திருக்குறள்

06/11/2013

பி.எப். : விண்ணப்பம் கிடைத்த 10 நாட்களில் தீர்வு!'



வருங்கால வைப்பு நிதி கேட்டு விண்ணப்பித்த 10 நாட்களில் தீர்வு காணப்படும் என்று சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டி.பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில், உறுப்பினர்களின் வருங்கால வைப்பு நிதி உரிமை கோரும் படிவங்கள் முழுமையான வடிவில் பெறப்பட்ட நாளில் இருந்து 5 நாட்களுக்குள் பெரும்பாலும் தீர்வு செய்யப்படுகிறது. மீதம் உள்ள படிவங்களுக்கான கணக்கு தொகைகளும் 10 நாட்களில் தீர்வு செய்யப்படுகிறது.

முழுமையான வடிவில் பெறப்பட்ட எந்த ஒரு படிவங்களும் 20 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படாமல் இருப்பதில்லை. 20 நாட்களுக்கும் மேலாக தீர்வு செய்யப்படாத படிவங்கள் இருக்குமானால், உறுப்பினர்கள் பொதுமக்கள் தொடர்பு அதிகாரியை அணுகி விவரத்தை பெற்றுக் கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், வருங்கால வைப்பு நிதி ஆணையர் மூ.மதியழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அனைத்து ஓய்வூதியதாரர்களும் உயிர்வாழ் சான்றிதழையும், விதவை ஓய்வூதியதாரர்கள் மறுமணம் செய்து கொள்ளவில்லை என்ற சான்றிதழையும் நவம்பர் மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சமர்ப்பிக்கும் சான்றிதழ்களில் தங்கள் ஓய்வூதிய ஆணை எண் மற்றும் செல்போன் எண்களை குறிப்பிட வேண்டும். டிசம்பர் 15ஆம் தேதிக்குள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்காதவர்களுக்கு ஜனவரி மாதத்தில் இருந்து ஓய்வூதியம் வழங்குதல் நிறுத்தி வைக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment