திருக்குறள்
26/07/2013
நம் தேசியக் கொடியில் இருக்கும் மூன்று வண்ணங்கள்
நம் தேசியக் கொடியில் இருக்கும் மூன்று வண்ணங்களில் காவி நிறம் இந்து மதத்தையும், பச்சை நிறம் இஸ்லாமியத்தையும் வெள்ளை நிறமானது பிற மதங்களையும் குறிப்பிடும் பொருளில் உருவாக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்கள் முன்பு பாபு ராஜேந்திர பிரசாத், அம்பேத்கர், அபுல் கலாம் ஆசாத், சரோஜினி நாயுடு இன்னும் சில முக்கியத் தலைவர்களின் ஆலோசனையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, தேசியக் கொடியைப் பற்றி விவாதம் நடந்தது. அதில் மத அடையாளத்தை மாற்றி, தேசியக் கொடிக்கான புதிய கருத்து உருவாக்கப்பட்டது.
காவி நிறம் தியாகத்தையும், வெண்மை நிறம் ஒழுக்கத்தையும், பச்சை நிறம் நம் நாட்டின் வளத்தையும் குறிக்கும் என்று அறிவித்தார் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன். அசோகச் சக்கரமும் அப்போதுதான் கொடியில் இடம்பெற்றது. மூன்று வாரங்கள் நடந்த அந்த ஆலோசனையின் முடிவில், தேசியக் கொடியை ஜுலை 22, 1947-ல் அங்கீகரித்தார்கள். அந்தக் கொடியே முதன்முறையாக 1947-ஆகஸ்ட் 15 அன்று ஏற்றப்பட்டது.
செல்போன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்!
செல்போன், டேப்லெட் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை ஓரிரு மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்று பாஸ்போர்ட் மண்டல அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார்.
தற்போது, பாஸ்போர்ட் பெற நேரிலோ அல்லது இணையதளம் மூலமாகவோ பொதுமக்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில், செல்போன், டேப்லெட் கம்ப்யூட்டர் மூலமும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க முடியும் என்று பாஸ்போர்ட் மண்டல அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஓரிரு மாதங்களில் செல்போன் மூலம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம், விண்ணப்பம் எந்தப் பிரிவில் உள்ளது, அதன் தற்போதைய நிலை உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலவச பாசுடன் மாணவர்கள் ஏறுவதை தடுக்க பஸ்சை நிறுத்தாமல் செல்லும் டிரைவர் மீது நடவடிக்கை- நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இலவச பஸ் பாஸ் வைத்திருக்கும் மாணவ, மாணவிகள் ஏறுவதை தவிர்க்க, பஸ் நிறுத்தங்களில் பஸ்சை நிறுத்தாமல் செல்லும் டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ஞானகுருநாதன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: ஜூன் 20ம் தேதி புதுக்கோட்டை கைகுறிச்சியில் அரசு பஸ், நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால், மாணவர்களால் பஸ்சில் ஏற முடியவில்லை. இதனால் ஏழு மாணவர்கள் வேனில் ஏறிச்சென்றனர். அந்த வேன் விபத்தில் சிக்கியதில் 7 மாணவர்களும் உயிரிழந்தனர். அரசு பஸ்களை அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்தி பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்ல உத்தரவிட வேண்டும். மாணவ, மாணவிகளை ஏற்றிச்செல்ல மறுக்கும் ஓட்டுனர், நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்து நீதிபதிகள் பால்வசந்தகுமார், தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு: கைகுறிச்சி சம்பவம் போல் ஏற்கனவே ஒரு சம்பவம் நடந்தபோது, ஐகோர்ட் தாமாக முன்வந்து இப்பிரச்னையை வழக்காக எடுத்து விசாரித்தது. அப்போது, பாஸ் வைத்திருக்கும் மாணவ, மாணவிகளை கண்டிப்பாக பஸ்சில் ஏற்றி செல்ல உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு பிறகு, அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் பஸ்சை நிறுத்தி இலவச பாஸ் வைத்திருக்கும் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்ல வேண்டும். தவறும் ஓட்டுனர், நடத்துனர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த 2010 ஏப்ரல் 1ம் தேதி அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ் நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்லும் பஸ் தொடர்பாக பஸ் எண், வழித்தட எண், நிற்காமல் சென்ற நேரம் உள்ளிட்ட விபரங்களுடன் பள்ளியின் தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் நிர்வாகிகள், பாஸ் வைத்திருக்கும் மாணவ, மாணவியின் பெற்றோர் போக்குவரத்து கழகங்களில் புகார் அளிக்கலாம். அவ்வாறு புகார் வந்தால், சம்பந்தப்பட்ட ஓட்டுனர், நடத்துனர்கள் மீது 2010 ஏப்ரல் 1ம் தேதி பிறப்பித்த சுற்றறிக்கை அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை விபரத்தை ஆகஸ்ட் 19ம் தேதி கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழக அரசு உத்தரவு சத்துணவு தரம் பெற்றோர் கண்காணிக்கலாம்
பீகாரில் சத்துணவு சாப்பிட்ட குழந்தைகள் இறந்த சம்பவத்தையடுத்து தமிழகத்தில் சத்துணவு மையங்களில் தரமான உணவு வழங்கப்படுவதையும், மையங்கள் சுகாதாரமாக செயல்படுவதையும் கண் காணிக்க குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. அனைத்து சத்துணவு மையங்களையும் ஆய்வு செய்ய அக்குழுக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அக்குழு அளிக்கும் ஆய்வு அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சத்துணவு ஊழியர்கள் மதியம் 2 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும். திறந்தவெளியில் சத்துணவு மையங்கள் செயல்பட கூடாது. சுகாதாரமாகவும், குடிநீர் வசதியும் இருக்க வேண்டும். பாத்திரங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். மாணவர்களை மரத்தடியிலோ, வரிசையில் நிற்க வைத்து உணவு அளிக்க கூடாது. பள்ளி வராண்டாவில் வைத்து மாணவர்களுக்கு உணவு பரிமாற வேண்டும். சுழற்சி முறையில் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். தரமான உணவு வழங்கப்படுவதை ஆய்வு செய்ய ஏற்கனவே கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுவில் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். செயல்படாமல் உள்ள இந்த கண்காணிப்பு குழுக்களின் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளின் பெற்றோரில் விருப்பமுள்ள ஒருவர் அல்லது 2 பேர் சுகாதார முறையில் தரமான உணவு வழங்கப்படுவதை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி சத்துணவில் அழுகிய முட்டை சப்ளைக்கு தொழில் போட்டியே காரணம்
நாமக்கல்லில் தொழில் போட்டி காரணமாக சத்துணவு மையங்களுக்கு அழுகிய முட்டை சப்ளை செய்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்காக வாரம் 3 கோடி முட்டை களை சமூக நலத்துறை கொள்முதல் செய்கிறது. நாமக்கல்லை சேர்ந்த கோழிபண்ணையாளர்களும், வியாபாரிகளும் கூட்டு சேர்ந்து அரசுக்கு முட்டை சப்ளை செய்து வந்தனர். மாதம் தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் டெண்டர் நடத்தப்பட்டு சத்துணவு மையங்களுக்கு முட்டை வினியோகம் செய்ய பண்ணையாளருக்கு ஆர்டர் அளிக்கப்பட்டது. தற்போது ஒரு ஆண்டுக்கு, ஒரு டெண்டர் என்பது நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, திருச்செங்கோட்டை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தமிழகம் முழுவதும் சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்து வருகிறது. இந்த நிறுவனத்துக்கு நாமக்கல் பகுதியை சேர்ந்த சிறிய பண்ணையாளர்கள் முட்டை கொடுக்கின்றனர். வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் சத்துணவு மையங்களில் அழுகிய முட்டை சப்ளை செய்யப்பட்டது கண்டுபிடிக் கப்பட்டது. இந்த முட்டைகள் எந்த பண்ணையில் இருந்து சப்ளை செய்யப்பட்டது என்பது குறித்தும் நாமக்கல் பகுதியிலும் விசாரணை நடந்து வருகிறது. சத்துணவு திட்டத்திற்கு அளவு குறைந்த புல்லட் முட்டையை சிலர் சப்ளை செய்கின்றனர். இதை வெளியில் தெரியாமல் மறைப்பதற்கு சமூக நலத்துறை அதிகாரிகள் சரிக்கட்டப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. சத்துணவு திட்டத்திற்கு முட்டை சப்ளை செய்வதால்தான் நாமக்கல்லில் முட்டை கோழி பண்ணை தொழில் சிறப்பாக நடந்து வருகிறது. தற்போது அழுகிய முட்டை விவகாரத்தில் அரசு தரப்பில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற அச்சமும் பண்ணையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. சப்ளை செய்யும் பண்ணையாளர்கள், நேற்று முன் தினம் ரகசியமாக கூடி ஆலோசனை நடத்தினர். இதில் அரசு திட்டத்திற்கு சப்ளை செய்யப்படும் முட்டையில் எந்த குறைபாடும் இல்லாத அளவுக்கு பண்ணையாளர்கள் நடந்து கொள்ளவேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். கூட்டத்தில் பங்கேற்ற பண்ணையாளர் ஒருவர் கூறுகையில், ''தொழில்போட்டி காரணமாக பண்ணையாளர்கள் சிலர், வியாபாரிகளை மறைமுகமாக தூண்டிவிட்டு, குறைந்த விலைக்கு முட்டைகளை விற்பனை செய்துள்ளனர் '' என்றார். பிரிட்ஜில் வைத்த முட்டைகள் சப்ளை நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியது: கோழிப்பண்ணையாளர்களை விட வியாபாரிகள் தான் சத்துணவுக்கு அதிகமாக முட்டை சப்ளை செய்கிறார்கள். கடந்த ஏப்ரல், மே மாதம் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்ட போது, நாமக்கல் பண்ணைகளில் ஒரு முட்டை ஸீ1 முதல் ஸீ1.50 வரை அடிமாட்டு விலைக்கு வியாபாரிகள் வாங்கி மேட்டுப்பாளையம், திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் தனியார் குளிர்பதன கிடங்கில் சேமித்து வைத்துவிட்டனர். அவற்றைதான் சத்துணவு மையங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இன்னும் பல கோடி முட்டைகள் குளிர்பதன கிடங்குகளில் இருப்பு உள்ளது. நீண்ட நாட்கள் வைக்கப்பட்ட முட்டைகள் கெட்டுப்போக அதிக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சத்து மாத்திரை சாப்பிட்டதால் குழந்தைகள் பற்றிய பாதிப்பு பயம் தேவையில்லை-மத்திய அரசு
சத்து மாத்திரை சாப்பிட்டதால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு சாதாரணமானதுதான். பயப்பட தேவையில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளின் உடல் நலத்தை பேணுவதற்காக இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி மாத்திரைகள் வழங்கும் மத்திய அரசின் திட்டம் டெல்லியில் கடந்த புதன் கிழமை துவங்கப்பட்டது. வாரம் ஒரு முறை இந்த மாத்திரைகள் வழங்க திட்டமிப்பட்டுள்ளது.திட்டத்தின் துவக்க நா ளில் மாத்திரை சாப்பிட்ட 200க்கும் அதிகமான மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், பெற்றோர் பயந்தனர்.இந்தப் பிரச்னை பற்றி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சத்து மாத்திரைகள் சாப்பிட்டதால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு சாதாரணமானதுதான். இதில் பயப்பட ஒன்றும் இல்லை. எனினும், பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் ஆய்வு செய்து, பாதிப்புக்கான காரணத்தை கண்டுபிடித்து அறிக்கை தாக்கல் செய்ய மவுலானா மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் ராம்ஜிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இரும்பு சத்து மற்றும் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடுவதால் குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்படுவது தடுக்கப்படும். டெல்லியில் மட்டும் பள்ளிகளில் 15 லட்சம் மாத்திரைகளும், அங்கன்வாடி மையங்களில் 3 லட்சம் மாத்திரைகளும் வழங்கப்பட்டன. இதில் 200 குழந்தைகள் மட்டுமே வயிற்று வலி, வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாத்திரைகள் அனைத்தும் ஜூன் மாதம் தயாரிக்கப்பட்டவை. இதன் காலாவதி காலம், 2015ம் வரை உள்ளது. அதனால், பெற்றோர் சிறிதும் பயப்பட தேவையில்லை. மாணவர்களுக்கு மட்டுமின்றி, இந்த மாத்திரையை சாப்பிட்ட ஆசிரியர்கள் சிலரும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டனர். அவர்களும் சிகிச்சைக்கு பிறகு மாமுல் நிலைக்கு திரும்பிவிட்டனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இரட்டைப்பட்டம் வழக்கு வருகிற திங்கட்கிழமை (29.7.13) விசாரணைக்கு வரும் என இவ்வழக்கை எடுத்து நடத்தும் திரு.கலியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி: தமிழகம் தேர்வு
அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் சிறப்பான முறையில் தலைமை பண்புடன் செயல்படுவதற்காக, தேசிய அளவிலான "லீடர்ஷிப் புரோகிராம்" இங்கிலாந்து பேராசிரியர்கள் உதவியுடன் வடிவமைக்கப்பட உள்ளது.
இதற்கு, இந்தியளவில் தமிழகம் மற்றும் ராஜஸ்தான் தேர்ந்தெடுக்கப்பட்டு, பல்வேறு நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று வருகின்றனர். ஒரு பள்ளி சிறந்து விளங்க தலைமை ஆசிரியரின் பங்கு முக்கியமானது. தலைமை ஆசிரியர், தலைமை பண்பு குறித்து நன்கு அறிந்து, சிறப்பாக செயல்பட்டால், அப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் சிறப்பாக செயல்பட வாய்ப்புண்டு.
இதன் மூலம் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும். இதற்காக தேசிய அளவில் தலைமை ஆசிரியர்களுக்கு, "லீடர்ஷிப் புரோகிராம்" நடத்த திட்டமிட்டுள்ளனர்.
முதற்கட்டமாக, அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், இடைநிலைக்கல்வி உதவி திட்ட அலுவலர்கள் மற்றும், பல துறைகளில் உள்ள நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து இங்கிலாந்தில் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் மூலம், ஒரு தலைமை ஆசிரியர், தலைமை பண்புடன், எப்படி செயலாற்ற வேண்டும் என்பது குறித்து, வடிவமைக்க உள்ளனர்.
இதன் அடிப்படையில், தலைமை ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு இந்தியாவில் முதலில் தமிழகம், ராஜஸ்தான் மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசார்த்தமான பரிசோதனையை மேற்கொள்ள உள்ளனர்.
இரண்டு மாநிலங்களிலும் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில், அனைத்து மாநிலங்களிலும் இந்தபயிற்சியை துவக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்திட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நடந்தது. எங்களது கருத்துக்களின் அடிப்படையில், பயிற்சி திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, என்றார்.
EMISன் கீழ் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் தகவல் தொகுப்பு முறையின் கீழ் பதிவு செய்யப்படாத பள்ளிகள் பதிவு செய்யவும் / விவரங்களை சரிப்பார்த்து 31.07.2013 -க்குள் முடிக்க உத்தரவு - பதிவுகள் உள்ளீடு செய்ய இணைய இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
EMIS எனப்படும் கல்வி தகவல் மேலாண்மை முறை மூலம் மாணவர்களின் விவரங்களை Web - Portalல் பதிவு செய்ய தயாராக வைத்து கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்வதற்கான இணைய இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஏற்கெனவே நிலுவையில் உள்ளீடு செய்யப்படாமல் உள்ள மாணவர்களின் விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
பெருவாரியான பள்ளிகளில் மாணவர் விவரங்கள் உள்ளீடு செய்யப்பட்டுள்ள போதிலும் 2012-13ஆம் கல்வியாண்டில் அப்பள்ளியில் பயின்ற மாணவர்களின் வகுப்பு வாரியான விவரத்துடன் ஒப்பிட்டு இணையதளத்தில் உள்ள பதிவுகளோடு ஒவ்வொரு தலைமையாசிரியரும் சரிபார்த்து உறுதிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இப்பணியினை 31.07.2013க்குள் முடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
"OPTION" வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் "RE-OPTION" அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசாணை எண்.240 நாள்.22.07.2013ன் படி "RE-OPTION" வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதாவது 1.1.2006 முதல் 31.5.2009குள் இடைப்பட்ட காலத்தில் தேர்வு/சிறப்பு நிலை எய்தியவர்கள், ஆறாவது ஊதிய குழு ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளும் போது தேர்வு/சிறப்பு நிலையில் ஊதியம் பெற்று கொண்ட பின்னர் புதிய ஊதிய விகத்தில் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்ள ஏற்கனவே வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்த்தது.
உதாரணமாக பழைய ஊதிய விகிதத்தில் 1.7.2008 இல் ஒருவர் தேர்வு நிலை பெற்றிருந்தால், அவர் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்யும்போது, 1.1.2006 லேயே புதிய ஊதிய விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்துகொள்ளாமல், 1.7.2008 வரை பழைய ஊதிய விகிதத்தில் இருந்து விட்டு தேர்வு நிலை பெற்ற பின்னர் புதிய ஊதிய விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்ள OPTION கொடுக்க முன்னரே வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. அதாவது தேர்வுநிலை பெற்ற பின்னர் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்வதால் 9300 இல் ஊதிய நிர்ணயம் செய்துகொண்டு தர ஊதியம் 4300 பெறலாம்.
இந்த வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே ஊதிய விருப்பம் தெரிவித்து நிர்ணயம் செய்த ஊதியத்தை விட குறைவான ஊதியத்தில் மறு ஊதியம் நிர்ணயம் செய்ய "Re-Option" வழங்கமுடியாது.
ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் மட்டும் போதும்; மதிய உணவை கண்காணிக்க தேவையில்லை : கோர்ட் அதிரடி
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் கடமை பாடம் சொல்லி தருவது மட்டும் தான்; மதிய உணவு சமைக்கும் முறையை அவர்கள் கண்காணிக்க தேவையில்லை என அலகாபாத் ஐகோர்ட்
தெரிவித்துள்ளது. பீகாரில் கடந்த வாரம் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அலகாபாத் ஐகோர்ட் இதனை தெரிவித்துள்ளது.
ஐகோர்ட் விளக்கம் :
ரசாயன பொருள் கலந்த விஷத்தன்மை உள்ள உணவை சாப்பிட்டு பீகாரில் 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பீகாரில் சுமார் 3 லட்சம் பள்ளி ஆசிரியர்கள் மதிய உணவு திட்டத்தை புறக்கணித்துள்ளனர். இந்த விவகாரத்தின் எதிரொலியாக உத்திர பிரதேசத்தின் மீருட் பகுதியைச் சேர்ந்த பிரதானச்சாரியா பரிஷித் என்ற அமைப்பின் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் சிவ கீர்த்தி சிங், விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அதன் பின்னர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றம் ஆசிரியர்களின் கடமை மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தருவது மட்டுமே; மதிய உணவு திட்டத்தின் கீழ் உணவு தயாரித்தலை கண்காணிப்பது அல்ல என தெரிவித்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் மதிய உணவு திட்டத்தை அமல்படுத்த அதிருப்தி அடைந்துள்ளது தேவையற்றது எனவும் கோர்ட் தெரிவித்துள்ளது.
மனுவில் கோரிக்கை :
பிரதானச்சாரியா பரிஷித் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அரசு சாரா அமைப்புக்கள் பள்ளிகளில் மதிய உணவை தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைக்கக் கூடாது எனவும், இதனை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்களின் தனிப்பட்ட நேரடி கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலின் பேரில் மதிய உணவு தயாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்களின் புதிய கடமைகள் குறித்தும், மதிய உணவு திட்டத்தில் அரசு சாரா அமைப்புக்களை அனுமதிப்பது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் குறித்தும் கோர்ட் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டள்ளது.
நீதிபதிகள் உத்தரவு :
மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்; மதிய உணவு தயாரித்தல் போன்ற முக்கிய பணிகளை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே அரசு தான் தீர்மானிக்க வேண்டும்; மதிய உணவ திட்டத்தின் கொள்கைகள் குறித்து அரசு விரைவில் சமர்ப்பிக்க வேண்டும்; இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும்; அன்றைய தினம் அரசு, கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்; மறு உத்தரவு வரும் வகையில் மதிய உணவு தயாரிக்கும் பொறுப்பை அரசு சாரா அமைப்புக்களை மேற்கொள்ளும். இவ்வாறு நீதிபதிகள் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
பீகாரில் மதிய உணவு திட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பை ஆசிரியர்கள் புறக்கணித்துள்ளது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் பீகார் அரசு தெரிவித்துள்ளது. எவ்வாறு மதிய உணவு திட்டத்தை அமல்படுத்துவது குறித்து வழிகாட்ட வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டை பீகார் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
25/07/2013
தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து 60 ஆசிரியர்களுக்கு "ஆசிரியர் செம்மல்' விருதுகளை வழங்க உள்ளன.
இந்த விருதுக்கான விண்ணப்பங்களை தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் என்ற தனியார் அமைப்பு வரவேற்றுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் 8-வது ஆண்டாக விருது வழங்கப்படுகிறது.
45 முதல் 55 வயது வரையுள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், வெளிநாட்டு ஆசிரியர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
பல ஆண்டுகளாக ஆசிரியர்களாக சிறப்பாக பணியாற்றுவோர், ஏழைகள் கல்வி பெற உதவி செய்தவர்கள், சமூக சேவை செய்து வருபவர்கள், பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவி செய்வோருக்கு இந்த விருது வழங்கப்படும் என அமைப்பின் டீன் எஸ்.வஜ்ரவேலு தெரிவித்தார்.
விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் 60 பேருக்கும் சான்றிதழ், பதக்கம் மற்றும் இனிப்புகள் வழங்கப்படும். விருது வழங்கும் விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்ந்த இல்லத்தில் நடைபெற உள்ளது.
விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஏவி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்திலிருந்து விழா நடைபெறும் டாக்டர் ராதாகிருஷ்ணன் வீடு வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவர்.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பம் செய்வதற்கான இறுதிநாள் ஆகஸ்ட் 15 ஆகும்.
தலைமை ஆசிரியர் 45 பேருக்கு டி.இ.ஓ.,வாக பதவி உயர்வு
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 45 பேர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,), மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டு உள்ளனர். பள்ளி கல்வித் துறையில், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள், அதிகளவில், பல மாதங்களாகக் காலியாக இருந்து வந்தன. இந்தப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் குரல் கொடுத்தன.இந்நிலையில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 45 பேருக்கு, பதவி உயர்வு வழங்கி, கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. இதில், தொடக்கக் கல்வித் துறையில், 12 பேர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். 33 பேர், பள்ளிக் கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்தின் கீழ், மாவட்ட அளவில் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஐந்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், வேறு மாவட்டங்களுக்கு, மாற்றப்பட்டு உள்ளதாகவும்,துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இதைத் தொடர்ந்து, இந்த வாரத்திற்குள், காலியாக உள்ள, 17 முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும், பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின், இணை இயக்குனர்கள் பதவி உயர்வு, இயக்குனர் பதவி உயர்வு உத்தரவுகளும் வெளியாகும் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு அரசு பள்ளிகளில் வருகை பதிவு முறையாக கண்காணிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு :பள்ளிகல்வித்துறை இயக்குனர் தேவராஜன்
"அரசு பள்ளிக்கு, உரிய நேரத்திற்குள் ஆசிரியர்கள்வருகிறார்களா, என்பதை கண்டறிய, வருகை பதி வேட்டை,பாரபட்சமின்றி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்கவேண்டும்,'' என,பள்ளிகல்வித்துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் உரிய நேரத்திற்குள் பணிக்குவருவதில்லை. காலையில் தாமதமாக வரும் ஆசிரியர்கள்,மாலையில் முன்கூட்டியே செல்வதாக புகார்கள் எழுகின்றன.இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க,அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், உரிய நேரத்திற்குள் மாணவர்கள்,ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்துவிட்டார்களா, என கண்காணிக்கவேண்டும். தாமதமாக வரும் ஆசிரியர்களை, வருகை பதிவில்கையெழுத்திட அனுமதிக்க கூடாது. 6, 9ம் வகுப்புகளில் படிப்பில்பின்தங்கிய மாணவர்களுக்கான ("பிரிட்ஜ் கோர்ஸ்' ) பயிற்சிகளைதுவக்க வேண்டும்.
தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்கள், கோர்ட் வழக்கு சார்ந்தஆவணங்களுக்கு உரிய நாட்களில் பதில் தர வேண்டும். ஆசிரியர்கள்,மாணவர்களை உடல், மன, சமுதாய ரீதியாகநல்வழிப்படுத்தவேண்டும். பாடம் நடத்தும்போதே, பொது அறிவு,நாட்டுநடப்பு, அறிவுசார் திறன் போட்டி, ஆளுமைத்திறன் போன்றசிறந்த ஆற்றல்களை வளர்க்கவேண்டும். தமிழ்தாய் வாழ்த்து, தேசியகீதம் போன்றவற்றை, இசை ஆசிரியர் களை கொண்டு, பாடவைத்தல் போன்ற விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என,தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி தேவராஜன்இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர் நல தேசிய நிதி நிறுவனம், புது டில்லி ,தொழிற் கல்வி பட்டப் படிப்பு /பட்டயப் படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2011-2012 மற்றும் 2012-2013ஆம் ஆண்டிற்கு உதவித் தொகை விண்ணப்பம்.
click here to download the DEE proceeding of NFTW GuideLines and Application for 2011-12 & 2012-13 Educational Assistance (Link Rectified)
பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு நிபந்தனையின்றி உதவித்தொகை வழங்கப்படுகிறது.இதனை அந்தந்த கல்லூரிகளிலேயே விண்ணப்பப் படிவங்களை பெற்று உரிய சான்றுடன் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் www.tn.gov.in/bcmbcdept என்ற இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியப் பேரினமே!!! மீண்டும் நமக்கு வேதனையே மிச்சம் .... நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களைந்திட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மறியல் போராட்டத்தை அறிவித்து உள்ளது. 25.09.2013 முதல் நடைபெற உள்ள மறியல் போராட்டத்தில் அனைவரும்கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு 22.07.2013தேதியிட்டு வெளியிட்டுள்ள அரசாணைகளில் மிகவும் எதிர்பார்த்த இடைநிலைஆசிரியர்களுக்கு 9300-34800+4200 தரஊதியம்வழங்கப்படவில்லை. மறுபடியும் இடைநிலை ஆசிரியர்கள் முற்றிலுமாகபுறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களைந்திட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மறியல் போராட்டத்தை அறிவித்துஉள்ளது. 25.09.2013 முதல் நடைபெற உள்ள மறியல் போராட்டத்தில் அனைவரும்கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். குறிப்பாக இடைநிலை ஆசிரியர்கள்பெரும்எண்ணக்கையில் கலந்துகொள்ள வேண்டும். ஏனெனில் போராட்டம்கடுமையாக இல்லாவிட்டால், இத்தகைய புறக்கணிப்புகள் தொடரத்தான் செய்யும்என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்......ஆகவே ஆசிரியப் பேரினமே!ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றி பெறுவோம்!
