திருக்குறள்

02/06/2013

அண்ணாமலைப் பல்கலைக்கழக 28 தகவல்மையங்கள் மூடப்பட்டன

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அண்ணாமலைப்பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கத்தின் 28 தகவல்மையங்களை மூட பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம்உத்திரவிட்டுள்ளார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும்நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர்கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பல்கலைக்கழகஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாக தமிழகஅரசு 2குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழு 11 பிரிவுகளின்கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது.இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகியாக ஷிவ்தாஸ்மீனாவை கடந்தஏப்.4-ம் தேதி தமிழக அரசு நியமனம் செய்து, அவர் உடனடியாகபொறுப்பேற்றார்.
பின்னர் தமிழக அரசு உயர்கல்வித்துறை மூலம் தமிழகசட்டப்பேரவையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை அரசுகட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால்நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவால் பல்வேறு சீரமைப்புபணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழ தொலைதூரக்கல்வி இயக்ககத்தின் 89 படிப்பு மையங்கள்உள்ளது. தமிழகத்தில் மட்டும் 60 படிப்பு மையங்கள் உள்ளன. மேலும்தமிழகத்தில் 117 தகவல் மையங்களும் உள்ளன. நிதிநெருக்கடியைகருத்தில் கொண்டு தமிழகத்தில் தேவையில்லாமல் உள்ள தகவல்மையங்களான அரவக்குறிச்சி, வரட்டாண்டு, சேத்தூர்பேட், காங்கேயம்,தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணாபுரம், தேவக்கோட்டை உள்ளிட்ட 28தகவல் மையங்களை மூட பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாஉத்தரவின் பேரில் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம்உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment