திருக்குறள்

31/05/2013

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கும்படி தொடக்கக்கல்வி ஆணை வெளியீடு

தொடக்கக் கல்வி - 2013-14ம் ஆண்டு பொது மாறுதல் 31.05.2013 அன்றைய கலந்தாய்வுக்கு பின் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம் அனுப்ப இயக்குனர் உத்தரவு.

CPS திட்டம் தொடர்பாக நிதி துறை யிலிருந்து தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள்

500-க்கு 499 மதிப்பெண் பெற்றும் தமிழ் படிக்காததால் முதலிடத்தை இழந்த ரச்சனா !! தமிழ் வழியில் படித்த மாணவ மாணவிகளே அதிக தேர்ச்சி, அதிக மதிப்பெண் !


500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்றாலும், தமிழை பாடமாகப் படிக்காததால் ரச்சனா என்ற மாணவி முதலிடத்தை இழந்தார். எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 498 மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவர்களில் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த அனுஷா, தமிழில் 99 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவரைப் போன்றே தமிழ், ஆங்கிலத்தில் 99-ம், மற்ற பாடங்களில் நூற்றுக்கு நூறும் எடுத்த எட்டு மாணவிகள் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழை தவிர்த்துவிட்டு, வேறு மொழிகளை மொழிப்பாடமாக எடுத்துப் படித்த மாணவர்களில் இருவர் முதலிடம் பெற்றுள்ளனர். இத்தனைக்கும் இவர்கள் மாநில அளவில் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்ட 9 பேரை விட ஒரு மதிப்பெண் கூடுதலாகப் பெற்றவர்கள். புதுவையைச் சேர்ந்த ஹம்சிகா, பொன்னேரி வேலம்மாள் பள்ளியைச் சேர்ந்த ரச்சனா ஆகிய மாணவிகள் 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ரச்சனா சமஸ்கிருத்தை பாடமாக எடுத்துப் படித்தவர். அதில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். ஹம்சிகா ப்ரெஞ்சை மொழிப்பாடமாகப் படித்து 100 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால் தமிழை எடுத்துப் படிக்காததால் அவர்களால் முதலிட அந்தஸ்தைப் பெற முடியவில்லை. எஸ்எஸ்எல்சியில் தமிழைப் பாடமாகப் படித்தால் மட்டுமே மாநில அளவில் முதலிட அந்தஸ்தைப் பெறும் போட்டியில் இடம்பெற முடியும். மாநில அரசின் வேலைவாய்ப்புகளையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பழைய குற்றாலம் மாணவி மாநிலத்தில் 2வது இடம் நெல்லை மாவட்டம் பழைய குற்றாலாம் ஹில்டன் பள்ளியில் படித்த மாணவி ஸ்டெர்லின் பொன் ஜெபா மாநில அளவில் 2வது இடத்தையும், நெல்லை மாவட்ட அளவில் 2வது இடத்தையும் பிடித்துள்ளார். இவர் பெற்ற மதிப்பெண் விவரம்- தமிழ் -98, ஆங்கிலம் -99, கணிதம்-100, சமுக அறிவியல்-100, அறிவியல் -100, மொத்த மதிப்பெண் : 497


தமிழ் வழியில் படித்த மாணவ மாணவிகளே அதிக தேர்ச்சி, அதிக மதிப்பெண்!


எஸ்எஸ்எல்சியில் தமிழ் வழியில் படித்த மாணவர்களே அதிக தேர்ச்சியை அடைந்துள்ளனர், அதிக மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர். பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அரசு அறிமுகப்படுத்தி வரும் இந்த சூழலில் இது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் 10.50 லட்சம் மாணவ மாணவிகள் பொதுத் தேர்வை எழுதினர். இவர்களில் 7.8 லட்சம் மாணவ மாணவிகள் தமிழை ஒரு பாடமாகவும், ஆங்கிலம் தவிர பிற பாடங்களை தமிழ் வழியிலும் படித்தவர்கள். மற்ற மூன்று லட்சம் மாணவ மாணவிகளில் 90 சதவீதம் பேர் தமிழை ஒரு மொழியாக எடுத்துப் படித்தவர்கள். இவர்களில் தமிழ் வழியில் படித்த மாணவ மாணவிகளே மாநில அளவில் அதிக மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். முதலிடம் பெற்ற மாணவிகள், இரண்டாம், மூன்றாமிடம் பெற்ற மாணவ மாணவிகளில் பெரும்பாலானோர் தமிழ் வழியில் படித்தவர்கள். குறிப்பாக அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவ மாணவிகள் 490க்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பள்ளிப் படிப்பை தாய்மொழியில் படிக்கும்போது, மனப்பாட முறையைத் தாண்டி, சிந்திக்கும் திறன் மாணவ மாணவிகளுக்கு இயல்பாகவே அமைந்துவிடுகிறது. சொந்த மொழி நடையில் எழுதும் பாங்கும் அமைகிறது என்பதையே இது காட்டுவதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்கள் தொகை 7.2 கோடியாக அதிகரிப்பு:

கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 80.1%பெண்கள்- ஆண்கள் சம அளவில்:மக்கள் தொலை வளர்ச்சியில் காஞ்சிபுரம் முதலிடம்:மக்கள் தொகை 15.6% அதிகரிப்பு:கிராமப்புறங்களில் 3.7 கோடி, நகர்ப்புறங்களில் 3.49 கோடி:பெண் குழந்தைகள் எண்ணிக்கை:கடலூர், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, நாமக்கல், சேலத்தில் குறைவு:கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 80.1%:கல்வியறிவில் முன்னணி- பின் தங்கிய மாவட்டங்கள்
தமிழக மக்கள் தொகை 7.2 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மக்கள் தொகை சுமார் 97.4 லட்சம் அதிகரித்துள்ளது. அதே போல தமிழகத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 80.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய சென்சஸ் துறையின் தமிழக இணை இயக்குனர் கிருஷ்ணா ராவ் 2011ம் ஆண்டு சென்சஸ் முடிவுகளை இன்று வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை மக்கள் தொகை 46.8 லட்சம்!: மக்கள் தொகையில் டாப்-4 மாவட்டங்கள் காஞ்சி, வேலூர், திருவள்ளூர்
சென்னை மக்கள் தொகை 46.8 லட்சம் (46,81,087) ஆக உயர்ந்துள்ளது. 2011ம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட சென்ஸஸ் விவரங்கள் வெளியிட்டப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 26,553 பேர் வசிக்கின்றனர். இது மிக அதிகமான மக்கள் நெரிசலாகும். சென்னைக்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 39.9 லட்சம் பேரும் (39,90,897), வேலூர் மாவட்டத்தில் 39.2 லட்சம் (39,28,106) பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 37.2 லட்சம் (37,25,697) பேரும் வசிக்கின்றனர். சென்னையில் பணியாற்றுவோர் தான் பெரும்பாலும் இந்த மாவட்டங்களில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. மக்கள் தொகை மிகக் குறைவான 4 மாவட்டங்கள்: அதே நேரத்தில் மாநிலத்திலேயே பெரம்பலூர், நீலகிரி, அரியலூர், கரூர் மாவட்டங்களில் தான் மக்கள் தொகை எண்ணிக்கை குறைவாக உள்ளது. கரூர் மாவட்டத்தில் 10.7 லட்சம் பேரும் (10,76,588), அரியலூர் மாவட்டத்தில் 7.5 லட்சம் பேரும் (7,52,481), நீலகிரி மாவட்டத்தில் 7.3 லட்சம் பேரும் (7,35,071), பெரம்பலூர் மாவட்டத்தில் 5.6 லட்சம் பேரும் (5,64,511) வசிக்கின்றனர்.

மக்கள் நெருக்கம்: 

டெல்லிக்கு அடுத்த நிலையில் சென்னை!மக்கள் தொகை பெருக்க விவரம்:தமிழகத்தின் மக்கள் நெருக்கம்:அதிக மக்கள் நெருக்கம் டெல்லிக்கு அடுத்த நிலையில் சென்னை:குறைவான மக்கள் நெருக்கம் அருணாச்சல், காஷ்மீரில்:


தமிழக மக்கள் தொகை கடந்த 120 ஆண்டுகளில் 1.93 கோடியிலிருந்து 7.21 கோடியாக அதிகரித்துள்ளது.


இந்தியாவில் தலித் மக்களின் எண்ணிக்கை 16.6%: தமிழகத்தில் 18%.. ஆனால், அதிகாரம்?
நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்களின் எண்ணிக்கை 20 கோடியாகும் (20,13,78,086). அதாவது மொத்த மக்கள் தொகையில் 16.6% தலித் மக்கள் ஆவர். தேசிய அளவில் 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்ஸஸ் முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன. அதன் விவரம்: நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்களின் எண்ணிக்கை 20 கோடியாகும் (20,13,78,086). அதாவது மொத்த மக்கள் தொகையில் 16.6% தலித் மக்கள் தான். (ஆனால், நாடு சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளில் இந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரே ஒருவர் தான் நாட்டின் தலைமை நீதிபதியே ஆகியிருக்கிறார். அதே நேரத்தில் இச் சமூகத்தினர் யாரும் பிரதமர் ஆனதில்லை. ஜனாதிபதி என்ற ரப்பர் ஸ்டாம்ப் பதவி தான் தரப்பட்டுள்ளது.) இதில் 15 கோடி பேர் கிராமப் பகுதிகளில் வசிக்கின்றனர். பழங்குடி இனத்தினரின் எண்ணிக்கை 10 கோடியாகும் (10,42,81,034). இதில் 9 கோடி பேர் கிராமப் பகுதிகளில் தான் வசிக்கின்றனர். மொத்தமுள்ள தலித் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் உத்தரப் பிரதேசம் (20.5%), மேற்கு வங்கம் (10.7%), பிகார் (8.2%), மற்றும் தமிழகத்தில் (7.2%) தான் வசிக்கின்றனர். மாநில அளவிலான மக்கள் தொகையில் பஞ்சாபில் மொத்த மக்கள் தொகையில் 31.9 சதவீதத்தினர் தலித் மக்களாவர். மேற்கு வங்கம், ஹிமாச்சலப் பிரதேசத்தில் தலா 23.5, 25.2 சதவீதத்தினரும், தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதத்தினரும் தலித் மக்களாவர்.


இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி: 10 ஆண்டுகளில் 17.7% அதிகரிப்பு

நாட்டின் மக்கள் தொகை 121 கோடியாக (1,21,05,69,573) அதிகரித்துள்ளது. இதில் ஆண்களின் எண்ணிக்கை 62.3 கோடி (62,31,21,843). பெண்களின் எண்ணிக்கை 58.7 கோடியாகுமம் (58,74,47,730). இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒப்பிடுகையில் 17.7 சதவீத அதிகரிப்பாகும். தேசிய அளவில் 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்ஸஸ் முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன. அதன் விவரம்: 2001 முதல் 2011ம் வரையிலான கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 18 கோடி அதிகரித்துள்ளது. இதில் ஆண், பெண்களின் எண்ணிக்கை சரிசமமாக தலா 9 கோடி அதிகரித்துள்ளது. நாட்டில் பெரும்பான்மையானோர் இன்னும் கிராமப் பகுதிகளில் தான் வசிக்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் 68.8 சதவீதம் பேர் கிராமப் பகுதிகளிலும் 31.2 சதவீதம் பேர் நகர் பகுதிகளிலும் வசிக்கின்றனர். நாட்டில் 1000 ஆண்களுக்கு 943 பெண்களே உள்ளனர். இது கிராமப் பகுதிகளில் 949 ஆகவும் நகர்ப் பகுதிகளில் 929 ஆகவும் உள்ளது. ஆக, நகர்ப் பகுதிகளில் பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பொறுத்தவரை 1,000 ஆண் குழந்தைகளுக்கு 919 பெண் குழந்தைகளே உள்ளனர். இது கிராமப் பகுதிகளில் 923 ஆகவும் நகர்ப் பகுதிகளில் 905 ஆகவும் உள்ளது. ஆக, நகர்ப் பகுதிகளில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. தேசிய அளவில் கல்வியறிவு பெற்றோரின் அளவு 73 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் ஆண்கள் 80.9 சதவீதமும், பெண்கள் 64.6 சதவீதமும் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

ஆசிரியர் பயிற்சி படிக்க மாணவர்கள் தயார் இல்லை

ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. கடந்த, நான்கு நாட்களில், வெறும், 1,500 விண்ணப்பங்கள் மட்டும் விற்பனை ஆகியுள்ளன. இறுதி தேதிக்குள், 5,000 விண்ணப்பங்கள் விற்றால், பெரிய விஷயம் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.<>பிளஸ் 2 படிப்பிற்குப் பின், இரு ஆண்டு, ஆசிரியர் பட்டய பயிற்சியை படித்தால், ஆரம்ப பள்ளிகளில், ஆசிரியர்களாக பணியாற்றலாம். தற்போதைய நிலையில், ஆசிரியர் பயிற்சியை படித்து, தேர்ச்சி பெற்றாலும், டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். அப்படியே தேர்ச்சி பெற்றாலும், பதிவு மூப்பு அடிப்படையில் தான், பணி நியமனம் நடக்கிறது. ஆசிரியர் பயிற்சி படிப்பு தேர்விலேயே, 30 முதல், 40 சதவீத மாணவர்கள் தான், தேர்ச்சி பெறுகின்றனர். இந்த நிலையில், டி.இ.டி., தேர்வு, இந்த மாணவர்களுக்கு, சவாலாகவே உள்ளது. இந்த சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற்றாலும், பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் என்பதால், வேலை கிடைக்க, வயது, 50ஐ எட்ட வேண்டும். இதனால், எந்த வகையிலும், இந்த படிப்பு, மாணவர்களுக்கு, உபயோகமாக இல்லை.<>இதனால், இந்த படிப்பில் சேர, மாணவர்கள் மத்தியில், ஆர்வம் இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன் வரை, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், இந்த பயிற்சியை பெற முட்டி மோதினர். <>அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் இருக்கின்றபோதும், கடந்த ஆண்டு, வெறும், 8,000 இடங்களே நிரம்பின. இந்த ஆண்டு, 4,000 முதல், 5,000 இடங்கள் நிரம்பினாலே பெரிய சாதனையாக இருக்கும் என, ஆசிரியர் கல்வி பயிற்சித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த, 27ம் தேதி முதல், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த நான்கு நாட்களில், வெறும், 1,500 விண்ணப்பங்கள் மட்டுமே விற்பனை ஆகியிருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.<><>கடைசி தேதியான, ஜூன், 12 வரை, மேலும், 3,500 விண்ணப்பங்கள் விற்பனை ஆகுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த படிப்பு, மாணவர்கள் மத்தியில், போணி ஆகாததால், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், பி.எட்., கல்லூரிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு, 50 பள்ளிகள் மூடப்பட்டன.இந்த ஆண்டும், கலந்தாய்வு துவங்குவதற்குள், 50க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள்: மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்

(31 May) பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. இதில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதத்தில், கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தையும், தூத்துக்குடி மாவட்டம் இரண்டாம் இடத்தையும், ஈரோடு மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் வருமாறு..

வருவாய் மாவட்ட எண் - மாவட்டம் - தேர்வு எழுதியவர்கள் - தேர்ச்சி பெற்றவர்கள் - தேர்ச்சி சதவீதம் -மொத்த பள்ளிகள் 

01 - கன்னியாகுமரி - 27725 - 26974 - 97.29 - 384
03 - தூத்துக்குடி - 24450 - 23330 - 95.42 - 273
13 - ஈரோடு - 31040 - 29601 - 95.36 - 329
22 - திருச்சி - 38926 - 37036 - 95.14 - 391
06 - விருதுநகர் - 27891 - 26519 - 95.08 - 325
33 - சென்னை - 58491 - 55338 - 94.61 - 591
26 - புதுச்சேரி - 18557 - 17528 - 94.45 - 266
12 - கோயமுத்தூர் - 45859 - 43164 - 94.12 - 496
08 - மதுரை - 44765 - 41828 - 93.44 - 438
15 - நாமக்கல் - 26418 - 24627 - 93.22 - 290
11 - திருப்பூர் - 29023 - 27011 - 93.07 - 295
02 - திருநெல்வேலி - 44918 - 41713 - 92.86 - 438
05 - சிவகங்கை - 20844 - 19327 - 92.72 - 253
19 - கரூர் - 14003 - 12704 - 90.72 - 176
21 - பெரம்பலூர் - 9275 - 8383 - 90.38 - 121
04 - ராமநாதபுரம் - 19578 - 17675 - 90.28 - 225
07 - தேனி - 19218 - 17264 - 89.83 - 181
10 - உதகமண்டலம் - 10749 - 9654 - 89.81 - 173
14 - சேலம் - 49610 - 44116 - 88.93 - 464
25 - தஞ்சாவூர் - 38181 - 33895 - 88.77 - 389
16 - கிருஷ்ணகிரி - 28070 - 24876 - 88.62 - 348
09 - திண்டுக்கல் - 30705 - 27190 - 88.55 - 308
31 - காஞ்சிபுரம் - 55045 - 47813 - 86.86 - 562
32 - திருவள்ளூர் - 51282 - 44539 - 86.85 - 575
18 - புதுக்கோட்டை - 23631 - 20261 - 85.74 - 286
17 - தர்மபுரி - 25333 - 21663 - 85.51 - 279
24 - திருவாரூர் - 19286 - 16035 - 83.14 - 197
30 - வேலூர் - 57171 - 47501 - 83.09 - 559
20 - அரியலூர் - 11841 - 9758 - 82.41 - 149
27 - விழுப்புரம் - 48081 - 39424 - 81.99 - 518
23 - நாகப்பட்டினம் - 26325 - 20935 - 79.53 - 258
29 - திருவண்ணாமலை - 34507 - 27225 - 78.9 - 441
28 - கடலூர் - 40220 - 30264 - 75.25 - 372

















எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த 9 மாணவிகள் 


ஈரோடு மாணவி அனுஷா
ஈரோடு மாணவி பொன் சிவசங்கரி 
மதுரை மாணவி தீப்தி 
சிதம்பரம் மாணவி ஸ்ரீதுர்க்கா 
வேலூர் மாணவி வினுஷா 
வேலூர் மாணவி சாருமதி
நெல்லை மாணவி சோனியா 
திருச்சி மாணவி காயத்ரி 
திருச்சி மாசியாஷெரீன்


கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள்-காற்று வாங்கும் அரசுபள்ளிகள்

30/05/2013

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அவர்களின் குடும்ப திருமண விழாவை கொண்டாட, 2013-14 ஆம் ஆண்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு.

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அவர்களின் குடும்ப திருமண விழாவிற்கு ஆணுக்கு ரூ.6000 மற்றும் பெண்ணுக்கு ரூ.10,000 முன்பணம் 2013-14 ஆம் ஆண்டிற்கு வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு.

அரசு ஊழியர்களின் குடும்ப திருமணத்துக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு

அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளின் திருமணத்துக்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் உள்பட அரசின் பல்வேறு அலுவலகங்களுக்கு இந்தத் தொகை பிரித்து அளிக்கப்படுகிறது.அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் மகன் அல்லது மகளின் திருமணத்துக்கு முன்பணம் வழங்கப்படுகிறது. இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதி மூன்று பிரிவுகளாக பிரித்து அளிக்கப்படுகிறது.தலைமைச் செயலகத்தில் அனைத்து அரசுத் துறைகளில் பணியாற்றுவோரில் தேவைப்படும் ஊழியர்களுக்கும், அரசுத் துறைத் தலைமையகங்கள் மற்றும் மாவட்டங்களில் பணியாற்றும் ஊழியர்கள் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.அதில், தலைமைச் செயலகத்தில் பணியாற்றுவோருக்காக நடப்பு நிதியாண்டில் ரூ.5.90 லட்சமும், துறைத் தலைமையகங்களில் பணியாற்றுவோருக்கு ரூ.23.86 லட்சமும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்பட இதர அலுவலக ஊழியர்களுக்கு ரூ.10.24 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.10 லட்சம் நிதி கையிருப்பாக நிதித் துறை வசம். தேவைப்படுவோருக்கு அந்த நிதி பிரித்து அளிக்கப்படும் என்று நிதித் துறை செயலாளர் (செலவினம்)எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளார்.

CLICK HERE

தொடக்கக் கல்வி - உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முழு நேர கைத்தொழில் ஆசிரியர்களுக்கு பொது கல்வி மற்றும் டி.டி.சி பெறாமைக்கு தவிர்ப்பாணை வழங்க விவரம் கோருதல்

போஷாக்கின்மையால் பிள்ளைகளுக்கு கல்வித் திறன் பாதிக்கப்படும் ஆபத்து!


போதிய ஊட்டச்சத்து கிடைக்காத குழந்தைகள் நன்றாக படிக்க முடியாமல் போகும் ஆபத்து உலகெங்கும் காணப்படுவதாக சேவ் த சில்ரன் நடத்திய புதிய ஆய்வு எச்சரிக்கிறது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை வெளியாகிறது

10½ லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் எழுதியுள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு வெளியிடப்படுகிறது.

நாளை காலை வெளியாகிறது இணையதளத்தில் பார்க்கலாம்

தேர்வு முடிவு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட அடுத்த சில நொடிகளில் ஆன்லைனில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் மாணவ–மாணவிகள் தெரிந்துகொள்ளலாம்.





இலவசமாக அறிந்துகொள்ள ஏற்பாடு

பிளஸ்–2 தேர்வு முடிவை ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையத்திலும் (நிக் சென்டர்), அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் மாணவ–மாணவிகள் இலவசமாக தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்து இருந்தது. எனவே, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவையும் அதேபோல் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

டெல்லியில் குழந்தைகளை மையப்படுத்தும் மாற்றுக் கல்விமுறை

பள்ளி மாணவர்களின் ஒருங்கிணைந்த அறிவு வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, சம்பிரதாய கற்பிக்கும் முறைகள், மறுஆய்வு செய்யப்படுகின்றன. வகுப்பறையோ, கரும்பலகையோ அல்லது வளாகமோ இல்லாத ஒரு பள்ளியை, உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?
அதுபோன்றதொரு பள்ளியில், குழந்தைகள், அவர்களாகவே முடிவுசெய்த ஒரு கற்றல் செயல்பாட்டில், ஆசிரியர்கள் பங்கேற்பதை பார்க்க முடியுமா? இத்தகையதொரு சோதனை முயற்சியிலான பள்ளி, விரைவில் டெல்லியில் அமைக்கப்படவுள்ளது.

இந்தியாவில், பள்ளிக் கல்வியானது, மெதுவாக, அதேசமயம், வலுவான முறையில் மாற்றமடைந்து வருகிறது. இந்த மாற்றத்தை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அங்கீகரிக்கிறார்கள். ஏனெனில், மாறிவரும் உலக சூழல்களுக்கேற்ப குழந்தைகளுக்கு அறிவு வழங்கும் பொருட்டு, இந்த மாற்றம் அவசியமான ஒன்றாகிறது.

குழந்தைகளை மையப்படுத்திய பள்ளி

குழந்தைகளின் பலவிதமான தேவைகளுக்கேற்ப, பாரம்பரிய கற்பித்தல் முறைகள், பெரியளவிலான மாற்றங்களுக்கு உட்பட்டு வருகின்றன. செயல்முறை என்பதில் ஆர்வம் கொண்ட மற்றும் அதனை ஆதரிக்கும் பெற்றோர், செயல்முறை கற்றல், குழந்தை மையப்படுத்தப்படுதல் போன்ற விஷயங்களை விரும்புகின்றனர். டெல்லியிலுள்ள ரிஷிவேலி பள்ளி, கிருஷ்ணமூர்த்தி பள்ளிகள் மற்றும் வசந்த் வேலி பள்ளி போன்றவை, EDUCATION WORLD SURVEY 2012 -இல், முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.

இந்த சர்வேயில், வசந்த் வேலி பள்ளி, முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்தப் பள்ளிகளில், சுதந்திரமான கல்வி கொள்கை பின்பற்றப்படுகிறது. ஒரு முழுமையான கல்வி என்பது, அதிக மதிப்பெண் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை என்று, பல பெற்றோர்களும், ஆசிரியர்களும் மற்றும் கல்வியாளர்களும் ஒப்புக் கொள்கின்றனர்.

மாற்றத்திற்கான முன்னோடி

கற்றலின் பல புதிய அம்சங்கள் மற்றும் நடைமுறைகள் தெரிய வந்தபின்னர், செயல்முறை கல்வி முறையின்மீது, பெற்றோர்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். மேற்கூறிய செயல்முறை பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளிடம் குறிப்பிடத்தக்க மாற்றங்களை பெற்றோர்கள் கண்கூடாக பார்க்கும்போது, அவர்கள் இந்த மாற்றத்தை வரவேற்கிறார்கள்.

இதுபோன்ற பள்ளிகளில், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையில் பல சந்திப்புகள் நடைபெறுகின்றன. இந்த முறையில், ஆசிரியர் என்பவர் நேரடி கற்பிப்பவராக இல்லாமல், கற்பதற்கு உதவும் ஒரு நபராகவே இருக்கிறார். இது ஒரு சுதந்திரமான சூழ்நிலை.

நெகிழ்வான பாடத்திட்டம்

இதுபோன்ற பள்ளிகள், முழுமையான பரிமாணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்று சொல்லப்படுகிறது. கல்வி என்பது, ஒரு குழந்தையிடம் மறைந்துள்ள ஆச்சர்யமான திறன்களை வெளிக்கொணர்வதாக உள்ளது. வெறுமனே ஒரு விஷயத்தை மனப்பாடம் செய்து கற்றுக்கொள்வதை விட, உட்கிரகித்து பிரதிபலிக்கும் கல்விக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

பாடத்திட்டமானது, நெகிழ்வுத் தன்மையுடன் இருப்பதோடு, ஒரு குழந்தையின் தனிமனித தேவைகளை நிறைவு செய்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது.

ஒருவரின் சொந்த முயற்சியில் கற்றல்

கற்றல் செயல்பாட்டின் மையத்தில், குழந்தையை இடம்பெற செய்யும் வகையில், இந்த கல்வித் திட்டம் அமைந்துள்ளது. பாடத்திட்டமானது, படிநிலைகளாகவும், கருத்தாக்கங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. கணிதம் மற்றும் மொழிப் பாடங்கள், அடுத்தடுத்து கற்கப்பட வேண்டும் மற்றும் அவைகள், படிநிலைகளாக அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாணவரும், படிநிலைகளின் ஊடாக, தனது சொந்த முயற்சியில் வளர்ச்சியடைகிறார். ஆரம்ப நிலையில், ஒரு மாணவர், படிநிலை கோர்ஸில் சேர்ந்து கொள்ளலாம். இது, அவர்கள் ஏற்கனவே பெற்றிருக்கும் அறிவு தொடர்பானது. மானுடவியல், கலை, அறிவியல்கள் மற்றும் கணினிகள் ஆகியவை, ஒருங்கிணைந்த கருத்தாக்க கோர்ஸ்கள்.

இதுகுறித்து தொடர்புடைய வட்டாரங்கள் கூறுவதாவது, ஆரம்ப வயதிலிருந்து, குழந்தைகள், தாங்களாகவே முயற்சிகள் எடுக்கும் வகையில், அவர்களை நாங்கள் தயார்படுத்துகிறோம். முதலாம் வகுப்பிலிருந்து, படிநிலைப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஆங்கிலம், ஹிந்தி மற்றும் கணிதம் போன்றவையே இவை. மற்றவை, NCERT மற்றும் CBSE ஆகியவற்றை மனதில் வைத்து வடிவமைக்கப்படுகிறது. குழந்தையானது, தனது சொந்த திறமைகளை தானே மதிப்பிட்டுக் கொள்ளவும், ஒரு முழு ஆண்டிற்கான இலக்கை நிர்ணயித்துக் கொள்ளவும், ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

கற்றலை எளிமையாக்கல்

மேற்கூறிய பள்ளிகள் அனைத்திற்குமுள்ள ஒரு தனித்தன்மை என்னவெனில், ஒவ்வொரு குழந்தையின் மீதும், தனித்தனியாக காட்டப்படும் அக்கறைதான். குழந்தைதான், கற்றலின் மையம். இந்த கல்வி முறையில், ஆசிரியர்கள், குழந்தைகளிடம் பேசுவதற்கு பதிலாக, குழந்தையின் மேம்பாட்டு செயல்பாட்டில், ஆலோசகர்களாகவும், பயிற்சியாளர்களாகவும் செயல்படுகிறார்கள். மேலும், தங்கள் குழந்தையின் அவ்வப்போதைய நிலை குறித்து அறிந்து, அதற்கேற்ப செயல்படும் கடமை, பெற்றோருக்கும் உண்டு.

போட்டிகளும், ஒப்பீடுகளும் இல்லை

இந்த கல்வி முறையில் இருக்கும் ஒரு முக்கிய அம்சமே, இதில், மாணவர்களுக்கிடையிலான ஒப்பீடுகளோ அல்லது போட்டிகளோ கிடையாது. இங்கே, ஒரு குழந்தையின் சந்தோஷம் என்பது, அது போட்டியில் வெல்வதால் அல்ல. மாறாக, அதன் தனிப்பட்ட முயற்சி மற்றும் வெற்றியால் வருவதாகும். பல பெற்றோர்களும், தங்கள் குழந்தைகளை கொடுமையான போட்டி சூழல்களிலிருந்து பாதுகாக்கவே விரும்புகிறார்கள்.

இங்கே, போட்டி மனப்பான்மையை, மாணவர்களிடம், ஆசிரியர்கள் வளர்ப்பதில்லை. ஏனெனில், ஒவ்வொரு குழந்தையும் தனக்கான ஒரு தனி பரிணாமத்தைக் கொண்டிருக்கும். எனவே, ஒருவரை, இன்னொருவரோடு ஒப்பிடுவது சரியான ஒன்றாக இருக்காது. ஒரு குழந்தையின் முழுமையான வளர்ச்சியில், இந்த கல்வித்திட்டமானது, அக்கறை செலுத்துகிறது. ஒரு குழந்தைக்கு நிஜ செயல்முறை அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.

தற்போதைய நடைமுறை பள்ளிகள்

பல நிலைகளில் மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. மேற்கூறிய செயல்முறை கற்றலுக்கான பள்ளிகள், பரவிவரும் நிலையில், கல்வியின் பல சிறப்பம்சங்களை தன்னுள் ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டே, தற்போதைய கல்வி முறையிலும் ஈடுபட்டு வரும் பள்ளிகளும் இருக்கின்றன. டெல்லியின் ஸ்ரீராம் குழும பள்ளிகள் இதற்கு உதாரணம். ஒரு குழந்தை தனது சாதனையை நிகழ்த்துவதற்கான சரியான வாய்ப்புகள் கொடுப்பதற்கு, இங்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.

இரண்டு உலகிலும் சிறந்தது

கல்வியில் முற்றிலும் புதிய நடைமுறையை ஏற்றுக்கொள்ள சிரமப்படும் நபர்களுக்கு, ஸ்ரீராம் பள்ளிகள் சிறந்த மாற்று. ஏனெனில், மேலே கூறியவாறு, பாரம்பரிய கல்விமுறை மற்றும் மாற்று கல்வி ஆகிய இரண்டும் இங்கே சிறப்பான முறையில், பேலன்ஸ் செய்யப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டியுள்ளது. பள்ளி நடைமுறையில் அளவுக்கதிகமான சுதந்திரம் வழங்கப்பட்டாலும், அது குழந்தைகளின் மனஓட்டத்தை பாதித்துவிடும். அனைத்து குழந்தைகளுமே, தாங்களாக, இலக்குகளை நிர்ணயித்து விடுவதில்லை. சிலவகையான ஒழுக்கக் கட்டுப்பாடுகள் என்பது அவசியமாக உள்ளது.

மாற்றுமுறை கல்வியில் பல பெற்றோர்கள் தயக்கம் காட்ட காரணம், அதில் பெற்றோர்களின் பங்களிப்பு அதிகம் என்பதால்தான். ஏனெனில், தங்களின் நெருக்கடியான பணி சூல்களுக்கு மத்தியில், இதற்கான நேரத்தை அவர்களால் செலவிட முடியவில்லை. எனவே, அதுபோன்ற பெற்றோர்கள், இரண்டு கல்வி முறைகளிலும் கவனம் செலுத்தும் பள்ளிகளையே விரும்புகிறார்கள்.

புதிய நூற்றாண்டுக்கான மாற்றம்!

கல்விமுறை குறித்து இந்திய சமூகத்தில் ஏற்பட்டுவரும் பெரிய சிந்தனை மாற்றம், வரவேற்கத்தக்கது மற்றும் பாரட்டுக்குரியது. சிறந்த கல்வி என்பதை, மதிப்பெண்களை கோட்டைவிடுவது என்பதாக பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக, வாழ்க்கைக்கு தேவையான பல திறன்களை, தங்கள் பிள்ளைகள் வளர்த்துக்கொள்வதற்கு உதவும் கல்வியே அவர்களின் இலக்காக உள்ளது.

குறிப்பு

கல்விமுறையில் ஏற்படும் எந்த புதிய மாற்றங்களும், அனைத்து மக்களுக்கும் கிடைக்கும்படி இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட பள்ளிகளில் சாதாரண குடும்பத்து குழந்தைகள் சேர முடியுமா? என்ற கேள்வி எழுவது இயற்கையே. எனவே, அனைவருக்கும் கல்வி என்ற வெற்று கோஷத்தைவிட, அனைவருக்கும் சிறப்பான கல்வி என்ற நடைமுறை செயலாக்கமே, அனைத்து மனிதர்களுக்கும் நன்மையளிப்பதாக இருக்கும்.

மொத்தம் 2,881 காலி இடங்கள்: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வெள்ளி முதல் விண்ணப்பம் நாளை (31ம் தேதி) முதல் வழங்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

2012-13ம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 பணியிடங்களுக்கான போட்டி எழுத்து தேர்வு வரும் ஜூலை மாதம் 21ம் தேதி 

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை வாங்கலாம்.

2,881 காலி இடங்கள்

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு–1) பணி இடங்கள் போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை மாதம் 21–ந் தேதி நடத்த இருக்கிறது.


அதிகபட்சமாக தமிழ் பாடத்தில் 605 பணி இடங்களும், ஆங்கிலத்தில் 347, வணிகவியலில் 300, கணிதத்தில் 288, பொருளாதாரத்தில் 257, வரலாறு பாடத்தில் 179 இடங்களும் இடம்பெற்றுள்ளன. இதற்காக 2½ லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு 2 வாரங்களுக்கு முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டன.

நாளை முதல் விண்ணப்பம்

இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் விற்பனை செய்யப்படுகின்றன. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும்.
விண்ணப்பத்தின் விலை ரூ.50. தேர்வு கட்டணம் ரூ.500. ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.250 மட்டும். உரிய தேர்வு கட்டணத்தை விண்ணப்ப படிவத்தில் இணைக்கப்பட்டு இருக்கும் செலான் படிவத்தை பயன்படுத்தி பாரத ஸ்டேட் வங்கியிலோ அல்லது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலோ செலுத்தலாம்.

கடைசி நாள்

விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (ஜூன்) 14–ந் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஜூன் 14–ந் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கு நேரடியாக அனுப்பக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

எழுத்து தேர்வில் ‘ஆப்ஜெக்டிவ்’ (கொள்குறி வகை) முறையில் 150 கேள்விகள் கேட்கப்படும். இதில், சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து 110 வினாக்களும், கல்வியியல் முறை பகுதியில் இருந்து 30 வினாக்களும், பொது அறிவில் இருந்து 10 வினாக்களும் இடம்பெற்று இருக்கும். எழுத்து தேர்வு நீங்கலாக, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி) அதிகபட்சம் 4 மதிப்பெண்களும், ஆசிரியர் பணி அனுபவத்திற்கு (பிளஸ்–1, பிளஸ்–2–வில் சம்பந்தப்பட்ட பாடத்திற்கு வகுப்பு எடுத்த அனுபவம்) அதிகபட்சம் 3 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

 எங்கு கிடைக்கும்?

முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வுக்கான விண்ணப்பங்கள் 
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை வாங்கலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 14–ந் தேதி அன்று மாலை 5.30 மணிக்குள் இதே பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும். 

அண்ணாமலை பல்கலைக்கழக பி.எட்., நுழைவுத்தேர்வு செப்.,15ம் தேதி

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட் படிப்புக்கு செப்டம்பர் 15ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி முறையில் பி.எட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 15ம் தேதி காலை 11.00 முதல் 1.00 மணி வரை நடைபெறுகிறது. அண்ணாமலை நகர், கோயம்பத்தூர், சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. மேலும் விரிவான தகவல்களுக்கு www.annamalaiuniversity.ac.inஎன்றஇணையதளத்தை பார்க்கலாம்.

அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் விவரங்கள், பள்ளிக் கல்வி இணையதளத்தில் விரைவில் வெளியீடு: பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன

தமிழகத்தில் அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் விவரம் பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படுகிறது.மதுரையில் பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் மற்றும் பிச்சை ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:தமிழகத்தில் 800 தனியார் பள்ளிகள் வரை அங்கீகாரம் பெறுவதில்சிக்கல் நீடிக்கிறது. தற்போது நடத்தப்படும் கருத்துக் கேட்பு கூட்டத்தின் முடிவு, ஜூன் மாதத்தில் அரசுக்கு அறிக்கையாக தாக்கல் செய்யப்படும்.மாணவர்கள் நலன் கருதி, கல்வியாண்டு துவங்குவதற்கு முன் ஆசிரியர்கள் பணியிடமாறுதல் மற்றும் பதவி உயர்வு "கவுன்சிலிங்" நடத்தி முடிக்கப்படும். கோர்ட்டில் வழக்கு இருப்பதால், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உடற்கல்வி ஆய்வாளர்கள் பொறுப்பு ஆய்வாளர்களாகவே நீடிக்கின்றனர்.மாநிலத்தில் அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் விவரங்கள், பள்ளிக் கல்வி இணையதளத்தில் விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்களை பிரசாரத்துக்கு பயன்படுத்தும் கட்சிகள் மீது நடவடிக்கை

குழந்தை தொழிலாளர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.இதுகுறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிவிப்பு: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாகனங்களில் ஏற்றி, இறக்குதல், விழிப்புணர்வு பிரசாரம், அதிகாரிகளுக்கு உதவியாக இருத்தல் போன்ற பணிகளில் குழந்தை தொழிலாளர்களை தேர்தல் அதிகாரிகள் ஈடுபடுத்தக் கூடாது. அதேபோல், தேர்தல் சமயங்களில் பிரசாரத்தில் ஈடுபடுத்துதல், கொடி கட்டுதல், வால்போஸ்டர் ஒட்டுதல், துண்டு பிரசுரம் விநியோகித்தல், பேரணி, பொதுக்கூட்டங்களில் பங்கேற்க செய்தல் போன்ற பணிகளில் குழந்தை தொழிலாளர்களை அரசியல் கட்சிகள் ஈடுபடுத்த கூடாது. விதிமுறையை மீறி 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தும் அரசியல் கட்சிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

சத்துணவு மானிய உயர்வில் அதிருப்தி பள்ளிகளில் கலவை சாதம் திட்டம் செயல்படுத்துவதில் திடீர் சிக்கல்



சத்துணவில் உணவு மானியத் தொகையை உயர்த்தியதில் ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளதால், 13 வகையான கலவை சாதம் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளி சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களில் 2013-14 கல்வியாண்டு முதல் 13 வகையான கலவை சாதம், முட்டை மசாலா வழங்கும் திட்டம் துவங்கப்பட உள்ளது. முன்னோட்டமாக மாவட்டத்துக்கு ஒரு ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட்டது. அப்போது ஒரு மாணவருக்கு கூடுதலாக ரூ.7 வரை செலவானது. இதையடுத்து சத்துணவுக்கு ஒதுக்கப்படும் உணவு மானியத்தை உயர்த்த ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், உணவு மானியத்தை தமிழக அரசு இரண்டு விதமாக உயர்த்தியுள்ளது.

பருப்பு பயன்படுத்தப்படும் நாட்களில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் ஒரு குழந்தைக்கு காய்கறிக்கு 70 பைசா, மளிகைக்கு 20 பைசா, எரிபொருளுக்கு 40 பைசா என மொத்தம் ரூ.1.30 ஒதுக்கப்பட்டுள்ளது. 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் ஒரு மாணவருக்கு காய்கறிக்கு 80 பைசா, மளிகைக்கு 20 பைசா, எரிபொருளுக்கு 40 பைசா என மொத்தம் ரூ.1.40 ஒதுக்கப்பட்டுள்ளது.

 பருப்பு பயன்படுத்தப்படாத நாட்களில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் ஒரு குழந்தைக்கு காய்கறிக்கு 82 பைசா, மளிகைக்கு 40 பைசா, எரிபொருளுக்கு 48 பைசா என மொத்தம் ரூ.1.70 ஒதுக்கப்பட்டுள்ளது. 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் ஒரு மாணவருக்கு காய்கறிக்கு 92 பைசா, மளிகைக்கு 40 பைசா, எரிபொருளுக்கு 48 பைசா என மொத்தம் ரூ.1.80 ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் அங்கன்வாடி மையங்களில் பருப்பு பயன்படுத்தப்படும் நாட்களில் 2 முதல் 5வயது வரையுள்ள ஒரு குழந்தைக்கு காய்கறிக்கு 70 பைசா, மளிகைக்கு 24 பைசா, எரிபொருளுக்கு 19 பைசா என மொத்தம் ரூ.1.13, பருப்பு பயன்படுத்தாத நாட்களில் காய்கறிக்கு 80 பைசா, மளிகைக்கு 36 பைசா, எரிபொருளுக்கு 19 பைசா என மொத்தம் ரூ.1.35 ஒதுக்கப்பட்டுள்ளது.

 உயர்த்தப்பட்ட உணவு மானியம் குறைவாக உள்ளதால் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் 13 வகையான கலவை சாதம் வழங்கும் திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சத்துணவு ஊழியர் சங்க தலைவர் சங்கரநாராயணன் கூறுகையில், 'விலைவாசி உயர்வால் 13 வகை கலவை சாதம், முட்டை மசாலா திட்டத்தில் பீன்ஸ், காரட், தக்காளி, வெங்காயம், மிளகு போன்ற பொருட்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. இதனால் ஒரு மாணவருக்கு குறைந்தது ரூ.7வரை செலவாகும். ஆனால் மிக குறைவான தொகை மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 100 மாணவருக்கு தினந்தோறும் ரூ.500 வரை ஊழியர்களுக்கு கூடுதல் செலவாகும். இதனால் இத்திட்டத்தை சரியாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே உணவு மானியத்தை குறைந்தது ரூ.5 ஆக உயர்த்த வேண்டும்' என்றார்.

29/05/2013

தொடக்கக்கல்வித் துறையில் 2013-14 பொது மாறுதல் மற்றும் பதவியுயர்வு பெற்ற (அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்) அனைவரும் 31.05.2013 பிற்பகல் விடுவிக்கப்பெற்று உடன் பணியில் சேர நடவடிக்கை எடுக்க தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

(மாணவர் நலத்திட்டங்கள் அனைத்தும் உரிய காலத்தில் அவர்களுக்கு கிடைத்திட உடனடியாக தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள்,ஆசிரியர்கள் விடுவிக்கப்பெற்று உடன் பணியில் சேர நடவடிக்கை எடுக்க தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு)

click here to download the DEE proceeding of 2013-14 General Transfer and Promotion Relieving on 31.05.2013

கோடை விடுமுறைக்குப் பின் 2013-2014ம் கல்வியாண்டிற்கான பள்ளி திறக்கும் நாள் ஜூன் 10ஆக மாற்றம் செய்தது, முறையான ஆணை வெளியீட்டு தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

click here to download the dee proceeding of summer holiday extension till 10.06.2013

அக்னி நட்சத்திரம் காரணமாக  அனைத்து பள்ளிகளும் ஜூன் 10ல் திறப்பு

ஏப்ரல் 30ம் தேதியுடன் பள்ளிகள் முடிந்து கடந்த 1ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறை முடிந்து ஜூன் 3ம் தேதி அனைத்து பள்ளிகளையும் திறக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவித்திருந்தது. மே மாதம் முழுவதும் அக்னி நட்சத்திரம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கடுமையான வெப்பம் நிலவியது. குறிப்பாக மதுரை, திருச்சி, வேலூர், சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் உச்சத்தை தொட்டது. அதிலும், திருச்சியில் 109.4 டிகிரி வெப்பம் நிலவியது. கடந்த 117 ஆண்டுகளில் தமிழகத்தில் இந்த அளவுக்கு வெப்பம் பதிவானதில்லை. பருவமழை பொய்த்துப்போனதால் வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.கடலில் இருந்து தரைப்பகுதி நோக்கி வீசும் குளிர் காற்று வீசாததால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெப்ப காற்று வீசி வருகிறது. இதனால் பள்ளிகளை திறக்கும் தேதியை ஒத்திவைப்பது

அதில் கடுமையான வெயில் மற்றும் வெப்ப காற்று காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.இதையடுத்து மாணவர்களுக்கு 7 நாட்கள் கூடுதலாக விடுமுறை கிடைத்துள்ளது.


கத்தரி வெயிலின் போது அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 111 டிகிரி வெயில் கொளுத்தியது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 11-ந்தேதி தமிழகத்தில் வேலூரில் தான் அதிகபட்ச வெயிலின் தாக்கம் பதிவாகி உள்ளது. அன்றைய தினம் சென்னையில் 103 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. வேலூரில் 9-ந்தேதி 109 டிகிரியும், 10-ந்தேதி 110 டிகிரியும் படிப்படியாக உயர்ந்து 11-ந்தேதி 111 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. தொடர்ந்து 17, 18, 19-ந் தேதிகளில் 109 டிகிரி வெயில் சுட்டெரித்தது. அதற்கு அடுத்த படியாக சென்னையில் 109 டிகிரி வெயில் அதிகபட்சமாக பதிவாகி உள்ளது. 

22-ந்தேதி 104 டிகிரியாக இருந்த வெப்பம், 23-ந்தேதி 106 டிகிரியாகவும், 24-ந் தேதி 107 டிகிரியாகவும், 25-ந்தேதி 108 டிகிரியாகவும் அதிகரித்தது. புதுச்சேரியில் 24-ந்தேதி 108 டிகிரியும், 26-ந்தேதி 107 டிகிரி வெப்பமும் சுட்டெரித்தது. மதுரையில் அதிகபட்சமாக 107 டிகிரி வெயில் 3 நாட்கள் தாக்கியுள்ளது. 17-ந்தேதி திருச்சியில் அதிகபட்சமாக 109 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. சென்னை, வேலூர், மதுரை, திருச்சி ஆகிய 4 நகரங்களில் தான் கத்தரிவெயில் அதிகமாக தாக்கியுள்ளது. மற்ற சில மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

அதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா ? தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய....




2010, 2011 மற்றும் 2012 ஆகிய மூன்று ஆண்டுகளில் மூன்று விதமான கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. இதில் 2010ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் ஆதார் அட்டைக்கான கண் விழித்திரை பதிவு, கை ரேகைகள் பதிவு மற்றும் Bio-Metric முறையில் புகைப்படம் ஆகியவை தற்போது நாடு முழுவதும் முகாம்கள் வாயிலாக சேகரிக்கப்பட்டு வருகிறது. 


இவ்வாறு பதிவு செய்யப்பட்டவர்களுக்கு பதிவுச்சான்றாக ஒரு நகல் அளிக்கப்பட்டது. அதில் Enrollment Number, date மற்றும் time ஆகியவை குறிக்கப்பட்டு இருக்கும். அதனைக்கொண்டு நம் அட்டையின் தற்போதைய நிலையை அறிந்துக்கொள்ளலாம். 

நம் அட்டையின் நிலையை அறிந்துக்கொள்ள கீழ் காணும் லிங்கை click செய்து தற்போதைய நிலையை அறிந்துக்கொள்ளவும்.


இவ்வாறு பதிவு செய்த பலருக்கு அவர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிற்கு E-Aadhaar லிருந்து SMS வந்திருக்கும். அவ்வாறு வர பெற்றவர்கள் கீழ்க்காணும் லிங்கை click செய்து உங்கள் ஆதார் அட்டையினை டவுன்லோட் செய்துக்கொள்ளவும். 


இவ்வாறு அட்டை டவுன்லோட் ஆனால், விரைவில் தங்கள் இல்லம் தேடி அஞ்சல் மூலம் ஆதார் அட்டை வந்து சேரும்.

2013-2014 ஆம் கல்வியாண்டில் அ‌ரசு மாதிரிப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தீவிரம்







அரசாணை எண்.216 நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை, விரைவில் உரிய அரசாணை வெளியிடப்பட உள்ளது

அரசாணை எண்.216 இதுவரை அமுல்ப்படுத்தாமலேயே இருந்தது, இதை அமுல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தனர். அரசாணை எண்.216 என்பது சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசால் போடப்பட்ட ஆணையாகும். இந்த ஆணையை தமிழக அரசு இதுவரை அமுல்ப்படுத்தாத காரணத்தால் தான் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது, அரசும் அடிக்கடி வாய்தா வாங்கி கொண்டு இருந்தது.

இறுதியாக வருகிற ஜூன் 3ம் தேதிக்குள் அமுல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டு வரும் அதே நாளில் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் ஏற்கெனவே கூறியுள்ளது. மேலும் அதே நாளன்று (ஜூன் 3ம் தேதி) நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அந்த நாளில் அமுல்படுத்துவதற்கான ஆணை வெளியிட தமிழ்நாடு அரசு புள்ளி விவரங்களை திரட்டி தயார்ப்படுத்தி கொண்டு இருக்கிறது. எனவே வருகிற ஜூன் 3ஆம் தேதி அரசாணையை வெளியிட்டு அதற்கான உத்தரவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது 

ஆறாவது ஊதியக்குழு -இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை எதிர்த்து வழக்குப் பதிவு செய்த விபரம்

மூன்று ஆண்டு காலமாக ஏமாற்றப்பட்டு வந்த இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை எதிர்த்து வழக்குப் பதிவு செய்த விபரம். ஆறாவது ஊதியக்குழு என்ற பெயரில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதியை ஏற்ப்படுத்தினர்.ஊதியத்தை உயர்த்தி தருகிறோம் என்று கூறி பெற்று வந்த ஊதியத்தை பறித்துக்கொண்டனர். ஐந்தாவது ஊதியக்குழு தொடந்து இருந்தாலே தற்போது பெரும் ஊதியத்தை விட அதிகம் பெற்று இருப்போம்.ஐந்தாவது ஊதிக்குழுவில் அடிப்படை ஊதியம் Rs3050 பெற்று வந்த நம்மைவிட கல்வித்தகுதியிலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிதவர்களுக்குகூடRs. 9300 -34800+4200 முதல் 4600 வரை தர ஊதியம் வழங்கி உள்ளனர்.மேலும்,அரசாணை எண் 23 ல் Rs. 750 தனி ஊதியமாக ஒதுக்கப்பட்டது. அதில் அமைச்சு பணியாளர்களுக்கும் இவர்களுக்கும் ஊதிய முரண்பாடு ஏற்படும் என்று ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களைக் கூறியுள்ளனர்.நம்மைவிட அவர்களுடைய கல்வித்தகுதி குறைவு.மேலும் சுமார் 1,16,000 க்கும் மேற்ப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுத்தால், பொருள் செலவு அதிகமாகும் என்று தவறான தகவல்களை கூறியுள்ளனர். மருத்துவ துறையில் புதிதாக நியமனம் பெரும் மருத்துவர் கிராமப்புறங்களில் கண்டிப்பாக சிறிது காலமாவது பணியாற்ற வேண்டும் என்றும் அதற்கு ஊக்க ஊதியமும் வழங்கி வருகின்றனர்.ஆனால்,இடைநிலை ஆசிரியர்கள் கரடு முரடான, பாதைகளே இல்லாத இடங்களிலும் ,மலைப்பகுதிகளிலும் தன்னலம் பாராமல் வருங்கால பாரதம் சிறப்பாக உருவாவதற்கு உழைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், அவர்களை அவமானப்படுத்தும் விதமாக கிராமங்களில் பணிபுரிகின்றனர். ஆதலால், இடைநிலை ஆசிரியர்களுக்கு குறைவான ஊதியம் தருகின்றோம் என்று, ஒரு நபர் குழுவில் கூறியுள்ளனர்.கிராமப்புறங்களில் பணிபுரிவதற்கு மேலும் ஒரு ஊக்க ஊதியம் அரசு தான் தரவேண்டும்.இந்தக் கொடுமைகளையெல்லாம் எதிர்த்துத்தான் நமது நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து உயர் நீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.நமது இயக்கமும் மூன்று நபர் ஊதியக்குழுவிடம் நமது ஊதிய முரண்பாட்டை நேரில் வலியுறுத்தி உள்ளது. இதற்கு தற்போது செலவினத்தின் செயலாளர் உயர்திரு.S .கிருஷ்ணன் I.A.S அவர்கள் மதுரை உயர் நீதிமன்ற வழக்கு எண்MP.(MD) No2 of 2012 in W.P.(MD)9218 of 2012. ற்கு உயர் நீதிமன்றத்திற்கு பதில் அளித்துள்ளார்.அவற்றில் நமது ஊதியம் 5200 - 20200 + 2800 இருந்து 9300 -34800 +4200 வழங்குமாறு வழக்கு பதிவு செய்துள்ளீர்கள். அதற்கு அரசு பரிசீலித்து உரிய அரசாணை பிறப்பிக்கும் என்று சாதகமான பதில் அளித்துள்ளார்.விரைவில் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம் ...

6-வது பொருளாதார கணக்கெடுப்பு: ஜூன் 6-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது



6-வது பொருளாதார கணக்கெடுப்பு சென்னை மாநகராட்சியில் ஜூன் 6-ம் தேதி முதல் தொடங்கும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இந்த கணக்கெடுப்பு தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் இந்த கணக்கெடுப்பு வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது. இந்த கணக்கெடுப்பு தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது.இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியதாவது:சென்னையில் பொருளாதார கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 4,000 பேர் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 6,000 பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர்.இவர்களுக்கு ஜூன் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி முதல் பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்கு பின்னர் இவர்கள் கணக்கெடுப்புப் பணிகளை தொடங்குவார்கள். ஒரு பணியாளர் 150 வீடுகளில் கணக்கெடுப்பை மேற்கொள்ளவேண்டும். இந்த கணக்கெடுப்பு ஜூன் 30-ம் தேதிக்குள் முடிக்கப்படும்.இந்தக் கணக்கெடுப்புப் பணிகள் அந்தந்த மண்டல அதிகாரிகள் கண்காணிப்பில் நடத்தப்படும். இந்த கணக்கெடுப்பில் பொருளாதார ரீதியிலான தகவல்கள் சேகரிக்கப்படும். இந்த தகவல்கள் நாட்டின் பொருளாதார கொள்கைகளை வகுக்க உதவிகரமாக இருக்கும் என்று அவர் தெரிவத்தார்.

உலக பள்ளி செஸ் போட்டி: இந்திய மாணவி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை

                                         

உலக பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கிரீஸ் நாட்டின் ஹால்கிடிகி நகரில் நடந்தது. இதில் பெண்களுக்கான 9 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மும்பை மாணவி அனன்யா குப்தாவும் கலந்து கொண்டார்.

9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் அவர் 7–ல் வெற்றி பெற்று 3–வது இடத்தை பிடித்ததுடன், வெண்கலப்பதக்கத்தையும் தட்டிச் சென்றார். இதில் கடைசி ரவுண்டில் தன்னை விட தரவரிசையில் மிக உயர்ந்த நிலையில் இருந்த பிரான்சின் யுயான் பெலினுடன் மோதிய அனன்யா, அந்த ஆட்டத்தில் ‘டிரா’ செய்வதற்கான சந்தர்ப்பம் வந்த போதிலும் அதை ஏற்க மறுத்து, தைரியமாக தொடர்ந்து விளையாடி எதிராளியை சாய்த்தார். அவர் மொத்தம் 7 புள்ளிகள் பெற்றார். இந்த பிரிவில் கஜகஸ்தானின் அஸ்சா பயேவா (8.5 புள்ளி) தங்கப்பதக்கத்தையும், இந்தோனேஷியாவின் டையாஜெங் தெரேசா சிங்கி (8 புள்ளி) வெள்ளிப்பதக்கத்தையும் கைப்பற்றினர்.

9 வயதான அனன்யா, மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டேல் சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார். இந்த போட்டிக்காக தினமும் 7 மணி நேரம் தனது பயிற்சியாளர்களுடன் பயிற்சியில் ஈடுபட்ட அவர், அடுத்து தேசிய போட்டிகளுக்காக தயாராகி வருகிறார். முன்னதாக அவர் சிங்கப்பூர் செஸ் தொடரில் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்கள் சேர்க்கை; விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

தனியார் சுயநிதி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்களை சேர்ப்பதற்கான இறுதி தேதியை 2 வாரங்களுக்கு நீட்டித்து மெட்ரிக்குலேஷன் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் சுயநிதி பள்ளிகள் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் ஆரம்ப வகுப்புக்களில் 25 சதவீதம் இடங்களில் ஏழை மாணவர்களை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

                          

இதையடுத்து கடந்த மே மாதம் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை இதற்கான விண்ணப்பங்களை பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று மெட்ரிக்குலேஷன் கல்வி இயக்குனரகம் அறிவித்தது. ஆனால் பெரும்பாலான பள்ளிகள், 25 சதவீதம் இடங்களில் ஏழை மாணவர்களை சேர்த்தால் நன்கொடை கிடைக்காது, மேலும் அரசு நிர்ணயித்த குறைந்த கல்வி கட்டணமே கிடைக்கும் என்று ஏழை மாணவர்களுக்கு விண்ணப்பங்களை தராமல் இழுத்தடித்தன.

மே மாதம் 9ஆம் தேதிக்கு பிறகு பள்ளிக்கு சென்ற பெற்றோர்களிடம் இறுதி தேதி முடிந்து விட்டது என்று காரணம் சொல்லி தனியார் பள்ளிகள் திருப்பி அனுப்பின. இதனால் பல தனியார் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படாமலே இருந்தன. தனியார் பள்ளிகளின் இந்த மோசடி நாடகத்தை எதிர்த்து கல்வியாளர்கள் குரல் கொடுத்தனர்.

இதை தொடர்ந்து மெட்ரிக்குலேசன் கல்வி இயக்குனரகம் இன்று அதிரடியாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதி மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் ஆரம்ப நிலை வகுப்புகளில் 25 சதவீதம் இடங்களை ஏழை மாணவர்களை சேர்க்க வேண்டும். குறிப்பாக ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு குறைவாக உள்ள பெற்றோரின் குழந்தைகளை பள்ளிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் பெரும்பாலான இடங்களில் பெற்றோர்களுக்கு விண்ணப்பங்கள் சரிவர கிடைக்கவில்லை. எனவே தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்களை சேர்ப்பதற்கான காலக்கெடு ஜூன் மாதம் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெற்று தகுதியுடைய பெற்றோர்கள் அங்கேயே விண்ணப்பிக்கலாம்.

முதன்மை கல்வி அலுவலர் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியுடைய குழந்தைகளை தனியார் சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

என் தலை... அஞ்சல் தலை!

                                        

அஞ்சல் தலைகளைச் சேமிப்பது சுவாரஸ்யமான கலை. ஒரு நாட்டின் தலைவர்கள், கலாசாரம், பழக்க வழக்கங்கள், வரலாறு போன்றவற்றை அறியவும் தூண்டுகோலாக விளங்குகிறது.

நமது நாட்டின் அஞ்சல்தலைகளை யோசித்துப்பாருங்கள், காந்தி, நேதாஜி, நேரு, இந்திரா காந்தி, அண்ணா என நீண்டு செல்லும் அந்தப் பட்டியலில் உங்கள் படமும் இடம்பெற்றால் எப்படி இருக்கும்?

'மிகப் பெரிய சாதனைகள் செய்தவர்களும் தலைவர்களும் மட்டுமே இடம்பெற்ற அஞ்சல்தலையில் இனி, நமது படமும் அச்சிடப்படும். அதை நமது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி மகிழலாம்.

உங்களுடைய படம் மட்டுமல்லாது; நீங்கள் வரைந்த ஓவியங்கள், எடுத்த படங்கள் போன்றவற்றையும் தபால்தலையாக அச்சிட்டு வாங்கிக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் பெயர், 'என் அஞ்சல்தலை’.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சென்னையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்துக்கு நேரில் சென்று, உங்களுடைய அடையாள அட்டை ஒன்றைக் காண்பித்து, இதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, நீங்கள் அச்சிட விரும்பும் புகைப்படத்தை அளிக்க வேண்டும். 12 அஞ்சல்தலைகளைக் கொண்ட ஒரு முழுத்தாளுக்கான கட்டணம் 300. விண்ணப்பம் மற்றும் அதற்கான கட்டணம், தேவையான ஆவணங்கள் போன்றவற்றை முழுமையாகச் செலுத்திய பிறகு, 15 நாட்களுக்குள் உங்கள் முகவரிக்கு அஞ்சல் தலைகளை அனுப்பிவைப்பார்கள்.

இந்தத் திட்டத்தை முதற்கட்டமாக பெருநகரங்களான புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் பெங்களூரு, ஜம்மு, புனே, கோழிக்கோடு, அஹமதாபாத் ஆகிய இடங்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இது படிப்படியாக மற்ற ஊர்களிலும் செயல்படுத்தப்படும் என இந்திய அஞ்சல் துறை அறிவித்து இருக்கிறது. மே 3-ம் தேதி சென்னையில் இந்தத் திட்டம் அறிமுகமானது.

அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், நெதர்லாந்து, போலந்து போன்ற பல நாடுகளில் பல ஆண்டுகளாகவே இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது.

நமது படம் அச்சிடப்பட்ட அஞ்சல் தலைகளால் என்ன பயன்?

இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகத்தில் தனிநபர் கடிதப் போக்கு வரத்துகள் குறைந்துவிட்டன. இந்தத் திட்டம் கடிதப் போக்குவரத்துகளை ஊக்குவிக்கும். உங்கள் உறவினருக்கோ, நண்பருக்கோ அனுப்பும் கடிதத்தில் உங்கள் படம் அச்சிடப்பட்ட அஞ்சல்தலை ஒட்டப் பட்டு இருந்தால், அதைப் பார்ப்பவர்களுக்கு எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்?

நீங்கள் அஞ்சல்தலை சேகரிக்கும் பழக்கம்கொண்டவராக இருந்தால், உங்களுடைய ஆல்பத்தில் உங்கள் முகம்கொண்ட அஞ்சல்தலையும் இருக்கும். உங்கள் நண்பர்களின் சேமிப்பிலும் இடம்பெறலாம்.

ஃபேமிலி ட்ரீ எனப்படும் குடும்ப வரைபடம் தயாரிக்கும்போது, உங்கள் குடும்பத்தில் உள்ள அத்தனை உறுப்பினர்களின் படங்களும் அச்சிடப்பட்ட அஞ்சல்தலைகளை அதில் ஒட்டி அசத்தலாம்.

பள்ளிக்கல்வி - கோடை விடுமுறைக்குப் பின் 2013-2014ம் கல்வியாண்டிற்கான பள்ளி திறக்கும் நாள் ஜூன் 10ஆக மாற்றம் செய்தது, முறையான ஆணை வெளியீட்டு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

28/05/2013

உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்க விவரம் 2014-2015

அகஇ-சென்னையில் நடைபெற்ற பள்ளி செல்லா குழந்தை -கள் குறித்த ஆய்வு கூட்டறக்கையில் கூறியவை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் / மேற்பார்வையாளர்கள் / உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு.

கற்கும் பாரதம் திட்டம் 31.3.2013 உடன் திட்டம் மு‌டிவு பெற்றது - சென்னை பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கக செய்தி

                                   

கற்கும் பாரத திட்டத்தை செயல்படுத்த பணிநியமனம் செய்யப்பட்ட மையப்பொருப்பாளர்கள்/ கிராம ஒருங்கிணைப்பாளர்கள் 30.4.2013 பிற்பகல் முதல் பணியிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளதால் அவர்களிடம் உள்ள அனைத்துப்பொருட்கள் மற்றும் ஆவணங்களை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் அல்லது மூத்த ஆசிரியர்களிடம் ஒப்படைக்க உத்தரவு.மேலும் தளவாடப்பொருட்கள் மற்றும் ஆவணங்களை ஒப்ப‌டைப்பதற்கும், பெற்றுக்கொண்டதற்கும் உரிய முறையில் ஒப்பதல் பெறப்பட்டு நகல்களை வட்டார வளமையத்திற்கும் மாவட்ட அலுவலகத்திற்கும் அனுப்ப வேண்டும்.

'கற்கும் பாரதம்' திட்ட இலக்கை எட்டிய ஒரே மாநிலம் தமிழ்நாடு: ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு பாராட்டு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கல்லாதோர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று உறுதியுடன், கல்வித் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் பேரில் செயல்படுத்தப்பட்டு வரும் “கற்கும் பாரதம்” என்னும் எழுத்தறிவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் என்னும் சிறப்பை தமிழ்நாடு பெற்று சாதனைப் படைத்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் 17 லட்சத்து 26 ஆயிரம் கல்லாதோர் கற்றோராக மாற்றப்பட்டுள்ளனர். பதினோராவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர், நலிவுற்றோர், குறிப்பாக பெண்கள் எழுத்தறிவு பெறும் வகையில் 8.9.2009 முதல் “சக்ஷார் பாரத்” என்ற பெயரில் வயது வந்தோருக்கான எழுத்தறிவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

மத்திய மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டம் “கற்கும் பாரதம்” என்னும் பெயரில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 50 விழுக்காட்டிற்கும் குறைவாக பெண்களின் எழுத்தறிவு உள்ள விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், சேலம், தருமபுரி மற்றும் ஈரோடு ஆகிய ஏழு மாவட்டங்கள் கண்டறியப்பட்டு இம்மாவட்டங்களிலிருந்து 17 லட்சத்து 46 ஆயிரம் பேர் எழுத்தறிவு இல்லாதவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இத்திட்டத்தின் கீழ் வகுப்புகள் 3,152 மையங்களில் 6,304 மையப் பொறுப்பாளர்களால் வார நாட்களில் மாலை 3.00 முதல் 7.00 மணி வரை நடத்தப்பட்டு வருகின்றன. 2011-ஆம் ஆண்டு மார்ச் மாத முடிவில், இத்திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 67 ஆயிரத்து 555 கல்லாதோர் மட்டுமே கற்றோராக மாற்றப்பட்டனர்.

ஜெயலலிதா மூன்றாம் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, மரபு வழி கற்பித்தல் முறையோடு இணைந்து கற்பிக்கப்படும் 40 மாதிரி வயதுவந்தோர் கல்வி மையங்களை அமைக்க உத்தரவிட்டார். இந்த மாதிரி மையங்களில் பயிலும் வயதுவந்தோருக்கு கணினியையும், நீர்மப் படப்பெருக்கி-ஐயும் பயன்படுத்தி ஏற்கெனவே தொகுக்கப்பட்ட அடிப்படை எழுத்தறிவுத் திட்டத்தை உள்ளடக்கிய மென்பொருளை இணைத்து கல்வி கற்பிக்கப்படுகிறது.

இது மட்டுமல்லாமல், இத்திட்டத்தினை வெற்றிப்பாதையில் எடுத்துச் செல்லும் நோக்கோடும், இத்திட்டத்தில் பெண்களை அதிக எண்ணிக்கையில் சேர்க்கும் லட்சியத்தோடும், தையல் பயிற்றுவித்தல், சோப்பு எண்ணெய் தயாரித்தல், செயற்கை ஆபரணங்கள் தயாரித்தல், மெழுகுவர்த்தி தயாரித்தல் போன்றவற்றை பயிற்றுவிக்க உத்தரவிட்டதோடு மகளிர் சுய உதவிக் குழுக்களில் 100 விழுக்காடு எழுத்தறிவு உள்ளவர்கள் என்ற இலக்கை எய்தும் 30 ஊராட்சி கூட்டமைப்புகளுக்கு, தகுதியுரையுடன் 50,000 ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கவும் ஆணையிட்டார்.

ஜெயலலிதாவின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் காரணமாக, இத்திட்டத்தின் கீழ் 17 லட்சத்து 26 ஆயிரம் கல்லாதோர் கற்றோர்களாக மாற்றப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், இந்தியாவிலேயே இந்தத் திட்டத்தின் இலக்கை எய்திய ஒரே மாநிலம் என்ற பெருமையும் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டின் இந்தச் சாதனையை பாராட்டி, மத்திய மனித வள மேம்பாடுத்துறை இணை அமைச்சர் சசி தரூர் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு


பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு: 10-ம் தேதி திறக்கப்படும் கல்வித்துறை - அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு முடிந்ததும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்து ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. 

இந்நிலையில் ஒரு மாத காலமாக மக்களை வாட்டி எடுத்த அக்னி நட்சத்திரம் இன்று முடிந்தது. ஆனாலும் கோடை வெப்பம் தொடர்வதால் பள்ளிகளுக்கான விடுமுறை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 3-ம் தேதிக்கு பதிலாக ஜூன் 10-ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. 

புதுச்சேரியிலும் சுட்டெரிக்கும் வெயில் தொடர்வதால், ஜூன் 3-ம் தேதிக்குப் பதில் ஜூன் 10-ம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் பள்ளிக்கூடம் திறப்பு தள்ளிவைக்கப்படுமா? கல்வித்துறை அதிகாரி விளக்கம்

கடந்த 1998–ம் ஆண்டு இப்படி அதிக வெயில் அடித்த காரணத்தால் தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள் ஒரு வாரம் தள்ளி திறக்கப்பட்டன. அதுபோல இந்த வருடம் பள்ளிக்கூடம் திறப்பது தள்ளிப்போகுமா என்று ஆசிரியர்களும், மாணவர்களும், பல பெற்றோர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த நிலையில் புதுச்சேரியில் பள்ளிக்கூடங்கள் ஜூன் மாதம் 3–ந்தேதி திறப்பதாக இருந்தது. இது தள்ளிவைக்கப்பட்டு 10–ந்தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல தமிழ்நாட்டிலும் பள்ளிக்கூடங்கள் திறப்பது தள்ளிப்போகுமா? என்று கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–

இதுவரை முடிவு எடுக்கவில்லை

புதுச்சேரியில் பள்ளிக்கூடங்கள் திறப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது தெரியும். தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்துவருகிறது. சென்னையிலும் மற்ற இடங்களிலும் வெயில் அளவு நிறையவே குறைந்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) வெயில் குறைகிறதா என்று பார்க்கப்படும். இருப்பினும் பள்ளிக்கூடங்கள் திறப்பு தள்ளிப்போடுவது பற்றி எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என அதிகாரி தெரிவித்தார்

தமிழ்நாடு அமைச்சுப்பணி - உதவியாளர் பதவியிலிருந்து இருக்கைப்பணி கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்க 15.03.2013 நாளின் படி முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

27/05/2013

கல்வித்துறையில் தேவைப்படும் நிர்வாக சீர்திருத்தம் - ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

பள்ளிக் கல்வியில் 1 முதல் 5 வகுப்புகளைக் கொண்ட தொடக்கப் பள்ளிகள், 1 முதல் 8 வகுப்புகளைக் கொண்ட நடுநிலைப் பள்ளிகள், 6 முதல் 10 வகுப்புகளைக் கொண்ட உயர்நிலைப் பள்ளிகள், 6 முதல் 12 வகுப்புகளைக் கொண்ட மேல்நிலைப் பள்ளிகள் என நான்கு வகையான பள்ளிகள் உள்ளன.
அவை கீழ்கண்டவாறு பல வகையான பள்ளிகளாக உள்ளன.
உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் [State Board Schools]
மெட்ரிக் பள்ளிகள் [Matriculation Schools]
ஓரியண்டல் பள்ளிகள் [Oriental Schools]
ஆங்கிலோ இந்திய பள்ளிகள் [Angilo-Indian Schools]
அவை அரசின் பல துறைகளால் நிர்வகிக்கப்படுகின்றன.
பள்ளிக் கல்வித்துறை [Elementary, Middle, High, Higher Secondary, Matriculation, Oriental, Angilo-Indian Schools]
நகராட்சித்துறை [Municpal Schools]
மாநகராட்சித்துறை [Corporation Schools]
ஊராட்சித்துறை [Panchayat Union Schools]
வனத்துறை [Forest Schools]
ஆதிதிராவிட நலத்துறை [Adi Dravida Welfare Schools] etc.
மாநில அளவில் பல துறைகளால் நிர்வகிக்கப்படும் இப் பள்ளிகளில் சிலவகைப் பள்ளிகள் கட்டமைப்பு, கல்வி கற்பித்தல், கல்வி கற்றல், நிர்வகித்தல் மற்றும் பல வகையில் நல்ல தரத்துடன் இருக்கின்றன. பல பள்ளிகள் அதற்கு மாறாக இருக்கின்றன.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறை மூலம் மட்டுமே நிர்வகிக்கப்பட வேண்டும்.
அவற்றை
1 முதல் 5 வகுப்புகளைக் கொண்ட, இடைநிலை ஆசிரியர்களால் கல்வி கற்பிக்கப்படும் தொடக்கப் பள்ளிகள்
2. 6 முதல் 10 வகுப்புகளைக் கொண்ட, பட்டதாரி ஆசிரியர்களால் கல்வி கற்பிக்கப்படும் உயர்நிலைப் பள்ளிகள்
11 முதல் 12 வகுப்புகளைக் கொண்ட, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களால் கல்வி கற்பிக்கப்படும் மேல்நிலைப் பள்ளிகள்
என மூன்று வகையான பள்ளிகள் மட்டுமே உள்ளவாறு மாற்றியமைக்கப்பட வேண்டும்.
மாநில அளவில் தொடக்கப் பள்ளிகள் தொடக்கக் கல்வி இயக்குநர் [Director - Elementary] அவர்களாலும், மாநில அளவில் உயர்நிலைப் பள்ளிகள் உயர்நிலைக் கல்வி இயக்குநர் [Director - Secondary] அவர்களாலும், மாநில அளவில் மேல்நிலைப் பள்ளிகள் மேல்நிலைக் கல்வி இயக்குநர் [Director - Higher Secondary] அவர்களாலும் நிர்வகிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டத்துக்கு ஐ.நா. பாராட்டு

இதுதொடர்பாக உலக உணவுத் திட்ட செயல் இயக்குநர் எர்தாரின் கசின் கூறியதாவது:

பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு உணவு வழங்குவது முக்கியமானதாகும். பல்வேறு வளரும் நாடுகளில் இதில் கவனம் செலுத்தப்படவில்லை.

பள்ளியில் உணவு அளிப்பது என்பது, தரமான கல்வியை அளிப்பதை உறுதி செய்யும். இது குழந்தைகளுக்காக செய்யும் சிறந்த முதலீடாகும். இதனால் குழந்தைகள், சுகாதாரத்துடன், வலு மிக்கவர்களாக விளங்குவர். இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் குழந்தைகளுக்கு பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டம் கடந்த 1960-ல் அப்போதைய முதல்வர் கே.காமராஜால் கொண்டு வரப்பட்டது.

வறுமை காரணமாக குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருப்பதை தடுப்பதற்காக இத்திட்டத்தை அவர் கொண்டு வந்தார். இத்திட்டம் இப்போது மிகச்சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

உலகம் முழுவதும் 169 வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் 3.6 கோடி குழந்தைகள் நாள்தோறும் ஒருவேளை உணவை பள்ளியில் பெறுகின்றன. ஏழை நாடுகளில் 18 சதவீதம் குழந்தைகளுக்கு தான் உணவு கிடைக்கிறது. 
கடந்த 5 ஆண்டுகளில் 38 நாடுகளில் மத்திய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

குறிப்பாக விலை உயர்வு, எரிபொருள் பெறுவதில் சிக்கல், இயற்கை பேரழிவு போன்றவற்றால் பள்ளிகளில் உணவு வழங்கும் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது என்று எர்தாரின் குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் பள்ளி திறப்பு தேதி மாற்றம் - ஜுன் மாதம் 3ம் தேதிக்கு பதில் 10ம் தேதி திறக்கப்படும்

புதுச்சேரியில் பள்ளி திறப்பு தேதி மாற்றம்

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதுச்சேரியில் பள்ளி திறப்பு தேதி மாற்றப்பட்டுள்து.கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு மே மாத இறுதி வாரத்திலும் கோடை வெயிலின் தாக்கம் குறைய வில்லை. நாளுக்குள் நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், புதுச்சேரியில், பள்ளிகள் திறக்கும் தேதி ஜுன் மாதம் 3ம் தேதிக்கு பதில் 10ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை புதுச்சேரி கல்வித் துறை அமைச்சர் தியாகராஜன் இன்று அறிவித்தார்.


மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயிலுக்கு நாளை 'குட் பை'

மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் நாளையுடன் முடிகிறது. இதையடுத்து வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் கோடை வெயில் முன்கூட்டியே கொளுத்த தொடங்கியது. கடந்த 4-ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. அன்று முதல் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக உயர்ந்தது. சில இடங்களில் கோடை மழை பெய்தபோதும், பயனில்லை. சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெயில் வெளுத்து வாங்கியது. அதிகபட்சமாக வேலூரில் 111 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்தது. கடந்த ஒரு வாரமாக அனல் காற்று வீசியது. பகல் நேரத்தில் மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாமல் தவித்தனர். பலர் வீடு மற்றும் அலுவலகங்களிலேயே முடங்கிக் கிடந்தனர். சென்னையில் நேற்று 109 டிகிரி கொளுத்தியது. சாலைகள் அனலாக கொதித்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். பெரும்பாலானோர் முகத்தை துணியால் மூடிக் கொண்டும், குடை பிடித்தபடியும் சென்றனர். சுமார் ஒரு மாதமாக மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் நாளையுடன் முடிகிறது. இதையடுத்து வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு பருவ மழை முன்கூட்டியே தொடங்கும் என தெரிகிறது. கேரளாவில் ஜூன் முதல் வாரத்தில் பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

26/05/2013

தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு 28ந் தேதி தொடக்கம்-அரியலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜி.தாமரை வசந்தா தகவல்

28ந் தேதி முற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்குதல் நடைபெறுகிறது. மேலும் அன்று நடுநிலை பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு ஆணையும் வழங்கப் படுகிறது.

அன்று பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியத் திற்குள் மாறுதல் ஆணை வழங்கப்படுகிறது.

29ந் தேதி முற்பகல் தொடக்க பள்ளி தலைமை யாசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்படுகிறது. அன்று பிற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை யாசிரியராக பதவி உயர்வு ஆணை வழங் கப்படுகிறது.

30ந்தேதி முற்பகல் இடைநிலை ஆசிரியர் ஒன்றியத்திற்குள் மாறுதல் வழங்கப்படுகிறது. அன்று பிற்பகல் இடைநிலை ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல் வழங்குதல்(ஒன்றியம் விட்டு ஒன்றியம் ) நடைபெறுகிறது.

31ந் தேதி முற்பகல் இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை அரியலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜி.தாமரை வசந்தா தெரிவித்துள்ளார்.

பள்ளி துவங்கும் நாளிலேயே (03.06.2013) மாணவர் நலத்திட்ட பொருட்கள் வழங்க ஆணை-தொடக்க கல்வித் துறை

1 முதல் 8 வகுப்பு வரையிலான தொடக்க கல்வித் துறைக்கான 2013-14ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள்மற்றும் சீருடைகளை 27.05.2013 முதல் 31.05.2013க்குள் அலுவலர்களுக்கு அளித்து பள்ளி துவங்கும் முதல் நாளான 03.06.2013 அன்றே மாணவர்களுக்கு வழங்கி 04.03.2013 அன்றுக்குள் அறிக்கை அனுப்ப  வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

CLICK HERE DEE - Proc for Distribution of Schemes...

மாண்புமிகு தமிழக முதல்வரின் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பள்ளிகள் இல்லாத 54 குடியிருப்பு பகுதிகளில் புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்க கருத்துரு கோரி - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு படிவங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை

தொடக்ககல்வி நீதி மன்ற தீர்பாணைக்கு உட்பட்டு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 01.06.1988 க்கு முந்தைய பணிகாலத்தை தேர்வு நிலை / சிறப்பு நிலை வழங்குவதற்கான அரசாணை நடைமுறை படுத்துதல் குறித்து கூடுதல் விவரம் சார்ந்து

வயது முதிர்வு காரணமாக பணிநிறைவு பெறும் அரசு ஊழியர்/ஆசிரியர்களின் ஓய்வின்போது நிலுவையில் உள்ள துறை ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு நிபந்தனை அடிப்படையில் ஓய்வு வழங்க தமிழக அரசு ஆணை வெயிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு, தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் (NCTE) வழிகாட்டுதலுக்கு விரோத மானது. டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் குறைப்பு இல்லை : தமிழக அரசு கைவிரிப்பு

தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி ஆந்திராவில் உயர்ஜாதியினருக்கு 60, பிற்படுத்தப் பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோ ருக்கு 40 மதிப்பெண்கள் என்றும் அஸ்ஸாமில் உயர் ஜாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55, ஒரிசாவில் உயர் ஜாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 50 மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப் பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்,

தகுதி மதிப் பெண்கள் 60 ஆக நிர்ணயிக்கப் பட்டதால் தாழ்த்தப்பட்டோருக்கான இடங்கள் நிரப்பப்பட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சட்டப் பேரவையில் கேள் விகள் எழுப்பப்பட்ட போது கல்வி அமைச்சர் இது அரசின் கொள்கை முடிவு என்று அறிவித்தார்.

டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் குறைப்பு இல்லை : தமிழக அரசு கைவிரிப்பு

டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும்' என, சட்டசபையில், பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தியபோதும், அவர்களின் கோரிக்கையை ஏற்க, தமிழக அரசு மறுத்துள்ளது.
டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என, என்.சி.டி.இ., அளவு நிர்ணயித்துள்ளது. எனினும், மாநில அரசுகள் விரும்பினால், இந்த மதிப்பெண்கள் அளவை, ஓரளவு குறைத்துக் கொள்ளலாம் எனவும், என்.சி.டி.இ., தெரிவித்துள்ளது.

பல மாநிலங்களில் சலுகை : அதன்படி, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில், ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான தகுதி மதிப்பெண்கள் அளவு, 5 சதவீதம் முதல், 10 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

இதைப் பின்பற்றி, தமிழக அரசும், எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., மற்றும் பி.சி., ஆகிய பிரிவினருக்கு, தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம், சமீபத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலும் எதிரொலித்தது.

சட்டசபையில் கோரிக்கை : கடந்த, 10ம் தேதி, சட்டசபையில், பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில், பல எம்.எல்.ஏ.,க்கள், டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.அறுபது சதவீத மதிப்பெண்கள் என்ற அளவால், சமுதாயத்தில் பின் தங்கிய தேர்வர்களால் தேர்வு பெற முடியாத நிலை உள்ளது என்றும், குறிப்பாக, 55 சதவீதம், 58, 59 சதவீதம் மதிப்பெண்கள் எடுக்கும் தேர்வர்கள் கூட, தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது என்றும், எம்.எல்.ஏ.,க்கள் சுட்டிக் காட்டினர். அப்போது, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் பதிலளிக்கையில், "இந்த கோரிக்கை, அரசின் பரிசீலனையில் உள்ளது' என, தெரிவித்தார். இதனால், தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்படும் என, அனைவரும் எதிர்பார்த்தனர். டி.இ.டி., தேர்வு அறிவிப்பில், தகுதி மதிப்பெண்கள் குறைப்பு செய்யப்படவில்லை. வழக்கம் போல், தகுதி மதிப்பெண்களாக, 60 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு, அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது, தேர்வர்கள் மத்தியில், ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது

ஆசிரியர் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் 27-ந்தேதி முதல் வினியோகம்


2013-14ம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கை

2013-14ம் கல்வியாண்டில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்க கல்வி பட்டயப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் (DUET), முதன்மைக் கல்வி அலுவலங்களிலும் (CEO Office) மே 27 காலை 10.00 மணி முதல் ஜூன் 12ம் தேதி 5 மணி வரை, ஞாயிற்றுக் கிழமைத் தவிர மற்ற நாட்களிந்ல விறியோகப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500ஐ தவிர ரொக்கமாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கானக் கட்டணம் ரூ.250 /- மட்டும்.

இணையதளம் வழியாக ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்படும். விண்ணப்பத்தாரர் எந்த மாவட்டத்தில் விண்ணப்பித்தாரோ அத மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலோ அல்லது முதன்மைக் கல்வி அலுவலகத்தால் தெரிவு செய்யப்பட்ட மையத்தில் கலந்தாய்வில் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் எந்த ஒரு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தையும் தெரிவு செய்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி: +2வில் குறைந்தபட்சம் 540 மதிப்பெண்களாவது பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினத்தவர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சிறப்பு இட ஒதுக்கீடு: மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரரின் குழந்தைகள், சுதந்திர போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் ஆகியோருக்குச் சிறப்பு இட ஒதுக்கீடு உள்ளது. விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கலாம்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை விண்ணப்பம் வாங்கிய மையத்திலேயே ஜூன்12ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கடும் வெயில் ‌எதிரொலி பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட வாய்ப்பு- தமி‌ழக ‌அ‌ரசு செய்தி

24/05/2013

AEEO Revised Seniority List for 2013-14.திருத்தி அமைக்கப்பட்ட 1 லிருந்து 813 வரை வரிசையிலுள்ள 01.01.2013ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணி மாறுதல் பெற தகுதியான ஆசிரியர் பெயர் பட்டியல் வெளியீடு

அரசுப்பள்ளிக‌ளைக் காப்போம்


அரசு பள்ளிகளைப்போல் தனியார் பள்ளிகளிலும் தமிழ்வழி கல்வி ஆர்வம் குறைகிறதா? மாணவர்களை சேர்க்க படாதபாடுபடும் ஆசிரியர்கள்

அரசுப் பள்ளிகளை தொடர்ந்து தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தமிழ் வழியில் கற்பவர்கள் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆங்கில வழி கல்வி மோகமே இதற்கு காரணம் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நகர்புறத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி கிராமத்தினரும் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழி கல்வியில் சேர்க்க ஆர்வ மாக உள்ளனர். பெற்றோ ரின் இந்த ஆங்கில கல்வி மோகத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

இதை தடுத்து நிறுத்த வரும் கல்வி ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கு ஒரு பிரிவை தொடங்க கல்வித்துறை பச்சை கொடி காட்டியுள்ளது. முதல் கட்டமாக 1ஆம் வகுப்பில் அரசு பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டே ஆங்கில வழி கல்வி பிரிவு தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான பள்ளி கள் பட்டியல் மாவட்ட வாரியாக தயாரித்து அனுப்பப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளி லும் தமிழ் வழி யில் கற் கும் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. பல அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கு அதிகரிக்கும் ஆர்வம் தமிழ் வழி கல்விக்கு எதிர்மறையாக உள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் வரை நெல்லை யில் சில பள்ளிகளில் ஏப்ரல், மே மாதங்களிலேயே 6 முதல் 9 ஆம் வகுப்புகளில் தமிழ் வழி கல்விக்கு இடம் கிடைக்காத நிலை இருந்தது. 

மேலும் சில பள்ளிகளில் ஏ முதல் ஜே வரை 10 பிரிவுகள் தொடங்கப்பட்ட பின்னரும் 6ஆம் வகுப்புக்கு இடம் கிடைக்காமல் மாணவர்கள் திரும்பும் நிலை கூட ஏற்பட்டது. இந்த ஆண்டு இது மாறி உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து மாணவ மாணவி கள் டிசி வாங்கி செல்லும் அளவிற்கு சேர்க்கை இல்லை. 

ஆங்கில வழி கல்வி உள்ள வேறு பள்ளியில் தங்கள் பிள்ளையை சேர்க்கப் போவதாக கூறி அழைத்து செல்கின்றனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு பிரிவு மட்டுமே ஆங்கில வழி கல்வி இருப்பதால் அவர்கள் அதிக மான மாணவ மாணவி களை சேர்க்க முடியாத நிலையில் உள்ளனர். அரசு பள்ளிகளைப் போல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறையாமல் இருக்க நிர்வாகிகளும் ஆசிரியர்களும் படாத பாடுபடுகின்றனர். 

பல ஆண்டுகளாக நன் கொடை வாங்கியும் சிபாரி சின் அடிப்படையில் சேர்க்கைக்கு முன் னுரிமை வழங்கி யும் வந்த சில பள்ளிகள் மாணவர்கள் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு இறங்கி வந்துள்ளனர். மேலும் சில பள்ளிகள் சேர்க்கை கட்டணத்தை கணிசமாக குறைத்துள்ளன. ரூ.100 சேர்க்கை கட்டணம் மட்டும் தந்தால் போதும் என தெரிவிக்கின்றனர். இதனால் ஆங்கில வழி கற்க ஆர்வமாக உள்ள தங்கள் பள்ளி மாணவர் களை தக்க வைக்க முடியா மலும் புதிய மாணவர்களை சேர்க்க முடியாமலும் தவிக்கின்ற நிலை உருவாகி உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த திடீர் மாற்றத்திற்கு பெற்றோரின் ஆங்கிலவழி கல்வி மோகமே முக்கிய காரணம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்