ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த வரித் தொகையை (டிடிஎஸ்) உரிய காலத்துக்குள் செலுத்தாவிட்டால் ரூ.200 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்படும் என வருமான வரித் துறை கூறியுள்ளது.இந்த புதிய உத்தரவை செயல்படுத்துமாறும், இதுகுறித்து வரிப்பிடித்தம் செய்வோருக்கு தெரியப்படுத்துமாறும் நாடு முழுவதும் உள்ள வருமான வரி அலுவலகங்களுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) உத்தரவிட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பின்படி, ஊழியர்களின் சம்பளத்தில் வரி பிடித்தம் செய்யும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வரித் தொகையை தாமதமாக செலுத்தும் ஒவ்வொரு நாளுக்கும் அபராதமாக ரூ.200 கண்டிப்பாக செலுத்த வேண்டும்.ஊழியர்களிடம் வரிப்பிடித்தம் செய்தது தொடர்பான அறிக்கையை உரிய காலத்தில் வருமான வரித் துறையிடம் சமர்ப்பிக்கத் தவறினாலோ, தவறான தகவல் கொடுத்தாலோ ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்படும். ஊழியர்களிடம் பிடித்தம் செய்யும் வரித் தொகையை பெரும்பாலான நிறுவனங்கள் அந்தத் தொகையை உரிய காலத்துக்குள் வருமான வரித் துறைக்கு செலுத்துவதில்லை. எனவே, இதுபோன்ற நடவடிக்கை மிகவும் அவசியமாகிறது என வருமான வரித் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment