திருக்குறள்

07/07/2013

பெண்கள், சிறுவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்

''பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் நஷ்டஈடு சம்பந்தப்பட்ட வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க, சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்'' என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் கூறினார். உச்ச நீதிமன்றத்தில் தற்போது நீதிபதியாக உள்ள சதாசிவம், வரும் 19ம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார். டெல்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்காகவும், நில ஆர்ஜிதம், தொழிலாளர்கள் நஷ்டஈடு சம்பந்தப்பட்ட வழக்குகளுக்காவும் நாடு முழுவதும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். நாடு முழுவதும் நிலுவையில் உள்ள 3 கோடிக்கும் அதிகமான வழக்கு களை பெரிய பிரச்னையாக நான் கருதவில்லை. பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதுதான் கவலை தருகிறது. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதின் மூலம், இந்த பிரச்னையை சிறப்பாக கையாள முடியும். மொத்த நிலுவை வழக்குகளில் மூன்றில் ஒரு பங்காக இந்த வழக்குகள் உள்ளன. பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வழக்குகள், ஆயுள் தண்டனை சம்பந்தப்பட்ட வழக்குகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வழக்குகள் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்றார்.

No comments:

Post a Comment