திருக்குறள்

20/09/2013

அரியலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.34லட்சம் ஊக்கத்தொகை கலெக்டர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.33.85 லட்சம் மதிப்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக அரியலூர் கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்தார். அரியலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியல் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. அரியலூர் எம்எல்ஏ துரை.மணிவேல் முன்னிலை வகித்தார். கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமை வகித்து பேசியதாவது: அரியலூர் மாவட்டத்தில் 2012-13 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முப்பருவத்திற்கும் நோட்டுப்புத்தகம் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 32 பேருக்கும், 1 முதல் 12 வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச புத்தகப்பை இதுவரை 84 ஆயிரத்து 637 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8 வரை படிக்கும் ஏழை எளிய சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு 4 செட் சீருடைகள் வழங்கப்பட்டது. மேலும் 1 லட்சத்து 28 ஆயிரத்து 887 பேருக்கு இலவச காலணிகள் வழங்கப்பட்டுள்ளது. இலவச பஸ்பாஸ் கேட்டு விண்ணப்பித்த1 முதல் 12 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 14 ஆயிரத்து 719 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 6 ஆயி ரத்து 488 பேருக்கு தேவை பட்டியலின்படி இலவச சைக்கிள் பெறப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. 58 ஆயிரத்து 414 பேருக்கு இலவச உபகரணப்பெட்டியும், சாதி, வருமான, இருப்பிட சான்று பெறுவதற்கு படிக்கிற பள்ளிகளிலேயே விண்ணப்பித்த 10 ஆயிரத்து 492 மாணவர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை பெற தகுதியான 5 ஆயிரத்து 97 பேருக்கு கல்வி ஊக்கத்தொகையாக ரூ.33.85 லட்சத்தில் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு கலெக் டர் பேசினார். டிஆர்ஓ கருப்பசாமி, ஆர்டிஓ கண பதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதி வாணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வைத்தியநாதன், மாவட்ட கல்வி அலுவலர் அருள்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment