திருக்குறள்

12/01/2014

தவறாமல் பள்ளிக்கு வரும் 1–ம் வகுப்பு மாணவிகளுக்கு தினமும் ரூ.2 ஊக்கத் தொகை: கர்நாடகத்தில் புதிய திட்டம்


தவறாமல் பள்ளிக்கு வரும் 1–ம் வகுப்பு மாணவி களுக்கு தினமும் ரூ.2 ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் கர்நாடகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் பெண் குழந்தைகள் கல்வி பயில்வது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. பள்ளியில் சேரும் பலர் பாதியிலேயே பள்ளிக்கு வராமல் நிறுத்திக் கொள்கிறார்கள்.

எனவே பெண்கள் கல்வி கற்பதையும் தவறாமல் பள்ளிக்கு வருவதை ஊக்கப்படுத்தவும் கர்நாடக அரசு புதிய திட்டம் கொண்டு வந்துள்ளது.
அதன்படி 1–ம் வகுப்பில் சேரும் மாணவிகள் தவறாமல் பள்ளிக்கூடம் வந்தால் அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2 வீதம் ஊக்கத் தொகை கணக்கிட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் கடந்த 1–ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பெண் குழந்தைகள் கல்வி ஊக்கத் தொகை திட்டத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் மந்திரி ஜெயசந்திரா நிருபர்களிடம் கூறுகையில், இந்த புதிய திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகள் பள்ளிக்கு வருவது அதிகரிக்கும். ஊக்கத் தொகை அளிப்பது குடிசைப் பகுதி மற்றும் கிராமப் பகுதி மக்களுக்கு தங்களின் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் ஆர்வம் ஏற்படும் என்றார்.

இந்த திட்டத்தை செயல்படுத்த 3 மாதத்துக்கு ரூ. 4.49 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 1–ம் வகுப்பில் சேரும் பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த திட்டம் அமல் படுத்தப்படும்.

No comments:

Post a Comment