கோரிக்கைகள்:
1. மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர் ஊதியம்மாற்றுதல்
2. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை அடியோடு இரத்து செய்தல்
3. ஆசிரியர் தகுதித் தேர்வினை இரத்து செய்தல்
4. அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் வரலாறு மற்றும் தமிழ் பட்டதாரிஆசிரியர்களை நியமனம் செய்தல்
5. பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குதல்
உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 25 முதல்மாநிலத் தலைநகர் சென்னையில் மாபெரும் மறியல் அறப்போர் மற்றும் சிறைநிரப்பும் போராட்டம்.
இன்றிலிருந்தே தயாராவோம்!
சிறைச்சாலைகளை நிரப்பிடுவோம்!
அடிப்படை வாழ்வாதார உரிமைகளை வென்றெடுப்போம்!
ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றிபெறுவோம்!
மூன்று நபர் குழு அரசாணைகள் - ஆசிரியர்களுக்கு எந்த ஊதிய விகித மாற்றமுமில்லை பலனுமில்லை.. ஆசிரியர்கள் பெருத்த ஏமாற்றம்... மாபெரும் ஆர்பாட்டத்திற்கு ஆயத்தமாகும் ஆசிரியர் சங்கங்கள்....
ஆசிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூன்று நபர் குழுவின் அறிக்கை சமர்பிக்கப்பட்ட நாள் முதலே ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் எழத்தொடங்கியது.
கடந்த ஒரு வாரமாக இப்போ வரும் அப்போ வரும் என எதிர்பார்க்கப்பட்ட அரசாணை வெளியீடு நேற்று வெளியானது. பெரும் எதிர்பார்ப்பிலிருந்த ஆசிரியர்களுக்கு தேர்வு/ சிறப்பு நிலைக்கு ஊக்க ஊதியம் கூடுதலாக மூன்று சதவீதம் என்பதை தவிர்த்து வேறு எந்த பலனும் இல்லை என்பதால் பெருத்த ஏமாற்றமாக கருதுகின்றனர்.
குறிப்பாக தேர்வு/ சிறப்பு நிலைக்கு ஊதிய விகித மாற்றம் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித மாற்றம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை என்பதால். ஆசிரியர் சங்கங்கள் தற்போதே மாபெரும் ஆர்பாட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்க ஆயத்த கூட்டங்களை நடத்தி வருகின்றனர். பல இடங்களில் வட்டார அளவிலேயே முடிவு செய்து ஆர்பாட்டங்களை அறிவித்துள்ளனர். இன்று மாலைக்குள்ளோ நாளையோ பெரும்பாலான சங்கங்கள் மாநிலம் தழுவிய ஆர்பாட்டங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது அசிரியர் சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்த போராட்டமாக மாறுமாக? என்ற ஆவலும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Selection Grade and Special Grade Notional Effect from 01.01.2006 and Monetary Effect from 01.04.2013
நபர் குழுவின் பரிந்துரையின் பேரில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 237ல் தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு 01.01.2006 தேதி முதல் 31.03.2013 வரை (பணப்பலனின்றி) சம்பளத்தில் கணக்கிடப்பட்டு அதற்கான பணப்பலன் 01.04.2013 முதல் 3% என்று வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதியம் தற்போது 3%+3% ஆக மாற்றி வழங்கப்படும்.
01.01.2006 முதல் 31.05.2009 வரை தேர்வு நிலை / சிறப்பு நிலை முடித்தோற்கு ஊதிய விகிதம் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால், 01.06.2009க்கு பின் தேர்வு நிலை / சிறப்பு நிலை முடித்தோற்கு ஊதிய விகிதம் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை, அவர்களுக்கு 3% ஊக்க ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டது. அது தற்போது தற்போது 01.01.2006 முதல் இந்த ஆணை அமுலுக்கு வருவதால், ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்பட்ட ஆசிரியர்களும் பலன் பெறுவர்.
24/07/2013
6th Pay Commission - 3 Member Committe Report Submit-O | 6-வது ஊதியக்குழு குறைபாடுகளுக்காக அமைக்கப்பட்ட மூன்று நபர் குழுவின் அறிக்கை சமர்பிப்பு - அரசாணை ......
இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை.
தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%) பெற ஆணை.
மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பணியிடத்திற்கு தர ஊதியம் ரூ.4900 முதல் ரூ.5100 உயர்த்தி உத்தரவு.
01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.
01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.
6th Pay Commission - 3 Member Committe Report GO Part-1
6th Pay Commission - 3 Member Committe Report GO Part-2
தமிழகத்தில் 17000 பள்ளிகளில் 2 ஆசிரியர் மட்டுமே உள்ளனர்
தமிழகத்தில் 17000 தொடக்கப்பள்ளிகளில் 2 ஆசிரியர்களேபணியாற்றுவதாக அரசு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டில்மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் 6 முதல் 14வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்றுதெரிவித்துள்ளது. இதையடுத்து 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளைபள்ளிகளில் சேர்ப்பதில் பல்வேறு சலுகைகளை அறிவித்து அரசு உத்தரவிட்டது.இந்நிலையில் தொடக்கப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இருக்கிறார் களாஎன்பது குறித்து பள்ளிக் கல்வி மேலாண்மை தகவல்(எஸ்.இ.எம்.ஐ.எஸ்) மையம்சமீபத்தில் நடத்திய ஆய்வில் சில பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவும், 17000பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவும் இயங்குவது தெரியவந்துள்ளது.
கடந்த 2011,12ம் ஆண்டு கணக்குப்படி தமிழகத்தில் 34871 தொடக்கப் பள்ளிகள்இயங்கின. அவற்றில் 60986 ஆசிரியர்களும், நிதியுதவி பெறும் பள்ளிகளில் 24338ஆசிரியர்களும் பணியாற்றினர். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 33000தொடக்கப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் சுமார் 30 லட்சம் குழந்தைகள் படிக்கின்றனர்.தொடக்கப் பள்ளிகள் குறித்து எஸ்.இ.எம்.ஐ.எஸ் எடுத்த புள்ளிவிவரப்படி மேற்கண்டதகவல் பெறப்பட்டுள்ளது.
மேலும் மலைப்பிரதேசம், எல்லையோரம் போன்ற பகுதிகளில்இயங்கும் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே உள்ளதாகஅந்த புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. இது தவிர 5 குழந்தைகள் மட்டுமே படிக்கும்பள்ளிகள் 500 என்பதும் தெரியவந்துள்ளது. 5 முதல் 25 குழந்தைகள் இருந்தாலும்அந்த பள்ளிக்கு 2 ஆசிரியர்தான் நியமிக்க முடியும் என்பதால் இரண்டு ஆசிரியர்களைகொண்டே இவை இயங்குகின்றன. இந்த விவரம் தற்போது மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூறுகையில்,தமிழகத்தில் ஓராசிரியர் பள்ளிகள் என்பது கிடையாது. ஆனால் 2 ஆசிரியர்கள்பணியாற்றும் பள்ளிகளில் ஒருவர் மாறுதலாகியோ, மாற்றுப்பணிக்கோசென்றுவிட்டால் ஒரு ஆசிரியர்தான் கவனிக்க வேண்டும். தொடக்கப் பள்ளிஆசிரியர்களுக்கு புள்ளி விவரம் எடுப்பது, மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல்பணி, உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்துவதால் ஒரு ஆசிரியர்தான்பள்ளிகளில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆசிரியர் மாணவர் விகிதாசாரப் படி,குறைந்த மாணவர் உள்ள பள்ளிக்கு 2 ஆசிரியருக்கு மேல் நியமிக்க முடியாது என்றுவிதி உள்ளதே இதற்கு காரணம். இதுபோன்ற பள்ளிகளில் அதிக மாணவர்களைசேர்த்து தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
ஆசிரியர் அல்லாத பள்ளிகள் - சர்வேயில் அதிர்ச்சி -ராஷ்ட்ரியமத்யமிக் சிக்ஷா அபியான் சர்வே, தகவலைவெளியிட்டுள்ளது.
தமிழத்தின் 16 பள்ளிகளில் சுத்தமாக ஆசிரியர்களே இல்லைஎன்றும், பல பள்ளிகளில் 1 அல்லது 2 ஆசிரியர்களேஉள்ளனர் என்றும், ராஷ்ட்ரியமத்யமிக் சிக்ஷா அபியான் சர்வே, அதிர்ச்சி தகவலைவெளியிட்டுள்ளது.
ஆர்.எம்.எஸ்.ஏ., என்று சுருக்கமாக அழைக்கப்படும் அந்த சர்வே(2012-13)தெரிவிக்கும் பல அதிர்ச்சி தகவல்கள் பின்வருமாறு; தமிழகத்திலுள்ள 16பள்ளிகளில், சுத்தமாக, ஆசிரியர்களே இல்லை. அத்தகையப் பள்ளிகள், விழுப்புரம்,சென்னை, வேலூர், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளன.இதைத்தவிர, மாநிலத்தின் 2,253 பள்ளிகளில், ஒரே ஒரே ஆசிரியர்தான் உள்ளார்.இதுபோன்ற பள்ளிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் அதிகளவில் உள்ளன.அம்மாவட்டத்தின் 195 பள்ளிகளில் இந்த நிலை. மற்றபடி, ஒற்றை ஆசிரியர்பள்ளிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 159ம், சிவகங்கை மாவட்டத்தில் 134ம்,வேலூர் மாவட்டத்தில் 127ம், விழுப்புரம் மாவட்டத்தில் 113ம் மற்றும்தர்மபுரிமாவட்டத்தில் 131ம் உள்ளன.
இதில், ஒரு பெரிய கொடுமை என்னவெனில், மேல்நிலைப் பள்ளிப்படிப்பை மேற்கொள்ளும் 765 மாணவர்கள் உள்பட, மொத்தம் 83,641 மாணவர்கள்,இந்த ஒற்றைஆசிரியர்கள் பள்ளிகளை சேர்ந்தவர்கள். தமிழகத்தின் 16,421 பள்ளிகள்,வெறும் இரண்டு ஆசிரியர்களை மட்டுமே கொண்டவை.
உண்மையை சொல்ல வேண்டுமெனில், தமிழகத்திலுள்ள மாநில அரசு நடத்தும்,மத்திய அரசு நடத்தும் மற்றும் தனியார்நடத்தும், ஆகிய வகைப்பாடுகளைச் சேர்ந்தபள்ளிகளில், மூன்றில் ஒரு பங்கிற்கும் கூடுதலான பள்ளிகளில், 3க்கும் குறைவானஆசிரியர்களே பணியாற்றுகிறார்கள். பல வகுப்புகளில், பலவிதமான பாடங்களைநடத்த, 1 அல்லது 2 ஆசிரியர்களே, பல அரசுப் பள்ளிகளில் இருக்கிறார்கள் என்று,கல்வித்துறை நிபுணர்கள், பல்வேறு சமயங்களில் சுட்டிக்காட்டியே வந்துள்ளனர்.இதனாலேயே, பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில்சேர்க்கிறார்கள். தமிழகத்தில், நிரப்புவதற்கு அனுமதியளிக்கப்பட்ட 21,931 ஆசிரியப்பணியிடங்கள், இன்னும் காலியாகவே உள்ளன.வேலூர் மாவட்டத்தில் மட்டும்,நிரப்பப்பட வேண்டிய, அனுமதியளிக்கப்பட்ட ஆசிரிய பணியிடங்கள் 3,000 உள்ளன.
சேலம், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள்,அனுமதியளிக்கப்பட்ட அதிக ஆசிரியப் பணியிடங்களை நிரம்பாமல் இருக்கும்இதரமாவட்டங்கள். அதேசமயம், சென்னை போன்ற மாவட்டங்களில்,அனுமதியளிக்கப்பட்ட இடங்களுக்கும் அதிகமாகவே, ஆசிரியர்கள்கிடைக்கின்றனர்.மேற்கூறிய பிரச்சினைகளால், ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தில் பெரும்சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற விகிதாச்சார சிக்கல்கள் நிறைந்ததாக,மொத்தம் 55 பள்ளிகள் வேலூர் மாவட்டத்தில் உள்ளன. இதுதவிர, காஞ்சிபுரம்மாவட்டத்தில் 49ம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 36ம், கடலூர் மாவட்டத்தில் 27ம்,சென்னை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் 25ம் உள்ளன
23/07/2013
CPS திட்டத்தில் செலுத்தப்படும் சந்தா தொகையை பங்கு சந்தைகளில் முதலீடு செய்வதை எதிர்த்து போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் கடந்த மார்ச் மாதம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இரண்டு வார காலத்திற்கு தடையாணை பெற்ற விவரத்தை குறிக்கும் தடையாணை நகலை உங்களுக்காக வெளியிடுகிறோம்.
தற்போது தமிழகத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் இத்திட்டத்தின் மூலம் செலுத்தப்படும் சந்தா தொகையினை சந்தைகளில் முதலீடு செய்வது தொடர்பாக ஆசிரியர்களிடம் கையொப்பம் கேட்கப்பட்டதாகவும், அதற்க்கு ஆசிரியர்கள் கையெழுத்திடவில்லை என்றும் அறிய வருகிறோம்.
மூன்று நபர் குழுவின் அறிக்கையை ஏற்று விரைவில் அரசாணை வெளியிட உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக் குழுவின் ஊதியம் 01.01.2006 முதல் நடைமுறைபடுத்தப்பட்டது. பின்பு ஆறாவது ஊதியக் குழுவில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததையொட்டி அக்குறைபாடுகளை களைய ஒரு நபர் குழு அறிவிக்கப்பட்டது. அதன் அறிக்கை மீது அப்போதைய அரசு நடவடிக்கை எடுத்தது. எனினும் குறைபாடுகள் பெரிய அளவில் களையப்படவில்லை என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் முதல்வருக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து மாண்புமிகு தமிழக முதலைமைச்சர் அவர்கள் மூன்று நபர் குழு ஒன்றை அமைத்து அதன் பரிந்துரையின் அடிப்படையில் ஆறாவது ஊதியக் குழு குறைப்பாடுகள் களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்தார்.இதனடிப்படையில் தற்பொழுது மூன்று நபர் குழுவின் அறிக்கையை தமிழக அரசு ஏற்று துறை வாரியாக அரசாணைகளை வெளியிட உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 89 அரசாணைகள் பிறப்பிக்கப்பட உள்ளதாகவும், துறை வாரியான அரசாணைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளிக்கல்வித்துறைக்கு 3 அரசாணைகள் பிறப்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசு சார்பு அலுவலர் பதில்கள்.ஊதிய திருத்தம் என்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது.
ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படை யில் Diploma Qualification உள்ள பணியிடங்களுக்கு ரூ.2800 லிருந்து ரூ.4200/-ஆக திருத்தியமைக்கப்பட்டது. ஆனால் இநிஆ பணியிடத்திற்கு மாற்றப்படவில்லை - -பொது தகவல் அலுவலர்
வழக்கு எண்: MP(MD)No:2 of 2012 in W.P.(MP)No:9218/2012. Date:11.07.2012 இவ்வழக்கில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ . 9300 - 34800 + 4200(GP) என்ற சம்பள விகிதத்தினை அரசிடம் பரிந்துரை செய்வோம் என பதில்
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு; நிதிச் செயலாளர், இயக்குநர் மற்றும் கல்வி அலுவலர்கள் ஆஜராக தலைமை நீதிபதி உத்தரவு.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் உள்ளஆசிரியர்களில் பணிபுரிபவர்கள், ஓய்வு பெற்றவர்கள் என்று வழக்கு தொடுத்துவருகின்றனர். இதில் 2012ல் W.P.(MD).NO.3802/2012 திரு.ஏங்கல்ஸ் அவர்களால் தொடரப்பட்ட வழக்கு ஜூலை 5ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்தவழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை தலைமை நீதியரசர் ராஜேஷ் குமார்
அகர்வால் இந்த வழக்கில் பிரதிவாதிகளான நிதித்துறை செயலாளர், தொடக்கக்கல்வி இயக்குநர், திண்டுக்கல் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும்உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதிநேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுபிறப்பித்துள்ளது.
01.08.2013 & 02.08.2013 பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் / மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம்
தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்டங்களை சார்ந்த அனைத்து முதன்மைக் கல்விஅலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் வரும் ஆகஸ்ட்01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.மேற்படி ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும்மாவட்டக் கல்வி அலுவலர்கள் தவறாது கலந்து கொள்ள உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் ஆய்வுக் கூட்டம் ஜூலை 25 மற்றும் 26 ஆகியநாட்களில் நடைபெறவிருந்தது, தற்பொழுது ஆகஸ்டு 1,2 ஆகிய தேதிகளில்நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அரசின் விலையில்லா திட்டங்கள், மாணவ /மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ள இருப்பிட, சாதி, வருமான சான்றிதழ் விவரங்கள்,சிறப்பு ஊக்க தொகை, வங்கி கணக்கு துவக்கிய விவரம், தொழிற்கல்வி பிரிவுபயின்ற மாணவ / மாணவியருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கிய விவரம்,ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட முதுகலை பட்டதாரிஆசிரியர்கள் பணியில் சேர்ந்தவர்கள் மாறும் சேராதவர்கள் விவரம்,மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி அலுவலகங்கள் / பள்ளிகளில் காலியாக உள்ளபணியிடங்கள் விவரம் ஆகியவை ஆய்வுக் கூட்டத்திற்கு முன் சமர்பிக்க அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தன்று பள்ளிகளில் மரக்கன்று நட வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினவிழா பள்ளிகளில் கொண்டாடப்படுவதுதொடர்பாக அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் தொடக்க கல்விஇயக்குநரால் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:ஆகஸ்ட் 15ம் தேதி வியாழக்கிழமை சுதந்திர தின விழாஅனைத்து தொடக்க, நடுநிலை பள்ளிகளில் சுதந்திர தினவிழா கொண்டாடப்படவேண்டும். பள்ளி அளவிலும், சரக அளவிலும் மாணவ, மாணவியரிடையேநாட்டுப்பற்றையும், பண்பாட்டையும் விளக்கும் வகையில் போட்டிகளை நடத்திபரிசுகள் வழங்க வேண்டும். மேலும், அன்று அனைத்து பள்ளிகளிலும் மரக்கன்றுகள்நட்டு பராமரிக்க வேண்டும். வனத்துறையினரிடம் மரக்கன்றுகளை இலவசமாகபெற்று பள்ளி வளாகத்தில் மாணவர்களை கொண்டு மரக்கன்று களை நட வேண்டும்.இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனகூறப்பட்டுள்ளது
மாத சம்பளக்காரர்களுக்கு அளித்த சலுகை நீட்டிப்பு இல்லை; ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் இருந்தாலும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல்
ரூ.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் உள்ள மாத சம்பளக்காரர்களும்இனிமேல் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம்கூறியுள்ளது. விலக்கு ரூ.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் உடைய மாதசம்பளக்காரர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்குஅளிக்கப்பட்டு இருந்தது. மத்திய நேரடி வரிகள் வாரியம் அளித்த இச்சலுகையின்படி, 2011–2012 மற்றும் 2012–2013 ஆகிய மதிப்பீட்டு ஆண்டுகளில், ரூ.5 லட்சத்துக்கு கீழ்,வருமானம் கொண்டவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை.
தாக்கல் செய்ய வேண்டும்
இந்நிலையில், அவர்களும் இனிமேல் வருமான வரி கணக்கு தாக்கல்செய்ய வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுஇருப்பதாவது:– ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் கொண்ட மாத சம்பளக்காரர்கள்வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு 2011–2012 மற்றும் 2012–2013 ஆகியமதிப்பீட்டு ஆண்டுகளில் மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. அவர்கள்படிவங்களை தாக்கல் செய்வதாலும், அந்த விவரங்களை ஊழியர்கள் மூலம்கம்ப்யூட்டரில் பதிவேற்றுவதில் உள்ள சிரமம் காரணமாகவும் இந்த விலக்குஅளிக்கப்பட்டது.
எளிமையான ஆன்லைன்
ஆனால், தற்போது ஆன்லைனில் கணக்கு தாக்கல் செய்யும் முறைஅறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அது மிகவும் எளிமையாக இருக்கிறது. எனவே, ரூ.5லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் கொண்ட மாத சம்பளக்காரர்களுக்கான விலக்குநீட்டிக்கப்படவில்லை. அவர்கள் 2013–2014–ம் மதிப்பீட்டு ஆண்டுக்கு வருமானவரிகணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அவர்கள் ஆன்லைன் முறையில் தாக்கல்செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆன்லைன் முறை, எளிதானது,பாதுகாப்பானது. அதில் டிஜிட்டல் கையெழுத்தும் கட்டாயம் இல்லை. அவர்கள்ஆன்லைனில் தாக்கல் செய்த படிவங்கள், மிகவிரைவாக கையாளப்படும். இவ்வாறுமத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.
கட்டாயம்
5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட மாத சம்பளக்காரர்கள்ஆன்லைன் மூலம் கணக்கு தாக்கல் செய்வதை வருமான வரித்துறை கடந்த மேமாதம் கட்டாயம் ஆக்கியது குறிப்பிடத்தக்கது.
22/07/2013
இரட்டைப்பட்டம் சார்பான நீதிமன்ற விசாரணையின் தற்போதைய நிலை?
பொதுவாக சென்னை உயர்நீதி மன்றத்தில் பல நீதியரசர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. தலைமை நீதிபதி மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு பொறுப்பாக சென்ற வாரம் முழுவதும் மதுரையில் இருந்தார் எனவும், எனவே இந்த வாரம் கட்டாயம் விசாரணைக்கு வரும் என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன்.
இரகசியம் காக்கப்படும் இந்த விசாரணை நாளை வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த வழக்கை தலமையேற்று நடத்தி வரும் திரு.ஆரோக்கியராஜ், திரு.கலியமூர்த்தி, திரு.கருணாலயபாண்டியன் ஆகியோர் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
வழக்குரைஞர் திரு.ஜி.சங்கரன் மற்றும் மூத்த வழக்குரைஞர்கள் இந்த வழக்கில் வாதாட இருக்கிறார்கள். விறுவிறுப்பாகச் செல்ல இருக்கும் இந்த வழக்கு விசாரணையை எதிர்ப்பார்த்து பல்லாயிரக்கணக்காண ஆசிரியர்கள் பதவி உயர்வுகாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். வழக்கு விசாரணை பற்றி மேல்தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றப்படும்.
வங்கிக் கணக்கில் உதவித்தொகை: அரசு கட்டாய உத்தரவு
"கல்வி உதவித் தொகையை, மாணவர்களுக்கே நேரடியாகச் செலுத்த, "கோர் பாங்கிங்" உள்ள வங்கிகளில் மட்டுமே, கணக்குத் துவக்க வேண்டும்" என அரசுகட்டாய உத்தரவிட்டு உள்ளது. அரசு மற்றும் உதவி பெறும்பள்ளிகளில் படிக்கும், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பிற்பட்ட,மிகவும் பிற்பட்ட, ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கல்விஉதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த காலங்கள் வரை, முதன்மைக் கல்விஅலுவலகத்திற்கு, அரசு மாணவர்களின் பெயர்ப் பட்டியல் படி, கல்விஉதவித்தொகைக்கான, காசோலையை அரசு அனுப்பிவிடும். இவர்கள், அந்தந்தபள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பிரித்து வழங்கி, மாணவர்களிடத்தில் வழங்குவர்.சில பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழங்கிய, கல்வி உதவித்தொகையை முறைகேடாக எடுத்துச் செலவு செய்ததாக, அரசுக்குப் புகார் சென்றது.இதுபோன்று, மாணவர்களுக்கு வழங்கும் கல்வி உதவித் தொகையில் ஏற்படும்முறைகேடுகளைக் களைய, நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கே, அரசுகல்வி உதவித் தொகையை ஆண்டுதோறும் செலுத்த முடிவு செய்தது.
அந்த வகையில், "கோர் பாங்கிங்" வசதியுள்ள வங்கிகளில் மட்டுமே,மாணவர்கள் தமது வங்கிக் கணக்குகளைத் துவக்க, பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு உத்தரவிடுமாறு, அரசு கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு உள்ளது.ஆதிதிராவிடர், பிற்பட்டோர் நலத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "2013-14ம்கல்வி ஆண்டு முதல், மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கே, கல்வி உதவித் தொகைசெலுத்த வேண்டும் என, அரசு கட்டாய உத்தரவிட்டு உள்ளது. இதற்காகவே, "கோர்பாங்கிங்" வசதியுள்ள வங்கிகளில் மட்டுமே, கணக்குத் துவக்க, மாணவர்களுக்குஅறிவுறுத்தி வருகிறோம்" என்றார்.
மாணவ, மாணவியருக்கு இரண்டாவது, "செட்"சீருடை சுதந்திர தினத்தன்று கிடைக்கும்
சுதந்திர தினத்தன்று, அரசு பள்ளி மற்றும் விடுதி மாணவ, மாணவியர்,புத்தாடை உடுப்பதற்கு வசதியாக, அவர்களுக்கு இரண்டாவது, "செட்" சீருடை,அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசுநிதிஉதவி பெறும் பள்ளிகளில், மதியம் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு, அரசுசார்பில், இலவச சீருடை வழங்கப்படுகிறது. அதேபோல், அரசு விடுதிகளில் படிக்கும்மாணவ, மாணவியருக்கும், இலவச சீருடை வழங்கப்படுகிறது. இவர்கள்அனைவருக்கும், நான்கு, "செட்" சீருடை வழங்க, தமிழக முதல்வர் உத்தரவிட்டுஉள்ளார். அதன்படி, 47 லட்சம் மாணவ, மாணவியருக்கு, நடப்பாண்டு, ஒரு, "செட்"சீருடை வழங்கப்பட்டு உள்ளது. இவர்களில், 13 லட்சம் மாணவியருக்கு பாவாடை, 10லட்சம் மாணவியருக்கு சுடிதார், 25 லட்சம் மாணவர்களுக்கு டவுசர் மற்றும் பேன்ட்வழங்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு சீருடை தைப்பதற்கு, 1.45 கோடி மீட்டர் துணிபயன்படுத்தப்பட்டு உள்ளது.
முதல்வர் அறிவித்தபடி, நான்கு, "செட்" சீருடைகளை, நான்குதவணைகளாக வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். அதன்படி, பள்ளிதுவங்கியதும், முதல், "செட்" சீருடை வழங்கப்பட்டது. அடுத்து சுதந்திர தினத்தன்று,மாணவ, மாணவியர் புத்தாடை உடுப்பதற்கு வசதியாக, இரண்டாவது, "செட்"சீருடை, அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளது. மூன்றாவது, "செட்" சீருடைதீபாவளிக்கும், நான்காவது, "செட்" சீருடை, குடியரசு தின விழாவிற்கும் வழங்கப்படஉள்ளது. இதற்கான நடவடிக்கைகளை, அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர்.
இதுகுறித்து, சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இம்முறைதரமான சீருடை வழங்கப்பட்டு உள்ளது. ஒரு, "செட்" சீருடைக்கு, 300 ரூபாய்செலவிடப்பட்டு உள்ளது. இரண்டாவது, "செட்" சீருடை வினியோகம், அடுத்த வாரம்துவங்க உள்ளது. அனைத்து மாணவ, மாணவியருக்கும், உடனடியாக சீருடைகிடைக்க ஏற்பாடு செய்யும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
21/07/2013
அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டைவிட 90 ஆயிரம் அதிகரிப்பு
அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 90 ஆயிரம் அதிகரித்துள்ளதாக தொடக்கக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள சுமார் 35 ஆயிரம் பள்ளிகளில் இந்த ஆண்டு (2013-14) 4 லட்சத்து 8 ஆயிரத்து 871 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு மொத்தமாக 3 லட்சத்து 18 ஆயிரத்து 995 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்ந்தனர்.
ஆங்கில கல்வி மோகம், ஆசிரியர் காலிப்பணியிடங்கள், அரசுப் பள்ளிகளில் மோசமான வசதி போன்ற காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் தொடர்ந்து சரிவில் இருந்து வந்தது.
2008-09-ஆம் ஆண்டில் 4 லட்சத்து 28 ஆயிரமாக இருந்த மாணவர் சேர்க்கை 2012-13-ஆம் ஆண்டு 3 லட்சத்து 18 ஆயிரமாகக் குறைந்தது. நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 43 ஆயிரம் அதிகரித்து 2 லட்சத்து 7 ஆயிரமாக இருந்தது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம், அடிப்படை வசதிகள் மேம்பாடு, ஆங்கில வழி வகுப்புகள் தொடக்கம், இலவசத் திட்டங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆங்கில வழி வகுப்புகள் காரணமாகவே மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு கணிசமாக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு 3 ஆயிரத்து 500 தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 20 மாணவர்கள் வரை இந்த வகுப்புகளில் சேர்ந்துள்ளனர். மொத்தமாக 80 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளில் சேர்ந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் மிக அதிகம்: மாநிலத்திலேயே அதிக அளவாக வேலூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 486 மாணவர்கள் இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 6 ஆயிரம் அதிகம் ஆகும்.
கோவை, கடலூர், காஞ்சிபுரம், மதுரை, அரியலூர், சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் மிக அதிக அளவாக 8 ஆயிரம் மாணவர்கள் இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாணவரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்தாலும் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இந்த மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1,201 மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் சேர்ந்தனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 2,896 ஆக அதிகரித்துள்ளது. எனினும், இந்த எண்ணிக்கைதான் மாநிலத்திலேயே மிகக் குறைவான எண்ணிக்கையாகும்.
சென்னை மாவட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
20/07/2013
பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்
சென்னை : பள்ளியில் அமைச்சர் ஆய்வின்போது பணிக்கு வராத சத்துணவு அமைப்பாளர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த 2 நாட்களில் இதுவரை மொத்தம் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் இறந்த விவரகாரம் பரபரப்பு அடங்கும் முன் னர் தமிழகத்தில் நெய்வேலியில் சத்துணவு சாப்பிட்ட 157 மாணவிகளுக்கு நேற்று முன்தினம் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி சென்னை திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று சோதனை நடத்தினார். அப்போது மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு உணவு தயாரிக்கும் சமையல் கூடம் பூட்டிக் கிடந்தது. இதுபற்றி அமைச்சர் கேட்டபோது, சத்துணவு அமைப்பாளர் வரவில்லை என தெரியவந்தது. இதையடுத்து, அமைப்பாளர் அமலாமேரியை செல்போனில் அழைத்து அமைச்சர் விசாரித்தார். அப்போது அவர் கூறிய காரணங்களை அமைச்சர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து, கலெக்டருடன் பேசிய அமைச் சர், சரியான நேரத்துக்கு வராத அமைப்பாளர், உதவியாளர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண் டார். இதையடுத்து அமைப்பாளர் அமலா மேரி,உதவியாளர்கள் இந்திரா, ஏகவள்ளி, ஆயா சந்திரா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறியுள்ளார். கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி சத்துணவு கூடத்தில் கடலூர் கலெக்டர் கிர்லோஷ்குமார் நேற்று மதியம் அதிரடி ஆய்வு நடத்தினார். கடலூர் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று மதியம் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சத்துணவு மாதிரிகள் எடுக்கப்பட்டன. அவை, சென்னை கிண்டியில் உள்ள சோதனை கூடத்துக்கு அனுப்பப்பட்டன. நெய்வேலியில் உள்ள என்எல்சி பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 157 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து அந்த பள்ளியின் சத்துணவு அமைப்பா ளர், உதவியாளர் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்ய கடலூர் கலெக்டர் உத்தர விட்டுள்ளார்.
மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதியாத 2,824 பள்ளிகளுக்கு ஜூலை 27ம் தேதிக்குள் முடிக்க கெடு
தமிழகத்தில் 55,667 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் படிக்கும் பள்ளி, மாணவர்களின் விவரங்களை கல்வித்தகவல் மேலாண்மை முறையின் (இஎம்ஐஎஸ்) கீழ் இணையதளத்தில் பதிவு செய்ய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனி அடையாள குறியீடு, பாஸ்வேர்டு கொடுக்கப்பட்டது. அதில் 2012,13 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களின் விவரங்கள் மட்டும் பதிவு செய்யப்பட்டன.
கடந்த பிப்.15ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் 2,824 பள்ளிகள் மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதியவில்லை. இதையடுத்து பதிவு செய்யாத பள்ளிகளை ஜூலை27ம் தேதிக்குள் பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை உத்தரவு: கல்வித் தகவல் மேலாண்மை முறையின் கீழ் 2,824 பள்ளிகள் பதிவு செய்யப்படவில்லை என தெரிகிறது. எனவே பதிவு செய்யப்படாமல் உள்ள பள்ளிகளுக்காக மீண்டும் மாவட்டம், ஒன்றியம் வாரியாக குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த குறியீட்டை பயன்படுத்தி இஎம்ஐஎஸ் இணையதளத்தில் புதிய பதிவுகளை உருவாக்க வேண்டும். அதில் 2012,13ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களின் விவரங்களை மட்டுமே வகுப்பு வாரியாக பதிவு செய்ய வேண்டும். மாணவர் பெயர், பிரிவு, தாய், தந்தை, முகவரி, தொழில், குடும்ப வருமானம் உள்ளிட்ட 30 விவரங்களை பதிய வேண்டும். இப்பணிகளை ஜூலை 27ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
சத்துணவை ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர் ஆகியோர் சாப்பிட வேண்டும். இவர்கள் சாப்பிட்டு அரை மணி நேரத்துக்கு பிறகு தான் மாணவிகளுக்கு வழங்க வேண்டும்.
பள்ளிகளில் சத்துணவை தலைமை ஆசிரியர் சாப்பிட்ட 30 நிமிடம் கழித்த பிறகுதான் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பீகார் மற்றும் நெய்வேலி சம்பவத்தை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளில் சத்துணவை பள்ளி தலைமை ஆசிரியர்கள், சத்துணவு அமைப் பாளர், சமையலர் சாப்பிட்டு அரை மணி நேரத்துக்கு பிறகு மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள், கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
பள்ளிகளில் சத்துணவு விநியோகிக்கும் முறையை தீவிரமாக கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அவசரமாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதைத் தொடர் ந்து மாவட்ட கலெக்டர்கள் கல்வித் துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில், பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் சத்துணவு தயாரிக்கும் பணியை தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். மேலும், சத்துணவை ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர் ஆகியோர் சாப்பிட வேண்டும். இவர்கள் சாப்பிட்டு அரை மணி நேரத்துக்கு பிறகு தான் மாணவிகளுக்கு வழங்க வேண்டும். இந்த விதிமுறையை கடைப்பிடிக்காத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சுற்றிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவை அமைப்பா ளர் சாப்பிட்டு பார்த்த பிறகுதான் வழங்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அந்த விதிமுறையை யாரும் கடைப்பிடிக்கவில்லை. இப்போது நெய்வேலி சம்பவத்துக்குப் பிறகு, இந்த உத்தரவை பள்ளி தலைமை ஆசிரியரும் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது
19/07/2013
கூடுதல் ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழாசிரியர்களுக்கு முன்னுரிமை
உயர்நிலைப்பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யும் போது, தமிழாசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க, அரசு பரிசீலனை செய்து வருகிறது. உயர்நிலைப்பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம்,
பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. 160 மாணவர்கள் இருந்தால், ஐந்து ஆசிரியர்கள் இருப்பார்கள். 160 க்கு மேல் மாணவர்கள் இருக்கும் போது, கூடுதலாக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய வேண்டும்.
அப்படி பணி நியமனம் செய்யும் பட்சத்தில், முதலில் தமிழாசிரியர்கள், இரண்டாவதாக கணித ஆசிரியர், மூன்றாவதாக அறிவியல் ஆசிரியர், நான்காவதாக சமூக அறிவில் ஆசிரியர், ஐந்தாவது ஆங்கில ஆசிரியர் என்ற வரிசைப்படி, பணி நியமனம் செய்ய, அரசு பரிசீலனை செய்து வருகிறது. முன்பு, தமிழாசிரியர்கள் நியமனமானது, ஐந்தாவது நிலையில் இருந்தது. தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இதை மாற்றி, முதல் இடத்திற்கு கொண்டு வர, அரசு பரிசீலனை செய்து வருகிறது. விரைவில் கூடுதல் ஆசிரியர்கள் பணி நியமனம் வரவிருப்பதால், தமிழாசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்
பள்ளிக்கல்வி துறையில் விரைவில் 1,800 பேர் பணி நியமனம்
பள்ளி கல்வித் துறையில், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களில், 1,800 பேர், விரைவில், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
கல்வித் துறையில், பணியின் போது மரணம் அடைந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு, படிப்படியாக, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. 2001 வரை விண்ணப்பித்த, 400க்கும் மேற்பட்டோருக்கு, ஏற்கனவே, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
தற்போது, 2009 வரை காத்திருக்கும், 500 பேருக்கு, விரைவில் வேலைவாய்ப்பு வழங்க, பள்ளி கல்வித்துறை, நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக, விண்ணப்ப சரிபார்ப்பு பணி, மாவட்ட கல்வி அலுவலகங்களில் நடந்து வருகிறது.
"தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர், சரிபார்ப்பு பட்டியலில், தங்களின் பெயர் இருக்கிறதா என்பதை, மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம், உறுதி செய்து கொள்ளலாம்" என துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், ஆக., 25ம் தேதி நடக்கும் "குரூப்-4" தேர்வு மூலம், பள்ளி கல்வித்துறைக்கு, 1,300 இடங்கள் ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன
18/07/2013
மதிய உணவு திட்டத்தை கண்காணிக்க புதிய குழு: மத்திய அரசு
பீகாரில் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு தரமானது என்பதை ஆய்வு செய்ய புதிய கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பீகாரில் நடந்த இந்த துயர சம்பவத்தை அடுத்து, மதிய உணவு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைவதில் மத்திய அரசு இனி கவனம் செலுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக சத்துணவு தரமானது என்பதை ஆய்வு செய்ய புதிய கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மதிய உணவு திட்டத்தை செயல்படுத்துவதில் மாநில அரசுகளும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மதிய உணவு திட்டத்தை கண்காணிக்க மத்திய அரசால் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 2 குழுக்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு மாநிலத்திலும் இத்திட்டத்தை ஆய்வு செய்து வருகிறது. இக் குழுக்களில் ஒன்று பீகாரில் மதிய உணவு திட்டம் மோசமாக செயல்பட்டு வருவதாக அம்மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஆன்லைனில் ஹால்டிக்கெட் எடுக்க புதிய முறை
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஇருப்பதாவது:–
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு 21–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 664 பேர்விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 532பேர் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்துவிட்டனர். 8ஆயிரம் பேர் ஆன்லைனில் ஹால்டிக்கெட் எடுக்க முயற்சிமேற்கொண்டும் அதில் வெற்றிபெறவில்லை. 27,500 ஹால்டிக்கெட்டைஎடுப்பதற்கான முயற்சிகூட செய்வில்லை. பெரும்பாலானவிண்ணப்பதாரர்கள் தங்கள் பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டுஉள்ளனர் (அதாவது எழுதி இருப்பது ஒன்று, ஷேடிங் செய்திருப்பதுஒன்று). அத்தகைய விண்ணப்பதார்களுக்கு உதவும் வகையில்ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்து எடுக்கும் முறைமாற்றியமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின்இணையதளத்தில் (www.trb.tn.nic.in) விண்ணப்ப எண்ணையும், ஏதாவதுஒரு பிறந்த தேதியையும் குறிப்பிட்டால் போதும். ஹால்டிக்கெட்டைடவுன்லோடு செய்து எடுத்துக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
17/07/2013
வங்கி சேவைகளில் குறைபாடா? புகார் அளிக்க இருக்கிறது"ஒபட்சுமேன் { Ombudsman } வசதி
ATM /BANK சம்பந்தப்பட்ட மிக மிக முக்கியமான செய்தி
இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது
என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.
அப்படியொரு சுவாரசியமான செய்தி தான் நேற்று சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார்.
அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது.
உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார்.
வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.
இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார்.
அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார்.
அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார்.
அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக
ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.
மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.
பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர்.
அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர்.
மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .
இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman }
சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள்.
நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.
மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது.
இதை பார்கையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது.
எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை
TO READ MORE { Ombudsman }
PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS
பாரதிதாசன் பல்கலைகழக தொலைதூர பி.எட். சேர்க்கை அறிவிப்பு
2013-14 பி.எட் சேர்க்கை
படிவ விலை- ரூ500
கடைசி தேதி- 19-8-13
தேர்வு நாள்- 29-9-13 (11am-1pm)
விண்ணப்ப விற்பனை பிற விபரங்களுக்கு www.bdu.ac.in
Coimbatore:0422-4514050/60,
9345028545
2013-14 SC/ ST மாணவர் விவரம் கேட்டு தொடக்கக்கல்வித் துறை உத்தரவு
தொடக்கப்பள்ளித் துறையின் கீழ் இயங்கும் அரசு/ அரசு நிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் 2013-14ஆம் கல்வியாண்டில் பயிலும் 1 முதல் 8 வகுப்பு வரையிலான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை மாவட்ட வாரியாக அனுப்பு தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
மொழி ஆசிரியர்கள் (தமிழ், தெலுங்கு) தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: விதிகளை திருத்த இயக்குனர் பரிந்துரை
மொழி ஆசிரியர்கள் (தமிழ், தெலுங்கு) தலைமை ஆசிரியராக பதவி உயர்வுபெற, பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாடுகளை விதித்தது. இதை திருத்தம்செய்ய, பள்ளிக்கல்வி முதன்மைச் செயலருக்கு, இயக்குனர் பரிந்துரைசெய்துள்ளார். மொழி ஆசிரியர்கள், பி.எட்., பட்டம் பெறாமல்,ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். பின், பி.எட்., பட்டம்பெறுகின்றனர். தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு, பி.எட்., பட்டம் பெற்றநாளில் இருந்தே, பணி மூப்பு கணக்கிடப்படுகிறது. இதனால்,அவர்களுக்குப்பின் பணியில் சேர்ந்தவர்கள், பதவி உயர்வில், தலைமைஆசிரியர்களாகி விடுகின்றனர்.
இந்நடைமுறையை மாற்ற, தமிழாசிரியர் கழகம் சார்பில், வழக்குதொடரப்பட்டது. இதன்படி, தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு, இடைக்காலதடை விதித்து, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால், தலைமை ஆசிரியர்பதவி உயர்வு பட்டியல், நிலுவையில் கிடக்கிறது. இந்நிலையில், "பணியில்சேர்ந்த நாளில் இருந்தே, பணி மூப்பு கணக்கிடும் வகையில், பணி விதிகளில்திருத்தம் செய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலருக்கு, அத்துறையின் இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார்.
16/07/2013
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகிய தினம்: 9வது ஆண்டு நினைவஞ்சலி
கும்பகோணம்: கும்பகோணம் பள்ளி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு 94 குழந்தைகள் இறந்தனர். இந்த கோர சம்பவம் நடந்து இன்றுடன் 9 ஆண்டுகள்நிறைவடைந்துள்ளது. கும்பகோணம் காசிராமன் தெருவில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி செயல்பட்டு வந்தது. போதிய வசதிகள் இன்றி செயல்பட்டு வந்த அப்பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அப்பள்ளியில் படித்த குழந்தைகளில் 94 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். தமிழகத்தையே கவலையில் ஆழ்த்திய இந்த சம்பவத்தை இன்று நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது.
Subscribe to:
Posts (Atom)