தமிழக அரசின் நலத்திட்ட பொருட்கள் வினியோகம் மற்றும் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்ய, பள்ளி கல்வித்துறை இணைஇயக்குனர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர்.அரசு பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவசபுத்தகத்தில் துவங்கி, "லேப்-டாப்" வரை, 14 வரையான பொருட்கள், இலவசமாகவழங்கப்படுகின்றன. கடந்த மாதம், 10ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போதுஇருந்தே, பல்வேறு பொருட்கள், ஒவ்வொன்றாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்தபொருட்கள் அனைத்தும், மாணவர்களைச் சென்றடைந்ததா, மாணவர் சேர்க்கைநிலவரம் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்ய, பல இணை இயக்குனர்கள்,மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment