திருக்குறள்

12/01/2014

புதிய முறையில் பாடம் கற்பித்தல்


தமிழக அரசு 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அட்லஸ் (வரைபடம்) வழங்கி வருகிறது. நடப்பாண்டில் 9ம் வகுப்புவரை பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு அட்லஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூக அறிவியல் பாடத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரையில் இருந்து வந்த புவியியல் பாடம் மாற்றப்பட்டு, முழுமையாக வரைபடம் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் கடந்த 6, 7 மற்றும் 8ம் தேதிகளில் ஆசிரியர்கள் கலந்து கொண்ட பயிற்சி வகுப்புகள் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் வரைபடம் மூலம் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடம் நடத்துவது எப்படி என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்ட அளவிலான சமூக அறிவியல் ஆசிரியர்கள் பங்கேற்கும் பயிற்சி வகுப்புகள் தமிழகம் முழுவதும் தொடங்கி உள்ளது.

No comments:

Post a Comment