திருக்குறள்

18/11/2013

தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை வருகிறது டயல் 104 சேவை

தொலைபேசி மூலம் வீட்டிலிருந்தபடியே மருத்துவ ஆலோசனை பெற தமிழகம் முழுவதும் 104 சேவை விரைவில் அறிமுகமாக உள்ளது.அவசர காலங்களில் உடனடி மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக 2008ல் அரசு 108 ஆம்புலன்ஸ் சேவையை அறிமுப்படுத்தியது.
இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இலவச மருத்துவ ஆலோசனை வழங்க 104 என்ற நம்பரில் இலவச மருத்துவ உதவி சேவையை அறிமுகப்படுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த 104 இலவச மருத்துவ உதவி சேவை மூலம் ஒருவர் வீட்டிலிருந்தபடியே மருத்துவ ஆலோசனை பெறலாம். அருகில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துதுவமனைகள், மருந்தகங்கள், சிடிஐ, எம்ஆர்ஐ, ஸகேன் சென்டர்கள் ஆகியவற்றின் விலாசம் மற்றும் தொடர்பு எண்களையும் தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளலாம். விபத்து காலங்களில் ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பு காயமடைந்தவருக்கு எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பது போன்ற தகவல்களையும் பெறலாம். தொலைபேசி மூலம் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகு, நோய்க்கான மருந்துகளின் விவரங்கள் நோயாளிகளின் செல்போனுக்கு அனுப்பப்படும்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், Ô‘ 104 நம்பருக்கு அழைப்பவர்களின் பெயர் விவரங்கள் முதலில் பதிவு செய்யப்படும். பின்னர் அழைத்தவர்களின் பிரச்சனையை பொறுத்து அதற்கான மருத்துவர்களிடம் அழைப்பு இணைக்கப்படும். பிரச்சனைகளின் தீவிரத்தை அறிந்து அதற்கான ஆலோசனை வழங்கப்படும். இதற்கான முன்னோட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.104 தொலைபேசி எண் மூலம் அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை, மருத்துவர்கள் உரிய நேரத்துக்கு வராமல் இருத்தல், போன்ற புகார்களையும் தரலாம். புகார்கள் நேரடியாக சுகாதாரத்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும். புகார் பிரிவுக்காக 2 ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். 104 இலவச மருத்துவ உதவி சேவை அனைத்து மாவட்டங்களிலும் 2014 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறதுஎன்றார்.

No comments:

Post a Comment