தொடக்க கல்வித்துறை நடத்திய ஆய்வில், அங்கீகாரம் பெறாமல் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருவது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில் விளக்கம் அளிக்காத பள்ளிகளை மூட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் 20, கோவை மாவட்டத்தில் 30, கடலூர் மாவட்டத்தில் 44 பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில், இதுவரை எந்த பள்ளிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படவில்லை. வேலூர் மாவட்டத்தில் 4, சேலம் மாவட்டத்தில் 18, தர்மபுரி மாவட்டத்தில் 9, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7, நாமக்கல் மாவட்டத்தில் 10, திருச்சி மாவட்டத்தில் 23, புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 48, சிவகங்கையில் 34, விருதுநகரில் 24, திண்டுக்கல்லில் ஒரு பள்ளியின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இதுவரை எந்த பள்ளியின் அனுமதியும் ரத்து செய்யப்படவில்லை. கரூர் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் இயங்கும் 22 நர்சரி பள்ளிகள் மற்றும் 6 தனியார் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளையும், அரியலூர் மாவட்டத்தில் 14 பிரைமரி பள்ளிளையும் ஏன் மூடக்கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட பள்ளிகளை சேர்ந்த குழந்தைகள், அருகில் உள்ள அங்கீகாரம் பெற்ற வேறு பள்ளிகளில் சேர்க்க பெற்றோருக்கு அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment