திருக்குறள்

02/10/2013

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது



தமிழகம் முழுவதும் 2014-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது. சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், மாநகராட்சி அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி, ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தியாக கூடியவர்கள் பெயரை சேர்க்கலாம். பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்க படிவம் 7, திருத்தம் செய்ய படிவம் 8, இடம் பெயர்ந்தவர்கள் படிவம் 8ஏ ஆகியவற்றை பூர்த்தி செய்து தகுந்த ஆவணத்துடன் அந்தந்த மண்டல அலுவலகங்கள் மற்றும் வாக்குசாவடி மையங்களில் வரும் 31ம் தேதி வரை வழங்கலாம். மேலும், சென்னையில் 45 இண்டர்நெட் மையங்களுடன் மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. அங்கு சென்று திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். இண்டர்நெட் மையத்துக்கு செல்லும் போது பாஸ்போர்ட் புகைப்படம், வயது சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவை கொண்டு செல்ல வேண்டும். வீடுகளுக்கு அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது பதிவு செய்துள்ள சான்றிதழ்களை காண்பிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 6, 20, 27 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இதற்காக பகுதி வாரியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி வெளியிடப்படும். வாக்காளர் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 29,511 அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment