திருக்குறள்

08/06/2013

சென்னை 20 கடலூர் 44 கோவை மாவட்டத்தில் 30பள்ளிகள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சென்னையில் 20 பள்ளிகளை மூட உத்தரவு

சென்னையில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த 20மழலையர் பள்ளிகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லிஉத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில்:குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி முதன்மை கல்வி அலுவலர்மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஆகியோரிடம் அங்கீகாரம் பெறாமல்செயல்பட்டு வந்த 20 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளை மூடஉத்தரவிடப்பட்டுள்ளது.இந்த பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறாத காரணத்தை கேட்டுமூன்று முறை அறிவிப்பு அனுப்பட்டும், அங்கீகாரம் பெறவும் கருத்துரு அனுப்பவும்முயற்சி செய்யப்படவில்லை. இப்போது கோடை விடுமுறை முடிந்து 10-ம் தேதிபள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம்2009-ன்படி இந்த பள்ளிகள் மூடப்படுகின்றன. மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் அவற்றின்முகவரிகள் அடங்கிய பட்டியல், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்,மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலங்களின்அறிவிப்பு பலகையிலும் பெற்றோர்கள் பார்வைக்காக ஒட்டப்பட்டுள்ளது.இந்தபள்ளிகளில் மாணவர்களை சேர்க்கவேண்டாம் என்று அந்த அறிவிப்பில் மாவட்டஆட்சியர் தெரிவித்துள்ளார்.


அரசின் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த 44 தனியார் பள்ளிகளை மூட கடலுர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


கடலூர் மாவட்டத்தில், அரசின் அங்கீகாரம் பெறாமலும், கல்வித் துறையின் எந்த தொடர்பும் இல்லாமலும் பல பள்ளிகள் இயங்குவதாக புகார்கள் வந்ததை அடுத்து, மாவட்ட நிர்வாகம் அதிரடி ஆய்வு நடத்தி, கடலூரில், சிதம்பரம், திட்டக்கடி உள்ளிட்ட ஊர்களில் 44 பள்ளிகள் அங்கீகாரம் இன்றி இயங்கி வந்ததை கண்டு பிடித்தது.



இதையடுத்து, அனைத்து பள்ளிகளுக்கும் அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு,அவர்களிடம் இருந்து பதில் வராத நிலையில், அனைத்துப் பள்ளிகளையும் மூடும்படி,
மாவட்ட ஆட்சியர்  உத்தரவு


கோவை மாவட்டத்தில் 30 பள்ளிகள் அங்கீகாரம் ரத்து

கோவை மாவட்டத்தில், அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வந்த, 30பள்ளிகளின் அங்கீகாரத்தை, அதிரடியாக ரத்து செய்து, கல்வித் துறைஉத்தரவிட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், அரசின் அனுமதிபெறாமலும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலும் பல பள்ளிகள்செயல்படுகின்றன. மாவட்ட கல்வி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வைத்தொடர்ந்து, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு, உரிய முன்னெச் சரிக்கைதகவல், போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதுவரை, அடிப்படை வசதிகளை மேம்படுத்தாத பள்ளிகளின் அங்கீகாரத்தைரத்து செய்வதாக, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி கணேசமூர்த்தி, ‘’கடந்த மே மாதம், 12பள்ளிகள், தற்போது, 18 பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், பள்ளிக்கு அருகில் உள்ள, வேறுபள்ளிகளில் சேர்க்கப்படுவர். தொடர்ந்து, பள்ளியை நடத்த நிர்வாகம்முற்பட்டால், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; மேலும், தொடர்ந்தால்,நாள் ஒன்றுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன், துறை ரீதியானநடவடிக்கை மேற்கொள் ளப்படும்’’என்று கூறினார்.

No comments:

Post a Comment