அரியலூர் பேருந்து நிலையத்தில் வேளாண்மைத் துறை மற்றும் புதுவாழ்வுத்திட்டம் இணைந்து நடத்தும் இளநீர் விற்பனை நிலையத்தை மாவட்ட கலெக்டர் எம்.ரவிகுமார் துவக்கி வைத்து பேசியதாவது:-
அரியலூர் மாவட்ட பொதுமக்களுக்காக இளநீர் விற்பனை நிலையம் துவக்கப்பட்டுள்ளது. இந்த இளநீர் விற்பனை நிலையத்தில் ரூ.25 மதிப்புள்ள இளநீரை மக்களின் அன்றாட தேவைக்காக ரூ.12க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் இளநீரை நேரடியாக வேளாண்மைத்துறையிடம் நியாயமான விலையில் வழங்கி நுகர்வோர்களுக்கு மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அதிகளவில் இளநீர் மொத்தமாக விற்பனை செய்யும் விவசாயிகளும், மொத்தமாக வாங்கும் பொதுமக்களும் புதுவாழ்வு திட்ட அலுவலர் 9345229219 என்ற எண்ணுக்கும், வோண்மைத்துறை அலுவலர் 9655246334 என்ற எண்ணக்கும் அழைத்து பயன்பெறலாம். தினமும் நடைபயிற்சி செய்யும் பொதுமக்களும் அரியலூர் பேருந்து நிலையத்தில் குறைந்த விலைக்கு இளநீரை குடித்து பயன்பெறலாம். இளநீர் என்பது இயற்கையில் கிடைக்கும் ஆரோக்கிய பானம் என்பதும், இளநீரை நேரடியாக அதன் காய்யி லிருந்து அப்படியே குடித்து தாகத்தை தனித்து புத்துணர்ச்சியும் அடை வதற்கும், மருத்துவ குணங்களுக்கம் உலகம் முழுவதும் புகழ் பெற்று திகழ்கிறது.
இந்த இளநீரில் வைட்ட மின்கள், கனிமங்கள், மின் பொருட்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள் போன்ற உடலுக்கு தேவை யான அனைத்தும் இயற்கையிலேயே அமைந்து ள்ளதால் மக்கள் குடித்து தங்கள் உடல் நலத்தை பாது காத்து கொள்ள வேண்டும். குறைந்த அளவில் கொளுப் பினையும், அதிக அளவில் மற்ற சத்துக்களையும் கொண்டுள்ள இளநீரை குடித்தால் வயிறு நிறைந்து போவதால் அதிகமாக தேவையில்லாத உணவுகளை சாப்பிட முடியாமல் உடல் எடை குறை உதவுகிறது.
இளநீரில் ஆன்டி பக்ட்டிரியல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அடங்கியிருப்பதால் சளி, காய்ச்சல் மற்றும் வைரஸ் நோய் தாக்குதலுக்கு இது நல்ல மருந்தாக அமைகிறது. இளநீரில் அதிக அளவு பொட்டாஸியம் இருப்பதால் அது கூடுதல் இரத்த அழுத்தம், வாதத்திற்கு நல்ல மருந்தாக அமைகிறது. இளநீரில் உள்ள சைட்டோகைனின்கள் முதுமை தோற்றத்தினை தடுக்கவும் மேலும் இதில் உள்ள செலினியம் போன்ற வைகள் புற்று நோய்க்கு எதிராகவும் பயன்படுகிறது.
இளநீரில் அதிகமாக உள்ள கால்சியம், இரும்பு, மாங்கனீஸ், மெக்னீ ஸ்யம் மற்றும் ஜிங்க் போன்ற கனிமங்கள் சருமத்தை பொழிவாக்கி வைக்க உதவுகின்றன. இதுபோன்ற அனைத்து சத்துகளும் கொண்ட இளநீரை பாரம்பரியமிக்க வோளாண்மை பொருட்களின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் உணர்ந்து குறைந்த விலையில் கிடைக்கும் இளநீரை குடித்து தங்களை வலுவாக்கி கொள்ளுமாறு மாவட்ட
No comments:
Post a Comment