திருக்குறள்

09/06/2013

பொருளாதார கணக்கெடுப்பு: மக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள் கணக்கெடுப்பில் தகவல் தராததற்கு காரண கேட்பு கடிதம் பெறுவது கட்டாயம்


அரியலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள 6-வது பொருளாதார கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் எம். ரவிக்குமார்.இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:அரியலூர் மாவட்டத்தில் 6-வது பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணிகள் 2013 மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற உள்ளன. இந்த கணக்கெடுப்புப் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் பொதுமக்களின் இல்லம் மற்றும் தொழில் நிறுவனங்களை நாடி வரும்போது, அவர்களுக்கு தேவையான தகவல்களை அளித்து ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கணக்கெடுப்பில் தகவல் தராததற்கு காரண கேட்பு கடிதம் பெறுவது கட்டாயம்

பொருளாதார கணக்கெடுப்பில் தகவல் தர மறுப்பவர்களிடம் காரண கேட்பு கடிதம் பெறுவது அவசியம் என புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க துறை உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் திட்டமிடுவதற்காக பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 6வது பொருளாதாரக் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. கணக்கெடுக்க செல்லும்போது பொதுமக்களிடம் மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்த அறிக்கை நகல் மற்றும் அடையாள அட்டையை கணக்கெடுப்பாளர்கள் காட்ட வேண்டும். சேகரிக்கப்படும் விவரங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். தனிநபர் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் வருமானம் தொடர்பான விவரங்களை கேட்க கூடாது. 8 நபர்களுக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்களில் வணிக நிறுவன சட்டம், சுங்க வரி, வணிக வரிச்சட்டம், தொழிற்சாலை சட்டம் உள்ளிட்ட சட்ட ரீதியான பதிவு விவரங்கள், நவீன தொலை தொடர்பு வசதி உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வணிகப்பட்டியல் தயாரிக்க வேண்டும். 2008ம் ஆண்டு புள்ளியியல் சேகரிப்பு சட்டத்தின் படி, பொதுமக்கள் பொருளாதார கணக்கெடுப்பு விவரங்களை அளிக்க வேண்டும். தகவல் தர மறுப்பவர்களிடம் காரண கேட்பு கடிதம் அவசியமாக பெற வேண்டும். பின்னர் அந்த கடிதத்தின் அடிப்படையில் தகவல் தர மறுப்பவருக்கு தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது


No comments:

Post a Comment