திருக்குறள்

08/06/2013

ஆதார் எண் இருந்தால் தான் அனைத்து அரசு சலுகைகளையும் பெற முடியும் என்பன போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்

ஆதார் இந்த பெயர் எவ்வளவு முறை உச்சரிக்கப்படுகிறதோ, அதைவிட அதிகமாக உள்ளது. இது குறித்த சந்தேகங்கள், இந்தியா போன்ற நாடுகளில் ஒன்றுபட்ட அடையாள எண் என்கிற திட்டம் புதிது. இதனால் மக்கள் மத்தியில் இது குறித்த கேள்விகள் ஏராளமாக உள்ளன, ஆதார் எண் குறித்த தகவல்களை உரிய அதிகாரிகளிடம் புதிய தலைமுறை கேட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் அளித்த பதில்களின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். 

ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒரு முறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியோடு இந்த முறை தேசிய மக்கள் தொகை பதிவேடு உருவாக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

நமது பெயர் மற்றும் விவரங்களை தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் இடம் பெறச் செய்யும் முயற்சியின் இறுதி வடிவம் ஆதார் எண் என்கிற பிரத்யேக அடையாள எண் ஆகும். அளிக்கப்பட வேண்டிய விவரங்கள் பெயர், குடும்பத்தலைவர் உடனான உறவு,பாலின வகை, பிறந்த தேதி, திருமண நிலை, கல்வித் தகுதி, தொழில், தந்தை, தாய், துணைவரின் முழுப்பெயர், பிறந்த இடம், நாடு, தற்போதைய முகவரி, தற்போதைய முகவரியில் வசித்து வரும் ஆண்டுகள், நிரந்தர வசிப்பிட முகவரி என மொத்தம் 14 கேள்விகளுக்கு பதில் தர வேண்டும். பயோமெட்ரிக் அடையாளம் ஒவ்வொரு மனிதனின் பயோமெட்ரிக் அடையாளம் எனப்படும் பண்புகள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் ஒவ்வொருவரின் புகைப்படம், கைவிரல் ரேகைகள், விழி திரையின் பதிவு ஆகியவை அடங்கும் மற்றவர்களைப் போலவே மாற்றுத் திறனாளிகளுக்கும் அடையாளங்கள் பதிவு செய்யப்படும், என்ன குறைபாடு உள்ளதோ அதுவும் பதிவேட்டில் இடம்பெறும் ஆதார் எண் வழங்கப்படும் விதம் அனைத்து தகவல்களும் இந்திய அரசின் பிரத்யேக அடையாள எண் ஆணையத்திற்கு வழங்கப்பட்டு, தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் தனிநபருக்கான பிரத்யேக எண் வழங்கப்படும். இந்த எண் குறித்த விபரம் அஞ்சல் வழியாகவோ அல்லது செல்பேசி மூலமாகவோ ஒவ்வொருவருக்கும் தெரியப்படுத்தப்படுத்தப்படும்.

தகவல் சேகரிப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் மாநகரம், நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் ஆதார் எண் தகவல் சேகரிப்பு முகாம் நடைபெறுகிறது. நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு உள்ளாட்சி நிர்வாகத்தினர் மூலமாக அறிவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பகுதிகளிலும் நடத்தப்படும் முகாம்களுக்குச் சென்று தகவல்களை வழங்கலாம் தங்கள் பகுதி முகாம்களை தவறவிட்டோர், புதியதாக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், மாநகராட்சி மற்றும் மாவட்ட அளவில் அக்டோபர் மாதம் அமைக்கப்பட உள்ள நிரந்தர மையங்களுக்குச் சென்று தகவல்களை வழங்கலாம். தகவல்களில் திருத்தங்களையும் மேற்கொள்ளலாம். மேலும் ஆதார் எண் இருந்தால் தான் அனைத்து அரசு சலுகைகளையும் பெற முடியும் என்பன போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்கின்றனர் அதிகாரிகள். ஐந்து வயதுக்கு மேல் உள்ள அனைவரின் தகவல்களும் சேகரிக்கப்பட்டாலும், பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவருக்கே ஆதார் எண் வழங்கப்படும்.

No comments:

Post a Comment