திருக்குறள்

20/09/2013

லஞ்சம் வாங்கினால் மட்டுமல்ல… கொடுத்தாலும் தண்டனை உறுதி மத்திய அரசு பரிசீலனை

லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல லஞ்சம் கொடுப்பது கூட சட்ட விரோதமானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய சட்டத்திருத்தத்தின் படி லஞ்சம் வாங்குபவர்கள் மட்டுமின்றி லஞ்சம் கொடுப்பவர்களையும் தண்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது சட்ட விரோதமானது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. லஞ்சம் வாங்குபவர்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதம் அதிகபட்சம் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. லஞ்சத்தை ஒழிக்க மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை அன்னா ஹசாரே தலைமையிலான சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினார்கள். இதையடுத்து லஞ்ச தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்தார். அதன்படி அந்த சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த சட்ட திருத்தம் கடந்த மாதம் பாராளுமன்ற மேல் சபையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சட்டத்திருத்தத்தின் படி லஞ்சம் வாங்குபவர்கள் மட்டுமின்றி லஞ்சம் கொடுப்பவர்களையும் தண்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. லஞ்சம் கொடுக்க முன் வருபவர்கள் தங்கள் சுய நலத்துக்காகவே பணம் கொடுக்கிறார்கள் என்பதால் அவர்களுக்கும் ஜெயில் தண்டனை கொடுக்க வேண்டும் என்று சட்டத்திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. சட்ட திருத்தம் மேலும் லஞ்சம் கொடுப்பவர்களும், வாங்குபவர்களுக்கான குறைந்த பட்ச தண்டனையை 6 மாதத்தில் இருந்து 3 ஆண்டுகளாக உயர்த்த பரிந்து ரைக்கப்பட்டுள்ளது. அது போல அதிகபட்ச தண்டனை காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகள் வரையிலான ஜெயில் தண்டனையாக மாற்ற திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்துக்கு நாடாளுமன்றமும், மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் கொடுத்துவிட்டால், இனி லஞ்சம் வாங்குபவர்கள் மட்டுமல்ல கொடுப்பவர்களும் சிறை கம்பியை எண்ண வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment