திருக்குறள்

04/09/2013

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி அக்டோபரில் தொடக்கம்.

தமிழகத்தில் 1-1-2014 நாளை தகுதி நாளாக கொண்டு, சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யப்பட உள்ளது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் 1-10-2013 அன்றுவெளியிடப்படும். அதன்பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கு 1-10-2013 முதல் 31-10-2013 வரை பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். 2-10-2013 மற்றும் 5-10-2013 ஆகிய நாட்களில் அனைத்து கிராம சபை உள்ளிட்ட உள்ளாட்சி அலுவலகங்களில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை சரிபார்க்கலாம்.

6-10-2013, 20-10-2013 மற்றும் 27-10-2013 ஆகிய நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில், அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகளிடம் இருந்துகோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்படுகின்றன. அதன்பின்னர் 6-1-2014 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு 1-1-2014 அன்று 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு, தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ம் தேதி புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

No comments:

Post a Comment