திருக்குறள்

05/07/2014

பாழடைந்த பள்ளி கட்டிடம்: பெற்றோர்கள் கலக்கம்

ஜெயங்கொண்டம்-பழுதடைந்த பள்ளிக் கூடத்தில் படித்துவரும் பிள்ளைகளை பெற்றோர்கள் வேறு பள்ளியில் சேர்க்கும் அவலம், அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோ.கண்டியங்கொல்லை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.இதில் 1 முதல் 5 வகுப்புகள் வரை நடைபெறுகின்றன. மொத்தம் 25 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர் மட்டும் உள்ளனர்.இந்த பள்ளி பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடம் சேதமடைந்து மேல் கூரை காரைகள் கீழே விழுந்த நிலையில் உள்ளது. இதன் அருகே அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகின்றன. இதில் 6 மாதம் முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகள் உணவு சாப்பிட்டு வருகின்றனர்.இந்த பள்ளிக்கூடத்திற்கு பின்புறம் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மைதானத்திற்கு அருகில் 3 ஏக்கர் பரப்பளவில் ஒரு பெரிய குளம் உள்ளது. இரண்டுக்கும் நடுவில் சுற்றுச்சுவர் ஏதும் இல்லாமல் உள்ளது. மழை, காற்று காலங்களில் இந்த கட்டிடத்தில் இருந்து காரைகள் பெயர்ந்து விழுகின்றனவாம். இந்த கட்டிடத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது எப்பொழுது இந்த காரைகள் பெயர்ந்து விழுமோ என்ற அச்சத்துடனே இருக்கிறார்கள்.இதனால் இந்த பகுதியில் உள்ள பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அருகில் உள்ள கோடாலி கருப்பூர், தா.பழூர், ஜெயங்கொண்டம் போன்ற ஊர்களில் சென்று சேர்க்கின்றனர். தற்பொழுது படித்து வரும் பிள்ளைகளின் பெற்றோர்கள் தங்களது பிள்ளை களை நினைத்தும், தங்களது வறுமையை நினைத்தும் சோகத்தில் உள்ளனர்.எனவே, சம்மந்தப்பட்ட துறைகள் உடனே செயல்பட்டு பேரிழப்பு ஏற்படுவதற்கு முன்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இப்பகுதியினர் கோரிக்கையாக வைத்தனர்.

No comments:

Post a Comment