திருக்குறள்

07/09/2013

பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளும் வசதி இன்று அறிமுகம்

பி.எஃப். கணக்கு குறித்த விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளும் வசதி இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.

பி.எப். சிலிப்

தற்போதுள்ள நிலையில் பி.எஃப். சந்தாதாரர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் வாயிலாக பி.எஃப். சிலிப் வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக முந்தைய நிதி ஆண்டிற்கான விவரத்தை மட்டுமே தெரிந்து கொள்ளலாம். சென்ற 2012-13-ஆம் ஆண்டிற்கான கணக்கு விவரம் குறித்த சிலிப் இம்மாதம் 30-ந் தேதிக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் இந்த கணக்கு விவரத்தை பெறுவதில் அதிக காலதாமதம் ஏற்படுகிறது.

இனிமேல் சந்தாதாரர்கள் அன்றயை நிலவரப்படி அவர்கள் கணக்கில் உள்ள தொகை குறித்த விபரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். இதற்காக ஆன்லைனிலிருந்து பதிவிறக்கம் செய்து பிரதி எடுத்துக் கொள்ளலாம். இதனால் 5 கோடி சந்தாதாரர்கள் பயன் பெறுவார்கள்.

இவ்வாண்டு மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி சந்தாதாரர்கள் கணக்கில் உள்ள பி.எஃப். தொகை விவரத்தை வட்டியுடன் சேர்த்து தெரிந்து கொள்ளலாம் என மத்திய பிராவிடண்ட் ஃபண்டு ஆணையாளர் கே.கே. ஜலன் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதத்திலிருந்து ஒருவரது கணக்கில் உள்ள தொகையை வட்டி சேர்க்காமல் மாதந்தோறும் தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால் நடப்பு நிதி ஆண்டிற்கான பிராவிடண்டு பண்டு வட்டிவிகிதம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.

ஆன்லைனில் பி.எஃப். கணக்கை தெரிந்து கொள்ளும் வசதியை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிஸ்ராம் ஓலா புதுடெல்லியில் உள்ள வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இன்று அறிமுகம் செய்கிறார்.

செயல்படாத கணக்கு

செயல்படாத நிலையில் உள்ள கணக்குகளின் சந்தாதாரர்கள் உள்பட அனைவரும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். தொடர்ந்து 36 மாதங்கள் சந்தாதாரர்கள் கணக்கில் தொகை செலுத்தப்படவில்லையென்றால் அது செயல்படாத கணக்காக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment