திருக்குறள்

29/09/2013

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் மறியல் போராட்டம்

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தொடர் மறியல் போராட்டம்


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் மறியல் போராட்டம் 
மாநில தலைவர் சோ.காமராஜ் தலைமையில் நடந்த போராட்டத்தை உலக கல்வி அமைப்பின் துணைத் தலைவர் ஈசுவரன் தொடங்கி வைத்தார். அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க தலைவர் கே.கணேசன் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மத்திய அரசில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் போன்று அதே தகுதி உள்ள தமிழ்நாட்டில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பெறுகின்ற சம்பளம் மிக குறைவு.மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தாங்கள் பெறவேண்டிய சம்பளத்தைவிட மாதம் ஒன்றுக்கு ரூபாய் 9000 குறைவாக பெறுகின்றனர். ஒரே பணி அனால் சம்பளம் மட்டும் குறைவு. இதனை மாற்றி இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 9300 நிர்ணயம் செய்யப்பட வேண்டும். CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும் பழைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது போன்ற 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  சாலை மறியல் போராட்டத்தில் அலை கடலென எராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். சாலையில் அமர்ந்து தொடர்ந்து கோஷமிட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் அனைவரும் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


25.09.2013 முதல்நாள் 5000 பேர் கைது,26.09.2013- 2ஆம் நாள் 2000மகளிர் உட்பட 5000பேர் கைது, 27.09.2013-3ஆம் நாள் 5000பேர் கைது,28.09.2013-4ஆம் நாள் 5000பேர் கைது என மறியல் போர் தொடர்ந்து நடந்தாலும் ஆளும் அரசு அதைப்பற்றி கண்டுகொண்டதாகவே தெரியவில்லை..
"ஆசிரியரை மதிக்காத சமூகம் உருப்பட்டதில்லை" என்பதற்கேற்ப ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ளும் அரசுக்கு, காலம் தாழ்த்தத் தாழ்த்த அந்த காலமே தகுந்த பதில் சொல்லும்...

காலம் சொன்ன பதிலைக் கேட்கும் இடத்தில் காலம் தாழ்த்திய அரசுகள் இருந்ததில்லை //என்பதே இயக்க வரலாறு. 

பணிவது பயந்தல்ல...,பாய்வதற்கே என உணர்த்தும் நாள் தொலைவில் இல்லை... 


ஒன்றுபடுவோம், போராடுவோம், இறுதி வெற்றி நமதே..!


எச்சரிக்கை பள்ளிக்கூடம் திறந்தாலும் போராட்டம் தொடரும்
தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக பள்ளிகளை மூடி போராட்டம் நடத்தப்படும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எச்சரிக்கை























No comments:

Post a Comment