அரியலூர் மாவட்டத்தில், இதுவரை மருத்துவச் சான்று பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் திருமானூர் ஒன்றியத்தில் ஜூன் 7-ம் தேதி நடைபெற உள்ளது.திருமானுர் அரசு மேல்நிலை பள்ளியில் காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் எலும்பு முறிவு, காது, மூக்கு தொண்டை, மன நலன் மற்றும் கண் மருத்துவர்கள் பங்கேற்று, உரிய பரிசோதனை மேற்கொண்டு மருத்துவச் சான்று அளிக்க உள்ளனர். இதில் திருமானூர் ஒன்றியத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் குடும்ப அட்டை நகல், பாஸ்போட் அளவு புகைப்படம்- 2 ஆகியவற்றுடன் பங்கேற்றுப் பயன் பெறலாம்.
No comments:
Post a Comment