திருக்குறள்

13/11/2013

கோர்ட் அவமதிப்பு வழக்கு பள்ளிக்கல்வி செயலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார்.

ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்குவதை தாமதப்படுத்துவதாக, தாக்கலான அவமதிப்பு வழக்கில், பள்ளிக்கல்வி செயலர் சபீதா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார்.

புதுக்கோட்டை ரங்கராஜன் தாக்கல் செய்த மனு: இடைநிலை ஆசிரியராக, 1986ல், பணியில் சேர்ந்தேன். பி.எட்., முடித்ததால், 2000ல், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக, அரசு, பதவி உயர்வு வழங்கியது. தேர்வுநிலை ஆசிரியர்கள், கீழ்நிலை பணியில் இருந்தால், அவர்களுக்கு, சிறப்பு நிலை பதவி உயர்வு வழங்கலாம் என, அரசு உத்தரவிட்டது.
அதன்படி, 2009ல், 65 பேருக்கு சிறப்பு நிலை பதவி உயர்வு வழங்கி, அரசு உத்தரவிட்டது. அப்பட்டியலில், என் பெயர் இல்லை. எனக்கு பதவி உயர்வு வழங்க கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு செய்தேன். மனுவை, பள்ளிக்கல்வி செயலர் பரிசீலித்து, எட்டு வாரங்களுக்குள், உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, 2011ல், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பள்ளிக்கல்வி செயலர் சபீதா, நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டார்.
நீதிபதி, நாகமுத்து முன், மனு விசாரணைக்கு வந்தது. பள்ளிக்கல்வி செயலர் சபீதா மற்றும் மனுதாரர் தரப்பில், வக்கீல்மோகன்லால் ஆஜராகினர். அரசுத் தரப்பில், "நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி விட்டோம்' என, தெரிவிக்கப்பட்டதால், மனுவை முடிக்க, நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment