திருக்குறள்

12/01/2014

அரியலூர் மாவட்டத்தில் 4.67 லட்சம் வாக்காளர்கள்

அரியலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலின்படி, மொத்தம் 4,67,586 வாக்காளர்கள் உள்ளனர்.ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் இறுதிப் பட்டியலை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்டு பேசியது:அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜயங்கொண்டம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 116748 ஆண் வாக்காளர்களும், 116403 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 2,33151 வாக்காளர்கள் உள்ளனர்.ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் 117513 ஆண் வாக்காளர்களும், 116922 பெண் வாக்காளர்களும் என 234435 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தமாக அரியலூர் மாவட்டத்தில் 4,67,586 வாக்காளர்கள் உள்ளனர்.கடந்த ஆண்டு அக். 1 முதல் 31 வரையிலான காலகட்டத்தில் புதிதாக அரியலூர் தொகுதியில் 7737 வாக்காளர்களும், ஜயங்கொண்டம் தொகுதியில் 10448 வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கோரி விண்ணப்பித்துள்ள நபர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜன. 25-ல் அந்தந்த வாக்குச் சாவடிகளில் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.எனவே, தகுதியான வாக்காளர்கள் அனைவரும் தேசிய வாக்காளர் தின விழாவில் கலந்து கொண்டு, தங்களது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.

No comments:

Post a Comment