைத்துக்கொள்வதும் அவசியம். எந்த தேர்தலாக இருந்தாலும், சராசரி ஓட்டுப்பதிவு 60 சதவீதத்தை தாண்டுவதில்லை. இதனால், 40 சதவீத மக்களின் விருப்பம் இல்லாமலேயே, ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்தல் நடப்பது 5 ஆண்டுகளுக்கு ஒரு நாள் மட்டும் தான். அத்தினத்தில் அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஓட்டு உரிமையை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

விற்காதீர்கள்

இந்தியாவில் தற்போது, பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கும் புதிய வழியை அரசியல் கட்சிகள் புகுத்தியுள்ளன. இவர்களின் மாய வலையில் சிக்கி விட்டால், கிரிமினல் குற்றவாளிகள் தான் நம்மை ஆட்சி செய்வர். பின் எப்படி நமது வாழ்க்கைத் தரம் உயரும்; எப்படி இந்தியா வல்லரசாகும். எனவே பணத்திற்காக விலைமதிப்பற்ற ஓட்டுகளை விற்கக் கூடாது. இது நாட்டை விற்பதற்கு சமம்.

77.78 கோடி

இந்தியாவில் 2013, ஜன., 1ம் தேதி நிலவரப்படி புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளரின் எண்ணிக்கையும் சேர்த்து 77 கோடியே 78 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளரின் சதவீதம் 47.44.

5 கோடி பேர் 

தமிழகத்தில் தற்போதைய கணக்கின் படி, 5 கோடியே 15 லட்சத்து 69 ஆயிரத்து 61 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 58 லட்சத்து 56 ஆயிரத்து 61. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 57 லட்சத்து 10 ஆயிரத்து 567 பேர். மற்றவர்களின் எண்ணிக்கை 2,433 பேர்.

மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் ஃபேஸ்புக் பக்கம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது.

தேசிய வாக்காளர் தினத்தை (ஜனவரி 25) முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர் தினம் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இது தொடர்பாக நிருபர்களிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறும்போது, "சென்னைகவர்னர் மாளிகையில் சனிக்கிழமை காலை நடைபெறும் தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில், புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள மற்ற 27 லட்சம் புதிய வாக்காளர்களுக்கு தேர்தல் புகைப்பட அடையாள அட்டை சனிக்கிழமையன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வழங்கப்படும். அன்றைய தினம் வாங்காதவர்களின் வீடுகளுக்கு தேர்தல் துறையினரே நேரில் சென்று வாக்காளர் அட்டையை வழங்குவார்கள். அதை வீட்டில் உள்ள ஒருவர் கையெழுத்திட்டு பெற்றுக் கொள்ளலாம்.

அப்படி பெற முடியாதவர்கள், பின்னர் தேர்தல் பதிவு அதிகாரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் எப்போது வேண்டுமானாலும் பெயர் சேர்க்கலாம்.

"கண்ணியமாக வாக்களியுங்கள்" என்னும் கருத்தை மையமாக வைத்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள், பேரணிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்படவுள்ளது.

ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் – தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ள பிரசார விளம்பரப் படம் விரைவில்,தொலைக்காட்சி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும்.

இதன் மையக்கருத்து, "வாக்காளர்கள் கண்ணியமாக வாக்களிக்க வேண்டும். பணத்துக்காக வாக்கை விற்காதீர்," என்பன போன்ற கருத்துக்கள் இடம்பெறும்" என்றார் பிரவீண்குமார்.

ஃபேஸ்புக் பக்கம் குறித்து கூறும்போது, " நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, யூத் எக்ஸ்னோரா அமைப்புடன் இணைந்து, பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் www.facebook.com/tnelection2014 என்ற ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்கியுள்ளோம்.

முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் வாக்காளர்களைக் கவர்வது, நியாயமான முறையில் தேர்தலை வாக்காளர்கள் எதிர்கொள்ளச் செய்வது, வாக்களிப்பதன் அவசியத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நோக்கத்துக்காகவே இந்த சமூவவலைத்தளப் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது" என்றார் அவர்.

புதிய ஓய்வூதிய திட்ட நிதியில் முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்வதற்கான பரிந்துரை

இலவசமாக பேக்ஸ் அனுப்ப உதவும் இணையதளங்கள்

நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் Fax அனுப்பலாம். இப்போது fax இயந்திரம் தேடி அலைய தேவையில்லை. ஆன்லைன் மூலம் எளிதாக அனுப்பலாம். 

குறிப்பிட்ட கோப்பை இணைப்பாக இணைத்து அனுப்பிவிடலாம். இதனை சில தளங்கள் வழங்குகின்றன. இவைகளில் விளம்பரங்கள் இணைக்கப்பட்டு அனுப்பபடுகின்றன அல்லது ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் என்ற நிபந்தனைகளுடன் உங்களுக்கு கொடுக்கிறார்கள். கீழே உள்ள லின்க்கை பார்க்க 

Websites : GotFreeFax , FaxZero

லோக்சபா தேர்தல் பணி: அரசு ஊழியர்கள் தயார் : கம்ப்யூட்டரில் பதிவு பணி தீவிரம்

லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும், அரசு ஊழியர்களை தேர்வு செய்து, அவர்களது, சுய விவரங்களை, கணினியில் பதிவு செய்யும் பணிகள் துவங்கி உள்ளன. 

வரும், லோக்சபா தேர்தலுக்கான பணிகளில், தேர்தல் ஆணையம்ஈடுபட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், வரும், மார்ச் மாதம் நடக்க இருக்கின்றன. அதற்குள், தேர்தல் பணியில் ஈடுபடும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியில், தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. 

ஒரு ஓட்டுச் சாவடிக்கு, நான்கு அலுவலர்கள் வீதம், 13,500 பேர், தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும்.அதற்காக, தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களை தேர்வு செய்து, அவர்களின் விவரங்களை, கணினியில் பதிவு செய்யும் பணி, தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட, வசதிகளை, வரும், 31ம் தேதிக்குள், செய்து முடித்து, அறிக்கை அனுப்ப வேண்டுமென, அதிகாரிகளுக்கு, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2005ஆம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி இன்று அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-


2005ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட அனைத்து நோட்டுக்களும், மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு திரும்ப பெறப்படும். ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து இந்த நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். பின்பக்கத்தில் ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுக்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை 10-க்கும் அதிகமாக மாற்ற நினைப்பவர்கள், அந்த வங்கியின் வாடிக்கையாளர்களாக இல்லாவிட்டால் அடையாளம் மற்றும் குடியிருப்பு சான்று அளிக்க வேண்டும். இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை. இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொழில் வரி 30 சதவீதம் உயர்வு, மாத ஊதியம் ஈட்டுவோர் அதிருப்தி

22/01/2014

அரியலூர் மாவட்டத்தை கல்வியில் முதன்மையானதாக உருவாக்க வேண்டும்: மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பள்ளிகள் அளவில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் முதல் இரண்டு இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு வகுப்புகளை கலெக்டர் சரவணவேல்ராஜ் தொடங்கி வைத்து கூறியதாவது:–

நமது மாவட்டத்தில் 152 உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் அளவில் முதல் இரண்டு இடம் பெற்ற மாணவ, மாண விகளை நடைபெற உள்ள 10–ஆம் வகுப்பு மற்றும் 12–ஆம் வகுப்பு பொதுதேர்வில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடிப்பதற்கான சிறப்பு வகுப்புகள் இன்று முதல் ஒரு மாத காலம் நடைபெறவுள்ளது.

10–ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு வகுப்பு நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 12–ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு வகுப்பு கலெக்டர் அலுவலக கூட்டமன்றத்திலும் காலை9 மணி முதல் பிற்பகல்2 மணி வரை நடைபெறும்.

வகுப்புகளில் சிறப்பு பாடங்களுக்கு முக்கியத்துவம் அளித்து சிறப்பு ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்பு தினமும் நடைபெறவுள்ளது. இச்சிறப்பு வகுப்புகளில் பொதுத்தேர்வு மாதிரி வினா தாள், வினா–விடை வங்கி புத்தகங்கள் மற்றும் மதிய உணவு ஆகியவை மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும்.

இச்சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு வாரத்தில் (சனி மற்றும் ஞாயிற்று கிழமைகள் உட்பட) மூன்று நாட்கள் மாதிரி தேர்வு நடத்தப்பட்டு இத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிக்கப்படும்.

மேலும், பாடநூல் கொண்டு எவ்வாறு படிக்க வேண்டும் என்பது குறித்தும் பொதுத்தேர்வில் அனைத்து வினாக்களுக்கும் குறித்த நேரத்தில் விடைகளை எவ்வாறு எழுத வேண்டும் என்பது குறித்தும் இவ்வகுப்புகளில் பயிற்சி அளிக் கப்படவுள்ளது.

இச்சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் எதிர்வரும் பொதுத் தேர்வினை மனதில் கொண்டு பொழுதுபோக்கிற்கு முக் கியத்துவம் அளிக்காமல், பாடநூலை மட்டுமே படிக்க வேண்டுமென்றும் அரியலூர் மாவட்டத்தை கல்வியில் முதன்மை மாவட்டமாக உருவாக்க மாணவர்கள் முன்வர வேண்டுமென்றும் கலெக்டர் சரவணவேல்ராஜ் கூறினார்.